Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium Physical Geography of Tamil Nadu

Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium Physical Geography of Tamil Nadu

சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. தமிழ்நாட்டின் அட்சப் பரவல் முதல் வரை உள்ளது.

  1. 8°4´ வ முதல் 13° 35´ வ வரை
  2. 8° 5´ தெ முதல் 13° 35´ தெ வரை
  3. 8° 0´ வ முதல் 13° 05´ வ வரை
  4. 8° 0´ தெ முதல் 13° 05´ தெ வரை

விடை : 8°4´ வ முதல் 13° 35´ வ வரை

2. தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் முதல் வரை உள்ளது .

  1. 76°18´ கி முதல் 80°20´ கி வரை
  2. 76°18´ மே முதல் 80°20´ மே வரை
  3. 10°20´ கி முதல் 86°18´ கி வரை
  4. 10°20´ மே முதல் 86°18´ மே வரை

விடை : 76°18´ மே முதல் 80°20´ மே வரை

3. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ஆகும்

  1. ஆனைமுடி
  2. தொட்டபெட்டா
  3. மகேந்திரகிரி
  4. சேர்வராயன்

விடை : தொட்டபெட்டா

4. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது ?

  1. பாலக்காடு
  2. செங்கோட்டை
  3. போர்காட்
  4. அச்சன்கோவில்

விடை : போர்காட்

5. கீழ்க்கண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?

  1. பெரியார்
  2. காவிரி
  3. சிற்றார்
  4. பவானி

விடை : பெரியார்

6. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?

  1. இராமநாதபுரம்
  2. நாகப்பட்டினம்
  3. கடலூர்
  4. தேனி

விடை : கடலூர்

7. பின்னடையும் பருவக்காற்று லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது

  1. அரபிக்கடல்
  2. வங்கக்கடல்
  3. இந்தியப் பெருங்கடல்
  4. தைமுர்க்கடல்

விடை : வங்கக்கடல்

8. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்

  1. தேனி
  2. மதுரை
  3. தஞ்சாவூர்
  4. இராமநாதபுரம்

விடை : தேனி

9. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம்

  1. தர்மபுரி
  2. வேலூர்
  3. திண்டுக்கல்
  4. ஈரோடு

விடை : தர்மபுரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நீலகிரி மற்றும் தர்மபு ரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி _________________ ஆகும்.

விடை : கோயம்புத்தூர் பீடபூமி

2. கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் __________________ ஆகும்.

விடை : சோலைக்கரடு

3. ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் _______________ மற்றும் _____________ ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

விடை : கொள்ளிடம், காவிரி

4. _______________________ தமிழ்நாட்டின் மாநில விலங்கு

விடை : நீலகிரி வரையாடு

III. பொருத்துக

1. குளிர்காலம்முன் பருவ மழை
2. கோடைக்காலம்ஜூன் முதல் செப்டம்பர் வரை
3. தென்மேற்கு பருவக்காற்றுமார்ச் முதல் மே வரை
4. வடகிழக்கு பருவக்காற்றுடிசம்பர் முதல் பிப்ரவரி வரை
5. மாஞ்சாரல்அக்டோபர் முதல் நவம்பர் வரை

விடை ; 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-உ, 5-அ

IV. கூற்று வகை வினா

1. கூற்று: தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப்பெறுவதில்லை.

காரணம்: இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது

  1. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
  2. கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
  3. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
  4. காரணம் சரி. ஆனால் கூற்று தவறு

விடை ; கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

V. சுருக்கமாக விடையளிக்கவும்

1. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக

  • கிழக்கில் – வங்காள விரிகுடா
  • மேற்கில் – கேரளா
  • வடக்கில் – ஆந்திரப் பிரதேசம்
  • வடமேற்கில் – கர்நாடகா
  • தெற்கில் – இந்தியப் பெருங்கடல்

ஆகியன தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன

2. ‘தேரி’ – என்றால் என்ன?

இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் “தேரி” என்று அழைக்கப்படுகின்றன.

3. கடற்கரைச்சமவெளி எவ்வாறு உருவாகிறது?

  • தமிழ்நாட்டின் கடற்கரைச் சமவெளியானது கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கோரமண்டல் அல்லது சோழமண்டல சமவெளி (சோழர்கள் நிலம்) எனவும் அழைக்கப்படுகிறது.
  • இச்சமவெளி சென்னை முதல் கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது. சில இடங்களில் இவை 80 கிலோ மீட்டருக்கும் அதிகமான அகலத்துடன் காணப்படுகிறது.
  • இது  உயரமான கடற்கரை என்றாலும் சில பகுதிகல் கடலில் மூழ்கியுள்ளன.

4. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.

  • பாம்பன் தீவு
  • காட்டுப்பள்ளி தீவு
  • முயல் தீவு
  • கொய்யில் தீவு
  • குருசாடி தீவு
  • புள்ளிவாசல் தீவு
  • விவேகானந்தர் நினைவுப் பாறை
  • நல்ல தண்ணித்தீவு
  • ஸ்ரீ ரங்கம் தீவு
  • உப்பு தண்ணித்தீவு நிலங்கள்

5. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக

1. காரையாறு2. பச்சையாறு3. சேர்வலாறு4. சிற்றாறு
5. கடனா நதி6. இராமநதி7. மணிமுத்தாறு

6. பேரிடர் அபாய நேர்வு – வரையறு.

  • உயிர்களுக்கும், உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுதான் பேரிடர் எனப்படுகிறது
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி “அபாய குறைப்பு என்பது பேரிடருக்கான காரணங்களை முறையாக கண்டறிந்த அதன் தாக்கத்தைக் குறைப்பதாகும்

7. புயலின்போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது?

  • மீனவர்கள் கூடுதலான மின்சாதனங்களுடன் (பேட்டரிகள்) ஒரு
    வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும்.
  • வானொலி பெட்டியின் மூலம் அவ்வப்போதைய வானிலை நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்
  • இக்காலங்களில் கடலுக்குச் செல்வதை தவிர்த்து,
    படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

VI. வேறுபடுத்துக.

1. தாமிரபரணி மற்றும் காவிரி

தாமிரபரணி

  • தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது.
  • திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.
  • காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராமநதி ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

காவிரி

  • காவிரி ஆறு தலைக்காவேரியில் கூர்க் மாவட்டத்திலுள்ள கர்நாடகாவில் என்னும் உற்பத்தியாகிறது
  • இது சேலம், ஈரோடு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் வழியாக பாய்கிறது
  • பவானி, அமராவதி மற்றும் நொய்யல் ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

VII. கீழ்கண்டவற்றிக்கு காரணம் தருக

1. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடரச்சியற்று காணப்படுகிறது.

காரணம்

கிழக்குத் தொடர்ச்சி மலையானது பல இடங்களில் வங்களாவிரிகுடா கடலில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது

2. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக்குறைந்த மழையைப் பெறுகிறது

காரணம்

தென்மேற்கும் பருவக்காற்று காலத்தில் அரபிக் கடலிலிருந்து வீசும் பருவக்காற்றின் மழை மறைவுப் பிரதேசத்தில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் மிகக் குறைவான மழைப் பொழிவை பெறுகிறது.

3. கடலூர் ஒரு பல்வழி பேரழிவு மண்டலம்

காரணம்

தமிழ்நாட்டில் நிகழும் பேரிடர்களான வெள்ளப்பெருக்கு, புயல்கள், சுனாமி மற்றும் நில அதிர்வு ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டமாக கடலூர் இருப்பதால் அதனை ஒரு பல்வழி மண்டலம் என அழைக்கின்றனர்.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்

1. தமிழ்நாட்டின் பீடபூமி நிலத்தோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்

  • தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.
  • ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

பாரமஹால் பீடபூமி

  • தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பாரமஹால் பீடபூமியானதுமைசூர் பீடபூமியின் ஒரு பகுதியாகும்.
  • இதன் உயரம் சுமார் 350 மீட்டர் முதல் 710 மீட்டர் வரை காணப்படுகிறது.
  • இந்தப் பீடபூமியில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன.

கோயம்புத்தூர் பீடபூமி

  • நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
  • இதன் உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபடுகிறது.
  • இப்பீடபூமி சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை
    உள்ளடக்கியுள்ளது.
  • மோயர் ஆறு இப்பீடபூமியை மைசூர் பீடபூமியில் இருந்து பிரிக்கிறது.
  • மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீடபூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளன.

சிகூர் பீடபூமி

  • நீலகிரி பகுதிகளில் பல மலையிடை பீடபூமிகள் காணப்படுகின்றன. சிகூர் பீடபூமி அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மதுரை பீடபூமி

  • மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது.
  • இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது.
  • வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலப் பகுதிகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.

2. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக

காவிரி உற்பத்தி

  • காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகி 850 கிலோ மீட்டர்
    நீளத்திற்கு பாய்கிறது.
  • இதில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு தமிழ்நாட்டில் பாய்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக
    உள்ளது.

நீர்வீழ்ச்சி மற்றும் நீர்தேக்கம்

  • தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில்
    இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

காவிரியின் துணை ஆறுகள்

  • மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு இதன் துணையாறாக வலது கரையில் காவிரியுடன் இணைகிறது. பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது.
  • கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் இணைகின்றன.
  • இப்பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால், இது ”அகன்ற காவிரி’ என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தீவு

  • திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொலேருன் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது.
  • இவ்விடத்திலிருந்து காவிரி டெல்டா சமவெளி தொடங்குகிறது. சுமார் 16 கிலோ மீட்டர்தொலைவிற்கு பாய்ந்த பின் மீண்டும் இவ்விரு கிளைகள் இணைந்து ’ஸ்ரீரங்கம் தீவை’ உருவாக்குகின்றன.

காவிரி டெல்டா

  • ‘கிராண்ட் அணைகட்’ என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
  • இந்த ஆறு கல்லணையைக் கடந்த பின் பல கிளைகளாகப் பிரிந்து டெல்டா பகுதி முழுவதற்கும் ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கி உள்ளது.
  • காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல் அமைப்பு ’தென்னிந்தியாவின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது

3. தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்

கோடைக்காலம்

  • சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்துக் கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது.
  • ஆகையால் பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழகம், கடகரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது.
  • பொதுவாக வெப்பநிலையானது 30°C லிருந்து 40°C வரை வேறுபடுகிறது.
  • இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன் பருவமழை மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.

குளிர்காலம்

  • ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்துக்கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.
  • இக்காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகின்றன. ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது.
  • தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது.
  • இருந்தபோதிலும் மலைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5°C க்கும் குறைவாக உள்ளது.
  • நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் 0°C ஆகவும் பதிவாகிறது.
  • இக்குறைந்த வெப்பநிலை அடர் மூடுபனி மற்றும் மூடுபனி உருவாகக் காரணமாகிறது. இப்பருவத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது

4. தமிழ்நாட்டின் மண் வகைகளின், பரவல் பற்றி விளக்குக

தமிழ்நாட்டில் காணப்படும் மண்வகைகளை அதன் தன்மைகளைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

அவை

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
  • வண்டல் மண்
  • கரிசல் மண்
  • செம்மண்
  • சரளை மண்
  • உவர் மண

வண்டல் மண்

  • வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும்நுண் படிவுகளால் உருவாகின்றன.
  • தமிழ்நாட்டின் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது.
  • தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது.
  • சில உள் மாவட்டங்களின் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சிறிய அளவில் இவை காணப்படுகிறது.

கரிசல் மண்

  • தீப்பாறைகள் சிதைவடைவதன்மூலம் கரிசல் மண் உருவாகிறது. இது ரீகர் மண் (Regur soil) என்றும் அழைக்கப்படுகிறது.
  • இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மண் என்றும் அழைக்கப்படுகிறது.
  • கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கரிசல் மண் பெருமளவில் காணப்படுகிறது.

செம்மண்

  • தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மண் பரவியுள்ளது.
  • இவை குறிப்பாக மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
  • இம்மண் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகின்றது.

சரளை மண்

  • சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது.
    இவை ஒரு வளமற்ற மண்ணாகும்.
  • காஞ்சிபுரம், திருவள்ளூர்மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் இம்மண் காணப்படுகின்றது.

உவர் மண்

  • தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இம்மண் காணப்படுகிறது.
  • வேதாரண்யப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் உவர் மண் காணப்படுகிறது.
  • டிசம்பர் 26, 2004 இல் ஏற்பட்ட சுனாமி அலைகள் அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப் பகுதிகளில் படிய வைத்துள்ளன.
  • இதனால் கடற்கரையில் சிலபகுதிகள் பயிரிட உகந்ததாக இல்லை.

5. புயலுக்கு முன்னரும், பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய நேர்வு நடவடிக்கைகளை எழுதுக

புயலுக்கு முன்

  • வதந்திகளை நம்பாமல் அமைதியாகவும் பதற்றமடையாமலும் இருத்தல்
  • அலைபேசிகள் மின்னூட்டம் செய்யப்பட்டதை உறுதிசெய்து, குறுஞ்செய்திகளைப் பெறுதல்
  • வானொலி மற்றும் காணொளி பெட்டிகள் மூலம் அவ்வப்போதைய வானிலை நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளல்
  • முக்கிய மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா கொள்கலன்களில் பாதுகாப்பாக வைத்திருத்தல்
  • அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அவசரகால மூட்டைத் தொகுப்பை தயார் நிலையில் வைத்திருத்தல், குடியிருப்பு பாதுகாப்பாக இருப்பதையும் சரி செய்வதையும் உறுதிசெய்தல்
  • கூர்மையானப் பொருட்கள் வெளிப்பகுதிகளில் இல்லாமல், கால்நடைகள் செல்ல மற்றும் கால்நடை பாதுகாப்பிற்காக அவற்றை அவிழ்த்து விடுதல் வேண்டும்.
  • மீனவர்கள் கூடுதலான மின்சாதனங்களுடன் (பேட்டரிகள்) ஒரு வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும்.
  • இக்காலங்களில் கடலுக்குச் செல்வதை தவிர்த்து, படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

புயலுக்குப் பின்னர்

  • புயல் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டால் மறு அறிவுரைகள் வரும் வரை அங்கேயே தங்கி இருத்தல் வேண்டும்.
  • புயலுக்குப்பின் மின்சார கம்பிகளைத் தொடுவதையும், மின்சாரத்தை பயன்படுத்துவதையும் அறவே தவிர்த்தல் வேண்டும்.
  • புயலுக்குப்பின் பாம்பு, பூச்சிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
  • கட்டடங்களுக்கு அருகில் உள்ள கழிவுகளையும், விலங்குகளின் இறந்த உடல்களையும், அப்புறப்படுத்த வேண்டும்.
  • இழப்பின் உண்மையான மதிப்பினையும், அளவினையும் உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *