Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 9th Social Science Books Tamil Medium Human Rights

Samcheer Kalvi 9th Social Science Books Tamil Medium Human Rights

சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மனித உரிமைகள்

I) சரியான விடையைத் தேர்ந்தெடுக.

1. இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு ____________

  1. தென் சூடான்
  2. தென் ஆப்பிரிக்கா
  3. நைஜீரியா
  4. எகிப்த்

விடை : தென் ஆப்பிரிக்கா

2. ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது ____________

  1. சமூக
  2. பொருளாதார
  3. அரசியல்
  4. பண்பாட்டு

விடை : அரசியல்

3. ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறான் –எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?

  1. சமத்துவ உரிமை
  2. சுதந்திர உரிமை
  3. குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை
  4. சமய சுதந்திர உரிமை

விடை : குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை

4. கீழ்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?

  1. சமத்துவ உரிமை
  2. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
  3. கல்வியின் மீதான உரிமை
  4. சுதந்திர உரிமை

விடை : தகவல் அறியும் உரிமைச் சட்டம்

5. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு ____________

  1. 20 நாட்கள்
  2. 25 நாட்கள்
  3. 30 நாட்கள்
  4. 35 நாட்கள்

விடை : 30 நாட்கள்

6. அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை ____________

  1. சொத்துரிமை
  2. மதச் சுதந்திரத்துக்கான உரிமை
  3. சுரண்டலுக்கெதிரான உரிமை
  4. மேற்கண்ட எதுவுமில்லை

விடை : சொத்துரிமை

7. பின்வரும் கூற்றுகளில் எவைசரியானவை?

i) மாநில மனித உரிமை ஆணையம் 1993ல் நிறுவப்பட்டது.

ii) இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

iii) இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்.

iv) இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்.

  1. i மற்றும் ii சரி
  2. i மற்றும் iii சரி
  3. i,ii மற்றும் iii சரி
  4. i, ii மற்றும் iv சரி

விடை : i, ii மற்றும் iv சரி

8. கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி.

கூற்று (A) : உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.

காரணம் (R) : நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.

  1. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
  2. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
  3. (A) சரி, ஆனால் (R) தவறு.
  4. (A) தவறு, ஆனால் (R) சரி.

விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.

9. ஐ.நா. சபையின்படி ____________ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.

  1. 12
  2. 14
  3. 16
  4. 18

விடை : 18

10. ____________ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.

  1. இலக்கியம்
  2. அமைதி
  3. இயற்பியல்
  4. பொருளாதாரம்

விடை : அமைதி

II) கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. உலகளாவிய மனித உரிமை பேரறிக்கைப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ____________

விடை : 1948 டிசம்பர் 10

2. உலகளாவிய மனித உரிமை பிரகடனம் ____________ பிரிவுகளைக் கொண்டுள்ளது.

விடை : 30

3. அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ____________ சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது.

விடை : 42-வது

4. தேசிய மனித உரிமை ஆணையம் ____________ ஆண்டு அமைக்கப்பட்டது.

விடை : 1993-ஆம்

5. ஏப்ரல் 1, 2010ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டம் ____________.

விடை : கல்வி உரிமைச் சட்டம்

6. பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம்____________.

விடை : தமிழ்நாடு

7. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியுரிமை இயக்கத்தினைத் தொடங்கியவர் ____________ ஆவார்.

விடை : ரோசாபார்க்

III) பொருத்துக.

1. வாக்களிக்கும் உரிமைபண்பாட்டு உரிமை
2. சங்கம் அமைக்கும் உரிமைசுரண்டலுக்கெதிரான உரிமை
3. பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமைஅரசியல் உரிமை
4. இந்து வாரிசுரிமைச் சட்டம்சுதந்திர உரிமை
5. குழந்தை தொழிலாளர்2005

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – ஆ

IV) சுருக்கமாக விடையளி

1. மனித உரிமை என்றால் என்ன?

ஐ.நா. சபை மனித உரிமைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது. “இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்.

2. அடிப்படை உரிமைகள் யாவை?

  1. சமத்துவ உரிமை
  2. சுதந்திர உரிமை
  3. சுரண்டலுககு எதிரனான உரிமை
  4. சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
  5. சிறுபான்மையினருக்கா பண்பாடு மற்றும் கல்வி உரிமை
  6. அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை

3. குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளவை யாவை?

  1. வாழ்வதற்கான உரிமை
  2. குடும்பச் சூழலுக்கான உரிமை
  3. கல்விக்கான உரிமை
  4. சமூகப் பாதுகாப்பு உரிமை
  5. பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
  6. விற்பது அல்லது கடத்தலுக்கெதிரானஉரிமை
  7. குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கெதிரான உரிமை

4. அரசமைப்புத்தீர்வு வழிகளுக்கான உரிமையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

  • ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.
  • நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இது நீதிப்பேராணை என்று அழைக்கப்படுகிறது.
  • ஒரு செயல் அரசமைப்பு சட்டத்தின் படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.

5. போக்சா (POCSO) – வரையறு.

  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்
  • இது ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகிறது

6. குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?

குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன் கொடுமைக்கு ஆளாகும் போது குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.

7. தொழிலாளர் நலனுக்காக பி.ஆர். அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?

  1. தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு
  2. தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
  3. இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.
  4. தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI)
  5. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்.
  6. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.

8. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நியாயப்படுத்துக.

பெண்கள் பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை மற்றும் போதிய  பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

9. டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.

  1. தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு
  2. தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.

10. வேறுபடுத்துக – மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள்

மனித உரிமைகள்அடிப்படை உரிமைகள்
1. மனிதன் தன்மானத்தோடும், சுதந்திரத் தோடும் வாழுகின்ற உரிமைகள் இவை.அரசமைப்பில் காணப்படும் குடிமக்களின் ஆதார உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும். இவை சட்டத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்படலாம்.
2. மனிதனின் வாழ்வில் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைகள் இதில் அடங்கியுள்ளன. இவற்றைப் பறிக்க இயலாது.மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உரிமைகளும், அடிப்படை உரிமைகளில் அடங்கும்.
3. மனித உரிமைகள் பன்னாடு அளவில் அங்கீகரிக்கப்பட்டவை.அடிப்படை உரிமைகள் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உத்திரவாதம் அளிக்கப்படுகின்றன.

V) விரிவான விடையளி

1. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.

  • வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்துகொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (Universal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.
  • 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும். அடிப்படை மனித உரிமைகள் உலகளவில் பாதுகாக்கப்படவேண்டும் எனும் நோக்கம்
    கொண்ட முதல் பேரறிக்கையான இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
  • மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.
  • இவ்வுரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் பிறக்கின்றனர்.
  • இந்த பேரறிக்கையின் பொது விளக்கமானது சட்டபூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணம் அல்ல என்ற போதிலும் அது அரசியல் மற்றும் அறநெறிசார் முக்கியத்துவம் உடையது. மேலும் அதில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான உத்திரவாதங்கள் இக்காலத்தில் தரம்மிக்க விதிமுறைகளாக நிலைபெற்று விளங்குகின்றன.

2. அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?

அடிப்படை கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விகிதத்தல் அமைந்துள்ளன. எனது பள்ளி வளாகத்தில்

  • சட்டத்தை மதிப்பதுடன், தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்.
  • பள்ளியினுள் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பேணி பாதுகாக்க வேண்டும்.
  • தேவை ஏற்படின், நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்
  • சமய, மொழி, இன பிரிவுகளை கடந்து பள்ளி வளாகத்தினுள் அனைவரும் சகோதரத்துவத்துடன் இணக்கமாக இருக்கப்பாடுபட வேண்டும்.
  • அறிவியல் உணர்வு, மனிநேயம் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்.
  • காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவை புறச்சூழை பாதுகாத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும்.

3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நம் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது?

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம். இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

இவ்வமைப்பு ஒரு தலைவரையும், சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள ஒரு தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்:

  • மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல்.
  • மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
  • மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
  • சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
  • மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.

4. தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?

சமத்துவத்திற்கான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சமத்துவம், அமைப்புகள் மற்றும் சங்கம் தொடங்குவதற்கான உரிமை, வாழ்வாதார உரிமை, கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரிவு 39பி, இருப்பாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.

தொழிலாளர் நலனில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பங்களிப்புகள்

  1. தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு
  2. தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
  3. இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.
  4. தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI)
  5. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்.
  6. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.

5. அடிப்படை உரிமைகளை எவ்வவாறெல்லலாம் உன் வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?

ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள்
அடிப்படை உரிமைகள் எனப்டும்.

இதன் மூலம் என் வாழ்வில் பேசும் உரிமை, விரும்பிய இடத்தில் வாழும் உரிமை பாேன்றவை அனுபவிக்கிறேன் மேலும்

சுதந்திர உரிமை

சட்டத்தின் முன் அனைவரும் சம பாதுகாப்பு சமத்துவ உரிமை மூலம் கிடைக்கிறது. அது கிடைக்க பெறாத போது நீதிமன்றத்தினை அணுகலாம்.

சுதந்திர உரிமை

ஆறு வகையான சுதந்திரங்கள் நமது அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

  • பேச்சுரிமை.
  • ஆயுதமின்றி கூடும் உரிமை.
  • சங்கங்கள் அமைக்கும் உரிமை.
  • இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமை
  • இந்தியா முழுவதும் சுதந்திரமாக நேடமாடும் உரிமை.
  • எந்த தொழிலையும், வணிகத்தையும் செய்யும் உரிமை

சுரண்டலுக்கெதிரான உரிமை

14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை

குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது. மேலும் தங்கள் மனசாட்சிபடி வாழ்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்

அரசமைப்பு கூட்டம் பண்பாட்டினைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் உரிமையை வழங்கியுள்ளது. கல்விக்கூடங்களை அமைக்க நமக்கு உரிமை உள்ளது. சமயச்சார்பு கல்வி அளிக்க மக்கள் மத நிறுவனங்களை நிறுவலாம்.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

அரசமைப்பு தீர்வழிக்களுக்கான உரிமை

ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வுரிமை அனைத்து உரிமைகளுக்கும் பாதுகாப்பாகவும், காவலாகவும் அமைகின்றது போன்ற உரிமைகளின்  மூலம் அடிப்படை உரிமைகளை என் வாழ்வில் அனுபவிக்கிறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *