Home | Book Back Question and Answers | Samacheer Kalvi 10th Tamil Books Chapter 4 2

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 4 2

தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்

கவிதைப்பேழை: பெருமாள் திருமொழி

I. சொல்லும் பொருளும்

  • சுடினும் – சுட்டாலும்
  • மாளாத – தீராத
  • மாயம் – விளையாட்டு

II. பலவுள் தெரிக

1. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

  1. குலசேகராழ்வாரிடம் இறைவன்
  2. இறைவனிடம் குலசேகராழ்வார்
  3. மருத்துவரிடம் நோயாளி
  4. நோயாளியிடம் மருத்துவர்

விடை : இறைவனிடம் குலசேகராழ்வார்

III. குறு வினா

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்ப காட்டுவார்.

IV. சிறு வினா

“மாளாத கால் நோயாளன் போல” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

உடலில் ஏற்பட்ட புண்மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.நீங்காத துன்பம்வித்துக் கோட்டில் எழுந்தருளயிருக்கும் அன்னையே! மருத்துவரைப் போன்று நீ எனக்கு துன்பத்தைக் தந்தாலும், உன் அடியவனாகிய நான் (நோயாளியைப் போல) உன் அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.

கூடுதல் வினாக்கள்

I. இலக்கணக் குறிப்பு

  • மீளாத்துயர் – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
  • அறுத்து – வினையெச்சம்
  • ஆளா உனதருளே – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்

II. பலவுள் தெரிக

1. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

  1. 120
  2. 115
  3. 110
  4. 105

விடை : 105

2. பெருமாள் திருமொழியைப் பாடியவர்

  1. நம்மாழ்வார்
  2. பெரியாழ்வார்
  3. குலசேகர ஆழ்வார்
  4. ஆண்டாள்

விடை : குலசேகர ஆழ்வார்

3. குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்

  1. எட்டாம் நூற்றாண்டு
  2. ஏழாம் நூற்றாண்டு
  3. ஆறாம் நூற்றாண்டு
  4. ஐந்தாம் நூற்றாண்டு

விடை : எட்டாம் நூற்றாண்டு

4. மாயம் என்பதன் பொருள்

  1. அறியாமை
  2. நிலையாமை
  3. வினோதம்
  4. விளையாட்டு

விடை : விளையாட்டு

5. சங்க கால இலக்கியங்களில் நிறைந்துள்ளவை

  1. அறிவியல் கருத்துகள்
  2. அறியாமை
  3. மூட நம்பிக்கை
  4. பொய்மை

விடை : அறிவியல் கருத்துகள்

6. தமிழர்,பண்டைய நாளிலிருந்தே அறிவியிலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.

  1. அறியாமை
  2. நிலையாமை
  3. வினோதம்
  4. விளையாட்டு

விடை : விளையாட்டு

III. குறு வினா

1. தமிழர், பண்டைய நாளிலிருந்தே எதனை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்?

தமிழர்,பண்டைய நாளிலிருந்தே அறிவியிலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.

2. பெருமாள் திருமொழி நூல் குறிப்பு வரைக.

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி ஆகும்
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 105 பாடல்கள்.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை இயற்றியவர் குலேசகர ஆழ்வார்.

2. குலசேகர ஆழ்வார் சிறு குறிப்பு வரைக

  • குலேசர ஆழ்வார் பிறந்த ஊர் கேரளாவிலுள்ள திருவஞ்சிக்களம் ஆகும்.
  • பெருமாள் திருமொழி, முகுந்தமாலை ஆகியன இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.
  • வட மொழியிலும், தென் மொழியிலும் புலமை பெற்றவர்.
  • எட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர் ஆவார்.

3. அறுத்து என்ற சொல்லுக்கு பகுபத உறுப்பிலக்கணம் காண்க

அறுத்து = அறு + த் + த் + உ

  • அறு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பெருமாள் திருமொழி – பாடல் வரிகள்

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.பாசுர எண்: 691

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *