அறிவியல் : அலகு 17 : விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?
- நாடிச் சுரப்பி
- லாக்ரிமால்
- கீழ்தாடைச் சுரப்பி
- மேலண்ணச் சுரப்பி
விடை : லாக்ரிமால்
2. மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ______________ ஆகும்.
- கார்போஹைட்ரேட்டுகள்
- புரதங்கள்
- காெழுப்பு
- சுக்ராேஸ்
விடை : புரதங்கள்
3. மூச்சுகுழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது ____________ ஆகும்.
- குரல்வளை மூடிகள்
- குரல்வளை முனை
- கடின அண்ணம்
- மிருதுவான அண்ணம்
விடை : குரல்வளை மூடிகள்
4. பித்த நீர் ________________ செரிக்க உதவுகிறது.
- புரதங்கள்
- சர்க்கரை
- கொழுப்புகள்
- கார்போஹைட்ரேட்டுகள்
விடை : கொழுப்புகள்
5. கழிவுநீக்கம் என்பது ________________ ஆகும்.
- காற்றிலிருந்துஆக்ஸிஜனை உள்ளெடுத்து கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடல்.
- உடலிலிருந்து தீமைதரும் கிருமிகளையும் புழுக்களையும் வெளியேற்றல் .
- இரத்தத்தின் வழியாக செரிமானமாக்கப்பட்ட உணவினை உடற்திசுக்களுக்கு கடத்துதல்.
- உடலிலிருந்து உருவான நைட்ரஜன் சார்ந்த கழிவுகளை வெளியேற்றல்.
விடை : உடலிலிருந்து உருவான நைட்ரஜன் சார்ந்த கழிவுகளை வெளியேற்றல்.
6. சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _____________ ஆகும்.
- குடலுறுஞ்சிகள்
- கல்லீரல்
- நெஃப்ரான்
- சிறுநீரகக்குழாய்
விடை : நெஃப்ரான்
7. கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
- யூரியா
- புரதம்
- நீர்
- உப்பு
விடை : புரதம்
8. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ___________ ஆகும்.
- சிறுநீர்க்குழாய்
- சிறுநீர்ப்புறவழி
- விந்துக்குழாய்
- விதைப்பை
விடை : சிறுநீர்ப்புறவழி
9. கீழ்காண்பனற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
அ) அண்டம் ஆ) கருப்பை
இ) விந்தகம் ஈ) அண்டக்குழாய்
விடை : விந்தகம்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. சிறுகுடலாேடு இரைப்பை இணையும் பகுதி …………………………… ஆகும்.
விடை: பைலோரஸ்
2. உமிழ்நீராேடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ……………………………… ஆகும்.
விடை: நாக்கு
3. கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ……………………………………ல் சேமித்து வைக்கப்படுகிறது.
விடை: பித்தப்பை
4. உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ………………………………………….. ஆகும்.
விடை: சிறுகுடல்
5. சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல் மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றாேடு இணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது …………………………………………….. எனப்படுகிறது.
விடை: கழிவுமண்டலம்
6. மனித உடலானது ………………………… வெப்ப நிலையில் இயல்பாக செயல்படுகிறது.
விடை: 37°C
7. சிறுநீர் உருவாதல் செயல்பாட்டில் கிளாமருலார் வடிகட்டியிலிருந்து அதிகப்படியான நீரானது ……………………………………………… மீண்டும் உறிஞ்சப்படுகிறது.
விடை : சேய்மை சுருள் நுண்குழல்
8. பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ……………………………………. ஆகும்.
விடை: கருமுட்டை
9. கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் …………………………………… எனப்படுகிறது.
விடை : கருமுட்டை வெளிப்படுதல்
10. ………………………….. என்பது விந்தகங்களில் உற்பத்தியாகும் ஆண்பால் உயிரணுவாகும்.
விடை: விந்து
11. 20 பற்கள் அடங்கிய பால் பற்கள் ……………………………………….. ஆகும்.
விடை : இரட்டைப் பல்வரிசை
12. 32 பற்கள் காெண்ட அமைப்பு …………………………………. எனப்படுகிறது.
விடை : கலப்புப் பல்வரிசை
III. சரியா தவறா எனக் கூறுக. தவறு எனில் சரியா கூற்றை எழுதுக.
1. இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்கிறது. ( தவறு )
விடை : இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்கிறது.
2. செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன. ( சரி )
3. கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன. ( சரி )
4. இயல்பாக உட்கூறுகளைத் தவிர, சிறுநீரானது உயிர் எதிரியை விட (ஆண்டிபயோடிக்), வைட்டமின்களை அதிகம் வெளியேற்றுகிறது. ( சரி )
5. அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும். ( தவறு )
விடை : அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருமுட்டை வெளிப்படுதல் எனப்படும்.
IV. கீழ்காண்பவற்றின் பகுதிகளைக் கண்டறிக:
1. இது உணவினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது.
உணவுக்குழல்.
2. சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது.
குடல் உறிஞ்சிகள்.
3. பெளமானின் கிண்ணத்தினுள் உள்ள நுண்குழாய்களின் கொத்து.
கிளாமரூலஸ்.
4. சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய்.
சிறுநீர்க் குழாய்.
5. விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பு.
விரைப்பை
V. மிகவும் சுருக்கமாக விடையளி
1. கீழ்காணும் செரிமான செயல்முறையின் ஐந்து படிநிலைகளை சரியாக வரிசைப்படுத்துக. (செரிமானம், தன்மயமாதல், உட்கொள்ளுதல், வெளியேற்றுதல், உறிஞ்சுதல்)
- உட்காெள்ளுதல்
- செரிமானம்
- உறிஞ்சுதல்
- தன்மயமாதல்
- வெளியேற்றுதல்.
2. இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் அடங்கிய இரப்பை நீரைச் சுரக்கிறது. இதனுடைய பணி என் ?
இரப்பையிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்கிருமிகளைக் காெல்கிறது. அத்துடன் உணவை அமிலத்தன்மை உள்ளதாக மாற்றுகிறது.
3. செரிக்கப்பட்ட உணைவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
சிறுகுடலின் அடிப்குதியாக இருக்கும் இப்பகுதி பெருங்குடலில் திறக்கிறது. இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும். இவைகளில் மிகச்சிறிய விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் 1 மி.மீ நீளமுடைய குடல் உறிஞ்சுகள் என அழைக்கப்படும். இவற்றில் தான் உணவானது உட்கிரகிக்கப்படுகிறது.
4. நமக்கு ஏன் வியர்க்கிறது?
நம் உடலில் வியர்த்தல் என்பது முக்கியமான பணியாகும். எப்பொழுது வெளிப்புற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கின்றதோ அப்பொழுது நமது உடலின் வெப்பநிலையை சீராக்க செய்வதற்காக வியர்க்கின்றது.
5. மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
- சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள பாய்மங்கள் மற்றும் மின் பகுதிகள் சமநிலையில் இருக்க உதவுகின்றன.
- இவை இரத்தத்தின் அமில – காரத்தன்மையை ஒழுங்குப்படுத்துகின்றன.
- இரத்தத்திலும் திசுக்களிலும் ஏற்படும் சவ்வூடுபரவல் அழுத்தத்தை நிலை நிறுத்துகின்றன.
- பிளாஸ்மாவின் முக்கியக் கூறுகளான குளுக்காேஸ், அமினாே அமிலங்களைத் தக்க வைத்துக் காெள்ள உதவுகின்றன.
6. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதலை எவ்வாறு கட்டுப்படுத்த முடிகிறது?
நமது வயிற்றுப்பகுதி தசையை உள்புறமாக அழுக்கி பிடித்துக் கொண்டால் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த முடியும்.
7. ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
- ஆண் – ஆண்ட்ரோஜன் (டெஸ்டோஸ்டீரான்)
- பெண் – ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டீரான்
VI. சுருக்கமாக விடையளி
1. கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்க
அ. செரித்தல்
உணவின் கூட்டுப் பொருள்கள் எளிய பொருள்களாக மாற்றப்படுதல்
ஆ. சவ்வூடு பரவலை சீராக்கல்
இரத்தம், திசக்களில் உப்பின் செறிவை சமநிலைப்படுத்தல்
இ. பால்மமாக்குதல்
பித்த உப்புகள், பால்மாக்கல் (பெரிய கொழுப்பு திவளைகளாக மாற்றப்பட்டு செரிக்க வைக்கப்படுகிறது) என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
ஈ. கருமுட்டை வெளிப்படுதல்
கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படுதல் என்று அழைக்கப்படுகிறது.
2. முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
பற்களின் வகைகள் | பற்களின் எண்ணிக்கை | பணிகள் |
வெட்டுப்பற்கள் | 8 | வெட்டவும் கடிக்கவும் |
காேரைப் பற்கள் | 4 | கிழிக்கவும் துளைக்கவும் |
முன் கடைவாய்ப் பற்கள் | 8 | நசுக்கவும் அரைக்கவும் |
பின் கடைவாய்ப் பற்கள் | 12 | நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும் |
3. ஸ்டார்ச், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்தின் இறுதி விளைபொருட்கள் யாவை?
ஸ்டார்ச் – குளுக்கோஸ்
புரதங்கள் – அமினோ அமிலங்கள்
காெழுப்பு – காெழுப்பு, அமிலங்கள், கிளிசரால்
4. நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு மில்லியனை விட அதிகமான நெஃப்ரான்கள் அமைந்துள்ளன. இந்த நெஃப்ரான்கள் அல்லது சிறுநீரைக் கொண்டு வரும் நுண்குழல்கள் சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும். ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் காணப்படுகின்றன. இச்சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் காணப்படும பெளமானின் கிண்ணத்தில் இரத்த நுண் நாளங்களின் தொகுப்பாகிய கிளாமருலஸ் என்ற பகுதி காணப்படுகிறது. இரத்தமானது கிளாமரூலஸில் உள்ள நுண்நாளத் தொகுப்பில் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று வெளிச்செல் நுண்தமனி வழியாக வெளியேறுகிறது.
5. கீழ்காணும் சொற்கூறுகளை வேறுபடத்துக
அ. கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
உடலில் ஏற்படும் நைட்ரஜன் அடங்கிய கழிவுகளை கழிவு மண்டலம் மூலம் அகற்றுவது கழிவு நீக்கம் எனப்படுகிறது.
ஹார்மாேன்கள், என்ஸைம்கள், எண்ணெய், வியர்வை போன்றவை உடலின் பல்வேறு சுரப்பிகளால் சுரக்கப்பட்டு குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வேலையைச் செய்கின்றன. இதற்கு சுரத்தல் எனப் பெயர்.
ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
செரிக்கப்பட்ட உணவு சிறுகுடலில் உள்ள குடலுறிஞ்சிகளால் ஈர்க்கப்படுவது உறிஞ்சுதல் எனப்படுகிறது.
உறிஞ்சப்பட்ட உணவுப் பொருள்கள் இரத்தத்தின் மூலம் செல்களைச் சென்றடைவதற்கு தன்மயமாதல் எனப் பெயர்
இ) விந்து மற்றும் அண்டம்:
விந்து என்பது விந்தங்களில் உற்பத்தியாகும் ஆண் பால் உயிரணுவாகும். இது நகரக் கூடியது.
அண்டம் என்பது கருமுட்டையாகும். இது பெண் பாலின உயிரணு.
ஈ) உட்காெள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்:
வாயில் வழியே உணவு உண்பது உட்காெள்ளல் எனப்படுகிறது.
உடலில் தாேன்றும் கழிவுகள் மலக்குடலைக் கடந்து குதத்தின் வழியே வெளியேற்றப்படுவது வெளியேற்றுதல் எனப்படுகிறது.
உ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்பு பல்வரிசை:
மனிதர்களின் ஆயுட் காலத்தில் இரண்டு விதமான பல்வரிசைகள் தாேன்றுகின்றன.
குழந்தைப் பருவத்தில் உண்டாகும் 20 பற்கள் அடங்கிய பால்பற்கள் இரட்டைப் பல்வரிசை அதன் பின் நிலையாக அமையும் 32 பல் காெண்ட அமைப்பு கலப்புப் பல்வரிசை எனப்படுகிறது.
இதில் நான்கு வகைப்பற்கள் உள்ளன. 1) வெட்டுப்பற்கள் 2)காேரைப் பற்கள் 3) முன் கடவாய்ப் பற்கள் 4) பின் கடவாய்ப் பற்கள்
ஊ) வெட்டுப்பற்கள் மற்றும் காேரைப்பற்கள்:
வெட்டுப்பற்கள் மாெத்தம் 8 உள்ளன. இவை உணவை வெட்டுவதற்கும் கடிப்பதற்கும் பயன்படுகின்றன.
காேரைப் பற்கள் நான்கு உள்ளன. இவை உணவைக் கிழிக்கப் பயன்படுகின்றன.
6. பெண் இனப்பெருக்க மண்டலத்திலுள்ள அண்டகஙகள் மற்றும் கரப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?
அண்டகங்கள் பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். இதிலிருந்து பெண் பாலின உயிரணு (கருமுட்டை அல்லது அண்டம்) மற்றும் பெண் பாலின ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான்) உற்பத்தி செய்யப்படுகின்றன.
கருவின் வளர்ச்சியானது கர்ப்பப்பையின் உள்ளே நடைபெறுகிறது.
7. பாெருத்துக
உறுப்பு | நீக்குதல் |
1.தோல் | சிறுநீர் |
2. நுரையீரல்கள் | வியர்வை |
3. பெருங்குடல் | கார்பன் டை ஆக்ஸைடு |
4. சிறுநீரகங்கள் | செரிக்காத உணவு |
விடை: 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ
8. கீழ்காண்பனவற்றிக்கான காரணங்கள் யாவை?
அ. மனித இனத்தில் ஆண்களின் விதைப்பையானது உடலுக்கு வெளியே உள்ளது.
விரைப்பை வெப்ப சீராக்கியாக செயலாற்றும் உறுப்பாகும். விந்துக்களை உருவாக்குவதற்குத் தேவையான உகந்த வெப்பநிலையை விட 1 முதல் 3oC குறைவான வெப்பநிலையில் விந்தணுவின் வளர்ச்சி ஏற்படுகிறது.
ஆ. இரைப்பையின் சுவரானது அதனுடைய நொதியால் செரிக்கப்பட மாட்டாது.
இந்த இரப்பை நீர் நிறமற்றதாவும், அதிக அமிலத்தன்மையுடைய ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும், நொதிகளான ரென்னின் மற்றும் பெப்சின் ஆகியவற்றை கொண்டதாகவும் உள்ளது.
9. கீழ்காணும் அட்டவணையப் பூர்த்தி செய்க
நொதிகள் | மூலக்கூறு | செரிமான விளைபொருள்கள் |
டிரிப்ஸீன் | புரதங்கள் மற்றும் பெப்டோன்கள் | அமினோ அமிலம் |
மால்டேஸ் | கார்போ ஹைட்ரேட் | குளுக்கோஸ் |
சுக்ரேஸ் | சுக்ரோஸ் | குளுக்கோஸ் மற்றும் ப்ரெக்டோஸ் |
லாக்டேஸ் | லாக்டோஸ் | குளுக்கோஸ் மற்றும் காலக்டோஸ் |
லிப்பேஸ் | கொழுப்புகள் | கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசாரல் |
VII. கீழ் காெடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பாெருத்துக.
1 | 2 | 3 | 4 | 5 |
கருப்பை நாளம் | கருக்குழல் | கர்ப்பப்பை | செர்விக்ஸ் | யோனி |
கருக்குழல் | செர்விக்ஸ் | யோனி | அண்டகம் | விந்துக்குழல் |
அண்டகம் | கருக்குழல் | கர்ப்பப்பை | யோனி | செர்விக்ஸ் |
கருப்பை நாளம் | அண்டகம் | செர்விக்ஸ் | கர்ப்பப்பை | யோனி |
VIII. கூற்று மற்றும் காரணம்
கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு வழிகாட்டி கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ளள நான்கு வாக்கியஙகளில் ஒன்றை சரியான பதிலாகக் குறிககவும்.
- கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
- கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை
- கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.
- கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1. கூற்று : சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது.
காரணம் : யூரியா ஒரு நச்சுத் தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புககு வழிவகுக்கும்.
விடை : கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
2. கூற்று : இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன.
காரணம் : பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன
விடை : கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.