Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Universe and Space

Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Universe and Space

அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : அண்டம் மற்றும் விண்வெளி

மதிப்பீடு 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 

1. நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர __________ நாட்களாகும். 

அ) 25 

ஆ) 26 

இ) 27

ஈ) 28 

விடை : இ) 27 

2. இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்தித்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது __________ நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும். 

அ) பரணி 

ஆ) கார்த்திகை 

இ) ரோஹிணி 

ஈ) அஸ்வினி

விடை : ஈ) அஸ்வினி 

3. __________தொலை நோக்கியைக் கண்டறிந்தார். 

அ) ஹான் லிப்பெர்ஷே

ஆ) கலிலியோ 

இ) நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ் 

ஈ) தாலமி 

விடை : அ) ஹான் லிப்பெர்ஷே 

4. அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு __________ என்று பெயர். 

அ) நீள்வட்ட விண்மீன் திரள் 

ஆ) ஒழுங்கற்ற விண்மீன் திரள் 

இ) குழுக்கள்

ஈ) சுருள் விண்மீன் திரள்

விடை : ஈ) சுருள் விண்மீன் திரள் 

5. __________ துணைக்கோளை நிறுவியவுடன் ISRO 4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது. 

அ) GSAT- 13 

ஆ) GSAT- 14 

இ) GSAT-17 

ஈ) GSAT- 19

விடை : ஈ) GSAT-19 

II. கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1. வளர்பிறை என்பது __________

விடை : வளர்தல் அல்லது வெளிச்சத்தில் விரிவடைதல்

2. சூரியமையக் கொள்கையை முன் மொழிந்தவர் __________

விடை : நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ்

3. அண்டத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி __________ ஆகும். 

விடை : பெரு வெடிப்பு கோட்பாடு

4. ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் __________ ஆகும் 

விடை : உர்சா மேஜர்

5. இந்தியா ஏவிய முதல் ஏவுகணை __________ ஆகும். 

விடை : ஆர்யபட்டா

III. சரியா – தவறா. தவறெனில் காரணம் கூறவும்

1. முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும் 

விடை : தவறு

சரியான விடை : முழு நிலவு நாளில் சூரியன் மேற்கில் மறையும் அதே நேரத்தில் நிலவு கிழக்கில் உதிக்கிறது. 

2. நிலவானது பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலைக்கு பிறை நிலவு என்று பெயர்.

விடை : சரி

3. கலிலியோ புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.

விடை : தவறு 

சரியான விடை : சூரிய மையக் கோட்பாட்டிற்கு ஆதரவாக கலிலியோ வெள்ளிக்கோளை உற்று நோக்கி கண்டறிந்த ஆதாரங்களை அளித்தார். 

4. நமது பால்வெளித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.

விடை : தவறு 

சரியான விடை : நமது பால்வெளித் திரளானது சுருள் விண்மீன் திரள் ஆகும். 

5. நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையது.

விடை : சரி

IV. பொருத்துக. 

1. ரோகினி – அ. GSLV–Mark III

2. GSAT-14 – ஆ. GSLV Mark III M1

3. GSAT-19 –  இ. SLV-3 

4. சந்த்ரயான்–2 – ஈ. PSLV-XL- C25

5. மங்கள்யான் – உ. GSLV-D5

விடைகள் 

1. ரோகினி – இ. SLV-3 

2. GSAT-14 – உ. GSLV-D5 

3. GSAT-19 –  ஆ. GSLV Mark III M1

4. சந்த்ரயான்–2 – அ. GSLV–Mark III

   5. மங்கள்யான் – ஈ. PSLV-XL- C25

V. ஒப்புமை

1. பழைய நட்சத்திரங்கள் : நீள்வட்ட விண்மீன்திரள் :: புது நட்சத்திரங்கள் : __________ 

விடை: சுருள் விண்மீன்திரள்கள்

2. அருகிலுள்ள விண்மீன் திரள் : ஆண்ட்ரமெடா :: அருகிலுள்ள நட்சத்திரம் : __________

விடை: ஆல்ஃபா சென்டாரி

VI. மிகக் குறுகிய விடையளிக்கவும்

1. __________ என்ற வார்த்தை நிலவானது நிலவு பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலை ஆகும். (பிறை நிலவு / கூனல் நிலவு) 

விடை: பிறை நிலவு

2. __________ மற்றும் __________ கோள்கள் நடு இரவில் தோன்றாது. 

விடை: புதன் மற்றும் வெள்ளி

3. சூரியனைச் சுற்றி வர செவ்வாய் எடுத்துக் கொள்ளும் காலம் 

விடை: 687 நாட்கள்

4. வெள்ளியின் அளவு எந்த கட்டத்தில் மிகச் சிறியதாக இருக்கும்? 

விடை: பிறை நிலவு

5. பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான ஒரேயொரு சான்று

விடை: காஸ்மிக் நுண்ணலை  பின்னணி (CMB)

6. அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள் __________ 

விடை: சுருள் விண்மீன் திரள்கள்

7. உலகின் முதல் ஏவு வாகனத்தை ஏவிய நாடு எது?

விடை: 7. ரஷ்யா (ஸ்புட்னிக்-1) 

VII. குறுகிய விடையளி 

1. நீள்வட்ட மாதிரி என்றால் என்ன?

பல குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது ‘நீள்வட்ட மாதிரி’ என அழைக்கப்படுகிறது. 

2. நான்கு வகையான விண்மீன் திரள்களின் பெயர்களைக் கூறுக. 

• சுருள் விண்மீன்திரள்கள்

• நீள்வட்ட விண்மீன்திரள்கள் 

• ஒழுங்கற்ற விண்மீன்திரள்கள்

• கோடிட்ட சுருள் விண்மீன்திரள்கள் 

3. விண்மீன் மண்டலம் என்றால் என்ன?

பூமியில் இருந்து பார்க்கும்போது, இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின் அமைப்பு ‘விண்மீன் மண்டலம்’ என அழைக்கப்படுகிறது. 

4. PSLV மற்றும் GSLV யின் விரிவாக்கம் தருக. 

PSLV – துருவ செயற்கைக்கோள் வெளியீட்டு வாகனம் 

GSLV – ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம்.

VIII. விரிவான விடையளி 

1. வெள்ளியின் வளர் மற்றும் தேய் கட்டங்களைக் குறித்து விளக்குக. 

• நிலவைப்போலவே வெள்ளியும் பல கட்டங்களைக்கொண்டுள்ளது. பிறை வடிவத்திலிருந்து கிப்பஸ் வடிவத்திற்கு அதன் வடிவமானது மாறியது. கிரகத்தின் அளவும் வேறுபட்டது. 

i. கிரகமானது கிப்பஸ் கட்டத்தில் இருந்தபோது அதன் அளவு சிறியதாக இருந்தது. 

  ii. மெல்லிய பிறைபோல் இருந்தபோது அதன் அளவு பலமடங்கு   அதிகமானது.

• வெள்ளி நீள் வட்டத்தில் சுற்றி வருகிறது. சில நேரங்களில் கிரகம் அருகில் இருக்கும்போது அதன் அளவு பெரியதாக இருக்கும். சில நேரங்களில் அது தொலைவில் உள்ளபோது அதனளவு சிறியதாக இருக்கும்.

• வெள்ளியானது சூரியனைச் சுற்றி சென்றுக்கொண்டிருந்தாலும், நள்ளிரவு வானத்தில் அதனைக் காண முடியாது.

• வெள்ளி பூமிக்கு அருகில் வரும்போது அது சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்ததனைவிடப் பெயரியதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும். 

• வெள்ளி பூமியைச் சுற்றி வந்தால் நம்மால் வெள்ளியின் குமிழ் பிறையைக் காண இயலாது, வெள்ளி, சூரியனைச் சுற்றி வந்தால் மட்டுமே காண இயலும். 

2. விண்மீன் மண்டலத்தைக் குறித்து சிறு குறிப்பு வரைக. 

• பூமியில் இருந்து பார்க்கும்போது இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம் என அழைக்கப்படுகிறது. 

• சர்வதேச வானியல் சங்கம் 88 விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது. 

• உர்சாமேஜர் (சப்தரிஷிமண்டலம்) பெரிய விண்மீன் மண்டலம் ஆகும். அது வானத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது. இம்மண்டலத்தின் சிறப்பு ஏழு பிரகாசமான நட்சத்திரங்களின் பெரிய குவளை (இந்திய வானியலில் ஏழு துறவிகள்) என அழைக்கப்படும் ஒரு குழுவாகும். 

• வட வானத்திலுள்ள உர்சா மைனர் இலத்தீன் மொழியில் ‘சிறிய கரடி’ என பொருள்படும். துருவ நட்சத்திரம் (போலாரிஸ்) சிறிய டிப்பர் (ஏழு நட்சத்திரம் கொண்ட குழு) போன்றவை இம்மண்டலத்தில் உள்ளது 

• ஓரியன் விண்மீன் மண்டலம் 81 விண்மீன்களை உள்ளடக்கியது. இதில் 10 தவிர மற்றவற்றை வெறும் கண்களால் காண இயலாது. 

• பல்வேறு விண்மீன்கள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் வானத்தில் காணப்படுகின்றன. சூரியனைச் சுற்றி பூமியின் சுழற்சி காரணமாக இங்ஙனம் நிகழ்கிறது. 

• விண்மீன் திரள்களில் நட்சத்திரங்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஓர் அமைப்பாக உள்ளன. ஆனால் விண்மீன் மண்டலங்கள் வெறும் ஒளியியல் தோற்றமே.

IX. உயரிய சிந்தனைக் கேள்வி 

1. நீலனும் மாலாவும் நமது அண்டத்தினைக் குறித்த ஒரு உரையாடலில் உள்ளனர். நமது பூமி மட்டும் தான் உயிர் வாழத்தகுந்த ஒரே கோள் என நீலன் கூறுகிறான். ஆனால் சில விளக்கங்களைக் கூறி மாலா அவனது கருத்தினை எதிர்க்கிறாள். மாலா என்ன விவாதம் செய்திருப்பாள். நீ மாலாவை ஆதரிக்கிறாயா? உனது நிலையை நியாயப்படுத்து. 

நீலன் : நமது பூமி மட்டும்தான் உயிர் வாழத்தகுந்த ஒரே கோள். 

மாலா : 

• தற்போது வேறு நட்சத்திரங்களைச் சுற்றியும் வெளிக்கோள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இதிலிருந்து சூரியனை சுற்றி மட்டுமல்லாமல், பிரபஞ்சம் முழுவதும் இந்தக்கிரக அமைப்புகள் இருப்பது நிரூபணம் ஆகிறது. 

• யாருக்குத் தெரியும்? அந்த கிரகங்களில் எதிலாவது வாழ்க்கை இருக்கலாம், அதிலும் சிலவற்றில் மனிதனைப் போன்ற பகுத்தறிவுள்ள உயிர் வாழ்வதாக இருக்கலாம். 

• நாம் பிரபஞ்சத்தைப் பார்த்து வியப்புற்று, ஆராய்ச்சி செய்வது போல் அவர்களும் ஆராய்ச்சி செய்யலாம். 

• எதிர்காலத்தில் நாம் அவர்களைச் சந்திக்கும் பொழுது அந்தக் கணம் எவ்வளவு அற்புதமானதாகவும், உற்சாகமானதாகவும் இருக்கும்!

குறிப்பு : மாலாவின் கூற்றுப்படி, ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் விஞ்ஞானிகளின் தற்போதைய கண்டுபிடிப்பில் பூமி மட்டுமே உயிரிகள் வாழ ஏதுவான கோளாக உள்ளது. 

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

சூரியன் : பூமியின் இருப்பிடம், தட்ப வெப்ப நிலை, புறஊதாக்கதிர்களின் பாதுகாப்பு, புவியீர்ப்பு முடுக்கம் போன்ற பல காரணங்களால் பூமி கோள் மட்டுமே தற்போது உயிர் வாழத் தகுந்த ஒரே கோள் ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *