Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium South Indian Kingdoms

Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium South Indian Kingdoms

TNPSC Group 1 Best Books to Buy

சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 3 அலகு 4 : தென்னிந்திய அரசுகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

TNPSC Group 4 Best Books to Buy

1. வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

  1. இரண்டாம் நரசிம்மவர்மன்
  2. இரண்டாம் நந்திவர்மன்
  3. தந்திவர்மன்
  4. பரமேஸ்வரவர்மன்

விடை : இரண்டாம் நந்திவர்மன்

2. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?

  1. மத்தவிலாசன்
  2. விசித்திரசித்தன்
  3. குணபாரன்
  4. இவை மூன்றும்

விடை : இவை மூன்றும்

3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

  1. அய்கோல்
  2. சாரநாத்
  3. சாஞ்சி
  4. ஜுனாகத்

விடை : அய்கோல்

II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.

கூற்று 1 : பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.

கூற்று 2 : காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

  1. கூற்று 1 தவறு
  2. கூற்று 2 தவறு
  3. இரு கூற்றுகளும் சரி
  4. இரு கூற்றுகளும் தவறு

விடை : இரு கூற்றுகளும் சரி

2. பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்

கூற்று 1 : இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.

கூற்று 2 : முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

  1. கூற்று i மட்டும் சரி
  2. கூற்று ii மட்டும் சரி
  3. இரு கூற்றுகளும் சரி
  4. இரு கூற்றுகளும் தவறு

விடை : இரு கூற்றுகளும் சரி

3. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்

1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.

2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்

3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

  1. 1 மட்டும் சரி
  2. 2, 3 சரி
  3. 1, 3 சரி
  4. மூன்றும் சரி

விடை : மூன்றும் சரி

4. கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை

  1. எல்லோரா குகைகள் – ராஷ்டிரகூடர்கள்
  2. மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
  3. எலிபெண்டா குகைகள் – அசோகர்
  4. பட்டடக்கல் – சாளுக்கியர்கள்

விடை : எலிபெண்டா குகைகள் – அசோகர்

5. தவறான இணையைக் கண்டறியவும்

  1. தந்தின் – தசகுமார சரிதம் 
  2. வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா
  3. பாரவி – கிரதார்ஜுனியம்
  4. அமோகவர்ஷர் – கவிராஜமார்க்கம்

விடை : வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ___________ ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.

விடை : இரண்டாம் புலிகேசி

2. ___________ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்.

விடை: முதலாம் நரசிம்மன்

3. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ___________ ஆவார்.

விடை : ரவிகீர்த்தி

4. ___________ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.

விடை: பரஞ்சோதி

5.  ___________ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன

விடை: குடுமியான்மலை, திருமயம்

6. பல்லவ அரசர் ___________ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.

விடை: விஷ்ணு கோபன்

7.  வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ___________ ஆவார்

விடை: ஹர்ஷர்

8. ஹர்ஷர் தலைநகரை ___________ லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.

விடை: தானேஸ்வரி

IV. சரியா ? தவறா ?

1. புகழ்பெற்ற இசைக்கலைஞர் ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்

விடை : சரி

2. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.

விடை : தவறு

3. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்

விடை : சரி

4. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது

விடை : தவறு

5. விருப்பாக்‌ஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

விடை : சரி

V. பொருத்துக

1. பல்லவர்கல்யாணி
2. கீழைச் சாளுக்கியர்மான்யகேட்டா
3. மேலைச் சாளுக்கியர்காஞ்சி
4. ராஷ்டிரகூடர்வெங்கி

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • ஆதிகவி பம்பா
  • ஸ்ரீ பொன்னா,
  • ரன்னா

2. பல்லவர்களின் கட்டடக் கலையை நாம் எவ்வாறு வகைப்படுத்தலாம்?

  • பாறைக் குடைவரைக் கோவில்கள் – மகேந்திரவர்மன் பாணி
  • ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் – மாமல்லன் பாணி
  • கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி

3. ‘கடிகை’ பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

காஞ்சியிலிருந்த கடிகை (மடாலயம் அல்லது கல்வி மையம்) பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.

அது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களைத் தன்பால் ஈர்த்தது. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தவர்.

4. பஞ்சபாண்டவர் ரதங்கள் ஒற்றைப் பாறைக்கல் ரதங்கள் ஆகும்-விளக்குக.

மாமல்லபுரத்திலுள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில்கட்டட பாணியை உணர்த்துகின்றன.

ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக் கல்லிலிருந்து செதுக்கப்பட்டிருக்கின்றன.

எனவே அவை ஒற்றைக்கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன.

5. தக்கோலம் போர் பற்றிக் குறிப்பெழுதுக.

மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசனாவார்.

இவர் சோழர்களைத் தக்கோலம் (தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ளது) போர்க்களத்தில் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்

VII. சுருக்கமான விடையளிக்கவும்

1. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.

பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்:

  1. பாறைக் குடைவரைக் கோவில்கள் – மகேந்திரவர்மன் பாணி
  2. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் – மாமல்லன் பாணி
  3. கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி

மகேந்திரவர்மன் பாணி

மகேந்திரவர்மன் பாணியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களுக்கு மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

மாமல்லன் பாணி

  • மாமல்லபுரத்திலுள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில்கட்டட பாணியை உணர்த்துகின்றன.
  • ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக் கல்லிலிருந்து செதுக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவை ஒற்றைக்கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன.
  • மகிஷாசுரமர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம் ஆகியவை அவர் கட்டியுள்ள பிரபலமான மண்டபங்களாகும்.

ராஜசிம்மன் பாணி

  • ராஜசிம்மன் எனவும் அறியப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டினார்.
  • காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமானக் கோவில் கலைப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்
  • இக்கோவில்கள் மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்டவையாகும். கைலாசநாதர் கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

நந்திவர்மன் பாணி

  • பல்லவ கோவில் கட்டக்கலையின் இறுதிக் கட்டம். பிற்காலப் பல்லவர்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்களால் பிரதிநித்துவப் படுத்தப்படுகின்றன.
  • காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப்பெருமாள் கோவில் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

2. எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக

எலிபெண்டா தீவு

  • இத்தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி-உள்ளூர் மக்களால் காரபுரி என்று அழைக்கப்படுகிறது.
  • எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற போர்த்துகீசியர்கள், இத்தீவுக்கு எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டனர்.
  • எலிபெண்டா குகையிலுள்ள திரிமூர்த்தி (மூன்று முகங்கள் கொண்ட) சிவன் சிலையின் வனப்பு ஈடு இணையற்றதாகும்.
  • கோவிலின் நுழைவாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் சிலைகள் நமது கண்ணையும் கருத்தையும் கவர்பவை.

எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில்

  • எல்லோராவின் குன்றுப் பகுதியில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர்கோவிலும் ஒன்று.
  • முதலாம் கிருஷ்ணருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டது.
  • இக்கோவில் அதன் கட்டடக்கலை பிரமாண்டத்திற்கும் சிற்பங்களின் அற்புதங்களுக்கும் பெயர் பெற்றதாகும்.
  • இக்கோவில் 60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • இதனுடைய விமானத்தின் (கோபுரம்) உயரம் 90 அடிகளாகும்.
  • இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது.
  • கைலாசநாதர்கோவில் திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது.
TNPSC Group 2 Best Books to Buy

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *