தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல்
கவிதைப்பேழை: நாச்சியார் திருமொழி
I. சொல்லும் பொருளும்
- தீபம் – விளக்கு
- சதிர் – நடனம்
- தாமம் – மாலை
II. இலக்கணக் குறிப்பு
- கொட்ட – வினையெச்சம்
- முத்துடைத்தாமம் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. தொட்டு – தொடு (தொட்டு) + உ
- தொடு – பகுதி
- தொட்டு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது – விகாரம்
- உ – வினையெச்ச விகுதி
2. கண்டேன் – காண் (கண்) + ட் + ஏன்
- காண் – பகுதி (’கண்’ எனக் குறுகியது விகாரம்)
- ட் – இறந்தகால இடைநிலை
- ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக.
’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?
- கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
- தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
- ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
- ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
விடை : ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
V. குறு வினா
கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
இசைக்கருவிகள் மற்றும் சங்குகள் முழங்க கண்ணன் புகுந்த பந்தலில் முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டு இருந்தது. |
VI. சிறு வினா
ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக
கைகளில் கதிரவன் போன்ற ஒளி யை உடைய விளக்கையும், கலசத்தையும் ஏந்தி வந்து அழைக்க, வடமதுரை மன்னன் கண்ணன் பாதுகை அணிந்து நடந்து வருகிறார்’.இசைக்கருவிகள் சங்குகள் முழங்க, அத்தை மகனும், “மது” என்ற அரக்கனை அழித்தவனுமாகிய கண்ணன், புகுந்த பந்தலில் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டு இருந்தது. அதன் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான். |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ___________ உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது.
விடை : பக்தி இலக்கியம்
2. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ___________
விடை : நாலாயிர திவ்யப் பிரபந்தம்
3. பன்னிரு ஆழ்வார்களின் ___________ மட்டும் ஒரே பெண் ஆழ்வார்.
விடை : ஆண்டாள்
4. ______________ தன் கனவினை தோழியிடம் கூறினாள்.
விடை : ஆண்டாள்
5. ______________ வளர்ப்பு மகள் ஆண்டாள்.
விடை : பெரியாழ்வாரின்
6. நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________
விடை : 140
II. குறு வினா
1. பக்தி இலக்கியத்தின் பணியாக என்னவாக இருந்தது?
பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது.இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது. |
2. “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கக் காரணம் என்ன?
இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த மாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப்பெற்றார்.
3. திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்தியவர்கள் யார்?
திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.
4. “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” என்றால் என்ன?
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும்.
5. ஆண்டாள் -குறிப்பு வரைக
பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர். |
6. நாச்சியார் திருமொழி – குறிப்பு வரைக
நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது .நாச்சியார் திருமொழி மொத்தம் 140 பாடல்களைக் கொண்டது.திருப்பாவை நாச்சியார் திருமொழி ஆகிய ஆண்டாள் பாடியவை. |
7. ஆண்டாள் பாடிய நூல்கள் யாவை?
- திருப்பாவை
- நாச்சியார் திருமொழி
நாச்சியார் திருமொழி – பாடல் வரிகள்
கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள மதுரையார் மன்ன ன் அடிநிலை தொட்டுஎங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். (560)மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். (561) |