சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -3 : இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
பயிற்சி வினா விடை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பொருட்சேதம், உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி ……………
அ) இடர்
ஆ) பேரிடர்
இ) மீட்பு
ஈ) மட்டுப்படுத்தல்
விடை : ஆ) பேரிடர்
2. பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள்.
அ) தயார் நிலை
ஆ) பதில்
இ) மட்டுப்படுத்தல்
ஈ) மீட்பு நிலை
விடை: இ) மட்டுப்படுத்தல்
3. ஒருதிடீர் நகர்வு அல்லது புவிமேலோட்டின் திடீர் நடுக்கம் ……… என அழைக்கப்படுகிறது.
அ) சுனாமி
ஆ) புவி அதிர்ச்சி
இ) நெருப்பு
ஈ) சூறாவளி
விடை: ஆ) புவி அதிர்ச்சி
4. கனமழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல் …………… என அழைக்கப்படுகிறது.
அ) வெள்ளம்
ஆ) சூறாவளி
இ) வறட்சி
ஈ) பருவ காலங்கள்
விடை: அ) வெள்ளம்
5. ……… வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.
அ) ரேஷன் அட்டை
ஆ) ஓட்டுநர் உரிமம்
இ) அனுமதி
ஈ) ஆவணங்கள்
விடை: ஆ) ஓட்டுநர் உரிமம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மனிதனுக்கும், அவனுடைய உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு ……..
விடை: பேரழிவுகள்
2. பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் …………. என அழைக்கப்படுகிறது.
விடை: பேரிடர் மேலாண்மை
3. மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை ஏற்படுத்தும் நீரின் இடப்பெயர்வு ………….. எனப்படும்.
விடை: சுனாமி
4. தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண் ……….
விடை: 101
5. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கக்கூடிய பேரிடரின் போது மனித வாழ்க்கை மற்றும் உடைமைகளை ………….. பேரிடர் மேலாண்மை எனப்படுகிறது.
விடை: பாதுகாப்பது
III. பொருத்துக
I II
1. புவிஅதிர்ச்சி – அ. இராட்சத அலைகள்
2. சூறாவளி – ஆ. பிளவு
3. சுனாமி – இ. சமமற்ற மழை
4. தொழிற்சாலை விபத்து – ஈ. புயலின் கண்
5. வறட்சி – உ. கவனமின்மை
விடைகள்
1. புவிஅதிர்ச்சி – ஆ. பிளவு
2. சூறாவளி – ஈ. புயலின் கண்
3. சுனாமி – அ. இராட்சத அலைகள்
4. தொழிற்சாலை விபத்து – உ. கவனமின்மை 5. வறட்சி – இ. சமமற்ற மழை
IV. பின்வரும் வாக்கியங்களை கருத்திற்கொண்டு சரியான விடையை செய்க
கூற்று (A) : நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது
காரணம் (R) : மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடர் மற்றும் பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு: காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை: ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
2. கூற்று (A) : திடீர் நுகர்வு அல்லது பூமியின் மேலேட்டில் ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி ஆகும்.
காரணம் (R.) : டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, ஜனநெருக்கடி, பிளவு போன்றவை புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன
அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.
V. சுருக்கமாக விடையளிக்க
1. இடர் வரையறு.
பொதுவாக இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு, மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும் நிலை, காயம், பொருட்சேதம், சொத்துக்கள் சேதமடைதல், வேலையிழப்பு, சுகாதார பாதிப்புகள், வாழ்வாதார இழப்பு, சமூக, பொருளாதார இடையூறு மற்றும் சுற்றுச்சூழல் சேதம் போன்றவையாகும்.
2. பேரிடர் என்றால் என்ன?
ஒரு பேரிடர் என்பது பொதுவாக “சமூகத்தில் ஒரு கடுமையான இடையூறு, பரவலான பொருள், பொருளாதார, சமூக அல்லது சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்துகிறது, இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனை மீறுகிறது”.
3. பேரிடர் மேலாண்மை சுழற்சியின் ஆறு நிலைகள் யவை?
* தயார் நிலை
* மட்டுப்படுத்துதல்
* கட்டுப்படுத்துதல்
* துலங்கல்
* மீட்டல்
* முன்னேற்றம்
4. தமிழ்நாட்டில் உள்ள எச்சரிக்கை அமைப்பு சார்ந்த இரண்டு நிறுவனங்கள் எவை?
* தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை (SDRF)
* மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA)
5. வெள்ளத்தினால் ஏற்படும் மூன்று விளைவுகள் பற்றி எழுதுக.
1. சொத்து மற்றும் உயிரிழப்பு
2. மக்கள் இடப்பெயர்வு
3. காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.
6. இரயில் நிலையத்தில் பின்பற்றப்பட வேண்டிய நான்கு நடவடிக்கைகள் குறித்து எழுதுக.
* இரயில் பாதுகாப்பு ஆலோசனைகளை தெரிந்து கொண்டு அதன்படி பின்பற்ற வேண்டும்.
* இரயில் எந்த நேரமும், எந்த திசையிலும் வரக்கூடும்.
* இரயில் நிலைய மேடையின் ஓரங்களில் அமரக்கூடாது.
* தண்டவாளங்களைக் கடந்து செல்லக்கூடாது.
* நடைமேடையை பயன்படுத்த வேண்டும்.
7. தொழிற்சாலை விபத்து அடிக்கடி நிகழக்கூடிய நான்கு வேறுபட்ட தொழிற்சாலைகளைப் பட்டியலிடுக.
* சுரங்கத் தொழிற்சாலை
* வேதியியல் தொழிற்சாலை
* அணுமின் தொழிற்சாலை
* சிமெண்ட் தொழிற்சாலை
VI. வேறுபடுத்துக
1. புவி அதிர்ச்சி மற்றும் ஆழி பேரலை (சுனாமி).
புவி அதிர்ச்சி (நிலநடுக்கம்)
1. ஒரு திடீர் நகர்வு (அல்லது) புவி மேலோட்டில் ஏற்படும் நடுக்கம்.
2. புவித்தட்டுகளின் நகர்வு, நிலச்சரிவு, மற்றும் மேற்பரப்பு பிளவு போன்றவை நிலநடுக்கத்திற்கான காரணமாகும்.
ஆழிப் பேரலை (சுனாமி)
1. நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் மிகப்பெரிய அலைகளே ஆழிப்பேரலையாகும்.
2. கடல் அலைகள் பல மீட்டர்கள் உயர எழுந்து சில நிமிடங்களில் கடற்கரையை அடைகிறது.
2. வெள்ளம் மற்றும் சூறாவளி.
வெள்ளம்
கனமழை, புயல், பனி உருகுதல், ஆழிப்பேரலை அல்லது அணைக்கட்டு உடைதல் போன்றவற்றால் திடீரென ஏற்படும் அதிக அளவிலான நீர் வெளியேறுதலே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.
சூறாவளி.
உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று “புயல்” என அழைக்கப்படுகிறது.
3. இடர் மற்றும் பேரிடர்.
இடர்
1. இடர்கள் என்பது இயற்கை நிகழ்வுகளையும் மற்றும் சுற்றுச்சூழல் மேல் ஏற்படும் எதிர்மறைத் தாக்குதலாகும்.
2. இயற்கை இடர்கள் புவியியல் மற்றும் உயிரியல் இடர்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பேரிடர்.
1. மனித வாழ்வில் பெரிய அளவில் சொத்துக்கள் மற்றும் மனித உயிர்கள் பரவலாக பாதிக்கப்படும் போது அவை பேரழிவுகள் எனப்படுகிறது.
2. இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனை மீறுகிறது.
VII. விரிவான விடையளி
1. பேரிடர் மேலாண்மை சுழற்சி பற்றி விளக்குக.
பேரிடர் மேலாண்மை நிலைகள் ஆறு படிநிலைகளாகக் கொண்டு பேரிடர் சுழற்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பேரிடருக்கு முந்தைய நிலை:
கட்டுப்படுத்துதல் மற்றும் மட்டுப்படுத்துதல்:
எதிர்கால பேரழிவு அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். பேரழிவைக் குறைத்தல் என்பது தாக்கத்தின் அளவைக் குறைப்பதாகும். மட்டுப்படுத்துதல் என்பது ஆபத்தைக் குறைப்பது மற்றும் பாதிக்கக் கூடிய நிலைமைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகும்.
தயார்நிலை:
இந்த படிநிலையானது அரசாங்கம், சமூகங்கள் மற்றும் தனி ஒரு மனிதன் பேரிடர் சூழ்நிலைகளை திறம்பட சமாளிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் உள்ளடக்கியதாகும். உதாரணமாக, அரசின் அவசரநிலை திட்டங்கள், எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல், சரக்குகளின் பராமரிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு, கல்வி மற்றும் தனிநபர் பயிற்சி போன்றவை அடங்கும்.
ஆரம்பகால எச்சரிக்கை:
பேரிடர் ஆரம்பிக்கும் நிலையில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ள பகுதிகளைப் பார்வை இடுவது மற்றும் பேரிடர் தொடங்க உள்ளது என்ற செய்தியினை மக்களுக்கு பாதிப்பில்லாத வழியில் தெரிவிப்பது போன்றவை ஆரம்ப கால எச்சரிக்கையாகும். பயனுள்ளதாக அமைய, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அளிக்கப்படும் எச்சரிக்கை நிகழ்வுகள் மக்கள் கல்வி மற்றும் பயிற்சியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
பேரிடரின் தாக்கம்:
பேரிடரின் தாக்கம் என்பது பேரிடர் நிகழும் கால அளவு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் குறிக்கும். பேரிடர் நிகழும் கால அளவு என்பது அச்சுறுத்தலின் வகையைப் பொறுத்து அமையும். புவி அதிர்ச்சியின்போது நில நடுக்கமானது சில நொடிகள் நிகழும். அதுவே, ஆழிப்பேரலை ஏற்பட காரணமாகிறது.
பேரிடரின் போது:
துலங்கல்:
கட்டுப்பாட்டு அறைகளை அமைத்தல், தற்செயல் திட்டத்தை செயல்படுத்துதல், எச்சரிக்கை விடுதல், வெளியேற்றுவதற்கான நடவடிக்கை, மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது, தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதல், ஒரே நேரத்தில் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட எந்தவொரு பேரிடருக்கும் இது முதல் கட்ட பதிலைக் குறிக்கிறது.
பேரிடருக்குப் பின் மீட்பு நிலை:
மீட்புநிலை என்பது அவசரகால நிவாரணம் வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு போன்ற 3 நிலைகளை உள்ளடக்கியது.
வளர்ச்சி:
வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் என்பது தற்போதைய செயல்பாடு ஆகும். நீண்ட காலத் தடுப்பு மற்றும் பேரிடரைக் குறைத்தல் என்பது வெள்ளப்பெருக்கினைத் தடுக்கும் வகையில் ஏரிக்கரை கட்டுதல், வறட்சியை ஈடுகட்ட நீர்ப்பாசன வசதிகள் செய்தல், நிலச்சரிவினைச் சரிசெய்ய மரம் நடுதல், சூறாவளி காற்று மற்றும் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் வீடுகள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.
2. வெள்ளம் மற்றும் அதன் விளைவுகளையும் அதனை மட்டுப்படுத்துதல் பற்றியும் விளக்குக.
வெள்ளப்பெருக்கு:
கனமழை, புயல், பனி உருகுதல், ஆழிப்பேரலை (சுனாமி) அல்லது அணைக்கட்டு உடைதல் போன்றவற்றால் திடீரென ஏற்படும் அதிக அளவிலான நீர் வெளியேறுதலே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.
பாதிப்புகள் :
1. சொத்து மற்றும் உயிரிழப்பு
2. மக்கள் இடப்பெயர்வு
3. காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.
மட்டுப்படுத்துதல்:
* வெள்ளநீர் வடிய ஏற்பாடு செய்தல், வெள்ளப்பெருக்கினை தடுக்கும் வகையில் ஏரிக்கரை கட்டுதல்.
* மக்களையும் அவர்கள் உடைமைகளையும் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்புதல்
3. ஏதேனும் 5 பொதுவான வாழும் நுட்பங்கள் பற்றி எழுதுக.
* புவி அதிர்ச்சியின் போது மேஜையின் கீழ் செல். தரையில் மண்டியிடு மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உறுதியான சுவற்றின் அருகில் செல், தரையில் அமர் மற்றும் தரையை இறுகப் பிடித்துக்கொள் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். டார்ச் விளக்கினை மட்டும் பயன்படுத்தவும்.
* தீ விபத்து எனில் அவசர சேவைக்கு 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். ஒருவருக்கு ஆடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், அவரை ஓடாமல் தரையில் படுத்து உருள செய்ய வேண்டும்.
* சாலை விபத்தினைத் தவிர்க்க வேண்டுமெனில், ஓட்டுநர் உரிமம் பெற்றவரை மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போதும், வாகனத்தை இயக்கும் போதும் பின்பற்றப்பட வேண்டிய சாலைவிதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். –
* இரயில் நிலைய மேடையின் ஓரங்களில் அமரக்கூடாது.
4. புவி அதிர்ச்சி, அதன் பாதிப்புகள் மற்றும் மட்டுப்படுத்துதல் படிநிலைகள் பற்றி எழுதுக.
புவி அதிர்ச்சி :
ஒரு திடீர் நகர்வு (அல்லது) புவி மேலோட்டில் ஏற்படும் நடுக்கத்தை நிலநடுக்கம் என அழைக்கின்றோம். புவித்தட்டுகளின் நகர்வு, நிலச்சரிவு, மற்றும் மேற்பரப்பு’ பிளவு போன்றவை நிலநடுக்கத்திற்கு காரணமாகின்றன.
பாதிப்புகள்:
அதிகப்படியான நில நடுக்கத்தால் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் அணைக்கட்டுகள் இடிந்து சேதமடைகிறது. நிலநடுக்கத்தால், வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு, தீ, மின்சாரம் துண்டிக்கப்படுதல் மற்றும் நீர் குழாய்கள் உடைதல் போன்றவை நிகழ்கின்றன. இது ஆற்றின் பாதையைக்கூட மாற்றியமைக்கிறது.
பேரிடருக்கு முந்தைய நிலை:
* அவசரநிலை திட்டங்கள்
* எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல்
* சரக்குகளின் பராமரிப்பு
* பொது மக்கள் விழிப்புணர்வு
பேரிடரின் போது:
* செயல்படுத்துதல், எச்சரிக்கைவிடுதல், வெளியேற்றுவதற்கான நடவடிக்கை
* பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது
பேரிடருக்குப்பின் மீட்பு நிலை:
* மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு
VIII. உயர்சிந்தனை வினாக்கள்
1. நான் ஏன் இயற்கை பேரிடர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?
* பேரிடருக்குப்பின் மீட்டெடுத்தல் என்பதை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் என்பது குறைந்த செலவுடையதாகும். இடரை மட்டுப்படுத்துதல் என்பது எதிர்கால பேரிடர் விளைவுகளைக் குறைப்பதற்கான செயல்திட்டம் ஆகும்.
* நிறுவன மற்றும் செயல்பாட்டு திறன்கள் வளர்த்தல், சமாளிக்கும் திறனை அதிகப்படுத்துதல் போன்றவை பேரிடர் மேலாண்மை எனப்படும்.
2. இந்தியாவில் நிலச்சரிவு அடிக்கடி நிகழும் 4 இடங்களைப் பட்டியலிடுக.
* மேற்கு கடற்கரைப் பகுதி மற்றும் கொங்கண மலைப்பகுதி
* கிழக்கு கடற்கரைப் பகுதி
* வடகிழக்கு மலைப்பகுதிகள்
* வடமேற்கு மலைப்பகுதிகள்