அறிவியல் : அலகு 11 : காற்று
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சேரியான கூற்று எது?
- முழுமையாக எரியும் வாயு
- பகுதியளவு எரியும் வாயு
- எரிதலுக்குத் துணைபுரியாத வாயு
- எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
விடை : எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
2. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.
- காற்று
- ஆக்சிஜன்
- கார்பன் டை ஆக்சைடு
- நைட்ரஜன்
விடை : கார்பன் டை ஆக்சைடு
3. சால்வே முனை _____________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
- சுண்ணாம்பு நீர்
- காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்
- வாலை வடி நீர்
- சோடியம் கார்பனேட்
விடை : சோடியம் கார்பனேட்
4. கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.
- நீல லிட்மசை சிவப்பாக
- சிவப்பு லிட்மசை நீலமாக
- ஊதா லிட்மசை மஞ்சளாக
- லிட்மசுடன் வினைபுரிவதில்லை
விடை : நீல லிட்மசை சிவப்பாக
5. அசோட் எனப்படுவது எது?
- ஆக்சிஜன்
- நைட்ரஜன்
- சல்பர்
- கார்பன் டை ஆக்சைடு
விடை : நைட்ரஜன்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. _____________ அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது.
விடை : ஆக்சிஜன்
2. நைட்ரஜன் காற்றை விட ___________.
விடை : இலேசானது
3. _____________ உரமாகப் பயன்படுகிறது.
விடை : நைட்ரஜன்
4. உலர்பனி _________ ஆகப் பயன்டுகிறது.
விடை : குளிரூட்டி
5. இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாோற்றும் நிகழ்வு ___________ எனப்படும்.
விடை : துருப்பிடித்தல்
III. பொருத்துக.
1. நைட்ரஜன் | உயிரினங்களின் சுவாசித்தல் |
2. ஆக்சிஜன் | உரம் |
3. கார்பன் டை ஆக்சைடு | குளிர்பதனப் பெட்டி |
4. உலர்பனி | தீயணைப்பான் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ
V. சுருக்கமாக விடையளி.
1. இயற்கையில் ஆக்சிஜன் காணப்படும் சில சேர்மங்களை எழுதுக.
தனித்த நிலையில் ஆச்சிஜன்
- வளிமண்டலம்
- நீர்
இணைந்த நிலையில் ஆச்சிஜன்
- தாவரங்கள் மற்றும் விலங்குகள்
- சிலிக்கேட்டுகள், கார்பனேட்டுகள் மற்றும் ஆக்சைடுகள் வடிவிலுள்ள தாதுக்கள்
2. ஆக்சிஜனின இயற்பண்புகள் யாவை?
- ஆக்சிஜன் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு
- வெப்பத்தடியும், மின்சாரத்தையும் கடத்தாது.
- ஆக்சிஜன குளிர்ந்த நீரில் உடனடியாகக் கரையும்.
- காற்றினை விட கனமானது.
- அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்தப்படும்போது திரவமாகிறது.
- இது எரிதலுக்குத் துணைபுரிகிறது.
3. நைட்ரஜனின் பயன்கள் யாவை?
- திரவ நைடரஜன் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுகிறது.
- வேதிவினைகள் நிகழ்வதற்குத் தேவையான மந்தத் தன்மை நிலவச் செய்கிறது.
- அமோனியா தயாரிப்பில் (ஹேபர் முறை) இது பயன்படுகிறது.
- இது வாகனங்களின டயர்களில் நிரப்பப் பயன்பேடுகிறது.
4. அலோகங்களுடன் நைட்ரஜனின் வினையை எழுதுக.
அலோகங்களான நைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றுடன் நைட்ரஜன் அதிக வெப்ப நிலையில் வினைபுரிந்து அவற்றின நைட்ரஜன் சேர்மங்களைத் தருகிறது.
அலோகம் + நைட்ரஜன் | Δ———-> | நைட்ரஜன் சேர்மம் |
உதாரணம்
3H2 + N2 ஹைட்ரஜன் + நைட்ரஜன் | Δ———-> | 2NH3அம்மோனியா |
5. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?
வளிமண்டலத்தில் காற்று மாசுபடுத்திகளின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதாலும், பசுமை இல்ல விளைவு அதிகமாகி புவியின் வாயு மண்டல வெப்பநிலை சராசரியாக உயரந்த கொண்டே வருகிறது. இது உலக வெப்பமயமாதல் எனப்படும்
6. உலர்பனி என்பது என்ன? அதன் பயன்களை எழுதுக.
- திட கார்பன் டை ஆக்ஸைடு உலர்பனிக்கட்டி எனப்படுகிறது. இது மிகவும் குளிர்சியாக இருப்பதால் காற்றில் உள்ள ஈரப்பதம் இதன் மீது விழுந்து அடர்த்தியான வெண்ணிற புகைமூட்டம் போன்று காணப்படுகிறது.
- இது குளிர்சாதனப் பெட்டிகளின் குளிரூட்டியாகப் பயன்படுகிறது.
V. விரிவான விடையளி.
1. தெளிந்த சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைச் செலுத்தும் பொழுது எனன நிகழ்கிறது? அதற்கானை சமன்பாட்டைத் தருக.
சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைச் செலுத்தும் பொழுது கரையாத கால்சியம் கார்பனேட் உருவாவதால் கரைசல் பால் போல் மாறுகிறது
Ca(OH)2 + CO2 | Δ———-> | CaCO3 + H2Oகால்சியம் கார்பனேட் |
அதிகளவு கார்பன் டை ஆக்சைடை சுண்ணாம்பு நீரில் செலுத்தும்பொழுது முதலில் பால் போன்ற நிறம் தோன்றி பின்னர் அது மறைகிறது. இதற்கு காரணம் கரையக்கூடிய கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் உருவாதே ஆகும்
2. கீழ்க்கண்ட சேர்மங்கள் ஆக்சிஜனுடன் எரியும் போது உருவாகும் பொருட்களை எழுதுக.
அ) கார்பன்
- கார்பன் டை ஆக்ஸைடு (CO2)
ஆ) சல்பர்
- சல்பர் டை ஆக்ஸைடு (SO2)
இ) பாஸ்பரஸ்
- சல்பர் டிரை ஆக்ஸைடு (P2O3)
- சல்பர் பென்டாக்ஸைடு (P2O5)
ஈ) மெக்னீசியம்
- மெக்னீசியம் ஆக்ஸைடு (MgO)
உ) இரும்பு
- இரும்பு ஆக்ஸைடு (Fe2O3)
ஊ) சோடியம்
- சோடியம் ஆக்ஸைடு (Na2O3)
3. கீழ்க்காண்பவற்றுடன் கார்பன் டை ஆக்ஸைடு எவ்வாறு வினைபுரிகிறது?
அ) பொட்டாசியம்
பொட்டாசியத்துடன் கார்பன் டை ஆக்ஸைடு வினைபுரிந்து பொட்டாசியம் கார்பனேட்டை உருவாக்குகிறது
4K + 2CO2 | toC———-> | C + 2K2CO3பொட்டாசியம் கார்பனேட் |
ஆ) சுண்ணாம்பு நீர்
சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைச் செலுத்தும் பொழுது கரையாத கால்சியம் கார்பனேட் உருவாவதால் கரைசல் பால் போல் மாறுகிறது
Ca(OH)2 + CO2 | Δ———-> | CaCO3 + H2Oகால்சியம் கார்பனேட் |
இ) சோடியம் ஹைட்ராக்ஸைடு
சோடியம் ஹைட்ராக்ஸைடு (காரம்), கார்பன் டை ஆக்ஸைடு (அமிலம்) மூலம் நடுநிலையாக்கல் வினைக்குட்படுத்தப்பட்டு சோடியம் கார்பனேட்டையும் நீரையும் தருகிறது
2NaOH + CO2 | Δ———-> | Na2 CO3 + H2Oசோடியம் கார்பனேட் |
4. அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?
அமில மழையின் விளைவுள்
- மனிதர்களின கண்களிலும் தாேலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது.
- விதை முளைத்தலையும், வளர்தலையும் தடை செய்கிறது.
- மண்ணின வளத்தை மாற்றுவதாேடு தாவரங்களையும் , நீர் வாழ் உயிரினங்களையும் அழிக்கிறது.
- கட்டடங்கள் மற்றும் பாலங்களின அரிப்பிற்குக் காரணமாகிறது.
அமில மழையைத் தடுக்கும் வழிமுறைகள்
- பெட்ராேல், டீசல் போன்ற படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.
- அழுத்தபட்ட இயற்கை வாயுவைப் பயன்படுத்துதல்
- மாற்று எரிபொருளைப் பயன்படுத்துதல் .
- தாெழிற்சாலைக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல்.