Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Tamil Books Chapter 4 1

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 4 1

தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்

உரைநடை: செயற்கை நுண்ணறிவு

I. பலவுள் தெரிக

1. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு : செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் ப4eக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

  1. தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
  2. குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
  3. தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
  4. குறிப்புகளுக்குத் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடை : தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

2. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

  1. துலா
  2. சீலா
  3. குலா
  4. இலா

விடை : இலா

II. குறுவினா

1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா.செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதன் (Robo – ரோபோ)செயற்கை நுண்ணறிவால் இயங்கும் திறன்பேசி (Smart Phone)

III. சிறுவினா

1. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

  • இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்தவில்லை.
  • அது மனிதனுக்குரியத் தேவைகளை மட்டுமே மேம்படுத்தி இருக்கிறது.
  • அறிவியலால் இன்று மனிதன் மனிதனாக வாழவில்லை.
  • இயந்திரம் மனிதனாகிவிட்டது. மனிதன் இயந்திரம் ஆகிவிட்டான்.
  • மனித நேயத்தையும் அன்பையும் இரக்கத்தையும் இன்றைய மனிதனிடம் பார்க்க முடியவில்லை.
  • பணிகளால் அவன் எந்திரத்தைப் போல ஓடிக்கொண்டே உள்ளான்.

2. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில் நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு ‘எதிர்காலத் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில் நுட்பம்உயரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி உதவி செய்கிறது.நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும். நாம் திறக்க கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும். நாம் கேட்பதை உலாவியல் தேடும், நாம் விரும்பும் அழகா கவிதைகளை இணையத்தில் தேடித்தரும். எந்தக்கடையில் எது விற்கும் என்று சொல்லும். படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். நாம் எடுத்த ஒளிப்படங்களை பற்றிப் பட்டியிலிடும்.எதிர்காலத்தில் நம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் உதவு மென்பொருள் நம்மை நன்கு அறிந்திருக்கும்.

IV. நெடுவினா

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்’ பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஊர்திகளை இயக்குதல்

மனிதர்களிடம் போட்டி

கல்வித்துறை

பிற செயல்பாடுகள்

வேலை வாய்ப்புகளில்மாற்றம்

இயந்திர மனிதனிடம் குழந்தை

தோழனாய் இயந்திர மனிதன்

உயிராபத்தை விளைவித்தல்

வணிக வாய்ப்புகள்

முடிவுரை

முன்னுரை:-

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளும் வெறும் வணிகத்துடன் அது நின்றுவிடாது. செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் இனி மிகுதியாக இருக்கும்.

ஊர்திகளை இயக்குதல்:-

  • எதிர்காலத்தில் நாம் இயக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும்.
  • இத்தகைய ஊா்திகள் ஏற்படுத்தும் விபத்து குறையும்.
  • போக்குவரத்து நெரிசல் இருக்காது.
  • பயண நேரம் குறையும்.
  • எரிபொருள் மிச்சப்படும்.

மனிதர்களிடம் போட்டி:-

மென்பொருள்கள், கவிதைகள், கதைகள் விதவிதமான எழுந்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களிடம் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை

கல்வித்துறை:-

கல்வித்துறையில் இத்தொழில் நுட்பத்தைப் பல விதங்களில் பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன.

பிற செயல்பாடுகள்:-

விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதன் அளிக்கும் சேவையை இயந்திர மனிதன் செய்யும்.

நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்குப் பொம்மை கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவது எனப் பலவற்றையும் செய்யும் நிலை வரும்

வேலை வாய்ப்புகளில் மாற்றம்:-

வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும்.

இயந்திர மனிதனிடம் குழந்தை:-

எதிர் காலத்தில் இயந்திர மனிதனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்க முடியும்.

தோழனாய் இயந்திர மனிதன்:-

வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய் பேச்சுக் கொடுத்தும் பேணும் இயந்திர மனிதர்களை நாம் பார்க்க முடியும்.

உயிராபத்தை விளைவித்தல்:-

செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திர மனிதர்களால், மனிதர் செய்ய இயலாத அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களையும் செய்ய முடியும்.

மனித முயற்சியல் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்ய முடியும்.

வணிக வாய்ப்புகள்:-

பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொடுக்கும்.

முடிவுரை:-

செயற்கை நுண்ணறிவு சாதனங்களால் மனிதனின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வினாக்கள்

I. குறு வினா

1. மின்னணுப் புரட்சிக்கான காரணங்களைக் கூறுக

  • 1980-ல் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சி
  • இணையப் பயன்பாட்டின் பிறப்பு

இவையே இன்றைய மின்னணுப் புரட்சிக்கான காரணங்களாகும்.

2. வேர்டுஸ்மித் குறிப்பு வரைக

  • இதழியலில் மொழி நடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்
  • இதற்கு “எழுத்தாளி” என்று பெயர்
  • இதில் தகவல்களை கொடுத்தால் மட்டும் போதும் சில நொடிகளிலேய கட்டுரையை உருவாக்குகின்றன

3. வாட்சன் குறிப்பு வரைக

  • 2016-ல் ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன்.
  • சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

4. செயற்கை நுண்ணறிவு நமக்கு எப்படி அறிமுகமாகிறது?

  • சமூக ஊடகங்கள்
  • மின்னணு சந்தைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு நமக்கு அறிமுகமாகிறது

5. இயந்திர மனிதர்களை பணியமர்த்திய நாடு எது?

சீனா

6. செயற்கை நுண்ணறிவு என்பது யாது?

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு (Computer Program) எனலாம்.

7. எதனை அறிந்திருப்பது வாழ்க்கையை எளிதாக்கவும், வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது?

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

கல்வியறிவுடன் மின்னணுக் கல்வியறிவையும் (Digital Literacy) மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் (Digital Marketing) அறிந்திருப்பது வாழ்க்கையை எளிதாக்கவும் வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *