Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 3

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 3

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

கவிதைப்பேழை: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

I. சொல்லும் பொருளும்

  • பண்டி – வயிறு
  • அசும்பிய – ஒளிவீசுகிற
  • முச்சி – தலையுச்சிக் காெண்டை

II. இலக்கணக் குறிப்பு

  • குண்டலமும்  குழைகாதும் – எண்ணும்மை
  • ஆடுக – வியங்கோள் வினைமுற்று
  • கட்டிய – பெயரெச்சம்
  • வட்டச் சுட்டி – குறிப்பு பெயரெச்சம்

III. பகுபத உறுப்பிலக்கணம்

பதிந்து = பதி + த் (ந்) + த் + உ

  • பதி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

IV. சிறு வினா

1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு

கிண்கிணி:-

கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.

அரைஞான் மணி:-

இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.

சிறு வயிறு:-

பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடியது.

நெற்றிச் சுட்டி:-

பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்ட வடிமான சுட்டி பந்தாடியது.

குண்டலங்கள்:-

கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழுகளும் அசைந்தாடின.

உச்சிக் கொண்டை:-

உச்சிக் கொண்டை அதில் சுற்றிக் கட்டுப்பட்டுள்ள ஒளியுள் முத்துகளோடு ஆடியது.

ஆடுக:-

வைத்திய நாதபுரி முருகனே! செங்கீரை ஆடி அருள்புரிவாயாக

பவளம் போன்ற உன் திருமேனி ஆட, செங்கீரை ஆடுக.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சந்தத்துடன் உள்ள பாடலில் _____________ அதிகம் இருக்கும்.

விடை : உயிர்ப்பு

2. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் _____________ .

விடை : குமரகுருபரர்

3. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் _____________ ஒன்று.

விடை : 96 வகைச் சிற்றிலக்கியங்களுள்

4. குமரகுருபரின் காலம் _____________  நூற்றாண்டு ஆகும்

விடை : 17-ம்

II. சிறு வினா

1. செங்கீரைப் பருவனம் குறிப்பு வரைக

செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6ம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர்.இப்பருவத்தில் குழந்தை தன் இருகைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலினை நீட்டி தலை நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.

2. குமரகுருபரர் குறிப்பிடும் அணிகலன்களும், அணியப்படும் இடங்களையும் கூறுக.

அணிகலன்கள்அணியப்படும் இடம்
சிலம்பு, கிணகிணிகாலில் அணிவது
அரை நாண்இடையில் அணிவது
சுட்டிநெற்றியில் அணிவது
குணடலம், குழைகாதில் அணிவது
சூழிதலையில் அணிவது

4. ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை?

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – சிற்றில், சிறுபறை, சிறுதேர்

5. பெண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை?

பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – கழங்கு, அம்மானை, ஊசல்

6. இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள் யாவை?

இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள் – காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – பாடல் வரிகள்

ஆடுக செங்கீரை!செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரைசெங்கீரைப் பருவம், பா.எண்.8

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *