தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்
கவிதைப்பேழை: புறநானூறு
I. சொல்லும் பொருளும்
- யாக்கை – உடம்பு
- புணரியோர் – தந்தவர்
- புன்புலம் – புல்லிய நிலம்
- தாட்கு – முயற்சி, ஆளுமை
- தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறை வில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்
II. இலக்கணக்குறிப்பு
- மூதூர் – பண்புத்தொகை
- நல்லிசை – பண்புத்தொகை
- புன்புலம் – பண்புத்தொகை
- நிறுத்தல் – தொழிற்பெயர்
- அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
- நீரும் நிலமும் – எண்ணும்மை
- உடம்பும் உயிரும் – எண்ணும்மை
- அடுபோர் – வினைத்தொகை.
- கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. நிறுத்தல் – நிறு + த் + தல்
- நிறு – பகுதி
- த் – சந்தி
- அன் – சாரியை
- தல் – தொழில் பெயர் விகுதி
2. காெடுத்தோர் – காெடு +த் + த் + ஓர்
- காெடு – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக.
மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
- மறுமை
- பூவரசு மரம்
- வளம்
- பெரிய
விடை : வளம்
V. சிறு வினா
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்பு தருக.
நீர் இல்லாமல் அமையாத உடல் உணவால் அமையும். உணவே முதன்மையானக உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.
VI. குறு வினா
நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடையவோ, உலகு முழுவதையும் வெல்லவோ, நிலையான புகழைப் பெற விரும்பினால் நான் சொல்வதைக் கேள்!நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமையும். உணவையே முதன்மையாக உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர்.தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனுக்கு சிறிதும் உதவாது. அதனால், நான் கூறியதை விரைவாகக் கடைப்பிடிப்பாயாக!நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர் |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. பண்பாட்டு கருவூலமாக _____________ திகழ்கிறது.
விடை : புறநானூறு
2. புறநானூறு _____________ நூல்களுள் ஒன்று.
விடை : எட்டுத்தொகை
3. யாக்கை என்பதன் பொருள் _____________.
விடை : உடம்பு
4. உணவு என்பது _____________ நீரும் ஆகும்.
விடை : நிலத்துடன்
5. நிலம் குழிந்த இடங்கள் தோறும் _____________ பெருகச் செய்தல் வேண்டும்.
விடை : நீர்நிலையைப்
II. குறு வினா
1. எவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்?
நிலம், நீர், காற்று என்பவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்.
2. எவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும்?
இயற்கை நமக்கு கொடையாக தந்திருக்கும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை உரிய முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
3. நம் முன்னாேர்கள், நீர்நிலைகளை உருவாக்குபவர்கள் எவ்வாறு போற்றினர்?
நீரின் இன்றியமையாமையை உணர்ந்த நம் முன்னாேர்கள், நீர்நிலைகளை உருவாக்குபவர்கள் “உயிரை உருவாக்குபவர்கள்” என்று போற்றினர்.
4. உணவு தந்தவர் எதனை தந்தவர் ஆவர்?
உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
5. யார் வீணாக மடிவர் என குடபுலவியனார் கூறுகிறார்?
நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.
6. பொதுவியல் திணை என்றால் என்ன?
வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
7. பொருண்மொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன?
சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்து உரைப்பது பொருண்மொழிக் காஞ்சித்துறையாகும்..
III. குறு வினா
புறநானூறு குறிப்பு வரைக
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது.பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை ஆகியவை பற்றி கூறுகிறது.பண்டைய மக்களின் புறவாழ்வைக் காட்டுகின்றது.பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது. |
புறநானூறு – பாடல் வரிகள்
வான் உட்கும் வடிநீண் மதில், மல்லல் மூதூர் வய வேந்தே! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலம் காவலர் மொள்வலி முருக்கி, ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றுஅதன் தகுதி கேள்இனி மிகுதி ஆள!நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி காெடுத்தோர் உயிர் காெடுத்தோரே! உண்டி முற்ற உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தோடு நீரே; நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே! அதனால் அடுபோர்ச் செழிய! இகழாது வல்மல; நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம! இவண் தட்டோரே! தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!(புறம் 18: 11 – 30)(பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது)திணை : பொதுவியல் துறை: முதுமொழிக்காஞ்சி |
சிறுபஞ்சமூலம் – பாடல் வரிகள்
குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம்தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான் ஏகும் சொர்க்கத்து இனிது– சிறுபஞ்சமூலம் 64 |