Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 5

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 5

தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

இலக்கணம்: வல்லினம் மிகா இடங்கள்

I. சிறு வினா

தற்கால உரைநடையில் வல்லினம் மிகா இடங்களை கூறு.

வல்லினம் மிகா இடங்கள்சான்று
அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.அது செய், இது காண்
எது, எவை வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.எது கண்டாய்? எவை தவறுகள்?
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.குதிரை தாண்டியது, கிளி பேசும்.
மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது.அண்ணனோடு போ, எனது சட்டை.
விளித் தொடர்களில் வல்லினம் மிகாது.தந்தையே பாருங்கள், மகளே தா.
பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.வந்த சிரிப்பு, பார்த்த பையன்
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.நாடு கண்டான், கூடு கட்டு
படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.வரும்படி சொன்னார், பெறும்படி கூறினார்.
வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.வாழ்க தமிழ், வருக தலைவா!
வினைத்தொகையில் வல்லினம் மிகாது.குடிதண்ணீர், வளர்பிறை,
திருவளர்செல்வன்

கற்பவை கற்றபின்…

I. வல்லினம் வருமா?

அ) தோழி __ கூற்று : நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது.
ஆ) பெரிய __தம்பி : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
இ) சிறிய __ பறவை : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஈ) பழகு __தமிழ் : வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
உ) இது __கேள் : இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் மிகாது.
ஊ) எலி __ கடிக்கும் : எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது.
எ) ஓடிய __ குதிரை : பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஏ) தரும்படி __ சொன்னார் : “படி” என முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
ஐ) வாழ்க __ தலைவர் : வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
ஒ) கார் __ காலம் : காலப் பெயர்ச்சொல் எனவே வல்லினம் மிகாது.

II. வல்லினம் இடலாமா?

அ) வாழ்த்து __கள்

  • “கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.

ஆ) எழுத்து__ கள்

  • “கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.

இ) திருநிறை __ செல்வன்

  • “திருநிறை” ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடரில் வல்லினம் இடுதல் கூடாது.

ஈ) திருவளர் __ செல்வி

  • “வளர்செல்வி” வினைத்தொகையில் வல்லினம் இடுதல் கூடாது.

III. எது சரி? எது தவறு? காரணம் கூறுக.

அ) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (சரி)

காரணம்:- “அண்ணாமலை என்னும் பெயரை அடுத்து” வல்லினம் இடுதல் கூடாது. “இருபெயரொட்டுப் பண்புத் தொகையில்” வல்லினம் மிகும்.

எனவே பல்கலைக்கழகம் என்பதில் வல்லினம் இட்டு எழுவதும் சரியே

ஆ) அத்தனைச் சிறிய (தவறு)

அத்தனை சிறிய என்பதுதான் சரி

காரணம்:- “அத்தனை என்ற சொல்லின் பின்” வல்லினம் இடுதல் கூடாது.

இ) ஆத்திச்சூடி (சரி)

காரணம்:- “அத்தி – அகர ஈறு, இகர ஈறு புணரும் போது” வல்லினம் மிகும்.

ஈ) எடுத்துக்காட்டுகள் (சரி)

காரணம்:- “வன்தொடர் குற்றியலுகரத்தில்” பின் வல்லினம் இட்டு எழுத வேண்டும்.

உ) கீழ்பக்கம் (தவறு)

கீழ்ப்பக்கம் என்பது தான் சரி

காரணம்:- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் மிகும்.

ஊ) சான்றோர் பேரவை (சரி)

காரணம்:- “நிலை மொழியில் உயர்திணை வரும்போது” வல்லினம் இடுதல் கூடாது.

ஒ) சென்னைப் பல்கலைக்கழகம் (சரி)

காரணம்:- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் இடுதல் வேண்டும்.

ஓ) தயிர்ச்சோறு (சரி)

காரணம்:- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்“ வல்லினம் இடுதல் வேண்டும்.

IV. வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.

அ) வங்கி கடன் (வல்லினம் மிகும்) – வங்கிக்கடன்

காரணம்:- “இகர ஈற்றில்” வல்லினம் மிகும். (வினையாக வந்தாலும் பெயராக வந்தாலும் வல்லினம் மிகும்)

ஆ) பழங்களை பறிக்காதீர்கள் (வல்லினம் மிகும்) – பழங்களைப் பறிக்காதீர்கள்

காரணம்:- “ஐ” என்னும் “இரணடாம் வேற்றுமை உருபபு வெளிப்படும் தொடர்” அதனால் வல்லினம் மிகும்.

இ) திட்ட குழு (வல்லினம் மிகாது)

காரணம்:- “பெயரச்சத்தில்” வல்லினம் மிகாது.

ஈ) அரசு ஆணை பிறப்பித்தது (வல்லினம் மிகாது)

காரணம்:- ஆணை பிற்ப்பித்தது என்பது “இரண்டாம் வேற்றுமை தொகை” எனவே வல்லினம் மிகாது

உ) மருந்து கடை (வல்லினம் மிகும்) – மருந்துக்கடை

காரணம்:-

  • “மென் தொடர் குற்றியலுகரத்தின் பின்னும்” வல்லினம் மிகும்.
  • “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் மிகும்.
  • குறிப்பு:- “மென்தொடர் குற்றியலுகரம் எச்சப் பொருளில் வந்தால்” வல்லினம் மிகாது. இச்சொல்லில் “மருந்து” பின் வல்லினம் மிகும்

ஊ) வேலையில்லா பட்டதாரி (வல்லினம் மிகும்) – வேலையில்லாப் பட்டதாரி

காரணம்:- “ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சத்தில்” வல்லினம் மிகும்

எ) சிறப்பு பரிசு (வல்லினம் மிகும்) – சிறப்புப்பரிசு

காரணம்:- “வன்தொடர் குற்றியலுகரத்தில்” வல்லினம் மிகும்

மொழியை ஆள்வோம்!

I. பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள்

நாக்குதான் ஐம்புலன்களிலேயே ரொம்ப வீக்கு! அதற்கு நான்கு ஆதார ருசிகள்தாம் தெரியும். எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரை யின் தித்திப்பு, காபியின் கசப்பு, உப்பு. இவை தவிர ஸேவரி என்று சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார ருசிகளின் கலப்புதான். இந்த ருசிகளைத் தொட்டு அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு – நுனி நாக்கு, உப்பு – பரவலாக, குறிப்பாக நுனியில். கசப்பு – உள்நாக்கு. புளிப்பு, ஸேவரி – நாக்கின் வலது – இடது புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை அரும்புகள் உண்டு. அலட்டல் வேண்டாம்.குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன் காட்டுகின்றன! சுவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால் தான் பாதாம் அல்வா, ஐஸ்க்ரீம் போன்றவற்றை ரசிக்க முடியும். மூக்கைப் பிடித்துக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும். அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம்.மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனைகள். கற்பூர வாசனை, பெப்பர்மிண்ட் வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும் அரபுசேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை, அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை. இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணர முடிகிறது. ( ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா)
சொற்கள்தமிழாக்கம்
ரொம்ப வீக்குநிரம்ப சபலம்
ஆதார ருசிகள்அடிப்படைச் சுவைகள்
காபிகுழம்பி, கோப்பி, கொட்டை வடி நீர்
ஸேவரிகாரசுவையுண்டி
டேஸ்ட்சுவை
ருசிகள்சுவைகள்
சராசரிஏறத்தாழ
அலட்டல்அளத்தல்
எக்ஸ்பிரஷன்விளைவுகள்
வாசனைநறுமணம்
பாதாம் அல்வாபாதாம இன்களி
ஐஸ்க்ரீம்பனிக்குழைவு
ரசிக்ககளிக்க
ஜில்லென்றுகுளிர்ச்சி என்று
கற்பூர வாசனைசூடம் நறுமணம்
பெப்பர்மிண்ட் வாசனைபுதினாச்சுவையுள்ள மிட்டாய்கள்
மஸ்க் அரபுசேக் செண்ட்ஆண்மானிலிருந்து எடுக்கப் பெற்ற வாசனைத் திரவியம்
ஈத்தர்தீப்பற்றக் கூடிய பொருள்
பெட்ரோல் வாசனைகலெநல் (கன்னெய்)
அமில வாசனைகாடிப்புளியம்

II. நயம் பாராட்டுக.

பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎரிக்கும்
மங்காத தணற்பி ழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்
நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!

– பாரதிதாசன்

மோனை நயம்

பாடலின் அடி அல்லது சீரில் முதல் எழுத்து ஒரே மாதிரியாக வருவது மோனை

  • தங்கத்தின் – தகளியில்
  • கடலிலே – கதிர்க்கைகள்

எதுகை நயம்

பாடலின் அடி அல்லது சீரில் இரண்டாம் எழுத்து ஒரே மாதிரியாக வருவது எதுகை

  • பொங்கி – சிங்கேம
  • தங்கத்தின் – மங்காத

அணி நயம்

இப்பாடலில் சூரியனைத் தங்கத்தட்டு, மாணிக்கப் குன்று என்று உருவகப்படுத்துவதால் உருவக அணி பயின்று வந்துள்ளது.

சந்த நயம்

நாட்டுப்புறச் சிந்து இராகத்தில் இப்பாடலை பாடலாம்.

சுவை நயம்

இப்பாடலில் பெருமிதச் சுவை பயின்றுள்ளது.

மொழியோடு விளையாடு

I. அகராதியில் காண்க.

1. இமிழ்தல்

  • இனிதாதல், ஒலித்தல், கக்குதல்

2. இசைவு

  • இணக்கம், சம்மதி, பொருத்து, தகுதி, ஏற்றது, உடன்பாடு, ஓட்டம்

3. துவனம்

  • அக்னி, நெருப்பு

4. சபலை

  • இலக்குமி, திப்பிலி, நா, மின்னல், வேசி

5. துகலம்

  • பங்கு

II. ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

(விலங்கு, எழுதி, அகல், கால், அலை)

  1. எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
  2.  எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் கால் ஐ வை.
  3. கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
  4. வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
  5. எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

III. ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.

(குவிந்து – குவித்து; சேர்ந்து – சேர்த்து; பணிந்து – பணித்து; பொருந்து – பொருத்து; மாறு – மாற்று)

1. விரிந்தது – விரித்தது

மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.

2. குவிந்து – குவித்து

காட்டாற்று வெள்ளம் அடித்து வந்த மணல் குவிந்தது ;வாங்கிய மணலை குவித்து வைத்தோம்

3. சேர்ந்து – சேர்த்து

காசு சேர்ந்தது; அதனால் சேர்த்து வைத்தோம்

4. பணிந்து – பணித்து

தலைவர் சொல்லுக்கு தொண்டர்கள் பணிந்து நடந்தனர்; மக்கள் பணியில் சேவை செய்யுமாறு பணித்து இருக்கிறார்

5. பொருந்து – பொருத்து

மேடைப் பேச்சுக்குப் பொருந்துமாறு, உவமைகளை பொருத்திப் பேச வேண்டும்

6. மாறு – மாற்று

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

கைம்மாறு எதிர்பார்க்காமல் செய்யும் வேலை அனைவரையும் உன் பக்கம் மாற்றும்

கலைச்சொல் அறிவோம்

  1. ஏவு ஊர்தி – Launch Vehicle
  2. ஏவுகணை – Missile
  3. கடல்மைல் – Nautical Mile
  4. காணொலிக் கூட்டம் – Video Conference
  5. பதிவிறக்கம் – Download
  6. பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record (PNR)
  7. மின்னணுக் கருவிகள் – Electronic devices

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *