Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Tamil Books Chapter 1 1

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 1 1

தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன்

கவிதைப்பேழை: இன்பத்தமிழ்

சில பயனுள்ள பக்கங்கள்

I. சொல்லும் பொருளும்

  1. நிருமித்த – உருவாக்கிய
  2. விளைவு – விளைச்சல்
  3. சமூகம் – மக்கள் குழு
  4. அசதி – சோர்வு
  5. சுடர் – ஒளி

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏற்றத் தாழ்வற்ற _________________ அமைய வேண்டும்

  1. சமூகம்
  2. நாடு
  3. வீடு
  4. தெரு

விடை : சமூகம்

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______________ ஆக இருக்கும்

  1. மகிழ்ச்சி
  2. கோபம்
  3. வருத்தம்
  4. அசதி

விடை : அசதி

3. “நிலவு + என்று” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________

  1. நிலயென்று
  2. நிலவென்று
  3. நிலவன்று
  4. நிலவுஎன்று

விடை : நிலவென்று

4. “தமிழ் + எங்கள்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________

  1. தமிழங்கள்
  2. தமிழெங்கள்
  3. தமிழுங்கள்
  4. தமிழ்எங்கள்

விடை : தமிழெங்கள்

5. “அமுதென்று” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________

  1. அமுது + தென்று
  2. அமுது + என்று
  3. அமது + ஒன்று
  4. அமு + தென்று

விடை : அமுது + என்று

6. “செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________

  1. செம்மை + பயிர்
  2. செம் + பயிர்
  3. செமை + பயிர்
  4. செம்பு + பயிர்

விடை : செம்மை + பயிர்

III. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக

1. விளைவுக்குஅ. பால்
2. அறிவுக்குஆ. வேல்
3. இளமைக்குஇ. நீர்
4. புலவர்க்குஈ. தோள்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ.

V. ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சாெற்களை எடுத்து எழுதுக

  1. பேர் – நேர்
  2. பால் – வேல்
  3. ஊர் – நீர்
  4. வான் – தேன்
  5. தாேள் – வாள்

VI. குறுவினா

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

பாரதிதாசன் தமிழுக்கு அமுதம், நிலவு, மணம் என பெயர்களை சூட்டியுள்ளார்

2. நீங்கள் தமிழை எதனாேடு ஒப்பிடுவீர்கள்?

நாங்கள் தமிழை உயிரோடு ஒப்பிடுவோம். காரணம் உயிர் உள்ளவரைதான் உடலக்கு மதிப்பு அது போல தமிழ் உள்ளவரைதான் தமிழனுக்கு மதிப்பு

VII. சிறுவினா

1. ‘இன்பத்தமிழ்’ – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டினை எழுதுக.

‘தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்

2. விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

நீரின்றி அமையா உலகு என்பது வள்ளுவன் வாக்கு. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது நீராகும்.அத்தகைய நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றாங்கரையில் தான் மனித நாகரீகம் வளர்ந்துள்ளது. இதுவே விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு ஆகும்.

VIII. சிந்தனை வினா

1. வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்ப டுகிறது? உங்கள் கருத்தைக் கூறுக.

வேல் என்பது ஓர் ஆயுதம். அது எல்லா உயிர்களையும் ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.வேல் மனிதர்களின் கரங்களில் இருக்கும்போது மனிதனுக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுக்கும்.அதுபோல புலவர்களுக்கு தமிழ் கையிலிருந்தால் தைரியத்தையும். உற்சாகத்தையும் கொடுக்கும். புலவர்களின் பாடல்கள் மனித உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.அதனால்தான் கவிஞர் வேலையும் தமிழையும் ஒப்பிட்டுப்பாடியுள்ளார்.

கூடுதல் வினாக்கள்

A. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. _______________ அமுதென்று பேர்

  1. தமிழிற்கு
  2. தமிழுக்கு
  3. தமிழுக்கும்
  4. தமிழுக்கே

விடை : தமிழுக்கும்

2. தமிழ் நமது இளமைக்குக் காரணமான _____________ போன்றது

  1. தேன்
  2. நெய்
  3. நெல்
  4. பால்

விடை : பால்

3. தமிழ்மொழி, புலவர்களுக்கு ______________ போன்றது

  1. அம்பு
  2. கேடயம்
  3. வாள்
  4. வேல்

விடை : வேல்

4. நமது சாேர்வை நீக்குவதில் தமிழ் ___________ போன்றது

  1. சாேறு
  2. தேன்
  3. நீர்
  4. பால்

விடை : தேன்

5. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க _____________ ஆகும்.

  1. அணிகலம்
  2. கவசம்
  3. வாள்
  4. வேல்

விடை : வாள்

6. “சுப்புரத்தினம்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. இராமலிங்க அடிகளார்
  4. திருவள்ளுவர்

விடை : பாரதிதாசன்

7. “புரட்சிக்கவி, பாவேந்தர்” என்று போற்றப்படுபவர்

  1. பாரதிதாசன்
  2. கண்ணதாசன்
  3. அழ.வள்ளியப்பா
  4. கவிமணி

விடை : பாரதிதாசன்

8. பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்

  1. தேசிய விநாயகம் பிள்ளை
  2. சுரதா
  3. வள்ளலார்
  4. பாரதிதாசன்

விடை : பாரதிதாசன்

9. தமிழக்கு அமுதென்று பேர் எனப் பாடியவர் …………..

  1. பாரதியார்
  2. ஓளவையார்
  3. பாரதிதாசன்
  4. வள்ளலார்

விடை : பாரதிதாசன்

10. தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய _____________ போன்றது

  1. அம்பு
  2. வானம்
  3. வாள்
  4. வேல்

விடை : வானம்

11. தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் _____________ போன்றது

  1. தேன்
  2. தோள்
  3. நெல்
  4. பால்

விடை : தோள்

B. பொருத்துக

1. வாழ்வுக்குவாள்
2. உயர்வுக்குஊர்
3. கவிதைக்குவான்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

C. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _________________ தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன

விடை : தாய்மொழியைத்

2. _________________ தமிழை பலவிதங்களில் போற்றுகின்றார்

விடை : பாரதிதாசன்

3. எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ஊர் _________________ 

விடை : தமிழ்

D. சேர்த்து எழுதுக

  1. அமுது + என்று = அமுதென்று
  2. இன்பம் + தமிழ் = இன்பத்தமிழ்
  3. மணம் + என்று =  மணமென்று

E.பிரித்து எழுதுக

  1. நிலவென்று = நிலவு + என்று
  2. புகழ்மிக்க = புகழ் + மிக்க
  3. சுடர்தந்த = சுடர் +தந்த

F. குறுவினா

பாரதிதாசன் தம் கவிதைகளில் பாடுபொருளாகப் பாடியுள்ள கருத்துகளை எழுதுக

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *