தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர்
கவிதைப்பேழை: உயிர்வகை
I. இலக்கணக்குறிப்பு
- உணந்தோர் – வினையாலணையும் பெயர்
II. பகுபத உறுப்பிலக்கணம்
நெறிப்படுத்தினர் = நெறிப்படுத்து + இன் + அர்
- நெறிப்படுத்து – பகுதி
- இன் – இறந்தகால இடைநிலை
- அர் – பலர் பால் வினைமுற்று விகுதி
III. பலவுள் தெரிக
பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க.
அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்
எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
- இணையம்
- தமிழ்
- கணினி
- ஏவுகணை
விடை : தமிழ்
IV. குறு வினா
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?
மூவறிவு | கரையான், எறும்பு |
நான்கறிவு | நண்டு, தும்பி |
ஐந்தறிவு | பறவை, விலங்கு |
V. சிறு வினா
அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?.
- புல், மரம் ஆகியன ஓரறிவு உயிர்கள் (தொடு உணர்வு)
- சிப்பி, நத்தை ஆகியன ஈரறிவு உயிர்கள் (தொடு உணர்வு+நுகர்தல்)
- கரையான், எறும்பு ஆகிய மூவறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்)
- நண்டு, தும்பி ஆகியன நான்கறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்+காணல்)
- பறவை, விலங்கு ஆகியன ஐந்தறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்+காணல்+கேட்டல்)
- மனிதன் ஆறறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்+காணல்+கேட்டல்+பகுத்தறிவு)
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ____________ தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்
விடை : தொல்காப்பியம்
2. தொல்காப்பியம் ___________ இயல்களை உடையது
விடை : 27
3. புல், மரம் ஆகியன __________
விடை : ஓரறிவு உயிர்கள்
4. தமிழர்களின் அறிவாற்றலுக்கு சிறந்த சான்று ___________
விடை : தொல்காப்பியம்
5. நண்டு, தும்பி ஆகியன ___________
விடை : நான்கறிவு உயிர்கள்
II. குறு வினா
1. அறிவு என்பதை நாம் எவ்வாறு பெறுகிறோம்?
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றயியும் ஐம்புல உணர்வுகளின் வாயிலாக அறிவு என்பதை நாம் பெறுகிறோம்.
2. அறிவுக்குரிய பொறிகள் யாவை?
- கண்
- காது
- வாய்
- மூக்கு
- உடல்
3. உயிரினங்களை எதன் அடிப்படையில் முன்னோர்கள் பகுத்தனர்?
உயிரினங்களைப் புலன்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னோர்கள் பகுத்தனர்.
4. மூவறிவு உயிர்கள் அறியும் ஆற்றல் யாவை? மூவறிவு உயிர்களுக்கு சான்று தருக.
- தொடு உணர்வு
- சுவை
- நுகர்தல்
சான்று : கரையான், எறும்பு
கரையான், எறும்பு ஆகிய மூவறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்)
5. ஆறறிவு உயிர்கள் அறியும் ஆற்றல் யாவை? ஆறறிவு உயிர்க்கு சான்று தருக.
- தொடு உணர்வு
- சுவை
- நுகர்தல்
- காணல்
- கேட்டல்
- பகுத்தறிவு
சான்று : மனிதன்
6. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது
7. தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரம் எதனை விளக்குகிறது?
பொருள் அதிகாரம் தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்குகிறது,
8. தொல்காப்பியத்தின் எழுத்து, சொல் அதிகாரங்கள் எதனை விளக்குகிறது?
எழுத்து, சொல் அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகிறது.
III. சிறு வினா
உயிர்வகை-பாடல் வரிகள்
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனோடு நாவே மூன்றறி வதுவே அவற்றாேடு மூக்கே நான்கறி வதுவே அவற்றாேடு கணம்ண ஐந்தறி வதுவே அவற்றாேடு செவியே ஆறறி வதுவே அவற்றாேடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே(நூ.எ.1516) |