தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே
கவிதைப்பேழை: குறுந்தொகை
I. சொல்லும் பொருளும்
- நசை – விருப்பம்
- நல்கல் – வழங்குதல்
- பிடி – பெண்யானை
- வேழம் – ஆண்யானை
- யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
- பொளிக்கும் – உரிக்கும்
- ஆறு – வழி
II. இலக்கணக் குறிப்பு
- களைஇய – சொல்லிசை அளபெடை
- மென்சினை, பெருங்கை – பண்புத்தொகை
- பொளிக்கும் – செய்யுள் என்னும் வினைமுற்று
- பிடிபசி – ஆறாம் வேற்றுமைத் தொகை
- அன்பின – பலவின் பால் அஃறிணை வினைமுற்று
- நல்கலும் நல்குவர் – எச்ச உம்மை
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. உடையார் – உடை + ய் + ஆர்
- உடை – பகுதி
- ய் – சந்தி (உடம்படு மெய்)
- ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
2. பொளிக்கும் = பொளி + க் + க் + உம்
- பொளி – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்கால இடைநிலை
- உம் – வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக
யா மரம் எந்த நிலத்தில் வளரும்?
- குறிஞ்சி
- மருதல்
- பாலை
- நெய்தல்
விடை : பாலை
I. குறு வினா
1. பிடி பசி, களைஇய, பெருங்கை வேழம் – இவ்வடியில் உள்ள இலக்கண குறிப்புகளை கண்டறிக.
- பிடிபசி – ஆறாம் வேற்றுமை தொகை
- களைஇய – சொல்லிசையளபெடை
- பெருங்கை – பண்புத்தொகை
2. குறுந்தொகை என பெயர் வரக் காரணம் யாது.
குறுகிய பாடல்களின் தொகுப்பு குறுந்தொகை. 4 அடி முதல் 8 அடி வரை உள்ள செய்யுட்களைத் தொகுத்துக் குறுந்தொகை என்று பெயர் வைத்தனர்
II. சிறு வினா
“யா” மரத்தின் பட்டையை உரித்தது எது? எதற்காக? விளக்குக.
பெண் யானையின் பசியை போக்க ஆண் யானை “யா” மரத்தின் பட்டையை உரித்துத் தன் அன்பை வெளிப்படுத்தும் விளக்கம்:-மேற்கண்ட காட்சியைக் கண்ணுற்ற தலைவனுக்கு உன் நினைவு வரும். எனவே அவன் உன்னிடம் விரைந்து வருவான். |
கூடுதல் வினாக்கள்…
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. குறுந்தொகை ஓர் ________ நூலாகும்
விடை : அக
2. _____________ ஒன்று குறுந்தொகை ஆகும்.
விடை : எட்டுத்தொகை நூல்களுள்
3. குறுந்தொகை கடவுள் வாழ்த்து நீங்கலாக________ பாடல்களை காெண்டது.
விடை : 401
4. குறுந்தொகை பாடல்கள் _____________, _____________ கொண்டவை.
விடை : நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும்
5. குறுந்தொகை _____________ என அழைக்கப்படுகிறது
விடை : நல்குறுந்தொகை
II. சிறு வினா
1. தமிழ் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்கிறது எவை?
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று மனிதம் பேசிய சங்கக் கால கவிதைகள் தமிழ் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்கிறது.
2. குறுந்தொகை பாடல்கள் இயற்கை காட்சிகள் மூலம் எதைக் காட்டுகின்றன?
குறுந்தொகை பாடல்கள் இயற்கை காட்சிகள் மூலம் அன்பின் வளத்தை படம் பிடித்த காட்டுகின்றன
3. பெருங்கடுங்கோ குறிப்பு வரைக
- இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்
- கலித்தொகையில் பாலைத்திணையைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப் பெற்றார்.
4. பிடி, வேழம் என்பன எதைக் குறிக்கும்?
- பிடி – பெண் யானை
- வேழம் – ஆண் யானை
குறுந்தொகை – பாடல்வரிகள்
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழி அவர் சென்ற ஆறே. (37) |