Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium Asia and Europe

Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium Asia and Europe

சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 1 : ஆசியா மற்றும் ஐரோப்பா

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?

  1. கருங்கடல்
  2. மத்திய தரைக்கடல்
  3. செங்கடல்
  4. அரபிக்கடல்

விடை : அரபிக்கடல்

2. எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி

  1. திபெத்
  2. ஈரான்
  3. தக்காணம்
  4. யுனான்

விடை : ஈரான்

3. நிலநடுக்கோட்டுக் காலநிலை என்பது

i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் ii) சராசரி மழையளவு 200மி.மீ ஆகும்.

iii) சராசரி வெப்பநிலை 10°C ஆகும்.

மேற்கண்ட கூற்றுகளில்

  1. i மட்டும் சரி 
  2. ii மற்றும் iii சரி
  3. i மற்றும் iii சரி
  4. i மற்றும் ii சரி

விடை : i மட்டும் சரி

4. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.

பட்டியல் Iபட்டியல் II
A. மலேசியா1. அத்தி
B. தாய்லாந்து2. ரப்பர்
C. கொரியா3. தேக்கு
D. இஸ்ரேல்4. செர்ரி குறியீடுகள்
  1. 2, 3, 4, 1
  2. 4, 3, 2, 1
  3. 4, 3, 1, 2
  4. 2, 3, 1, 4

விடை : 2, 3, 4, 1

5. இந்தியா_______உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.

  1. துத்தநாகம்
  2. மைக்கா
  3. மாங்கனீசு
  4. நிலக்கரி

விடை : மைக்கா

6. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை 

  1. ஆஸ்ப்ஸ்
  2. பைரனீஸ்
  3. கார்பேதியன்
  4. காகஸஸ்

விடை : பைரனீஸ்

7. ’ஐரோப்பாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது’. சரியான தெரிவினைத் தேர்வு செய்க

  1. இந்தப் பகுதிகள் நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.
  2. இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன
  3. இப்பகுதிகளைச் சுற்றி மலைகள் காணப்படுகின்றன
  4. மேற்கண்ட அனைத்தும் சரி

விடை : இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன

8. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது? 

  1. ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
  2. ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன
  3. ஐரோப்பாவின் பெரும்பாலான ஆறுகள் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன
  4. ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்

விடை : ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்

9. பொருந்தாத இணையைக் கண்டறிக

  1. மெஸடா – ஸ்பெயின்
  2. ஜுரா – பிரான்ஸ்
  3. பென்னின்ஸ் – இத்தாலி
  4. கருங்காடுகள் – ஜெர்மனி

விடை : பென்னின்ஸ் – இத்தாலி

10. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது? 

  1. ஐஸ்லாந்து
  2. நெதர்லாந்து
  3. போலந்து
  4. சுவிட்சர்லாந்து

விடை : ஐஸ்லாந்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தாரஸ் மற்றும் போன்டைன் மலைத்தொடர்கள் ___________ முடிச்சிலிருந்து பிரிக்கின்றது

விடை : ஆர்மீனியன்

2. உலகின் மிக ஈரப்பதமான இடம் ___________.

விடை: மௌசின்ராம்

3. உலகிலேயே ___________ உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் உள்ளது.

விடை : பேரிச்சம் பழம்

4. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் ___________

விடை: நன்னம்பிக்கை முனைவழி

5. ஐரோப்பாவின் இரண்டாவது உயரமான சிகரம் ___________

விடை: டினிக்லிங்க்

6. பல்லவ அரசர் ___________ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.

விடை: மான்ட் பிளாங்க் (4,807 மீ)

7.  ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் நிலவும் காலநிலை ___________

விடை: கண்டகாலநிலை

8. வடகடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம் ___________

விடை: டாகர் பாங்ஸ்

9. ஐரோப்பாவின் மக்களடர்த்தி ___________ ஆகும்

விடை: 1 சதுர கிலோ மீட்டருக்கு 34 நபர்கள்

10. ___________ ஐரோப்பாவில் உள்ள ஒன்பது நாடுகளைக் கடந்து செல்கின்றது

விடை: டான்யூப் ஆறு

III. மேலும் கற்கலாம்

1. கூற்று (A): இத்தாலி, வறண்ட கோடை காலத்தையும், குளிர்கால மழையையும் பெற்றுள்ளது.

காரணம் (R) : இது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.

  1. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும்.
  2. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
  3. (A) சரி. ஆனால் (R) தவறு.
  4. (A) தவறு. ஆனால் (R) சரி.

விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும்.

2. கொடுக்கப்பட்ட ஆசியா வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள 1, 2, 3 மற்றும் 4 என்பன கீழ்க்கண்ட சமவெளிகளைக் குறிக்கின்றன.

ஆசியா மற்றும் ஐரோப்பா பாட விடைகள்
  1. சிந்து – கங்கை சமவெளி
  2. மஞ்சூரியன் சமவெளி
  3. மெசபடோமியா சமவெளி
  4. சீனச் சமவெளி

வரைபடத்தில் உள்ள எண்ணுடன் சமவெளிகளைப் பொருத்தி, பின் கீழே  கொடுக்கப்பட்ட குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. 2, 1, 4, 3
  2. 2, 1, 3, 4
  3. 1, 2, 3, 4
  4. 1, 4, 3, 2

விடை : 2, 1, 3, 4

3. கொடுக்கப்பட்டுள்ள ஆசியா வரைபடத்தில் நிழலிடப்பட்ட பகுதியில் விளையும் பயிர்வகை

ஆசியா மற்றும் ஐரோப்பா பாட விடைகள்
  1. கரும்பு
  2. பேரீச்சம் பழம்
  3. ரப்பர்
  4. சணல்

விடை : பேரீச்சம் பழம்

IV. பொருத்துக

1. மெசபடோமியா சமவெளிஅதிக மழை
2. மௌசின்ராம்நார்வே
3. தென்கிழக்கு ஆசியாவின் அரிசிக் கிண்ணம்ஸ்பெயின்
4. ஃபியார்டு கடற்கரையூப்ரடீஸ் & டைக்ரிஸ்
5. எருதுச் சண்டைதாய்லாந்து

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – இ

V. சுருக்கமாக விடையளி

1. ஆசியாவில் உள்ள முக்கிய மலையிடைப் பீடபூமிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • அனடோலிய பீடபூமி (போன்டைன் – தாரஸ் மலை)
  • ஈரான் பீடபூமி (எல்பர்ஸ் – ஜாக்ரோஸ்)
  • திபெத்திய பீடபூமி (குன்லுன் – இமயமலை)

2. ‘மான்சூன் காலநிலை’ பற்றிச் சுருக்கமாக எழுதுக.

  • தெற்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும்.
  • பொதுவாக கோடைகாலம் அதிக வெப்பமும் ஈரப்பதத்துடனும், குளிர்காலம், வறண்டும் காணப்படும்.
  • கோடைக்காலப் பருவமழைக் காற்றுகள் இந்தியா, வங்காளதேசம், இந்தோ- சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீனா ஆகிய இடங்களுக்கு அதிக மழைப்பொழிவைத் தருகின்றன (1500 மி.மீ – 2500 மி.மீ).
  • இந்தியாவில் உள்ள மௌசின்ராம் (11871 மி.மீ) அதிக மழைப்பொழிவைப் பெறுவதால், இஃது உலகின் மிக அதிக மழைப்பெறும் பகுதியாகும்.

3. நிலத்தோற்றங்கள் ஆசியாவின் மக்கள் தொகை பரவலை எவ்வாறு பாதிக்கின்றது?

  • உலகிலேயே மிக அதிக மக்கள்தொகை கொண்ட கண்டம் ஆசியாவாகும்.
    உலகில் சுமார் பத்தில் ஆறு பங்கு மக்கள்தொகை ஆசியாவில் காணப்படுகின்றது.
  • பல்வேறுபட்ட இயற்கை கூறுகளினால் ஆசியாவின் மக்கட்பரவல் சீரற்றுக் காணப்படுகின்றது.
  • ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன.
  • ஆசியாவின் உட்பகுதிகளில் மக்கள் அடர்த்தி மிகக் குறைந்து காணப்படுகின்றது.

4. ஆசியாவில் காணப்படும் முக்கிய துறை முகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • டோக்கியோ
  • ஷாங்காய்
  • சிங்கப்பூர்
  • ஹாங்காங்
  • சென்னை
  • மும்பை
  • கராச்சி
  • துபாய்

5. ‘வேறுபாடுகளின் நிலம் ஆசியா’ – நிரூபி.

  • உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியாவாகும்.
  • அது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், விரிகுடாக்கள், தீவுகள் போன்ற பல்வேறுபட்ட நிலத் தோற்றங்களைக் கொண்டது.
  • நிலநடுக்கோட்டிலிருந்து துருவப் பகுதி வரை பல்வேறு காலநிலைகளை உள்ளடக்கியது. இவைமட்டுமின்றி, பல இனங்கள், மொழிகள், சமயங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் இடமாகத் திகழ்கின்றது.
  • எனவே ஆசியா கண்டம், ‘வேற்றுமையின் இருப்பிடம்’ என அழைக்கப்படுகின்றது.

6. ஆல்பைன் மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள் யாவை?

  • சியாரா நெவேடா
  • பைரினீஸ்
  • ஆல்ப்ஸ்
  • அப்னின்ஸ்
  • டினாரிக் ஆல்ப்ஸ்
  • காகசஸ்
  • கார்பேதியன்

7. ஐரோப்பாவின் முக்கிய ஆறுகள் யாவை?

  • வோல்கா
  • டேன்யூப்
  • நீப்பர்
  • ரைன்
  • ரோன்
  • போ
  • தேம்ஸ

8. ஐரேப்பாவில் மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்ட நாடுகளின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.

  • பிரான்ஸ்
  • ஸ்பெயின்
  • இத்தாலி
  • சிசிலி

9. ஐரோப்பாவின் மக்கள் தொகையைப் பற்றிச் சிறுகுறிப்புத் தருக.

  • ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து உலகின் மூன்றாவது மிக அதிக மக்கள்தொகையைக் கொண்டது ஐரோப்பா ஆகும்.
  • 2018 ஆம் ஆண்டில் 742 மில்லியனாக இருந்த ஐரோப்பாவின் மக்கள்தொகை, உலகமக்கள் தொகையில் 9.73 சதவிகிதமாகக் காணப்பட்டது. ஐரோப்பிய மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 34 நபர்கள் ஆகும்.
  • அதிக மக்கள் அடர்த்தி ஐரோப்பிய நிலக்கரி சுரங்கங்களுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. சுரங்கத்தொழில், உற்பத்தி தொழில்கள், வர்த்தகம், பெரும் சந்தைகளாகச் செயல்படுதல், மனிதவளம் மற்றும் வேளாண் உற்பத்தி ஆகியன மக்கள்தொகை மிகுந்து காணப்படக் காரணமாக அமைகின்றன.
  • மொனாக்கோ, மால்டா, சான் மரினோ மற்றும் நெதர்லாந்து ஆகியன மிகுந்த மக்கள் அடர்த்தியைக் கொண்ட நாடுகளாகும்.
  • ஐஸ்லாந்து மற்றும் நார்வே ஆகியன மிகக்குறைந்த மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. பொதுவாக மலைப்பாங்கான பகுதிகள், சில உயர்நிலங்கள், ஸ்பெயின் நாட்டின் மிக வறண்ட பகுதிகள் மற்றும் ரஷ்யாவின் ஆர்டிக் பிரதேசங்கள் ஆகியன மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.
  • ஐரோப்பாவில் உள்ள மொனாக்கோ நாட்டில்தான் உலகிலேயே அதிக மக்கள் அடர்த்தி காணப்படுகின்றது.
  • (26,105 நபர்கள் / ச.கி.மீ). ஐஸ்லாந்து மிக குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடாகும் (3 நபர்கள் / ச. கி.மீ).

10. ஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றின் பெயர்களைக் குறிப்பிடு.

  • கிறிஸ்மஸ்
  • ஈஸ்டர்
  • புனித வெள்ளி
  • புனிதர்கள் நாள்
  • ரெடன் டோர்
  • தக்காளி
  • கார்னிவல்

VI. வேறுபடுத்துக

1. மலையிடைப் பீடபூமி மற்றும் தென் பீடபூமி.

மலையிடைப் பீடபூமிகள்

மலையிடைப் பீடபூமிகள் இம்மலைத் தொடர்களிடையே காணப்படுகின்றன. முக்கிய பீடபூமிகளாவன,

  • அனடோலிய பீடபூமி (போன்டைன் – தாரஸ் மலை)
  • ஈரான் பீடபூமி (எல்பர்ஸ் – ஜாக்ரோஸ்)
  • திபெத்திய பீடபூமி (குன்லுன் – இமயமலை)

தெற்கு பீடபூமிகள்

தெற்கு பீடபூமிகள், வடக்கு பீடபூமிகளைக் காட்டிலும் உயரம் குறைந்து காணப்படுகின்றன.

  • அரேபிய பீடபூமி (சௌதி அரேபியா),
  • தக்காண பீடபூமி (இந்தியா)
  • ஷான் பீடபூமி (மியான்மர்)
  • யுனான் பீடபூமி (சீனா).

2. வெப்பப் பாலைவனம் மற்றும் குளிர்பாலைவனம்.

குளிர் பாலைவனம்

  • கோபி
  • தக்லாமக்கன்

வெப்பப் பாலைவனம்

  • அரேபிய (சௌதி அரேபியா)
  • தார் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்)

3. தூந்திரா மற்றும் டைகா.

தூந்திரா

  • ஆர்டிக் மற்றும் வட ஸ்காண்டினேவிய உயர்நிலங்கள் தூந்திர வகை இயற்கைத் தாவரங்களைக் கொண்டுள்ளன.
  • குளிர்காலம் மிக நீளமானது மற்றும் கடுமையான கோடை காலம் மிகவும் குறுகியதாகவும் வெப்பமாகவும் இருக்கும்.
  • இங்கு லிச்சன்ஸ் மற்றும் பாசி வகைகள் காணப்படுகின்றன.

டைகா

  • தூந்திரப்பிரதேசத்தின் தெற்கில் அமைந்துள்ள நார்வே, சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் ஊசியிலை அல்லது டைகா காடுகள் காணப்படுகின்றன.
  • குளிர்காலம் நீண்ட மற்றும் குளிராக இருக்கும். கோடை காலம் வெப்பமாகவும், சூடாகவும் இருக்கும்.
  • பைன், ஃபிர், ஸ்புரூஸ் மற்றும் லார்ச் போன்ற முக்கிய மரவகைகள் காணப்படுகின்றன.

4. வடமேற்கு உயர்நிலம் மற்றும் ஆல்பைன் மலைத்தொடர்.

வடமேற்கு உயர்நிலங்கள்

  • இப்பிரதேசம் நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மலைகள் மற்றும் பீடபூமிகளை உள்ளடக்கியது.
  • இது மிக அழகிய பிளவுபட்ட (fiord) கடற்கரையினைக் கொண்டது.
  • இக் கடற்கரைகள் கடந்த காலங்களில் நடைபெற்ற பனியாறுகளினால் உருவானவை ஆகும்.
  • இப்பகுதியில் ஏரிகள் அதிகமாக உள்ளன.
  • இந்த ஏரிகள் நீர்தேக்கங்களாகவும் செயல்படுவதால், அவற்றிலிருந்து நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஆல்பைன் மலைத் தொடர்

  • ஆல்பைன் மலைத்தொடர் தெற்கு ஐரோப்பிய பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான இளம் மடிப்பு மலைகள் ஆகும்.
  • இங்குக் காணப்படும் முக்கிய மலைத்தொடர்கள் சியாரா நெவேடா, பைரினீஸ், ஆல்ப்ஸ், அப்னின்ஸ், டினாரிக் ஆல்ப்ஸ், காகசஸ் மற்றும் கார்பேதியன் மலைத்தொடர்கள் ஆகும்.
  • பைரனீஸ் மலைகள் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் இயற்கை எல்லையாக விளங்குகின்றன.

VII. காரணம் தருக

1. ஆசியா, அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

  • உலகிலேயே மிக அதிகமாக நெல் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா ஆகும். மியான்மர், ஜப்பான், வங்காளதேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் நெல் விளைவிக்கும் பிற முக்கிய நாடுகளாகும்.
  • அதிக மழைப்பொழிவு, செழுமை வாய்ந்த சமவெளிகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றைப் பெற்றிருப்பதால் பருவமழை பெய்யும் ஆசியப்பகுதிகள் நெல் விளைய ஏற்ற பகுதிகளாகத் திகழ்கின்றன.

2. ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட கண்டமாகும்.

  • உலகிலேயே மிக அதிக மக்கள்தொகை கொண்ட கண்டம் ஆசியாவாகும்.
  • உலகில் சுமார் பத்தில் ஆறு பங்கு மக்கள்தொகை ஆசியாவில் காணப்படுகின்றது.
  • ஆசியாவின் மொத்த மக்கள்தொகையில்
    ஐந்தில் மூன்று பங்கு மக்கள் சீனா மற்றும் இந்தியாவில் வசிக்கின்றனர்.
  • ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன.

3. ஐரோப்பா ‘மிகப்பெரிய தீபகற்பம்்’ என அழைக்கப்படுகின்றது.

  • வடக்கே ஆர்டிக் பெருங்கடல், தெற்கில் கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கிழக்கே யூரல் மலைகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
  • எனவே, இது ஒரு மிகப்பெரிய தீபகற்பம் போன்று தோற்றமளிக்கின்றது.

4. மேற்கு ஐரோப்பாவானது உயர் அட்சப் பகுதியில் அமைந்திருந்தாலும் மிதமான காலநிலையைப் பெற்றுள்ளது.

வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் பொதுவாக மிதமான, ஈரக் காலநிலையைக் கொண்டதாகும்.

VIII. ஒரு பத்தியில் விடையளி

1. ஆசியாவின் வடிகால் அமைப்பைப் பற்றி விவரி?

  • ஆசியாவின் பெரும்பான்மையான ஆறுகள் மத்திய உயர்நிலங்களில் தோன்றுகின்றன.
  • ஓப், எனிசி, லேனா ஆகிய முக்கிய ஆறுகள் வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக்பெருங்கடலில் கலக்கின்றன.
  • இவை குளிர்காலத்தில் உறைந்து விடுகின்றன.
  • ஆனால், தெற்காசியாவில் பாயும் ஆறுகளான பிரம்மபுத்திரா, சிந்து, கங்கை (இந்தியா), ஐராவதி (மியான்மர்) ஆகிய வற்றாத ஆறுகள் பனிபடர்ந்த உயர்ந்த மலைகளில் தோன்றுகின்றன.
  • இவை குளிர்காலத்தில் உறைவதில்லை.
  • யூப்ரடிஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் மேற்கு ஆசியாவில் பாய்கின்றன.
  • அமூர், ஹோவாங்கோ, யாங்சி மற்றும் மீகாங் ஆகிய ஆறுகள் ஆசியாவின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் பாய்கின்றன.
  • ஆசியாவின் மிக நீளமான ஆறு யாங்சி ஆகும்.

2. ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்களைப் பற்றி விவரி?

இரும்புத் தாது:

உலகிலேயே மிக அதிகமான இரும்புத்தாது வளத்தை ஆசியா கொண்டுள்ளது. சீனா மற்றும் இந்தியா அதிக இரும்புத்தாது இருப்புள்ள நாடுகளாகும். துருக்கி, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, மியான்மர் மற்றும் பல நாடுகளும் இரும்புத்தாது வளத்தைக் கொண்டுள்ளன.

நிலக்கரி:

நிலக்கரி ஒரு படிம எரிபொருள் ஆகும். உலகிலேயே ஆசியாவில்தான் அதிக நிலக்கரி இருப்பு உள்ளது. ஆசியாவில் சீனா மற்றும் இந்தியா அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளாகத் திகழ்கின்றன

பெட்ரோலியம்:

பெட்ரோலியம் ஒரு கனிம எண்ணெய் வளமாகும். தென்மேற்கு ஆசியாவில்தான் அதிக அளவில் பெட்ரோலிய இருப்புகள் காணப்படுகின்றன. சௌதி அரேபியா, குவைத், ஈரான், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரேபிய குடியரசு போன்றவை பெட்ரோலிய உற்பத்தி செய்யும் மேற்காசிய நாடுகளாகும். தென்சீனா, மலேசியா, புரூனே, இந்தோனேசியா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளாகும்.

பாக்ஸைட்

இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் காணப்படுகின்றது.

மைக்கா

இந்தியா உலகிலேயே அதிக அளவில் மைக்காவினை உற்பத்தி செய்கின்றது.

தகரம்

மியான்மர், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தகரம் காணப்படுகின்றது.

3. பிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன? துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது?

ஃபியார்ட் (fiord) (பிளவுபட்ட கடற்கரை) செங்குத்தான ஓங்கல் அல்லது மலைகளுக்கிடையே ( பனியாற்றுச் செயல்பாடுகளின் காரணமாக) உள்ள குறுகிய, ஆழமான கடற்கரை பிளவுபட்டகடற்கரை எனப்படும்.

பின்வரும் வழிகளில் பயன்படுகிறது

  • இவை காற்று எத்திசையிலிருந்து வீசினாலும் அதன் வேகத்தைக் குறைக்கின்றன.
  • கடல் அலைகளின் வேகத்தையும் இவை கட்டுக்குள் வைக்கின்றன. எனவே , இப்பிளவுபட்ட கடற்கரையானது இயற்கை துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றதாக உள்ளது

நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மலைகள் மற்றும் பீடபூமிகளை உள்ளடக்கியது. இது மிக அழகிய பிளவுபட்ட (fiord) கடற்கரையினைக் கொண்டது.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

4. ஐரோப்பாவின் காலநிலைப் பிரிவுகளைப் பற்றி விவரி?

  • ஐரோப்பிய காலநிலை மிதவெப்ப மண்டல காலநிலை முதல், துருவ காலநிலை வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது.
  • தென்பகுதியில் காணப்படும் மத்தியதரைக் கடல் பகுதி காலநிலை மிதமான கோடைகாலமும், குளிர்கால மழையையும் கொண்டதாகும்.
  • வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் பொதுவாக மிதமான, ஈரக் காலநிலையைக் கொண்டதாகும்.
  • மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் காலநிலை ஈரப்பதம் வாய்ந்த கண்டகாலநிலை ஆகும்.
  • துணை துருவ மற்றும் தூந்திரக் காலநிலை வடகிழக்கில் காணப்படுகின்றது.
  • அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து வீசுகின்ற மேற்கத்திய காற்றுகளின் மிதமான தாக்கத்திற்கு ஐரோப்பா முழுவதும் உட்படுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *