Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Public and Private Sectors

Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Public and Private Sectors

சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : பொது மற்றும் தனியார் துறைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்கு காரணமாக இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் ……………………….. ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது

  1. 1957
  2. 1958
  3. 1966
  4. 1956

விடை : உச்சநீதிமன்றம்

2. கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பது

  1. முதலாளித்துவம்
  2. சமதர்மம்
  3. அ மற்றும் ஆ சரி
  4. அ மற்றும் ஆ தவறு

விடை : அ மற்றும் ஆ சரி

3. …………………… நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்

  1. தனியார் துறை
  2. கூட்டுத் துறை
  3. பொதுத்துறை
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : பொதுத்துறை

4. பொதுத்துறை ……………….. உடையது

  1. இலாப நோக்கம்
  2. சேவை நோக்கம்
  3. ஊக வணிக நோக்கம்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : சேவை நோக்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. _____________ மற்றும் _____________ ஆகியவை சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற்கொள்வதில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது

விடை :பொதுத்துறை மற்றும் தனியார் துறை

2. தனியார் துறை _____________ நோக்கத்தில் செயல்படுகிறது

விடை : இலாப

3.  _____________ என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும்

விடை : சமூக பொருளாதார மேம்பாடு

4. தனியார் துறையின் முக்கிய செயல்பாடுகளை தோற்றுவிப்பது _____________ மற்றும் _____________ ஆகும்

விடை : புதுமை மற்றும் நவீனமாதல்

5. குடிமக்கள் மத்தியில் _____________ மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

விடை : சமூக பொருளாதார மேம்பாடு

III.பொருத்துக

1. மதியுரையகக் குழுமுதன்மை துறை
2. வேளாண்மைமொத்த உள்நாட்டு உற்பத்தி
3. தொழில்கள்நிதி ஆயோக்
4. GDPநவரத்னா தாெழில்
5. BHELஇரண்டாம் துறை

விடை : 1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – ஈ

IV பொருத்தமற்றதை கூறு

1. சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனற்றில் எந்தக் குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை

  1. கருப்புபணம்
  2. ஆயுட்காலம்
  3. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
  4. வேலைவாய்ப்பு

விடை : கருப்புபணம்

2. பின்வருவனற்றுள் எது சரியான விடை

i. அரசுக்கு மட்டுமே சொந்தமான தொழில்கள் அட்டவணை – A என குறிப்பிடப்படுகின்றன

ii. தனியார் துறையானது மாநில துறையின் முயற்சிக்கு துணை புரியக் கூடிய தொழில்கள் புதிய அலகுகளை தொடங்குவதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்வது அட்டவணை – B என குறிப்பிடப்படுகின்றன

iii. தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை

  1. அனைத்தும் சரி
  2. i மற்றும் iii சரி
  3. i மற்றும் ii சரி
  4. இவற்றில் எதுவும் இல்லை

விடை : i மற்றும் ii சரி

VI. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளி

1. பொதுத்துறைகள் குறித்து சிறு குறிப்பு எழுதுக

அரசு, பொதுமக்களுக்கு பண்டங்கள் மற்றம் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை ஆகும். இது அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது

2. சமுதாய தேவை என்றால் என்ன?

கல்வியறிவு, வேலைவாய்ப்பு, சமூக பொருளாதார மேம்பாடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகியனவாகும்

3. பொதுத்துறைகளின் நோக்கங்கள் யாவை?

  • விரைவான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்
  • வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல்
  • வருமானம் மற்றம் செல்வங்களை மறுபகிர்வு செய்வதை ஊக்குவித்தல்
  • வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
  • சமச்சீர் வட்டார வளர்ச்சியை ஊக்குவித்தல்
  • சிறிய அளவிலான மற்றும் துணைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்
  • ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதி மாற்றீடை துரிதப்படுத்துதல்

4. பொதுத்துறைகளின் மூன்று உறுப்புகள் யாவை?

  • அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்
  • கூட்டுத்துறை நிறுவனங்கள்
  • பொதுக்கழகம்

5. சமூக பொருளாதார மேம்பாட்டை அளவிடும் சில குறியீடுகளின் பெயர்களை கூறுக

  • மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP
  • ஆயுட்காலம்
  • கல்வியறிவு
  • வேலைவாய்ப்பின் அளவு

6. தனியார் துறை குறித்து சிறு குறிப்பு எழுதுக

தனியார் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சொந்தமான அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்படும் ஒரு தேசிய பொருளாதாரத்தின் பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது

7. தனியார் துறை நிறுவனங்களில் ஏதேனும் மூன்றினை கூறு

  • இன்போசிஸ் நிறுவனம்
  • ஆதித்யா பிர்லா நிறுவனம்
  • ரிலையன்ஸ
  • டாட்டா குழும நிறுவனங்கள்
  • விப்ரோ நிறுவனம்
  • இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்
  • ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

1. பொதுத்துறையின் உறுப்புகள் பற்றி விளக்குக

அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்

  • ஒரு அரசாங்க துறையின் நிர்வாகம் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் பொதுவானது ஆகும்
  • எ.கா. தபால் மற்றும் தந்தி, இரயில்வே, துறைமுக அறக்கட்டளை

கூட்டுத்துறை நிறுவனங்கள்

  • ஒரு நிறுவன சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் அரசாங்கம் ஒரு பிரதான பங்குதாரராக இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது
  • எ.கா. இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் தனியார் நிறுவனம், இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம், ரத்னகிரி கேஸ் அண்ட் பவர் தனியார் நிறுவனம், இந்தியன் செயற்கை ரப்பர் நிறுவனம்

பொதுக்கழகம்

  • பொதுக்கழக அமைப்பானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினால் பொதுக்கழகத்தினை நிறுவுவதே ஆகும்
  • எ.கா. ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஏர் இந்தியா, இந்திய ரிசர்வ் வங்கி, மின்சார வாரியம்

2. பொதுத்துறையின் வரலாற்றை சுருக்கமாக விளக்குக

  • 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அது பலவீனமான தொழில் தளத்தை கொண்ட வேளாண்மையை முதன்மையாக கொண்ட நாடாகும்.
  • 1948ஆம் ஆண்டு முதல் தொழில்துறை கொள்கை தீர்மானத்தின் அறிவிப்பில் தொழில்துறை வளர்ச்சியின் யுக்திகளை பரந்த வரையறைகளைக் கொண்ட வகுத்தது
  • தொழில்துறை வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் 1951ஆம் ஆண்டில் தொழில்துறை சட்டம் இயற்றப்பட்டது
  • இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமும் (1956-60) 1956ம் ஆண்டு தொழில்துறை கொள்கை தீர்மானமும் நேருவின் தேசிய தொழில்மயமாக்கல் கொள்கையை பூர்ததி செய்ய பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை வலியுறுத்தியது
  • அவரது பார்வையை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி முன்னெடுத்துள்ளார்.

3. சமூக – பொருளாதார மேம்பாட்டினை அளவிடும் குறியீடுகள் ஏதேனும் ஐந்தினை பற்றி விளக்குக

மொத்த உள்நாட்டு உற்பத்தி

சமூக – பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிதும் துணைபுரிகிறது

ஆயுட்காலம்

  • 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சராசரி ஆயுட்காலம் ஆண்டுக்கு 68.80 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 68.33 ஆண்டுகள் ஆகும்
  • பல்வேறு திட்டங்கள் மூலம் அரசாங்கம் அதிக அளவு சுகாதார நடவடிக்கைகளை வழங்குகிறது

கல்வியறிவு

  • சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி திறன் முக்கிய பங்கு வகிக்கிறது
  • அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம், கல்வியல் தரத்தின் அளவை அதிகரிப்பதற்காக அரசால் வழங்கப்படுகிறது

வேலைவாய்ப்பு

  • வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்காக குறைந்த கட்டணத்தில் மின்சார வரிச்சலுகை போன்ற சலுகைகளை வழங்குவதன் மூலம் பின் தங்கிய பகுதிகளில் தொழில்துறையை தொடங்க தனியார் துறைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது
  • இதனால் வட்டார ஏற்றத் தாழ்வுகளை நீக்குகிறது

வீடு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் வழங்குதல்

  • அரசுத்துறையானது வீட்டு வசதிகள், சுத்தமான குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை தூய்மை இந்தியா திட்டதின் கீழ் வழங்குகிறது.
  • இது போன்ற வசதிகளை வழங்குவதால், மக்களின் வாழ்க்கை சுழற்சி அதிகரிக்கிறது

4. பொதுத்துறையின் முக்கியத்துவம் யாது?

  • பொதுத்துறை மற்றும் மூலதன உருவாக்கம்
  • பொருளாதார மேம்பாடு
  • சமச்சீரான வட்டார வளர்ச்சி
  • வேலை வாய்ப்பு உருவாக்கம்
  • ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்திய செலவாணி வருவாய்
  • நலிவடைந்த தொழில்களுக்கு பாதுகாப்பு
  • இறக்குமதி மாற்று

5. பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
பொதுத்துறைதனியார் துறை
1. தொழில்களின் உரிமையானது அரசாங்கத்திடம் உள்ளதுதொழில்களின் உரிமையானது தனிநபர்களிடம் உள்ளது
2. பாெதுத்துறை தொழிலாளர்களக்கு முறையான ஊதியத்தை உறுதி செய்கிறதுதனியார்துறை தொழிலாளர்களை சுரண்டகிறது
3. வரி ஏய்ப்பு இல்லைவரி ஏய்ப்பு உண்டு
4. இது சேவை நோக்கமுடையதுஇது  இலாப நோக்கமுடையது
5. இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதுஇட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை
எ.கா. NLC, SAIL, BSNLஎ.கா. TVS Moterors. TATA Steel

6. தனியார் துறையின் பணிகளைப் பற்றி எழுதுக

  • தனியார் துறையின் முக்கிய செயல்பாடு புதுமை மற்றும் நவீனமயமாதலை உருவாக்குவதாகும். இலாப நோக்கத்தோடு இயங்க கண்டறிவதற்கும், உற்பத்தியின் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதற்கும், உற்பத்தி நடவடிக்கைகளை விஞ்ஞான முறையில் நிர்வகிப்பதற்கும் அவர்களை தூண்டுகிறது
  • உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் இருக்கின்ற வணிகங்களை ஊக்குவித்தல், விரிவுபடுத்துதல்
  • மனித மூலதன வளர்ச்சியை ஊக்குவித்தல் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சந்தையில் பங்கேற்க உதவுதல் மற்றும் சமூக வணிக மற்றம் கூட்டுறவு உள்ளூர் பரிமாற்ற அமைப்புகள் மற்றும் முறைசாரா கடன் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல்
  • சிறு, நுண் மற்றும் நடுத்தர நிறுவனங்களை வழங்குவதன் மூலம் அளிப்பு பக்க நடவடிக்கைகள் மற்றும் தேவை பக்க நடவடிக்கைகளை கோருதல் மற்றும் நகரத்தில் முதலீட்டை ஈர்த்தல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *