தமிழ் : இயல் 1 : தமிழ் இன்பம்
இலக்கணம்: எழுத்துகளின் பிறப்பு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____
- இ, ஈ
- உ, ஊ
- எ, ஏ
- அ, ஆ
விடை : உ, ஊ
2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______
- மார்பு
- கழுத்து
- தலை
- மூக்கு
விடை : தலை
3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____
- தலை
- மார்பு
- மூக்கு
- கழுத்து
விடை : மார்பு
4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____
- க், ங்
- ச், ஞ்
- ட், ண்
- ப், ம்
விடை : ட், ண்
5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____
- ம்
- ப்
- ய்
- வ்
விடை : வ்
II. பொருத்துக
1. க், ங் | அ. நாவின் இடை, அண்ணத்தின் இடை |
2. ச், ஞ் | ஆ. நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி |
3. ட், ண் | இ. நாவின் முதல், அண்ணத்தின் அடி |
4. த், ந் | ஈ. நாவின் நுனி, அண்ணத்தின் நுனி |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
III. சிறு வினா
1. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். |
2. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. |
3. ழகர, லகர, ளகர மெய்களின் பிறப்பு முயற்சி பற்றி எழுதுக.
ழகர மெய் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.லகர மெய் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறதுளகர மெய் மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது. |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் ___________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
விடை : கழுத்தை
2. ஆய்த எழுத்து ___________ இடமாகக் கொண்டு பிறக்கிறது.
விடை : தலையை
3. அ, ஆ ஆகிய இரண்டும் ___________ முயற்சியால் பிறக்கின்றன.
விடை : வாய் திறத்தலாகிய
II. சிறு வினா
1. எழுத்துகளின் பிறப்பினை எத்தனை வகையாகப் பிரிப்பர்?
எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு , முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
2. சார்பெழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன?
ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன. |
II. குறு வினா
மெய் எழுத்துக்கள் எவ்வாறு பிறக்கின்றன?
க், ங் – ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.ச், ஞ் – ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.ட், ண் – ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.த், ந் – ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.ப், ம் – ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.ய் – இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.ர், ழ் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.ல் – இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.ள் – இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.வ் – இது மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.ற், ன் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன. |
மொழியை ஆள்வோம்!
I. அகரவரிசைப்படுத்துக.
எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.
விடை :-
அழகுணர்ச்சி, ஆரம்நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம்
II. மரபுத் தொடர்கள்
பறவைகளின் ஒலிமரபு | வினை மரபு |
ஆந்தை அலறும் | சோறு உண் |
காகம் கரையும் | முறுக்குத் தின் |
சேவல் கூவும் | சுவர் எழுப்பு |
மயில் அகவும் | தண்ணீர் குடி |
கிளி பேசும் | பால் பருகு |
குயில் கூவும் | கூடை முடை |
கோழி கொக்கரிக்கும் | பூக் கொய் |
புறா குனுகும் | இலை பறி |
கூகை குழறும் | பானை வனை |
தொகை மரபு |
மக்கள் கூட்டம் |
ஆட்டு மந்தை |
ஆநிரை |
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கோழி __________ (கூவும்/கொக்கரிக்கும்)
விடை : கொக்கரிக்கும்
2. பால் __________ . (குடி/ பருகு)
விடை : பருகு
3. சோறு __________ . (தின்/உண்)
விடை : உண்
4. பூ __________ . (கொய்/பறி)
விடை : கொய்
5. ஆ __________ (நிரை/மந்தை)
விடை : நிரை
III. மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
விடை :
சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைப் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக் கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை பருகி விட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
மொழியோடு விளையாடு
I. பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.
கல், பூ, மரம், புல், வாழ்த்து, சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா
கள் | க்கள் |
கிழமைகள் | பாக்கள் |
கடல்கள் | பூக்கள் |
கைகள் | ஈக்கள் |
வாழ்த்துக்கள் | பசுக்கள் |
ங்கள் | ற்கள் |
மரங்கள் | கற்கள் |
மாதங்கள் | சொற்கள் |
படங்கள் | பற்கள் |
பக்கங்கள் | புற்கள் |
II. ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக
1. அணி
- பல அணிகளை அணிந்த வீரர்கள், அணிஅணியாய்ச் சென்றனர்.
2. படி
- என் அம்மா, படத்தை புரியும்படி படிக்க சொன்னதால் நான் படிக்கட்டில் அமர்ந்து படம் படித்தேன்
3. திங்கள்
- ஒரு திங்களுக்கு ஒரு முறை தான் வானத்தில் முழு வடிவில் திங்கள் பௌர்ணமியாக காட்சி தரும் .இன்று திங்கள் கிழமை ஆகும்
4. ஆறு
- இன்று காலை ஆறு மணிக்கு என் தந்தை எனக்கு இட்ட ஆறு பணிகளை செய்திடப் புறப்பட்டேன் ஊருக்கு வெளிய காவிரி ஆறு ஓடியது
III. சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து
விடை : வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்து தமிழ் வட்டெழுத்து எனப்படும்
2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
விடை : உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்
3. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
விடை : பகைவரை வென்றதை பாடும் இலக்கியம்பரணி ஆகும்.
4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
விடை : உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
விடை : அம்புவிடும் கலையை தமிழ் ஏகலை என்றது.
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
- ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics
- உயிரொலி – Vowel
- மெய்யொலி – Consonant
- அகராதியியல் – Lexicography
- மூக்கொலி – Nasal consonant sound
- ஒலியன் – Phoneme
- கல்வெட்டு – Epigraph
- சித்திர எழுத்து – Pictograph