Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 9th Science Books Tamil Medium World of Microbes

Samacheer Kalvi 9th Science Books Tamil Medium World of Microbes

அறிவியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம்

I. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. _____________ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகிறன்றன.

விடை : நுண்ணுயிரிகள்

2. ஹைஃபாக்கள் கிளைகளோடு சேர்ந்து ஒரு கடின வலைப்பின்னலை ஏற்படுத்துவது _____________ ஆகும்.

விடை : மைசீலியம

3. முதலாவது நோய்எதிர் உயிரிப்பொருள் __________________ ஆகும். இது ______________ ஆல் உருவாக்கப்பட்டது.

விடை : பெனிசிலின், அலெக்ஸாண்டர் ஃபிளெம்மிங

4. பேக்கர்ஸ் ஈஸ்ட் என்பது __________ ஆகும்

விடை : சக்காரமிசஸ் செரிவிசியா

5. ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளாத, நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் ___________ மற்றும் ___________ஆகும்.

விடை : நைட்ராேசோமாேனாஸ், நாஸ்டாக்

6. டைபாய்டு காய்ச்சல் _____________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.

விடை : சால்மோனெல்லா டைஃப

7. எச் 1 என்1 வைரஸ் ____________ ஐ உருவாக்குகிறது.

விடை : பன்றிக் காய்ச்சல்

8. டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ____________________ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது.

விடை : ஏடிஸ் ஏஜிப்டி கொசு

9. _____________________ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.

விடை : BCG (பேசில்ஸ் கால்மெட் குய்ரின்)

10. காலரா _____________ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா _____________ ஆல் ஏற்படுகிறது.

விடை : விப்ரியே காலரா, பிளாஸ்மாேடியம்

II. விரிவுபடுத்தி எழுதுக.

1. ORSOral Rehydration Solution
2. WHOWorld Health Organisation
3. HIVHuman Immunodeficiency Virus
4. BCIBacillus Calmette Guerin
5. DPTDiphtheria, Pertussis and Tetanus.

III. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மைக்காலஜி என்பது உயிரியலின் ஒரு பிரிவு. இது ________________ பற்றிய படிப்பாகும்.

  1. பாசிகள்
  2. வைரஸ்
  3. பாக்டீரியா
  4. பூஞ்சை

விடை : பூஞ்சை

2. வினிகரின் முக்கிய உட்கூறு _____________ ஆகும்.

  1. சிட்ரிக் அமிலம்
  2. அசிடிக் அமிலம்
  3. ஆக்ஸாலிக் அமிலம்
  4. ஹெட்ரோகுளோரிக் அமிலம்

விடை : அசிடிக் அமிலம்

3. தயிர் உருவாதலில் ஈடுபட்டுள்ள பாக்டீரியா

  1. லாக்டோ ஃபேசில்லஸ் அசிடோஃபிலஸ்
  2. நைட்டோசோமோனாஸ்
  3. ஃபேசில்லஸ் ராமொஸ்
  4. மேற்கூறியவை எதுவுமில்லை

விடை : லாக்டோ ஃபேசில்லஸ் அசிடோஃபிலஸ்

4. கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது.

  1. காசநோய்
  2. மூளைக்காய்ச்சல்
  3. டைபாய்டு
  4. காலரா

விடை : காசநோய்

5. மலேரியாவின் மிகவும் அபாயகரமான தன்மையுடைய வகை

  1. பிளாஸ்மோடியம் ஓவேல்
  2. பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம்
  3. பிளாஸ்மோடியம் மலேரியா
  4. பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

விடை : பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம்

6. மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை

  1. தும்மல்
  2. இருமல்
  3. கடத்திகள்
  4. துளிர்தொற்று முறை

விடை : கடத்திகள்

7. சிபிலிஸ் நோயை ஏற்படுத்துவது

  1. டிரெப்போனியா பல்லிடம்
  2. லெப்டோஸ்மிரா
  3. பாஸ்டியுரெல்லா
  4. விப்ரியோ காலரே

விடை : டிரெப்போனியா பல்லிடம்

8. கொசுவினால் பரவும் வைரஸ் நோய்

  1. மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சல்
  2. டெங்கு மற்றும் சிக்கன்குனியா
  3. யானைக்கால் நோய் மற்றும் டைஃபஸ்
  4. காலா அசார் மற்றும் தொண்டை அழற்சி

விடை : டெங்கு மற்றும் சிக்கன்குனியா

9. டிப்தீரியா எதைத் தாக்குகிறது?

  1. நுரையீரல்
  2. தொண்டை
  3. இரத்தம்
  4. கல்லீரல்

விடை : தொண்டை

10. கீழ்காணும் நோய்களுள் எவை வைரஸ் நோய்கள் ஆகும்?

  1. யானைக்கால்நோய், எய்ட்ஸ்
  2. சாதாரண சளி, எய்ட்ஸ்
  3. வயிற்றுப்போக்கு, சாதாரண சரி
  4. டைபாய்டு, காசநோய்

விடை : வயிற்றுப்போக்கு, சாதாரண சரி

11. இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.

  1. நிமோனியா
  2. காசநோய்
  3. காலரா
  4. ரேஃபிஸ்

விடை : ரேஃபிஸ்

12. காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு

  1. எலும்பு மஜ்ஜை
  2. குடல்
  3. மண்ணீரல்
  4. நுரையீரல்

விடை : நுரையீரல்

13. மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____________தாக்கும்.

  1. குடலினை
  2. நுரையீரலினை
  3. கல்லீரலினை
  4. நிணநீர் முனைகளை

விடை : நுரையீரலினை

14. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு

  1. கல்லீரல்
  2. நுரையீரல்
  3. சிறுநீரகம்
  4. மூளை

விடை : கல்லீரல்

15. ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்

  1. நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை
  2. தாக்கப்பட்ட உறுப்பு
  3. அ மற்றும் ஆ
  4. ஏதுமில்லை

விடை : அ மற்றும் ஆ

16. குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.

  1. தோல்
  2. வாய் மற்றும் மூக்கு
  3. காதுகள்
  4. கண்

விடை : வாய் மற்றும் மூக்கு

IV. சரியா, தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் வாக்கியத்தை சரி செய்க

1. கிளைகோஜன் மற்றும் எண்ணெய் திவளைகள் ஆகியவை சேமிக்கப்பட்ட பூஞ்சையில் உள்ள உணவாகும்.   ( சரி )

2. வைரஸ்களுக்கும், வீராய்டுக்குமுள்ள வித்தியாசம், வீராய்டுகளில் புரத உறை காணப்படுவதும் வைரஸில் காணப்படாதிருத்தலுமே ஆகும்.   ( தவறு )

விடை : வைரஸ்களுக்கும், வீராய்டுக்குமுள்ள வித்தியாசம், வைரஸில் புரத உறை காணப்படுவதும் வீராய்டில் காணப்படாதிருத்தலுமே ஆகும்

3. ரைசோபியமானது, பருப்பு வகைத் தாரவங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.   ( சரி )

4. லோபோட்ரைக்கஸ் ஒரு துருவ கொத்து கசையிழையுடையது.   ( சரி )

5. தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.   ( தவறு )

விடை : தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதில்லை.

6. 1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.   ( சரி )

7. ஹெப்பாடிடிஸ் பி, ஹெப்பாடிடிஸ் ஏவைக்காட்டிலும் அபாயகரமானது.  ( சரி )

V. பொருத்துக

1. பன்றிக்காய்ச்சல்மனித பாப்பிலோமா வைரஸ்
2. பிறப்புறுப்பு பாலுண்ணிகள்ஹெ.ச். ஐ. வி
3. எய்ட்ஸ்மைக்கோபாக்டீரியம்
4. காசநோய்இன்ஃபுளுயன்சா வைரஸ் எச் 1 என் 1

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ.

VI. அட்டவணையைப் பகுப்பாய்வு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பதில்களைத் தேர்வு செய்து விடுபட்டுள்ள இடங்களைப் பூர்த்தி செய்க.

நோய்நோய்க்காரணிஅறிகுறிகள்
ஹெப்பாடிடிஸ்வைரஸ்கல்லீரலில் வீக்கம்
யானைக்கால் நோய்ஃபிலேரியல் புழுகால்களில் வீக்கம்
மலேரியாபுரோட்டோ சோவாகாய்ச்சல், குளிர்தல் மற்றும் வியர்த்தல்
வயிற்றுப்போக்குரேட்டா வைரஸ்மயக்கம், வாந்தி, நீர்ச்சத்துக் குறைவு

(கால்களில் வீக்கம், வைரஸ், ரேட்டா வைரஸ், காய்ச்சல், குளிந்தல் மற்றும் வியர்த்தல்.)

VII. ஒரு வார்த்தை அல்லது ஒரு வாக்கியத்தில் விடையளி.

1. சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக.

  • காசநாேய்
  • டிப்திரியா
  • இன்புளுயன்சா
  • அம்மை

2. பெனிசிலின் என்ற நோய் எதிர் உயிர்பொருளை முதன் முதலில் கண்டறிந்த அறிவியலறிஞரின் பெயர் என்ன? ஏதேனும் நோய் உயிர்பொருளின் பெயர்களை உன்னால் கூறமுடியுமா?

பெனிசிலின் என்ற நோய் எதிர் உயிர்பொருளை முதன் முதலில் கண்டறிந்தவர் அலெக்ஸாண்டர் பிளம்மிங்

மற்ற எதிர் உயிர்ப்பபாருள்கள் :

ஸ்ட்ரெப்டோமைசின், எரித்ராேமைசின், பேசிட்ராேசின், செபலாேஸ்ப்ராய்ன

3. வாந்தி பேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன? இதைத் தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.

வாந்தி பேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயர்

ரோட்டோ வைரஸ்

இதைத் தடுக்கும் முறை

சுத்தமும் சுகாதாரமும்

4. இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.

  • ஏடிஸ் ஏஜிப்டி – சிக்கன்குனியா, டெங்கு
  • கியூல்க்ஸ் கொசு – பைலேரியா

5. வீட்டு ஈயின் மூலம் பரப்பப்படும் ஏதேனும் ஒரு நோயின் பெயரினைத் தருக. அதனுடைய நோய் பரப்பும் நுண்கிருமியினைக் குறிப்பிடுக.

  • டைபாய்டு – சிக்கன்குனியா, டெங்கு
  • அமீபிக் சீதபேதி – என்டமிபா ஹிஸ்டாலைடிகா

VIII. கீழ்காண்பவனவற்றை வரையறு.

1. நோய்க்கிருமி

நோய்க்கிருமி என்பது நோயை உண்டாக்கம் ஒரு உயிரிப் பொருளாகும்.

எ.கா. பாக்டீரியா, வைரஸ்

2. பாக்டீரியோ ஃபேஜ்கள்

பாக்டீரியா வைரஸ் (பாக்டீரியோ ஃபேஜ்கள்): இவைகள் பாக்டீரியாவினைத் தாக்கி பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்கள் ஆகும். எ.கா: பாக்டீரிய அழிப்பு வைரஸ். (T4)

3. பிளாஸ்மிடு

குரோமோசோமால் ஆன சிறிய வட்டவடிவ டி.என்எ. பிளாஸ்மிட் ஆகும். இது பாக்டிரியாவில் சைட்டோபிளாசத்தில் காணப்படும்.

4. நோய் எதிர்ப்பு தடுப்பூசி

தடப்பூசி மருந்துகள் என்பவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ அல்லது அவற்றின் விளைபொருள்களின் உதவியுடனோ நோயினை தடுக்கவும் அல்லத சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் பொருள்களாகும். இவை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன

5. பிரியான்கள்

பிரியான்கள் என்பவை நோயை உண்டாக்கவல்ல புரதத்துகள்கள் ஆகும். இவற்றில் நியூக்ளிக் அமிலமானது காணப்படவில்லை

IX. சுருக்கமாக விடையளி.

1. விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக.

விரியான்வீரியாய்டு
1. நியூக்ளியோ புரதப் பொருள்ஆர்.என்.ஏ பகுதிப் பொருள்
2. டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ காணப்படும்ஆர்.என்.ஏ மட்டும் காணப்படும்
3. புரத உறையால் சூழப்பட்டிருக்கும்புரத உறை காணப்படாது
4. அளவில் பெரியதுஅளவில் சிறியது
5. அனைத்து உயிர்களையும் பாதிப்பு ஏற்படுத்தும்தாவரங்களில் மட்டும் பாதிப்பு ஏற்படுத்தும்

2. ஒரு பகுதியிலிள்ள குழந்தைகளுள் ஒரு குழந்தை மட்டும் பாதிக்கப்படுள்ளது. ஆனால் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணங்களெல்லாம் இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?

  • பாதிக்கப்பட்ட குழந்தை நோய் தொற்றுள்ள உணவை உண்டிருக்கலாம்.
  • அந்தக் குழந்தை குடித்த நீர் பாதுகாப்பற்றதாக, நோய்கிருமிகள் உள்ளதாக இருந்திருக்கலாம்.

3. மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.

  • மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தி – அனாேபிலஸ் பெண் காெசு.
  • சிற்றினத்தின் பெயர் : பிளாஸ்மாேடியம் பால்சிபாரம்

4. மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்தவகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.

முத்தடுப்பூசி (DPT)

  • தொண்டை அடைப்பான்
  • கக்குவான் இருமல்
  • டெட்டனஸ்

5. சஞ்சய் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறான். அந்தப் பகுதியின் சுகாதார அலுவலர் இந்த நோய் மீண்டும் அவளைப் பாதிக்காது என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமாக இருக்கும்?

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

ஒரு முறை சின்னம்மை பாதிக்கப்பட்டவருக்கு உடலில் அந்த நோய்க்கு எதிர்ப்பு சக்தி தோன்றி விடுகிறது. எனவே அவருக்கு மீண்டும் சின்னம்மை பாதிப்பு எற்படாது. இதனால் சஞ்சய்க்க மீண்டும் சின்னம்மை பாதிப்பு ஏற்படாத என சுகாதார அலவலர் கூறுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *