அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. அமிலங்கள் ______________ சுவையை உடையவை.
- புளிப்பு
- இனிப்பு
- கசப்பு
- உப்பு
விடை : புளிப்பு
2. கீழ்கண்டவற்றில் நீர் கரைசலில் மின்சாரத்தைக் கடத்துவது ______________.
- அமிலம்
- காரம்
- அமிலம் மற்றும் காரம்
- இவற்றில் ஏதுமில்லை
விடை : அமிலம் மற்றும் காரம்
3. நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைலில் ______________ நிறமாக்க மாறுகிறது.
- நீல
- பச்சை
- சிவப்பு
- வெள்ளை
விடை : சிவப்பு
4. நீரில் காரத்தை கரைக்கும் போது அது நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் ______________ நிறமாக மாறுகிறது. அயனிகளைத் தருகிறது.
- OH–
- H+
- OH
- H
விடை : OH–
5. சோடியம் ஹைட்ராக்ஸைடு ஒரு ______________ ஆகும்.
- அமிலம்
- காரம்
- ஆக்ஸைடு
- உப்பு
விடை : காரம்
6. சிவப்பு எறும்பின் காெடுக்கில் ___________ அமிலம் உள்ளது.
- அசிட்டிக் அமிலம்
- சல்பியூரிக் அமிலம்
- ஆக்ஸாலிக் அமிலம்
- ஃபார்மிக் அமிலம்
விடை : ஃபார்மிக் அமிலம்
7. மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு ___________ குணப்படுத்தப் பயன்படுகிறது.
- அமிலத்தன்மை
- தலைவலி
- பற்சிதைவு
- இவற்றில் ஏதும் இல்லை
விடை : அமிலத்தன்மை
8. அமிலமும் காரமும் சேர்ந்து ___________ உருவாகிறது
- உப்பு மற்றும் நீர்
- உப்பு
- நீர்
- இவற்றில் ஏதும் இல்லை
விடை : உப்பு மற்றும் நீர்
9. நாம் பல் துலக்குவதற்கு பற்பசை பயன்படுத்துகிறோம் ஏனெனில் அது ________ தன்மை காெண்டது.
- காரம்
- அமிலம்
- காரம் மற்றும் அமிலம்
- ஏதுமில்லை
விடை : காரம்
10. கார கரைசலில் மஞ்சள் தூள் நிறங்காட்டியானது மஞ்சள் நிறத்தில் இருந்து __________ நிறமாக மாறுகிறது.
- நீலம்
- பச்சை
- மஞ்சள்
- சிவப்பு
விடை : சிவப்பு
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. பென்சாயிக் அமிலம் __________ ஆக பயன்படுகிறது
விடை : உணவு பதப்படுத்தி
2. ’புளிப்புச் சுவை’ என்பது இலத்தின் மொழியில் __________ என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.
விடை : அசிடஸ்
3. காரங்கள் __________ சுவையைக் காெண்டவை
விடை : கசப்பு
4. கால்சியம் ஆக்ஸைடின் வேதிவாய்ப்பாடு __________
விடை : CaO
5. குளவியின கொடுக்கில் __________ அமிலம் உள்ளது.
விடை : ஃபார்மிக்
6. உணவு தயாரிக்கப் பயன்படும் மஞ்சளானது __________ ஆக பயன்படுகிறது.
விடை : நிறங்காட்டி
7. செம்பருத்திப்பூ நிறங்காட்டி அமிலக்கரைசலில் __________ நிறத்தைத்
தருகிறது.
விடை : இளஞ்சிவப்பு
III. சரியா அல்லது தவறா எனக்கூறு தவறான கூற்றைத் திருத்து.
1. பெரும்பாலன அமிலங்கள் நீரில் கரைவதில்லை
விடை : தவறு
சரியான கூற்று : பெரும்பாலன அமிலங்கள் நீரில் கரைகிறது
2. அமிலங்கள் கசப்புச் சுவை உடையவை.
விடை : தவறு
சரியான கூற்று : அமிலங்கள் புளிப்புச் சுவை உடையவை.
3. உலர்ந்த நிலையில் காரங்களை தாெடும்போது வழவழப்புத் தன்மையுடன் காணப்படும்.
விடை : தவறு
சரியான கூற்று : காரங்களை திரவத்தில் கரைந்துள்ள போது வழவழப்புத் தன்மையுடன் காணப்படும்.
4. அமிலங்கள் அரிக்கும் தன்மையைக் காெண்டவை.
விடை : சரி
5. அனைத்துக் காரங்களும் அல்கலிகள் ஆகும்.
விடை : தவறு
சரியான கூற்று : நீரில் கரையும் காரங்களும் அல்கலிகள் ஆகும்.
6. செம்பருத்திப்பூ சாறு ஒரு இயற்கை நிறங்காட்டி ஆகும்.
விடை : சரி
IV. குறுகிய விடையளி
1. அமிலம் – வரையறு
புளிப்புச்சுவை கொண்ட வேதிச்சேர்மங்கள் பொதுவாக அமிலங்கள் எனப்படுகின்றன.
நீரில் கரையும்போது ஹைட்ரஜன் அயனிகளை வெளியிடும் வேதிச்சேர்மங்கள் அமிலங்கள் என வரையறுக்கப்படுகின்றன.
2. அமிலங்களின ஏதேனும் நான்கு இயற்பியல் பண்புகளை எழுதுக.
- அமிலங்கள் புளிப்புச்சுவை கொண்டவை
- அமிலங்கள் நிறமற்றவை
- அமிலங்கள் நீரில் நன்கு கரைகின்றன
- அமிலங்களிள் நீர்க்கரைசல்கள் மின்சாரத்தை கடத்துகின்றன
3. அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயானை ஒற்றுமைகள் யாவை?
- அமிலங்களும், காரங்களும் இயற்கையில் அரிக்கும் தன்மை கொண்டவை
- இவை நீர்க்கரைசலில் அயனியாக்கத்திற்கு உட்படுகின்றன
- இவை நீர்க்கரைசலில் மின்சாரத்தை கடத்துகின்றன
- இவை நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுகின்றன
4. அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயானை வேற்றுமைகள் யாவை
அமிலங்கள் | காரங்கள் |
1. இவை நீரில் H+ அயனிகளைத் தருகின்றன | இவை நீரில் OH– அயனிகளைத் தருகின்றன |
2. இவை புளிப்புச் சுவை உடையவை | இவை கசப்புச் சுவை உடையவை |
3. சில அமிலங்கள் திட நிலையில் காணப்படுகின்றன | பெரும்பாலான காரங்கள் திட நிலையில் காணப்படுகின்றன |
4. அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகின்றன | காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றுகின்றன |
5. நிறங்காட்டி என்றால் என்ன?
நிறங்காட்டி அல்லது அமில – கார நிறங்காடடி என்பது ஒரு வேதிப் பொருளாகும். இது ஒரு வேதிப்பொருள் அமிலத்தன்மை கொண்டதா? அல்லது காரத்தனமை காெண்டதா? என்பதை பொருத்தமான நிறமாற்றத்தின் அடிப்படையில் இது குறிக்கிறது
6. நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன?
வேறுபட்ட வேதிப்பண்புகளை காெண்டுள்ள இரண்டு வேதிப் பொருள்களுக்கிடையே நடைபெறும் நடுலை வினையே நடுநிலையாக்கல் வினையாகும்.
7. காரங்களின் ஏதேனும் நான்கு வேதிப்பண்புகளை எழுதுக.
உலோகங்களுடன் வினை
பொதுவாக காரங்கள் உலோகங்களுடன் வினைபுரிவதில்லை. அலுமினியம் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்கள் சோடியம் ஹைட்ராக்சைடுன் வினைபுரிந்து சோடியம் அலுமினேட்டையும் ஹைட்ரஜன் வாயுவையும் தருகின்றன.
அலோக ஆக்சைடுகளுடன் வினை
அனைத்து காரங்களும் அலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து உப்பு மற்றும் நீரைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, சோடியம் ஹைடராக்ஸைடு கார்பன் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் கார்பனேட்டைக் கொடுக்கிறது.
அம்மோனிய உப்புகளுடன் வினை
காரங்கள் அம்மோனிய உப்புகளுடன் வினைபுரிந்த உலோக உப்புகள், அம்மோனியா வாயு மற்றும் நீரைத் தருகின்றன
V. விரிவான விடையளி
1. அமிலங்களின் பயன்கள் யாவை?
- நமது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவுப் பொருள்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
- உணவுப் பொருள்கள் கெட்டப்போகாமல் இருக்க வினிகர் (அசிடிக் அமிலம்) பயன்படுத்தப்படுகிறது.
- ஊறுகாய் போன்ற உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க பென்சாயிக் அமிலம் பயன்படுகிறது.
- குளியல் சோப்புகள் மற்றும் சலவை சோப்புகள் தயாரிக்க உயர் கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகள் அல்லது பொட்டாசியம் உப்புகள் பயன்படுகின்றன.
- சல்பியூரிக் அமிலம் வேதிப்பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. இத மிகச் சிறந்த நீர் நீக்கியாக செயல்படுகிறது. இது பல்வேறு வகையான சலவை சோப்புகள், வண்ணபூச்சுகள், உரங்கள் மற்றம் பல வேதிப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் பயன்படுத்தப்படுகிறது.
- ஹைட்ரோகுளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் மற்றும் சல்பியூரிக் அமிலம் போன்றவை முக்கியமான ஆய்வக காரணிகளாகச் செயல்படுகின்றன.
- அனைத்த உயிரினங்களின் செல்களும் நியூக்ளிக் அமிலங்களை அடிப்படை பொருளாக கொண்டுள்ளன. விலங்குகள் டி-ஆக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலத்தையும் (DNA) தாவரங்கள் ரிபோ நியூக்ளிக் அமிலத்தையும் (RNA) கொண்டுள்ளன
2. காரங்களின் பயன்கள் யாவை?
- குளியல் சோப்புகள் தயாரிக்க பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு பயன்படுகிறது.
- சலவை சோப்புகள் தயாரிக்க சோடியம் ஹைட்ராக்ஸைடு பயன்படுகிறது.
- காகிதத் தாெழிற்சாலைகள், ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும், மருந்துகள் தயாரிக்கவும் சோரியம் ஹைட்ராக்சைட பயன்படுகிறது.
- வெள்ளை அடிக்க் கால்சியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
- வயிற்றில் உருவாகும் அமிலத்தன்மையை நடுநிலையாக்க அலுமினியம் ஹைட்ராக்சைடு போன்ற காரங்கள் பயன்படுகிறது
- உரங்கள், நைலான்கள், நெகிழிகள் மற்றும் இரப்பர்கள் தயாரிக்க அம்மோனியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
3. மஞ்சள் தூளில் இருந்து எவ்வாறு இயற்கை நிறங்காட்டியை தயாரிப்பாய்?
இயற்கை நிறங்காட்டி என்பது இயற்கை மூலத்திலிருந்து பெறப்படும் வேதிப்பொருள் ஆகும்
- மஞ்சள் தூளில் சிறிதளவு நீரைச்சேர்த்த மஞ்சள் தூள் பசை தயாரிக்கப்படுகிறது.
- இது மை உறிஞ்சும் தாள அல்லது வடிதாளின் மீது பூசப்பட்டு உலர்த்தப்படுகிறது
- ஒரு கரைசலின் அமில மற்றும் காரத் தன்மையைக் கண்டறிய மஞ்சள் தூள் நிறங்காட்டி பயன்படுகிறது.
- அமிலக் கரைசலில் மஞ்சள் நிறங்காட்டி எந்த ஒரு குறிப்பிடத்தக்க நிறமாற்றத்தையும் தராது. அது மஞ்சளாகவே இருக்கும்.
- இது காரக்கரைசலில் மஞ்சள் நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறுகிறது.