Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 4

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 4

தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர்

துணைப்பாடம்: வளரும் செல்வம்

I. குறு வினா

கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக.

  • சாப்ட்வேர் [software] – மென்பொருள்
  • ப்ரௌசர் [browser] – உலவி
  • க்ராப் [crop] – செதுக்கி
  • கர்சர் [cursor] – ஏவி அல்லது சுட்டி
  • சைபர்ஸ்பேஸ் [cyberspace] – இணையவெளி
  • சர்வர் [server] – வையக விரிவு வலை வழங்கி
  • ஃபோல்டர் [Folder] – உறை
  • லேப்டாப் [Laptop] – மடிக்கணினி

II. சிறு வினா

1. சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?

சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியிலும் மாற்றம் பெற்றுள்ளது.

தமிழ்கிரேக்கம்
எறிதிரைஎறுதிரான்
கலன்கலயுகோய்
நீர்நீரியோஸ்/நீரிய
நாவாய்நாயு
தோணிதோணீஸ்

2. வளரும் செல்வம் – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச்சொற்களைத் தொகுத்து அதற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுக

பிற மொழிச் சொற்கள்தமிழ்ச் சொற்கள்
சாப்ட்வேர்மென்பொருள்
லேப்டாப்மடிக்கணினி
ப்ரெளசர்உலவி
சைபர்ஸ்பேஸ்இணையவெளி
சர்வர்வைகய விரிவு வலை

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சொற்கள் __________________ பேசுபவை.

விடை : வரலாற்றைப்

2. தமிழ்மொழி, பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது __________________.

விடை : மரபு

3. கடல்சார்துறையில் மட்டுமல்லாது பண்டைத் தமிழர்கள் __________________ முன்னேற்றம் பெற்றிருந்தனர்.

விடை : கவிதையியலிலும்

4. தமிழ்ச்சொல்லாகிய __________________ என்பதே ஆங்கிலத்தில் நேவி என ஆகியுள்ளது.

விடை : நாவாய்

5. பா வகைகளுள் ஒன்று __________________.

விடை : வெண்பா

6. __________________ என்பதே “எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்” என ஆகியுள்ளது.

விடை : கடலைச் சார்ந்த பெரிய புலம்

7. “இலியாத் காப்பியம்” _________________சார்ந்தது

விடை : கி.மு. எட்டாம் நூற்றாண்டைச்

II. சிறு வினா

1. ஒவ்வொரு சொல்லிலும் என்ன இருக்கிறது?

ஒவ்வொரு சொல்லிலும் இனத்தின், மொழியின் வரலாறு இருக்கிறது.

2. தமிழ்ச் சொற்கள் வழி எதனை அறியமுடியும்?

தமிழ்ச் சொற்கள் வழி தமிழர் நாகரிகத்தையும் வாழ்வையும் அறியமுடியும்.

3. தமிழ்மொழியின் மரபு யாது.

பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது தமிழ்மொழியின் மரபு.

4. சங்க இலக்கியத்தில் இயக்கப்பட்டதாக கூறப்பட்டுள் கடற்கலன்கள் யாவை?

  • நாவாய்
  • வங்கம்
  • தோணி
  • கலம்

5. எப்படி உலகில் கிரேக்க மொழி  திகழ்ந்து?

உலகில் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் கிரேக்க மொழி திகழ்தது

6. வெண்பாவின் ஓசையானது எது?

வெண்பாவின் ஓசையானது செப்பலோசை ஆகும்

7. கலைச்சொற்களை எவ்வாறு உருவாக்கலாம்?

கலைச்சொற்களை ஒலிபெயர்ப்புச் செய்தோ மொழிபெயர்ப்புச் செய்தோ உருவாக்கலாம்

8. எப்போது நம் தமிழ்மொழி அறிவுக்கான கருவியாக மாறும்?

வளர்ந்து கொண்டிருக்கும் அறிவியல் துறைக் கலைச் சொற்களை உடனுக்குடன் தமிழ்மொழியில் மொழி பெயர்த்து அத்துறைகளை மேலும் வளர்க்க வேண்டும். அப்போது தான் நம் தமிழ்மொழி அறிவுக்கான கருவியாக மாறும்.

9. இளிகியா என அழைக்கப்படுவது எது?

கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா (ελεγεία) என அழைக்கப்படுகின்றன.

10. வெண்பா வடிவப் பாடல்களை பிற மொழிகளில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் சாப்போ என அழைக்கப்படுகின்றன. இது கிரேக்கத்திலிருந்து இலத்தீன் மொழிக்கு வந்து பின் ஆங்கிலத்தில் சேப்பிக் ஸ்டேன்சா என இன்று வழங்கப்படுகிறது

II. குறு வினா

1. 1/320, 1/160 ஆகிய எண்ணிக்கைகளுக்கான தமிழ்ச் சொற்களை எழுதுக

பெயர்எண் அளவு
முந்திரி1/320
அரைக்காணி1/160
அரைக்காணி முந்திரி3/320
காணி1/80
கால் வீசம்1/64
அரைமா1/40
அரை வீசம்1/32
முக்காணி3/80
முக்கால் வீசம்3/64
ஒருமா1/20
மாகாணி (வீசம்)1/16
இருமா1/10
அரைக்கால்1/8
மூன்றுமா3/20
மூன்று வீசம்3/16
நாலுமா1/5

2. நம்மொழி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

நம்மொழி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால் வளர்ந்துவரும் மருத்துவம், பொறியியல், கணினி , விண்வெளி போன்ற பிறதுறைகளின் பதிவுகள் எல்லாம் உடனுக்குடன் நம் மொழிக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.வளர்ந்து கொண்டிருக்கும் அறிவியல் துறைக் கலைச் சொற்களை உடனுக்குடன் தமிழ்மொழியில் மொழி பெயர்த்து அத்துறைகளை மேலும் வளர்க்க வேண்டும்.அப்போது தான் நம் தமிழ்மொழி அறிவுக்கான கருவியாக மாறும்.
Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *