Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Animals in Daily Life

Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Animals in Daily Life

அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 5 : அன்றாட வாழ்வில் விலங்குகள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 

1. __________ தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான பொருளாகும். 

அ) முட்டை 

ஆ) பால் 

இ) இவை இரண்டும் 

ஈ) இவை எதுவும் அல்ல

விடை : ஆ) பால் 

2. முட்டையில் __________ அதிகம் உள்ளது. 

அ) புரதம்

ஆ) கார்போ ஹைட்ரேட் 

இ) கொழுப்பு

ஈ) அமிலம்

விடை : அ) புரதம் 

3. வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் __________ ஆடைகள் தயாரிக்க உதவுகிறது? 

அ) கால் 

ஆ) கை 

இ) உரோமம்

ஈ) தலை

விடை : இ) உரோமம் 

4. பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது __________ 

அ) ஹார்ட்டிகல்சர்

ஆ) ஃபுளோரிகல்சர் 

இ) அக்ரிகல்சர்

ஈ) செரிகல்சர்

விடை : ஈ) செரிகல்சர் 

5. பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது __________

அ) ஆஸ்துமா

ஆ) ஆந்தராக்ஸ் 

இ) டைஃபாய்டு

ஈ) காலரா

விடை : ஆ) ஆந்தராக்ஸ் 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. புரதம் மற்றும் __________ பாலில் அதிகம் உள்ளது.

விடை : கால்சியம்

2. தேன் கூட்டிலிருந்து __________ எடுக்கப்படுகிறது.

விடை : தேன்

3. ஆந்தராக்ஸ் நோயை உண்டாக்குவது __________

விடை :பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்

4. இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை __________

விடை : பட்டு

5. அமைதிபட்டு __________ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

விடை : 1992

III. சரியா, தவறா? தவறெனில் சரியானதை எழுதவும் 

1. இயற்கையின் மிகப் பெரிய கொடை விலங்குகள்.

விடை : சரி

2. குதிரையின் உரோமம் ஓவியம் தீட்டும் தூரிகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

விடை : சரி

3. பட்டுப்பூச்சி கம்பளி இழைகளைத் தருகிறது.

விடை : தவறு 

சரியான விடை : ஆடு கம்பளி இழைகளைத் தருகிறது. 

4. அஹிம்சைப் பட்டின் மறுபெயர் மல்பெரி பட்டு

விடை : தவறு 

சரியான விடை : அஹிம்சைப் பட்டின் மறுபெயர் அமைதிப்பட்டு. 

5. ஆந்த்ராக்ஸைக் குணப்படுத்தும் சிறந்த மருந்து பெனிசிலின் 

விடை : சரி

IV. பொருத்துக.

1. கூட்டுபுழு – அ. இறைச்சி 

2. அமைதிபட்டு – ஆ. கோழிப்பண்ணை

3. பிராய்லர் – இ. பட்டுப் பூச்சி 

4. இனிப்பான திரவம் – ஈ. ஆந்திரப்பிரதேசம்

5. ஆடு – உ. தேன்

விடைகள் :

1. கூட்டுபுழு – இ. பட்டுப் பூச்சி 

2. அமைதிபட்டு – ஈ. ஆந்திரப்பிரதேசம் 

3. பிராய்லர் – ஆ. கோழிப்பண்ணை

4. இனிப்பான திரவம் – உ. தேன்

5. ஆடு – அ. இறைச்சி

V. ஒப்புமை

1. நீர் : குழாய் :: மின்சாரம் : __________

விடை : மின்கம்பி 

2. தாமிரம் : கடத்தி :: கட்டை : __________

விடை : மின்கடத்தாப்பொருள் 

3. நீளம் : மீட்டர் அளவு :: மின்சாரம் : __________

விடை : அம்மீட்டர் 

4. மில்லி அம்பியர் : மைக்ரோ அம்பியர் :: 10-3A : __________

விடை : 10-6 A

VI. மிகக் குறுகிய விடை தருக 

1. பாலிலிருந்து கிடைக்கும் பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக. 

1) தயிர்

2) நெய் 

2. விலங்குகளிடமிருந்து கிடைக்கும் இரு வகையான இழைகள் யாவை?

1) கம்பளி இழைகள் 

2) பட்டு 

3. கத்தரித்தல் என்றால் என்ன?

• ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன. 

• உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும். 

4. ஆந்தராக்ஸ் நோயின் அறிகுறிகளை எழுதுக. 

• காய்ச்சல் 

• இருமல்

• மூச்சுவிடுதலில் சிரமம் 

• சில சமயம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு 

5. செரிகல்சர் – வரையறுக்க 

பட்டுப்பூச்சிகளை வளர்த்து, அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவது, பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர் எனப்படும். 

6. நாம் விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்?

• நாம் விலங்குகளின் மீது அக்கறை, அன்பு கொண்டு அவற்றை பாதுகாக்க வேண்டும். 

• விலங்குகளை நம் குடும்பத்திலுள்ள ஓர் உறுப்பினர் போல் பேணிகாக்க வேண்டும்.

7. அஹிம்சைப் பட்டைக் கண்டறிந்தவர் யார்?

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர் 1992 ஆம் ஆண்டு அஹிம்சைப் பட்டினை கண்டறிந்தார்.

VII. குறுகிய விடை தருக. 

1. கம்பளியின் சிறப்பம்சங்கள் மூன்றினை எழுதுக.

கம்பளியின் சிறப்பம்சங்கள் : 

i) வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை 

ii) ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது 

iii) கம்பளி, குளிருக்கு எதிராகச் செயல்படுகின்றது. எனவே கம்பளி சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது. 

iv) இது எளிதில் சுருங்காது 

2. பட்டின் ஏதேனும் மூன்று பயன்பாட்டை எழுதுக. 

i) பட்டு இயற்கை அழகுடையது, கோடை காலத்தில் இது இதமானதாகவும், குளிர் காலத்தில் வெப்பத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது. 

ii) நாகரிகமான, நவீன உடைகளை அழகாகத் தயாரிக்கவும், சிறப்பு வாய்ந்த அழகிய பட்டாடைகளை வடிவமைக்கவும் முக்கியமாக சேலைகள் தயாரிக்க இது பயன்படுகிறது. 

iii) பட்டு இழையானது, மருத்துவத் துறையில், அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது. 

3. கோழிப்பண்ணையில் காணப்படும் பொதுவான நோய்கள் யாவை?

i) சால்மோனெல் லோசிஸ் (வயிற்றுப்போக்கு) 

ii) ரானிக் கெட் நோய் (அம்மை நோய்) 

iii) ஆஸ்பர்ஜில்லஸ் நோய் (பலவீனம், நலிந்து போதல்)

VIII. விரிவான விடை தருக.

1. அஹிம்சை பட்டு பற்றி விவரிக்க? 

அஹிம்சைப் பட்டு: 

• இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர், 1992 ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல் அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். 

• கூட்டுப்புழுக்கள், கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும் போது அவற்றைக் கொல்லாமல் அவை உண்டாக்கும் பட்டு இழைகளை எடுக்கலாம் என்றார். 

• இந்தப் பட்டு மனித நேயத்தின் அடிப்படையில் பாரம்பரிய முறைகளைத் தாண்டி உருவாக்கப்பட்டதாகும். 

• எனவே இது அகிம்சைப்பட்டு அல்லது அமைதிப்பட்டு என்று அழைக்கப்படுகின்றது. 

2. பட்டாலைகளில் ஏற்படும் அபாயங்கள் யாவை? 

• பொதுவாகப் பட்டாலைகளில் பணிபுரிபவர்கள் நின்று கொண்டே பட்டுநூலை நூற்பதால் அவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள்.

• மேலும் இவர்கள் முதுகு வலியினாலும், பார்வைக் கோளாறுகள் மற்றும் தோல் காயங்களாலும் துன்புறுகிறார்கள். 

• குறைந்த காற்றோட்டமுள்ள பகுதிகளில் இவர்கள் பணிபுரிவதால் சில சமயம், சுவாச சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் அவதிப்படுகிறார்கள். 

• கம்பளி ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வெவ்வேறு வேதிப்பொருள்கள் மற்றும் சலவைத்தூள்களையும் பயன்படுத்துவதால் ஒவ்வாமை மற்றும் தோல் நோயால் துன்புறுகிறார்கள். 

• இறந்த விலங்குகளைக் கையாளுவதால் கம்பளி ஆலை பணியாளர்கள் ஆந்தராக்ஸ் பாக்டீரியா தொற்றால் அவதிப்படுகிறார்கள். 

• இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படுகிறது. இது பிரித்தெடுப்போர்கள் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. 

• விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும் ஆந்தராக்ஸ் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 

IX. பின்வரும் வினாக்களுக்குப் பதில் தருக. 

1. கம்பளி ஆலையில், கம்பளி தயாரிக்கப்படும் நிலைகளை எழுதுக. 

கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவை பின்வருமாறு. 

i) கத்தரித்தல் 

ii) தரம் பிரித்தல் 

iii) கழுவுதல் 

iv) சிக்கெடுத்தல் 

v) நூற்றல் 

i) கத்தரித்தல் :

ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன. உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும். 

ii) தரம் பிரித்தல் :

ஒரே ஆட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்படும் உரோமங்கள் வெவ்வேறானவை இவை பின்னர் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்படும் இது தரம் பிரித்தல் எனப்படும். 

iii) கழுவுதல் :

தோலில் இருந்து கத்தரித்த தோலின் உரோமங்கள் உள்ள தூசி, அழுக்கு மற்றும் எண்ணெய் பிசின் போன்றவற்றை நீக்க, அதைச் சலவைத்தூள் கொண்டு நன்கு கழுவ வேண்டும்.

iv) சிக்கெடுத்தல் :

காய வைத்த கம்பளி இழைகளைக் கவனத்துடன் பிரிக்க வேண்டும். இதை, ஆலைகளில் உள்ள உருளைகளில் செலுத்தி, பின்னர் மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்ற வேண்டும். இப்படிக் கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும். 

v) நூற்றல் :

இந்த வலையைக் குறுகிய தனித்த இழையாக மாற்ற, அவற்றை நூற்பு இயந்திரங்களில் அனுப்ப வேண்டும். இந்த நூல், பின் பந்துபோல் உருண்டையாக மாறும் இந்த நூல் பந்து, பின் பின்னல்களாக மாற்றப்பட்டு, ஆடைகள் நெய்ய உதவும்.

2. கம்பளியின் பயன்களை எழுதுக.

கம்பளியின் பயன்கள்: 

i) கம்பளி என்பது, பல்வேறு வகையான பொருள்கள் செய்ய உதவும் இழையாகும். 

ii) இந்த இழைகளின் விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான பொருள்கள் செய்ய உதவுகின்றன. 

iii) மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன. 

iv) கம்பளி இழை மற்றும் இயற்கை அல்லது செயற்கை இழைகளோடு சேரும்போது அவை மடிப்புக்கு எதிர்ப்புத் தன்மை உடைய போர்வைகள் மற்றும் இரைச்சலை உறிஞ்சும் விரிப்புகள் தயாரிக்க உதவுகின்றன.

X. உயர் சிந்தனை வினா 

1. பாராசூட் தயாரிக்க பட்டு இழைகள் உதவுகின்றன ஏன்? 

• பட்டு ஓர் வலிமையான இயற்கை இழையாகும். 

• இவை மெல்லிய எடைகுறைந்த மற்றும் எளிதில் தீப்பிடிக்காத தன்மை கொண்டதினால் இவை அதிகம் பாராசூட் தயாரிப்பில் உதவுகின்றன. 

2. தேன் எல்லாருக்கும் சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது ஏன்? காரணம் தருக.

• தேன் மிகுந்த மருத்துவகுணம் கொண்ட மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகும். 

• நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மைக் கொண்டது. 

• இது ஒரு இரத்தச் சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. 

• இது ஒரு ஆண்டி – ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன.

XI. கூற்றும், காரணமும் 

1. கூற்று : விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.

காரணம் : ஆடு, யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் முயல் கம்பளி இழைகளைத் தருகின்றன. 

அ) கூற்றும், காரணமும் சரி

ஆ) கூற்று சரி, காரணம் தவறு 

இ) கூற்று தவறு, காரணம் சரி

ஈ) கூற்றும், காரணமும் தவறு

விடை : அ) கூற்றும், காரணமும் சரி 

2. கூற்று : பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின்

காரணம் : இந்த மருந்துகள் பசு அம்மையைக் குணமாக்கும். 

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு, காரணம் சரி 

இ) கூற்றும் தவறு, காரணமும் தவறு

ஈ) கூற்றும் சரி, காரணமும் சரி

விடை : அ) கூற்று சரி, காரணம் தவறு

மாணவர் செயல்பாடு

செயல்பாடு:1

கொடுக்கப்பட்டுள்ள சில வகை உணவுப் பொருள்களில், அவற்றின் மூலப்பொருள்கள் மற்றும்ஆதாரத்தினை எழுதுக. 

செயல்பாடு : 2

நல்ல முட்டை எது அழுகிய முட்டை எது என்பதை உங்களால் பிரித்தறிய முடியுமா?

1. ஒரு பாத்திரத்தில் நிறைய நீரை எடுத்துக்கொள்ள வேண்டும்

2. அதில் முட்டையை வைக்க வேண்டும்

3. முட்டை, நீரில் மூழ்கினால் அது நல்லமுட்டை, முட்டை நீரில் மிதந்தால் அது அழுகிய முட்டையாகும்.

தேன்  

தேன் எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது? அது எவ்வாறு உருவாகிறது? என்பது தெரியுமா? நீங்கள் தேன் கூட்டில் பல தேனீக்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள் மலர்களிலிருந்து, நெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத் தேனாக மாற்றி, அதைத் தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமிக்கின்றன

❖ தேன் என்பது தேன் கூட்டிலிருந்து நம்மால் பிரித்தெடுக்கப்படும் இனிப்பான சாறாகும்.

❖ மலைப்பகுதியில் வசிக்கும் மக்களால், அடர்ந்த காடுகளில் உள்ள தேன் கூடுகளிலிருந்து இயற்கையான மலைத் தேன் எடுக்கப்படுகின்றது.

❖ தேன் சிறந்த மருத்துவ குணம் மிக்கது, அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்

செயல்பாடு : 3

நோக்கம்: தேன் சுத்தமானதா? இல்லையா? என்பதைக் கண்டுபிடித்தல்.

தேவையான பொருள்கள் : நீர் மற்றும் தேன்

செய்முறை : ஒரு குவளையில் நீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு துளி தேனை ஊற்றவும். பின் அதைக் கவனித்துப் பாருங்கள்.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

அறிவன : நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் கரையாமல் பாத்திரத்தின் அடிப்பகுதி வரை சென்றால் அது சுத்தமான தேன். பாத்திரத்தின் அடிப்பகுதியை அடையும் முன்னரே அது கரைந்தால் அது சுத்தமான தேன் இல்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *