Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Advent of the Europeans

Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Advent of the Europeans

சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

  1. வாஸ்கோடகாமா
  2. பார்த்தலோமியோ டயஸ்
  3. அல்போன்சோ-டி-அல்புகர்க்
  4. அல்மெய்டா

விடை : அல்போன்சோ-டி-அல்புகர்க்

2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

  1. நெதர்லாந்து (டச்சு)
  2. போர்ச்சுகல்
  3. பிரான்ஸ்
  4. பிரிட்டன்

விடை : போர்ச்சுகல்

3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி- நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

  1. பிரான்ஸ்
  2. துருக்கி
  3. நெதர்லாந்து (டச்சு)
  4. பிரிட்டன்

விடை : துருக்கி

4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் __________ நாட்டைச் சேர்ந்தவர்

  1. போர்ச்சுக்கல்
  2. ஸ்பெயின்
  3. இங்கிலாந்து
  4. பிரான்ஸ்

விடை : இங்கிலாந்து

5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

  1. அ) வில்லியம் கோட்டை
    ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
    இ) ஆக்ரா கோட்டை
    ஈ) டேவிட் கோட்டை

விடை : செயின்ட் ஜார்ஜ் கோட்டை

6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

  1. ஆங்கிலேயர்கள்
  2. பிரெஞ்சுக்காரர்கள்
  3. டேனியர்கள்
  4. போர்ச்சுக்கீசியர்கள்

விடை : பிரெஞ்சுக்காரர்கள்

7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது

  1. போர்ச்சுக்கீசியர்கள்
  2. ஆங்கிலேயர்கள்
  3. பிரெஞ்சுக்காரர்கள்
  4. டேனியர்கள்

விடை : டேனியர்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.

விடை : புது தில்லியில்

2. போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் __________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.

விடை : மன்னன் இரண்டாம ஜான்

3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் __________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.

விடை : போர்ச்சுகீசிய

4. முகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.

விடை : ஜஹாங்கீர்

5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் __________ என்பவரால் நிறுவப்பட்டது.

விடை : கால்பர்ட்

6. __________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.

விடை : நான்காம் கிறிஸ்டியன்

III.பொருத்துக

1. டச்சுக்காரர்கள்1664
2. ஆங்கிலேயர்கள்1602
3. டேனியர்கள்1600
4. பிரெஞ்சுக்காரர்கள்1616

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

IV. சரியா, தவறா?

1. சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

விடை : சரி

2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

விடை : சரி

3. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

விடை : தவறு

4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.

விடை : சரி

V. 1) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க.

1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.

2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.

3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.

4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

  1. 1 மற்றும் 2 சரி
  2. 2 மற்றும் 4 சரி
  3. 3 மட்டும் சரி
  4. 1, 2 மற்றும் 4 சரி

விடை : 1, 2 மற்றும் 4 சரி

2) தவறான இணையைக் கண்டறிக.

  1. பிரான்சிஸ் டே – டென்மார்க்
  2. பெட்ரோ காப்ரல் – போர்ச்சுகல்
  3. கேப்டன் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து
  4. கால்பர்ட் – பிரான்ஸ்

விடை : பிரான்சிஸ் டே – டென்மார்க்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வரிகளில் விடையளி.

1. ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக.

  • வரலாற்ற ஆவணஙகள் பாதுகாக்கப்படும் இடங்கள்  ஆவணக் காப்பகம் என்றழைக்கப்படுகிறது.
  • இது கடந்த கால நிர்வாக முறைகளைப் புரிந்து கொள்வதற்கான அனைத்து தகவல்களுடன் தற்கால மற்றும் எதிர்கால தலை முறையினருக்கும் ஒரு வழிகாட்டியாக இது விளங்குகிறது.

2. நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி  எழுதுக.

  • நிர்வாக வரலாற்றை அறிய ஒரு சிறந்த ஆதாரமாக நாணயங்கள் திகழ்கின்றன.
  • நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. 1862 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.

3. இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி” என ஏன் அழைக்கப்படுகிறார்?

  • போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
  • போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக “மாலுமி ஹென்றி” என அறியப்படுகிறார்.

4. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.

  • பழவவேற்காடு
  • சூரத்
  • சின்சுரா
  • காசிம்பஜார்
  • பாட்னா
  • நாகப்பட்டினம்
  • பாலசோர்
  • கொச்சின்

5. இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.

  • சென்னை
  • பம்பாய்
  • கல்காதா
  • மசூலிப்பட்டினம்
  • சூரத்
  • ஆக்ரா
  • அகமதாபாத்
  • புரோத்

VII. விரிவான விடையளி

1. நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.

  • நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக – பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி அறிய நமக்கு உதவுகின்றன.
  • தொடக்க காலத்திலிருந்தேபோர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டேனியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய அலுவலக செயல்பாடுகளை தங்களது அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர்.
  • பராமரிக்கப்பட்ட அவர்களது பதிவுகள் இந்தியாவில் அவர்களது தொடர்பு பற்றி அறிய உதவும் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன.
  • லிஸ்பன், கோவா, பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் விலை மதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகமாகும்.

2. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
  • வாஸ்கோடகாமா இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு கி.பி.(பொ.ஆ) 1498ல் கள்ளிக்கோட்டையை அடைந்தார். கண்ணூர், கள்ளிக்கோட்டை கொச்சின் பகுதிகளிலம் வர்த்தக மையத்தை நிறுவினார்
  • இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்போன்சோ டி-அல்புகர்க் ஆவார். கோவா மற்றம் ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தினார். இந்திய பெண்களுடான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தார்.
  • அல்புகர்குவிற்குப் பிறகு கவர்னரா நினோ-டி-குன்கா 1530-ல் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
  • இவ்வாறு போர்ச்சுகீசியர் 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செலட், பசீன், செளல் மற்றம் பம்பாய் போன்ற பகுதிகளையும் வங்காள கடற்கரையில் ஹுக்ளி, சென்னை கடற்கரையில் சாந்தோம் போன்ற பகுதிகளையும் கைப்பற்றினர்.

3. ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

  • இங்கிலாந்த இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு 1600 டிசம் 31 அன்று ஒரு அனுமதிப் பட்டயம் வழங்கினார்
  • பேரரசர் ஜஹாங்கீர் 1613-ல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார்
  • பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் வாயிலாக சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் தனது புகழ் வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது.
  • பின்னர் பம்பாய், கல்கத்தா ஆகிய பகுதிகளில் வர்த்தக மையங்களை விரிவுபடுத்தினார்.
  • 1757-ல் பிளாசி போர் மற்றும் 1764-ல் பச்சார் போருக்கு பிறகு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *