Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 9th Social Science Books Tamil Medium The Classical World

Samcheer Kalvi 9th Social Science Books Tamil Medium The Classical World

சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : செவ்வியல் உலகம்

1. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ………………. என்ற கிரேக்க நகர அரசு, போர்சீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.

  1. அக்ரோசபொலிஸ்
  2. ஸ்பார்ட்டா
  3. ஏதேன்ஸ்
  4. ரோம்

விடை : ஏதேன்ஸ்

2. கிரேக்கர்களின் மற்றொரு பெயர் …………………. ஆகும்.

  1. ஹெலனிஸ்டுகள்
  2. ஹெலனியர்கள்
  3. பீனிசியர்கள்
  4. ஸ்போர்ட்டன்கள்

விடை : ஹெலனியர்கள்

3. ஹன் அரச வம்சத்தை தோற்றுவித்தவர் …………………….. ஆவார்.

  1. வு-தை
  2. ஹங் சோவ்
  3. லீயு- பங்
  4. மங்கு கான்

விடை : லீயு- பங்

4. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் ……………………. ஆவார்.

  1. முதலாம் இன்னசென்ட்
  2. ஹில்ட்பிராண்டு
  3. முதலாம் லியோ
  4. போன்டியஸ் பிலாத்து

விடை : போன்டியஸ் பிலாத்து

5. பெலப்பொனேஷியப் போர் ………………….. மற்றும் ……………….. ஆகியோர்களுக்கிடையே நடைப்பெற்றது.

  1. கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்
  2. பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்
  3. ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
  4. கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்

விடை : ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

II. சரியான கூற்றினை தேர்வு செய்க.

1. (i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது.

(ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜுலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார்.

(iii) ரோமின்மீதுபடையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.

(iv) பௌத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.

  1. (i) சரி
  2. (ii) சரி
  3. (ii) மற்றும் (iii) சரி
  4. (iv) சரி

விடை : (i) சரி

2. (i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.

(ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.

(iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.

(iv) ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.

  1. (i) சரி
  2. (ii) சரி
  3. (ii) மற்றும் (iv) சரி
  4. (iv) சரி

விடை : (ii) மற்றும் (iv) சரி

3. (i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.

(ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

(iii) விர்ஜில் எழுதிய ‘ஆனெய்ட்’ ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.

(iv) ஸ்பார்ட்டகஸ், ஜுலியஸ் சீஸரைக் கொன்றார்.

  1. (i) சரி
  2. (ii) சரி
  3. (ii) மற்றும் (iv) சரி
  4. (iii) சரி

விடை : (iii) சரி

4. (i) ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன்.

(ii) ரோமுலஸ் அரிலிஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.

(iii) பேபியஸ் ஒரு புகழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.

(iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.

  1. (i) சரி
  2. (ii) சரி
  3. (ii) மற்றும் (iii) சரி
  4. (iv) சரி

விடை : (iv) சரி

5. (i) பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.

(ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித த�ோமையர் கிறித்தவக் கொள்கைகளைப் பரப்பினார்.

(iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.

(iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.

  1. (i) சரி
  2. (ii) சரி
  3. (iii) சரி
  4. (iv) சரி

விடை : (iii) சரி

III. பொருத்துக.

1. அக்ரோபொலிஸ்கான்சல்
2. பிளாட்டோஏதென்ஸ்
3. மாரியஸ்தத்துவ ஞானி
4. ஜீயஸ்பொருள் முதல் வாதி
5. எபிகியுரஸ்பாதுகாக்கப்பட்ட நகரம்

விடை : 1 – உ, 2 – இ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ

IV. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கிரேக்கர்கள் ……………………………………. என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.

விடை : மாராத்தான்

2. ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர் ……………………………………. .

விடை : டைபிரியஸ் கராக்கஸ் மற்றும் காரியஸ் டோ கிராக்ஸ்

3. …………………………. வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.

விடை : ஹன்

4. ……………………………………. ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்.

விடை : புனித சோபியா ஆலயம்

5. ………………………………. மற்றும் …………………………….. ரோம நீதிபதிகள் ஆவார்கள்.

விடை : கான்சல்கள் மற்றும் செனட்டர்கள்

V. கீழ்க்கண்ட தலைப்பில் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளி:

1. ரோம் ஒரு பேரரசாக உருவாதல்.

அ) கிராக்கஸ் சகோதரர்கள் யார்?

டைபிரியஸ் கராக்கஸ் மற்றும் காரியஸ் டோ கிராக்ஸ்

ஆ) அவர்கள் ஆற்றிய பங்கு என்ன?

ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக அரசுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை கூறினார்.

இ) அவர்களின் உயிர்த் தியாகத்தின் வெளிப்பாடு என்ன?

ரோம் குடியரசு ரோமர் பேரரசாக மாற்றம் பெற்றது

ஈ) முதல் ரோமப் பேரரசர் யார்?

அகஸ்டஸ்

2. ஹன் பேரரசு.

அ) ஹன் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?

லீயு – பங்

ஆ) ஹன் பேரரசின் தலைநகரம் எது?

சாங் – அன

இ) ஹன்பேரரசின் புதிய தலைநகரம் எங்குள்ளது?

சீனாவின் குவாங்ஷோ

ஈ) ஹன்பேரரசின் புகழ்பெற்ற வலிமை வாய்ந்த அரசர் யார்?

வு – தை

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமான விடையளி.

1. ரோமானிய அடிமை முறையைப் பற்றி எழுதுக.

  • ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். மிகப்பெரும் நிலப்பிரபுக்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர்.
  • ரோம் அரசுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுத்தது அடிமை வியாபாரமாகும். டெலாஸ் தீவு மிகப்பெரிய அடிமைச் சந்தையாக மாறியதரோமில் 2 மில்லியன் அடிமைகள் இருந்தனர்.

2. கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.

  • ரோமானியப் பேரரசர்களின் ஒருவரான கான்ஸ்டன்டைன் கிறித்தவராக மாறியதால் கிறித்தவம் பேரரசின் அரசு மதமாயிற்று.
  • இதனால் கிறித்தவம் நாடு முழுவதும் பரவியது.
  • இதுவே காஸ்டன்டைன் பங்களிப்பாகும்.

3. கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?

  • வட ஆப்பிரிக்காவின் பேரரசு கார்த்தேஜ் ஆகும். இப்பேரரசின் படைத்தளபதி ஹன்னிபால் ஆவர். ரோமின் படையைத் தோற்கடித்த இவர் இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார்.
  • இவரின் போர்த்திறமையால் கார்த்தேஜி தனது நாட்டின் எல்லை பகுதிதிகளை அதிகமாக விரிவுபடுத்தியது.
  • இருப்பினும் இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் அவரைத் தோற்கடித்தார். ஜமா போர்களத்தல், அவரை தோற்கடித்தார். இதனால் ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார்.

4. ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?

  • ஹன் பேரரசு பட்டு வணிக வழித்தடத்தை வணிகத்திற்காக திறந்துவிட்டது. பெருமளவிலான ஏற்றுமதிப் பண்டங்கள், முக்கியமாகப் பட்டு, ரோமப் பேரரசை சென்றடைந்தன.
  • வடபகுதியில் வாழ்ந்தவர்களில் கைவினைஞர்களும், கால்நடை மேய்ப்பர்களும் குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், குதிரையில் பயணிப்போர் பாதங்களை வைத்துக் கொள்வதற்கான அங்கவடி, போன்ற புதிய நுட்பங்களை கண்டு பிடித்து ஏற்றமதி செய்தன.
  • பாலங்கள் கட்டுதல், மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றிற்கான தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தனர்.
  • இவர்களது புதிய தொழில் நுட்பங்களால் ஹன் பேரரசு செழிப்புற்று விளங்கியது

5. புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.

  • புனித சோபியா ஆலயம் கி.பி.ஆறாம்நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும்.
  • அக்கால ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான இத்தேவாலயம் அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்கு பெயர் பெற்றதாகும்.
  • கான்ஸ்டாண்டிநோபிள் நகரை உதுமானிய துருக்கியர் கைப்பற்றியபோது இத்தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.

VII.கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி:

1. ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.

ஏதென்ஸின் எழுச்சி

  • ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக குழு ஆட்சியும், கொடுங்கோலாட்சியும் அகற்றப்பட்டு மக்களாட்சி முறை நிறுவப்பட்டது.
  • மக்களாட்சிமுறை 200 ஆண்டுகள் நீடித்தது. ஏதென்ஸ் நகர் பெரிகிளிஸ் என்னும் மாபெரும் தலைவரைப் பெற்றிருந்தது. அவர் முப்பதாண்டு காலம் அதிகாரத்தில் இருந்தார்.
  • இவருடைய ஆட்சியின் போது ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் ஒன்றுக்கெதிராக மற்றொன்று தொடர்ந்து போர் செய்தன.
  • இப்போர்கள் “பெலப்போனேசியப் போர்கள்” என அறியப்பட்டன. இந்த போர் இடையூறுகள் இருந்தபோதிலும் அவற்றையும் மீறி ஏதென்ஸ் எழுச்சியை எட்டத் தொடங்கியது.

ஏதென்ஸின் வளர்ச்சி

  • ஏதேன்ஸ் நகரமக்கள் நாட்டுப்பற்றுடன் இருந்தால் நகரம் பல இடையூறுகளுக்கும் இடையிலும்  பிரமிக்கச் செய்யும் கட்டடங்களைக் கொண்ட உன்னதமான நகரமாக மாறியது.
  • மாபெரும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் அந்நகரத்தில் இருந்தனர்.

ஏதென்ஸின் சிறப்பு 

  • வரலாற்று அறிஞர்கள் இக்குறிப்பிட்ட காலத்தை ‘பெரிகிளிசின் காலம்’ என அழைக்கின்றனர். புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று அறிஞர்களான ஹெரோேடாட்டசும்
  • அவர் பின்வந்த தூசிடைடிசும் இக்காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.
  • மேலும் சிந்தனையாளர் சாக்கரடீஸ், இவரின் சீடர் பிளாட்டோ  ஆகியோர் உண்மை என்பது மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட பகுதியைச் சார்ந்திருப்பதாகும்,
  • அதை மாபெரும் தத்துவஞானிகளால் மட்டுமே அதை உய்த்துணர முடியுமென்றும் வாதிட்டனர்.
  • பிளாட்டோவிடம் கல்வி கற்றுவந்த அரிஸ்டாட்டில், இயற்பியல் உலகம் பற்றிய, சமூக உலகம் குறித்த கண்டுணர்ந்த அனுபவ அறிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
  • டெமோகிரைடஸ். எபிகியூரஸ் ஆகிய இருவரும் உலகம் பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்த்தனர்.

சிறப்புமிக்க கொடைகள்

  • ஏதென்ஸ் நகர குன்றின் மீது கட்டப்ட்ட அக்ரோபொலிஸ் கோட்டை ஒலிம்பியா ஜீயஸ் கோவில் அலெக்ஸாண்டிரியா நகரம். கணிதம் தொடர்பான  வடிவியல் தேற்றங்களை யூசினிட் முறைப்படுத்தியது.
  • பூமியின் விட்டத்தை துல்லியமாக கணக்கிட்ட ஏரோட்டோதன்ஸ், முக்கோணவியலை கண்டுபிடித்து ஹிபப்பார்கஸ், நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்த ஒரு மாதிரி அமைப்பை உருவாக்கிய டாலமி, போன்றவகரள் தோன்றியதெல்லாம்
  • இவர்கள் பேரரசுக்கு கிடைத்த கொடைகளாகும். மேலும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி உலகிற்கு கிடைத்த பெரிய கொடையாகும்.
Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *