தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற
உரைநடை: பசிப்பிணி போக்கிய பாவை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு …………………
- இலங்கைத்தீவு
- இலட்சத்தீவு
- மணிபல்லவத்தீவு
- மாலத்தீவு
விடை : மணிபல்லவத்தீவு
2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் …………………
- சித்திரை
- ஆதிரை
- காயசண்டிகை
- தீவதிலகை
விடை : ஆதிரை
II. சாெற்றொடரில் அமைத்து எழுதுக.
1. செடிகொடிகள்
- எங்கள் தோட்டத்தில் செடிகொடிகள் வளர்ந்திருந்தன
2. முழுநிலவு நாள்
- மும்பையில் முழுநிலவு நாள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது
3. அமுதசுரபி
- மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம் அமுதசுரபி
4. நல்லறம்
- மணிமேகலை நல்லறம் போற்றியவள்
III. குறுவினா
1. அமுதசுரபியின் சிறப்பு யாது?
அமுத சுரபி பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல்
வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
2. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?
வாழ்க்கைக்கு அறம் சாென்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது.எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவறை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேணடும்.மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரை பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும் என்று மணிமேகலை மன்னரிடம் வேண்டினாள் |
IV. சிறுவினா
1. மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள். பூத்துக் குலுங்கும் செடி கொடிகள். அடர்ந்த மரங்கள். இடையே பொய்கைகள். மனதை மயக்கும் காட்சிகள் என மணிபல்லவத்தீவு காட்சி அளித்தது
2. ‘கோமுகி“ என்பதன் பொருள் யாது?
கோமுகி என்து ஒரு பொய்கையின் பெயர். ‘கோ’ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மணிமேகலை எந்த நகரைச் சேர்ந்தவள்?
- உறையூர்
- முசிறி
- மதுரை
- பூம்புகார்
விடை : பூம்புகார்
2. கோவலன் மாதவியின் மகள் பெயர் …………………
- மணிமேகலை
- குண்டகேசி
- கோப்பெருந்தேவி
- ஆதிரை
விடை : மணிமேகலை
3. மணிமேகலையின் வேறு பெயர் …………………
- சமணத்துறவி
- தீயும் தீண்டாத தேவி
- வீர மங்கை
- பசிப்பிணி போக்கிய பாவை
விடை : பசிப்பிணி போக்கிய பாவை
4. வைகாசி முழுநிலவு நாள் தோன்றுவது …………………
- பொற்கிண்ணம்
- அமுதசுரபி பாத்திரம்
- நெல்லிக்கனி
- வற்றாத நீருற்று
விடை : அமுதசுரபி பாத்திரம்
5. பொருந்தாதை தேர்ந்தெடு
- மணிமேகலை
- வளையாபதி
- குண்டலகேசி
- கம்பராமயணம்
விடை : கம்பராமயணம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கோமுகி என்பதன் பொருள் …………………………..
விடை : பசுவின் முகம்
2. மணிமேகலை காப்பியத்தின் படி ………………………….. சிறந்த அறமாகும்
விடை : உணவு கொடுப்பது
3. தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவாேம்” என்றார் …………………………..
விடை : பாரதியார்
4. பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது ………………………….. இணையானது
விடை : உயிர் கொடுப்பதற்கு
III. பிரித்து எழுதுக
- வெண்மணல் = வெண்மை + மணல்
- கையிலிருந்த = கையில் + இருந்து
- அறநெறி = அறம் + நெறி
IV. பொருள் தருக
- பேணல் – பாதுகாத்தல்
- பிணி – நோய்
- இல்லம் – வீடு
V. எதிர்ச்சொல் தருக
- பெருமை x சிறுமை
- இட்ட x எடுத்த
- பெறு x கொடு
VI. வினாக்கள்
1. இரட்டைகாப்பியங்கள் யாவை?
மணிமேகலை, சிலப்பதிகாரம்
2. அமுதசுரபி என்றால் என்ன?
அள்ள அள்ள குறையாமல் உணவு வழங்குவது அமுதசுரபி ஆகும்
3. பாரதியாரின் கருத்து யாது?
“தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார்.
4. பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது எதற்கு இணையாது?
பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது.
5. அட்சயப் பாத்திரம் எப்போது தோன்றும்?
அட்சயப் பாத்திரம் வைகாசி முழுநிலவு நாள் அன்று தோன்றும்.
6. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்ற வேண்டும் எனக் கூறியது யார்?
மணிமேகலை
7. மன்னிரிடம் மணிமேகலை கூறிய வேண்டுகோள் யாவை?
எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்.
மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும்.
8. மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு யாருக்கெல்லாம் உணவு அளிக்கிறாள்?
- உடல் குறையுற்றோர்
- பிணியாளர்
- ஆதரவு அற்றோர்
- பூம்புகாரில் சிறைச்சாலையில் உள்ளவர்கள்