Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 4

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 4

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

கவிதைப்பேழை: கம்பராமாயணம்

I. பலவுள் தெரிக.

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

  1. நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
  2. ஊரில் விளைச்சல் இல்லாததால்
  3. அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
  4. அங்கு வறுமை இல்லாததால்

விடை : அங்கு வறுமை இல்லாததால்

II. சிறு வினா

உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

கும்பகருணனே உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.

III. சிறு வினா

‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’ காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

நிலம்தொழில் / உணவுப்பபயிர்இன்றைய வளர்ச்சி
குறிஞ்சிமலை நெல், திணை நெல், தேன், கிழங்குஏற்றுமதிப் பொருள்களாக இருக்கின்றன. நாட்டு மருத்துவத் துறையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது.
மருதம்செந்நெல், வெண்ணெல்உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்களின் உணவுப் பொருளாக இருப்பதால் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
நெய்தல்உப்பு, மீன்மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மிகுதியாகி உள்ளன. இத் தொழிற்சாலைகள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைப் போலவே உப்பளங்களில் உள்ள உப்பு சுத்திகரிக்கப்பபட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

IV. நெடு வினா

சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட…

இவ்வுரையைத் தொடர்க!

“தண்டலை மயில்களாட தாமரை விளக்கத் தாங்கக்,கொண்டல்கண் முழவினேங்க குவளைக்கண் விழித்து நோக்க,தெண்டிரை யெழினி காட்டத், தேம்பிழி மகரயாழின்வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ.”தண்டல மயில்கள் ஆட என்னும் பாடலில் கம்பரின் கவித்திறம்,சோலையை நாட்டிய மேடையாகவும்மயிலை நடன மாதராகவும்குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும்தாமரை மலரை விளக்காகவும்மேகக்கூட்டங்களை மத்தளமாகவும்வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும்பார்வையாளர்களைக் குவளைமலர்களாகவும் சித்தரித்துதன் கவித்திறனைச் சான்றாக்குகிறார்.இந்தப் பாடலில் கம்பனின் சொல்லாட்சி மாண்புறச் செய்கின்றன. கம்பனின் கவித்திறம், தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உத்திகள் அனைத்தையும் நாம் நினைத்து பார்த்தால் கம்மன் தமிழுக்கு கிடைத்த வரம் எனலாம்.படைப்பாளி தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, தான் வீழ்ந்த பின்னரும் வாழ்கின்றான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் கம்பன் இன்றும் தன் சந்தக் கவிதையோடு வாழ்ந்து வருகிறான்.“காலமெனும் ஆழியிலும்காற்றுமழை ஊழியிலும் சாகாதுகம்பனவன் பாட்டு, அதுதலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு”எனக் கண்ணதாசன் கம்பனைப் பாடுகிறார். இது அவரது கவித்திறனுக்குச் சான்று.கம்பன் கவிதை எழுதுவதற்கு முன்னர் அவன் ரசிக்கிறான். ரசித்ததை அனுபவித்து, அதனுள் கரைந்து விடாமல் படிக்கும் வாசகனை உள்ளே இழுத்து வருகிறான். தன் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓசை நயத்தை உருவாக்குிறான். தம்மை உச்சிக்கு கொண்டு சேர்க்கிறான்.உதாரணமாகதாடகை என்ற அரக்கியைக் கம்பர் உருவாக்குகிறார்.” இறைக்கடை துடித்த புருவங்கள் எயிறு என்னும்பிறைக்கிடை பிறக்கிட மடித்த பிலவாயனமறக்கடை அரக்கி” என எவ்வளவு அழகாக தன் கவித்திறனைப் பதிவு செய்கிறார்.கம்பனின் கவிதை மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ அதில் ஒன்று சந்தம், ஓசை தரும் இன்பம் ஒரு கோடி இன்பம் என்பதற்கு எற்ப,கம்பர் கங்கை காண் படலத்தில்“ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாேரோவேழ நெடும் படை……….”எனத் தொடங்கும் பாடல் உலக்கையால் மாறி மாறி இடிக்கும் ஒத்த ஒசையில் அமைந்த சந்தம் இடிக்கும் காட்சியைக் கம்பர் கண்முன் எழுப்புகிறார்.“உறங்குகின்ற கும்பகன்ன! வுங்கண் மாய வாழவெ லாம்இறங்குகின்றது! இன்று காண்! எழுந்திராய்! எழுந்திராய்!கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!”மேற்சொன்ன கவிதைகளை உற்று நோக்கும்போது சந்தக் கவிதையில் சிறகடித்து பறக்கும் தமிழ் நெடிய உலகில் கம்பனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அறிய முடிகிறது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி _____________ எனப் பெயரிட்டார்.

விடை : இராமாவதாரம்

2. இராமாவதாரம் _____________ என வழங்கப்பெறுகிறது.

விடை : கம்பராமாயணம்

3. கம்பராமாயணப் பாடல்கள் _____________ மிக்கவை.

விடை : சந்தநயம்

4. கம்பர் சாேழ நாட்டுத் _____________ சார்ந்தவர்;

விடை : திருவழுந்தூரைச்

5. கம்பர் _____________ ஆதரிக்கப் பெற்றவர்;

விடை : திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால்

II. குறு வினா

கம்பரால் பாரதி எவ்வாறு பெருமைப்படுகிறார்?

கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பாரதி பெருமைப்படுகிறார்.

III. சிறு வினா

1. கம்பனின் பெருமையை சுட்டும் தொடர்கள் யாவை?

  • கல்வியில் பெரியவர் கம்பர்
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்
  • விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்

2. கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?

  • சரசுவதி அந்தாதி
  • சடகோபர் அந்தாதி
  • திருக்கை வழக்கம்
  • ஏரெழுபது
  • சிலை எழுபது

3. கம்பராமாயணம் குறிப்பு வரைக

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
  • இராமனது வரலாற்றைக் கூறும் நூல்.
  • கம்பர் தான் எழுதிய நூலுக்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார்
  • ஆறு காண்டங்களை உடையது
  • சந்த நயம் மிக்கது

4. கம்பர் சிறு குறிப்பு வரைக

  • “கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீடுக்கட்டுத்தறியும் கவிபாடும் போன்ற முதுமொழிக்கு உரியவர்
  • சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
  • திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.
  • விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்று புகழ் பெற்றவர்
  • சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலியன கம்பர் இயற்றிய நூல்கள் ஆகும்.

கம்பராமாயணம் – பாடல் வரிகள்

பாலகாண்டம் – நாட்டுப்படலம்தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்க க்
கொண்டல்கண் முழவி னேங்க க் குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.     (35)
பாலகாண்டம் – நாட்டுப்படலம்வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்
றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்
உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்
வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால்.     (84)
அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்வெய்யோனொ ளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொ டு மிளையாெனாடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.     (1926)
அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ
தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ
ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ.     (2317)
யுத்த காண்டம் – கும்பகருணன் வதைப் படலம்உறங்கு கின்ற கும்ப கன்ன வுங்க ண் மாய வாழ்வெலா ம்
இறங்கு கின்ற தின்று காணெ ழுந்தி ராயெ ழுந்திராய்
கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே
உறங்கு வாயு றங்கு வாயி னிக்கி டந்து றங்குவாய்.      (7316)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *