தமிழ் : இயல் 7 : விதைநெல்
கவிதைப்பேழை: ஏர் புதிதா?
I. பலவுள் தெரிக
1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
- உழவு, மண், ஏர், மாடு
- மண், மாடு, ஏர், உழவு
- உழவு, ஏர், மண், மாடு
- ஏர், உழவு, மாடு, மண்
விடை : உழவு, ஏர், மண், மாடு
II. குறு வினா
1. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?
முதல் மழை விழுந்தவுடன் நிலம் ஈர்த்தால் பண்பட்டது.
விரைந்து சென்று பொன் போன்ற ஏரிலே காளைகளைப் பூட்டி, நிலத்தை உழுதனர். ஊக்கத்துடன், வலிமையுடன் உழைத்தனர். நாற்று நட்டனர்.
மேலும் மழை பொழிய நிலம் குளிர்ந்தது. நாற்றுகள் நிமிர்ந்து வளர்ந்தன. கிழக்கும் வெளுத்தது. கவலையும் மறந்தது.
“முதல்மழை விழுந்ததும்
மேல் மண் பதமாகிவிட்டது
வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ நண்பா!”
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. சங்கத்தமிழரின் திணை வாழ்வு ____________ அடிப்படையாக கொண்டது.
விடை : வேளாண்மையை
2. கு.ப.ராஜகோபாலன் ____________ பிறந்தவர்
விடை : 1902-ல் கும்பகோணத்தில்
3. உழுவோர் உலகத்தார்க்கு ____________ எனப் போற்றப்பட்டனர்.
விடை : அச்சாணி
4. உழவே ____________ தொழில்
விடை : தலையான
5. முதல் மழை விழுந்தவுடன் நிலம் ____________ பண்பட்டது.
விடை : ஈர்த்தால்
6. உழவு தொழிலாக இல்லாமல் ____________ திகழ்ந்தது
விடை : பண்பாடாகவும்
II. சிறு வினா
1. சங்கத்தமிழரின் திணை வாழ்வு எதனை அடிப்படையாக கொண்டது?
சங்கத்தமிழரின் திணை வாழ்வு வேளாண்மையை அடிப்படையாக கொண்டது.
2. யார் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர்?
உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர்.
3. எது தலையான தொழில் ஆகும்?
உழவே தலையான தொழில்
4. உழவு தொழிலாக இல்லாமல் எவ்வாறு திகழ்ந்தது?
உழவு தொழிலாக இல்லாமல் பண்பாடாக திகழ்ந்தது
5. தமிழர் பண்பாட்டின் மகுடம் எது?
வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.
6. கு.ப.ராஜகோபாலன் பன்முகத் தன்மைகள் யாவை?
- மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர்
- கவிஞர், நாடக ஆசிரியர்
- மறுமலர்ச்சி எழுத்தாளர்
எனப் பன்முகத் தன்மை கொண்டவர்
7. கு.ப.ராஜகோபாலன் ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்கள் யாவை?
- தமிழ்நாடு
- பாரதமணி
- பாரததேவி
- கிராம ஊழியன்
ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
8. கு.ப.ராஜகோபாலன் மறைவுக்கு பின்னர் எந்த படைப்புகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன?
கு.ப.ராஜகோபாலன் மறைவுக்கு பின்னர் இவரது அகலிகை, ஆத்மசிந்தனை ஆகிய படைப்புகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
9. மண் எப்போது புரளும்?
மாட்டைத் தூண்டி, கொழுவை (கலப்பை இரும்பை) அழுத்தினால் மண் புரளும்
10. விரைந்து போ நண்பா என கவிஞர் கூறக் காரணம் யாது?
முதலில் மழை விழுந்து விட்டதாலும், மேல் மண் பக்குவமானதாலும், வெள்ளி முளைத்ததாலும் ஏறினை பூட்ட விரைந்து போ என்கிறார் கவிஞர்
11. பொன் ஏர் பூட்டுதல் என்றால் என்ன?
வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பண்பாட்டு நிகழ்வு பொன் ஏர் பூட்டுதல் ஆகும்
ஏர் புதிதா? – பாடல் வரிகள்
முதல்மழை விழுந்ததும் மேல்மண் பதமாகிவிட்டது. வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ நண்பா! காளைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு!பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி காட்டைக் கீறுவோம். ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது,காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான் கை புதிதா, கார் புதிதா? இல்லை. நாள்தான் புதிது, நட்சத்திரம் புதிது! ஊக்கம் புதிது, உரம் புதிது!மாட்டைத் தூண்டி, கொழுவை அமுத்து மண்புரளும், மழை பொழியும், நிலம் சிலிர்க்கும், பிறகு நாற்று நிமிரும். எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்;கவலையில்லை! கிழக்கு வெளுக்குது பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை. |