Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium Human Geography of Tamil Nadu

Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium Human Geography of Tamil Nadu

சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : தமிழ்நாடு – மானுடப் புவியியல்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா

  1. காவிரி டெல்டா
  2. மகாநதி டெல்டா
  3. கோதாவரி டெல்டா
  4. கிருஷ்ணா டெல்டா

விடை : காவிரி டெல்டா

2. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர்

  1. பருப்பு வகைகள்
  2. சிறுதானியங்கள்
  3. எண்ணெய் வித்துக்கள்
  4. நெல்

விடை : சிறுதானியங்கள

4. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம்

  1. மேட்டூர்
  2. பாபநாசம்
  3. சாத்தனூர்
  4. துங்கபத்ரா

விடை : மேட்டூர்

5. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை

  1. 3 மற்றும் 15
  2. 4 மற்றும் 16
  3. 3 மற்றும் 16
  4. 4 மற்றும் 15

விடை : 3 மற்றும் 15

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு _____________ சதவீதத்தை வகிக்கிறது

விடை : 21

2. சாத்தனூர் அணை _____________________ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

விடை : தென்பெண்ணை

3. மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ______________________________ ஆகும்.

விடை : சென்னை சர்வதேச விமான நிலையம்

4. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு _______________________ என அழைக்கப்படுகிறது

விடை : வர்த்தக சமநிலை

III. பொருத்துக

1. பாக்சைட்சேலம்
2. ஜிப்சம்சேர்வராயன் மலை
3. இரும்புகோயம்புத்தூர்
4. சுண்ணாம்புக்கல்திருச்சிராப்பள்ளி

விடை:- 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ

IV. சரியான கூற்றினை கண்டுபிடி

1. கூற்று: கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.

காரணம்: இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை
அளிக்கின்றன.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம், கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
  3. கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
  4. கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம், கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

2. கூற்று: நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம்.

காரணம்: இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது
  2. கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
  3. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  4. கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விடை: கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

V. சுருக்கமாக விடையளிக்கவும்

1. தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக.

சொர்ணவாரி (சித்திரை பட்டம்)
விதைக்கும் காலம்ஏப்ரல் – மே
அறுவடை காலம்ஆகஸ்டு – செப்டம்பர்
முக்கிய பயிர்கள்பருத்தி மற்றும் திணை வகைகள்
சம்பா (ஆடிப்பட்டம்)
விதைக்கும் காலம்ஜூலை – ஆகஸ்டு
அறுவடை காலம்ஜனவரி – பிப்ரவரி
முக்கிய பயிர்கள்நெல் மற்றும் கரும்பு
நவரை
விதைக்கும் காலம்நவம்பர் – டிசம்பர்
அறுவடை காலம்பிப்ரவரி – மார்ச்
முக்கிய பயிர்கள்பழங்கள், காய்கறிகள், வெள்ளரி, தர்பூசணி

2. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் ‘மான்செஸ்டர்’ என அழைக்கப்படுகிறது?

  • பருத்தி நெசவாலைகள் தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நன்கு வளர்ந்த ஒரு தொழிலகமாகும்.
  • பருத்தி நெசவு ஆலைகள் கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செறிந்து காணப்படுகின்றன.
  • எனவே இது தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.

3. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.

மேட்டூர் அணைபவானிசாகர் அணை
அமராவதி அணைகிருஷ்ணகிரி அணை
சாத்தனூர் அணைமுல்லை பெரியார் அணை
வைகை அணைமணிமுத்தாறு அணை
பாபநாசம் அணைபரம்பிகுளம் ஆழியாறு திட்டம்

4. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?

  • சென்னையில் பறக்கும் தொடருந்துத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
  • பறக்கும் இரயில் எனப்து நிலத்திலிருந்து உயரே கட்டப்பட்ட பாலத்தின் மேல் செல்லும் புறநகர் தொடருந்து (இரயில்) சேவையைக் குறிக்கும்
  • இதன் உரிமையாளர் தென்னக இரயில்வே இந்தியா

5. தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பட்டியலிடுக.

விமான நிலையங்கள்
சென்னைகோயம்புத்தூர்
திருச்சிசேலம்
மதுரைதூத்துக்குடி
துறைமுகங்கள்
சென்னைநாகப்பட்டினம்
எண்ணூர்குளச்சல்
கன்னியாகுமரிதூத்துக்குடி
பாம்பன்கூடங்குளம்
கடலூர்

VI. வேறுபடுத்துக.

1. கடல் மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் பிடித்தல்.

கடல் மீன்பிடித்தல்

  • பெருங்கடல் அல்லது கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தூரம் வரை மீன்பிடித்தல் ’கடலோர மீன்பிடிப்பு’ என அழைக்கப்படுகிறது.
  • சுறா, பறவை மீன், சங்கு மீன், கெளுத்தி, வெள்ளி வயிறு மீன் போன்ற மீன் வகைகள் மற்றும் நண்டு வகைகள் இங்குப் பிடிக்கப்படுகின்றன.
  • சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மாநிலத்தின் கடல் மீன் உற்பத்தியில் ஏறத்தாழ 40% சதவிகிதம் பங்களிப்பைத் தருகின்றன.
  • கண்டத்திட்டுப்பகுதி மீன் பிடித்தலுக்கு சாதகமாக உள்ளன

உள்நாட்டு மீன் பிடித்தல்

  • ஏரிகள், ஆறுகள், குளங்கள், கழிமுகங்கள், காயல்கள் மற்றும் சதுப்புநிலப்பகுதி போன்ற நீர் நிலைகளில் உள்நாட்டு மீன் பிடித்தல்
    நடைபெறுகிறது.
  • கட்டுமரம், டீசல் படகுகள் மற்றும் மீன் வலைகளைப் பயன்படுத்தி
    மீன்பிடித்தல் நடைபெறுகிறது.
  • வேலூர், கடலூர், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தியில் சுமார் 40% பங்களிப்பை தருகிறது.
  • பண்ணைக்குளங்கள் மற்றும் நீர்ப்பாசன ஏரிகள் உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு சாதகமாக உள்ளது

2. உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்.

உணவுப் பயிர்கள்

  • மக்களிடம் உணவுத் தேவைக்காக பயிரிடப்படும் பயிர்கள்
  • நெல் மற்றம் திணை வகைகளான சோளம், கேழ்வரகு, கம்பு போன்றவை
  • உணவுப் பயிர்களில் நெல், பொன்னி, மற்றும், கிச்சடி சம்பா தமிழகத்தின் பயிரிடப்படும் முக்கிய நெல் வகையாகும்
  • காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்கள்

வாணிபப் பயிர்கள்.

  • தொழில்கள் மட்டுமின்றி வணிகத் தேவைக்காக பயிரிடப்படும் பயிர்கள்
  • கரும்பு, எண்ணெய்வித்துக்கள், பருத்தி மற்றும் தோட்டப் பயிர்களான காபி, தேயிலை, ரப்பர் போன்றவை
  • கரும்பும், இழைப்பயிரான பருத்தியும், தமிழகத்தின் மிக முக்கியமான உணவல்லாத பயிர்களாகும்
  • விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தஞசாவூர், கடலூர் மாவட்டங்கள்

3. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.

மேற்பரப்பு நீர்

  • மழைநீர் மூலம் பெறப்படும் ஆற்று வடிநிலப்பகுதி நீர் நீர்தேக்கங்கள் ஏரிகள், குளங்களில் உள்ள நீர் மேற்பரப்பு நீர் எனப்படும்.
  • மேற்பரப்பு நீர் பருவ மழையை மட்டுமே நம்பி கிடைக்கும் நீர்
  • மேற்பரப்பில் 95% பயன்பாட்டில் இருந்து வருகிறது

நிலத்தடி நீர்.

  • மழைநீரானது பூமியின் உள் சென்று தங்கி அதனை கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறு மூலம் பெறப்படும் நீர் நிலத்தடி நீர் எனப்படும்.
  • பூமியின் உள்ளே தங்கி நாம் எடுக்கும் நீர்
  • 80%த்திற்கும் மேல் பயன்பாட்டில் இருந்து வருகிறது

VII. கீழ்க்கண்டவற்றிக்குக் காரணம் கூறுக

1. விவசாயிகள் இரசாயன வேளாண்மையிலிருந்து கரிம (இயற்கை) வேளாண்மைக்கு மாறுகிறார்கள்.

காரணம்

இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கோடு மத்திய அரசு தேசிய கரிம வேளாண்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை மேம்படுத்திட பயிற்சியும் அளிக்கபடுவதுடன் நிதியுதவியும் அளிக்கப்படுவதால் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறுகிறார்கள்

2. கிராமங்களைவிட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம்.

காரணம்

தொழிற்துறை மேம்பாடு, அதிக வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி, கல்வி வசதி போன்ற காரணங்களால் பெரு நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக காணப்படுகிறது.

3. தமிழ்நாட்டின் ‘நெசவாலைத் தலைநகர்’ என கரூர் அழைக்கப்படுகிறது.

காரணம்

பருத்தி நெசவு ஆலைகள் கரூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் செறிந்து காணப்படுகின்றன. நெசவுத் தொழில் மூலம் இப்பகுதிகள் மாநிலப் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன. எனவே கரூர் தமிழ்நாட்டின் நெசவாலை தலைநகர் என அழைக்கப்படுகிறது.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்

1. தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.

  • தேயிலை, காபி, இரப்பர், மற்றும் முந்திரி ஆகியன மாநிலத்தின் முக்கிய தோட்டப் பயிர்களாகும்.
  • இந்தியாவில் அசாம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது.
  • நீலகிரி மலைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன.
  • மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காபி பயிரிடப்படுகின்றது.
  • நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைச்சவுகளில் காபி குறிப்பிடத்தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது.
  • திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள மலைச் சரிவுகளிலும் காபி பயிரிடப்படுகின்றது.
  • காபி உற்பத்தியில் கர்நாடகா மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது.
  • இரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரியில் அதிகமாகக் காணப்படுகிறது.
  • தமிழ்நாட்டிலுள்ள, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சிமலைகளின் சரிவுகளில் மிதவெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதிகளில் மிளகு விளைகின்றது.
  • கடலூர் மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகின்றது.

2. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.

மனித குலத்திற்கும் புவியில் வாழும் இலட்சக்கணக்கான உயிரினங்களுக்கும் நீர் இயற்கையின் ஒரு விலைமதிப்பற்ற பரிசாகும்.

தமிழ்நாட்டின் நீர் வளங்கள்

  • இந்தியப் பரப்பளவில் 4 சதவிகிதத்தையும் மக்கள் தொகையில் 6 சதவிகிதத்தையும் கொண்டுள்ள தமிழ்நாடு, இந்திய நீர் வளத்தில் 2.5 சதவிகிதத்தை மட்டுமே பெற்றுள்ளது.
  • தமிழ்நாட்டின் மேற்பரப்பு நீரில் 95 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் மற்றும் நிலத்தடி நீரில் 80 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்:

பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள், அடிப்படையில் வேளாண் நீர்ப்பாசன மேம்பாட்டிற்காகவும் மற்றும் நீர் மின்சக்தி உற்பத்திக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இவை வேறு பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

  1. மேட்டூர் அணை
  2. பவானிசாகர் அணை
  3. அமராவதி அணை
  4. கிருஷ்ணகிரி அணை
  5. சாத்தனூர் அணை
  6. முல்லை பெரியார் அணை
  7. வைகை அணை
  8. மணிமுத்தாறு அணை
  9. பாபநாசம் அணை
  10. பரம்பிகுளம் ஆழியாறு திட்டம்

தமிழ்நாட்டிலுள்ள நீர் வள ஆதாரங்கள்

  1. ஆற்று வடிநிலம்
  2. ஆழ்துளை கிணறுகள்
  3. நீர்த்தேக்கங்கள்
  4. திறந்தவெளி கிணறுகள்
  5. ஏரிகள்

மேற்பரப்பு நீர் வள ஆதாரங்கள்

  • தமிழ்நாட்டின் மொத்த மேற்பரப்பு நீரின் அளவு சுமார் 24,864 மில்லியன் கன மீட்டராகும். மாநிலத்தில் 17 பெரிய ஆற்று வடிநிலங்கள் 81 நீர்தேக்கங்கள் மற்றும் 41,262 ஏரிகள் உள்ளன.
  • ஏற்கனவே பெரும்பகுதி மேற்பரப்பு நீர் பாசனத்திற்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • சுமார் 24 இலட்சம் ஹெக்டேர் விளைநிலம் மேற்பரப்பு நீர் மூலம் பெரிய, நடுத்தர சிறிய நீர்பாசன திட்டங்கள் மூலம் பாசன வசதியை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்வள ஆதாரங்கள்

  • மாநிலத்தில் பயன்படுத்திக் கொள்ளத்தக்க நிலத்தடி நீர்வளம் 22,433 மில்லியன் கனமீட்டர் ஆகும்.
  • நீரின் தற்போதைய பயன்பாட்டின் அளவு 13,558 மில்லியன் கனமீட்டர் ஆகும். இது மறுவூட்டம் மூலம் கிடைக்கும நீரில் 60% ஆகும். மீத இருப்பு நீரானது சுமார் 8,875 மில்லியன் கன மீட்டராகும்.

3. தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி.

  • வெர்மிகுலைட், மேக்னடைட், டுனைட், ரூட்டைல், செம்மணிக்கல், மாலிப்படினம் மற்றும் இல்மனைட் ஆகிய வளங்களில் தமிழ்நாடு
    முன்னணி உற்பத்தியாளராக உள்ளது.
  • பழுப்பு நிலக்கரி 55.3%, வெர்மிகுலைட் 75%, டுனைட் 59%, செம்மணிக்கல் 59%, மாலிப்டீனம் 52% மற்றும் டைட்டானியம் 30% தாதுக்கள் நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பாகும்

எரிபொருட்கள்

  • மாநிலத்தில் காணப்படும் முக்கியமான தாதுக்களில் நெய்வேலி, மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது.
  • இராமநாதபுரம் பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் காணப்படுகின்றன.
  • காவிரி வடிநிலப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு படிவுகள் காணப்படுகின்றன.

இரும்பு

  • சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையிலும் இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன.

மேக்னசைட்

  • சேலம் அருகே மேக்னசைட் தாது கிடைக்கின்றது.
  • கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மேக்னசைட் கிடைக்கிறது.

பாக்சைட்

  • சேர்வராயன் குன்றுகள், கோத்தகிரி, உதகமண்டலம், பழனிமலை
    மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் பாக்சைட் தாதுகள் காணப்படுகின்றன.

ஜிப்சம்

  • திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்
    மாவட்டங்களில் ஜிப்சம் கிடைக்கிறது.

இல்மனைட்

  • கன்னியாகுமரி கடற்கரை மணல் பரப்புகளில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறது.

சுண்ணாம்புக்கல்

  • கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுண்ணாம்புக்கல் கிடைக்கிறது.

பிற உலோகங்கள்

  • பெல்ட்ஸ்பார்க், படிகக்கல், தாமிரம் மற்றும் காரீயம் ஆகியவை மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன

4. தமிழ்நாட்டில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் அதற்கான காரணங்களை எழுதுக.

  • ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை எனப்படுகிறது.
  • மக்கள்தொகைப் பண்புகள் பற்றிய புள்ளிவிவர ஆய்வுகள் ‘மக்கட்தொகையியல்’ என அழைக்கப்படுகின்றது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள்

  • கோவை
  • சென்னை
  • திருவள்ளூர்
  • காஞ்சிபுரம்
  • விழுப்புரம்
  • தர்மபுரி
  • சேலம்
  • மதுரை
  • திருநெல்வேலி

ஆகியவை தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களாகும்.

அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதற்குக் காரணம்

  • விவசாயம் மற்றும் தொழில்துறை மேம்பாடு
  • வேலைவாய்ப்பு
  • போக்குவரத்து வசதி
  • கல்வி கற்க வசதி
  • மருத்துவ வசதி
  • சந்தை வசதி
  • பொழுதுபோக்கு வசதி

5. தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி.

சாலைப் போக்குவரத்து

  • மாநிலத்தின் மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கிலோமீட்டர் ஆகும். இதில் 60,628 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.
  • பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டணி இயக்கத் திட்டத்தின் கீழ் (PPP) மொத்த சாலைத் திட்டங்களில் 20% பங்களிப்புடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதன் வகைகள்

  • தேசிய  நெடுஞ்சாலைகள்
  • மாநில நெடுஞ்சாலைகள்
  • மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகள்
  • ஊராட்சி ஒன்றிய சாலைகள்
  • கிராம பஞ்சாயத்து சாலைகள்
  • வனச்சாலைகள்
  • வணிக ரீதியான சாலைகள்
  • வணிக ரீதியற்ற சாலைகள்

இரயில்வே போக்குவரத்து

  • தெற்கு இரயில்வேயின் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. தற்போது தெற்கு இரயில்வேயின் வலைப்பின்னல் இந்தியாவின் தென் தீபகற்பப் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள் அடங்கும்
  • இம்மண்டலத்தில் 690 இரயில் நிலையங்கள் உள்ளன
  • இந்த இரயில்வே வலைப்பின்னலில் அமைப்பு இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
  • சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகியவை இம்மானிலத்தில் உள்ள முக்கிய இரயில் சந்திப்புகள் ஆகும்.
  • சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.
  • மெட்ரோ இரயில்வே அமைப்பு, மே 2017 முதல் பாதாள இரயில் இயக்கத்துடன் இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

வான்வழி போக்குவரத்து

  • தமிழ்நாட்டில் 4 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. சென்னை சர்வதேச விமானநிலையமானது மும்பை மற்றும் புது டெல்லிக்கு அடுத்ததாக இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உள்ளது.
  • கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற சர்வதேச விமானநிலையங்கள் ஆகும்.
  • தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகும்.
  • தொழில் துறையின் அதீத வளர்ச்சி, பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துகளை அதிகரித்துள்ளது.
  • இது ஆண்டிற்கு 18 சதவீத்திற்கும் அதிகமான விமான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நீர்வழி போக்குவரத்து

  • சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும்.
  • நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகமும் பிற பகுதிகளில்
    15 சிறிய துறைமுகங்களும் இம்மாநிலத்தில் உள்ளன.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் தமிழ்நாட்டின் கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  • சென்னை துறைமுகம் செயற்கைத் துறைமுகமாகும்.
  • இது சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் நாட்டின் துறைமுகங்களில் இரண்டாவது பெரிய துறைமுகமாகும்.

6. சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றி எழுதவும்.

  • சாலை குறியீடுகள் பற்றிய விழிப்புணர்வு
  • நில், கவனி, செல்
  • வாகனம் நெருங்கி வருகிறதா என்பதை உறுதி செய்தல்
  • சாலைகளில் அதிவிரைவாக வாகனங்களை செலுத்துவதை தவிர்த்தல்
  • பாதசாரிகளுக்கான இடத்தில் சாலையைக் கடந்து செல்லுதல்
  • வாகனம் ஓட்டும்போது கைகளை நீட்டாதிருத்தல்
  • ஒருபோதும் வளைவவுகளில் வாகனங்களை முந்தாமல் நின்று கவனமாக செல்லுதல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *