Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Environmental Science

Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Environmental Science

அறிவியல் : அலகு 24 : சூழ்நிலை அறிவியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் …………………………………….. என அழைக்கப்படுகின்றன.

  1. உயிரியல் காரணங்கள்
  2. உயிரற்ற காரணிகள்
  3. உயிர்க் காரணிகள்
  4. இயற் காரணிகள்

விடை :  உயிரற்ற காரணிகள்

2. வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை ……………………………………… எனப்படும்.

  1. ஆவியாதல்
  2. குளிர்வித்தல்
  3. பதங்கமாதல்
  4. உட்செலுத்துதல்

விடை :  பதங்கமாதல்

3. தனித்து வாழும் பாக்டீரியாவான சூடோமோனாஸ் பாக்டீரியாக்கள் நைட்ரஜன் சுழற்சியில் ………………………………………..க்கு காரணமாக உள்ளன.

  1. அமோனியாவாதல்
  2. நிலைப்படுத்துதல்
  3. நைட்ரேட்டாதல்
  4. நைட்ரேட் வெளியேற்றம்

விடை :  நைட்ரேட் வெளியேற்றம்

4. வளிமண்டல கார்பன் டைஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ……………………………………… எனப்படும்.

  1. ஒளிச்சேர்க்கை
  2. உட்கிரகித்தல்
  3. சுவாசித்தல்
  4. சிதைத்தல்

விடை :  ஒளிச்சேர்க்கை

5. ……………………………….. ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.

  1. கார்பன் மோனாக்சைடு
  2. கந்தக டைஆக்ஸைடு
  3. நைட்ரஜன் டைஆக்ஸைடு
  4. கரியமில வாயு

விடை :  கரியமில வாயு

6. கீழ்க்கண்டவற்றுள் எது நீர்த்தாவரங்களின் தகவமைப்புகளில் இல்லாதது?

  1. நன்றாக வளர்ச்சி அடையாத வேர்கள்
  2. குறுக்கப்பட்ட உடலம்
  3. நீரை சேமிக்கும் பாரன்கைமா திசுக்கள்
  4. மென்மையாக பிளவுற்ற நீரில் மூழ்கிய இலைகள்

விடை :  நீரை சேமிக்கும் பாரன்கைமா திசுக்கள்

7. சில வறண்டநிலத் தாவரங்களில் இலைகளானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் ………………………………….

  1. நீராவிப் போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு
  2. நீரைச் சேமிப்பதற்கு
  3. நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு
  4. இவையனைத்தும்

விடை :  இவையனைத்தும்

8. மண்புழுவின் தகவமைப்புகளில் தவறான கூற்றைக் கண்டறிக.

  1. உணர் நீட்சி அல்லது துடுப்புக்களற்ற நீண்ட உடலமைப்பைக் கொண்டது.
  2. மண்புழுவின் ஒவ்வொரு கண்டத்திலும் நீட்சிகள் (சீட்டாக்கள்) காணப்படும்.
  3. குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.
  4. சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள பகல் நேரத்தில் மண்ணில் பதுங்கிக் கொள்ளும்.

விடை :  குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.

9. கீழ்க்கண்டவற்றுள் எது நீரைப் பாதுகாக்கும் உத்தியாகும்?

  1. நீர் மறுசுழற்சி
  2. ஆழ்துளைக்கிணறுகளை அதிகப்படுத்துதல்
  3. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை பெருமளவில் பயன்படுத்துதல்.
  4. தாவரங்களுக்கு நீர் ஊற்றும்போது குழாய்களைப் பயன்படுத்துதல்.

விடை :  நீர் மறுசுழற்சி

10. கழிவு நீரில் பகுதிப்பொருள்களாகக் காணப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், தொங்கல்கள், திண்மங்கள், கன உலோகங்கள் ஆகியவை நீர் சுத்திகரிப்பின் …………………………………………. நிலையில் நீக்கப்­படுகின்றன.

  1. முதல்
  2. இரண்டாம்
  3. மூன்றாம்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை :  மூன்றாம்

II. பொருத்துக

நுண்ணுயிரிகள்அதன் பங்கு
1. நைட்ரஜன் நிலைப்படுத்துதல்நைட்ரசோமோனாஸ்
2. அமோனியாவாதல்அசோடோபாக்டர்
3. நைட்ரேட்டாதல்சூடோமோனாஸ் சிற்றினங்கள்
4. நைட்ரேட் வெளியேற்றம்அழுகவைக்கும் பாக்டீரியாக்கள்

விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

III. சரியா? தவறா?

1. நைட்ரஜன் ஒரு பசுமை வாயு ஆகும். ( தவறு )

விடை : கார்பன்-டை-ஆக்ஸைடு ஒரு பசுமை வாயு ஆகும்.

2. நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு இடைநிலைத்தாவரங்களில் காணப்படுகின்றது. ( தவறு )

விடை : நன்றாக வளர்ச்சியடைந்த வேர்த் தகவமைப்பு இடைநிலைத்தாவரங்களில் காணப்படுகின்றது.

3. பாலூட்டிகளில் வௌவால்கள் மட்டுமே பறக்கும். ( சரி )

4. மண்புழுக்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துக்கின்றன. ( தவறு )

விடை : வெளவால்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துக்கின்றன.

5. கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும். ( தவறு )

விடை : கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது வறண்ட சூழ்நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.


IV. சுருக்கமாக விடையளி.

1. உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?

உயிர்கள் காணப்படக்கூடிய பூமியின் ஒரு பகுதி உயிர்க்கோளம் எனப்படும்.

உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்து மூலங்களையும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

i) உயிருள்ள காரணிகள்

தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிருள்ள உயிரினங்களை உள்ளடக்கியது.

ii) உயிரற்ற காரணிகள்

வெப்பம், அழுத்தம், நீர், மண் (நிலம்), காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத் திறனையும் பாதிக்கின்றன.

2. உன்னைப் பொறுத்த வரையில் எச்செயல் நீர்ச்சுழற்சியில் மனிதச் செயல்பாடுகளால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது?

நகரமயமாதல், நெகிழியால் உருவாக்கப்பட்ட தேவையற்ற கழிவுப்பொருள்களை நிலத்தின் மீதும், நீர் நிலைகளின் மீதும் வீசி எறிதல், நீர் நிலைகளை மாசுபடுத்துதல் மற்றும் காடுகளை அழித்தல் ஆகியன நீர் சுழற்சியைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கும் மனிதனின் முக்கியச் செயல்பாடுகளாகும்.

3. நைட்ரஜன் சுழற்சியை மனிதனின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன?

புதை படிவ எரிபொருள்களை (இயற்கை வாயு / பெட்ரோல் டீசல்) எரிப்பதன் மூலமும், நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அதிகரிக்கின்றது. விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நைட்ரஜனானது ஆறுகளுக்குச் சென்று அங்கிருந்து கடல் சூழ்நிலையை சென்றடை கிறது. இவ்வாறு கடத்தப்படுவதன் மூலம் உணவு வலையின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது; வாழிடங்கள் அழிகின்றன; மேலும் உயிரினங்களின் பல்வகைத் தன்மையையும் மாற்றியமைக்கப்படுகின்றன.

4. தகவமைப்பு என்றால் என்ன?

ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம்.

5. நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?

  1. தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்.
  2. நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்.
  3. நீரின் அளவு தொடர்ந்து மாறிக்கொண்டிருத்தல்.
  4. நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்.

6. கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்டறி. தங்கள் வாழிடங்களில் எவ்வாறு அவை தாமாகவே தகவமைத்துக் கொள்கின்றன?

வேலம்பாசி

நீரினுள் மூழ்கிய இலைகள் குறுகியதாகவோ அல்லது நுண்ணியதாக பிளவுற்றோ காணப்படும்.

எ.கா. வேலம்பாசி

7. நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?

  1. நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.
  2. போதுமான அளவு பயன்படுத்தக்கூடிய நீரானது நமக்குக் கிடைப்பதை உறுதிப்படுகிறது.
  3. நீர் மாசுபடுதலைக் குறைக்க உதவுகின்றது.
  4. ஆற்றல் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு இது உதவி புரிகின்றது

8. உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக்கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.

  • மழை நீர் சேகரிப்பு.
  • மேம்படுத்தப்பட்ட பாசன நுட்பங்கள்.
  • பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் நீர் சேகரித்தல் அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
  • வீடுகளில் நீர் பயன்பாட்டைக் குறைத்தல்.
  • நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • பண்ணைக் குட்டைகளை உருவாக்குதல்.
  • நீரினை மறுசுழற்சி செய்தல்.

9. சாம்பல் நீர் என்றால் என்ன?

வீடுகள், வணிக நிவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், துணி துவைப்பதால் வெளியேறும் நீர், குளியலறைகள், வாறல் இரைப்பான்கள் மற்றும் ஆகியவை சாம்பல் நீர் எனப்படுகின்றன

10. மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?

மறுசுழற்சி நீரானது கீழ்கண்ட வற்றில் பயன்படுகிறது.

  • விவசாயம்.
  • இயற்கை அழகுமிக்க நிலங்களை உருவாக்குதல்
  • பொதுப்பூங்காக்கள்
  • குழிப்பந்தாட்ட விளையாட்டுத்திடல்.
  • எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆற்றல் நிலையங்களில் உள்ள குளிர்விப்பான்கள்.
  • கழிவறைகளைச் சுத்தம் செய்தல்.
  • தூசிகளைக் கட்டுப்படுத்தல்.
  • கட்டுமானச் செயல்கள்.

11. ஐ.யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?

ஐ.யூ.சி.என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம்குன்றாமல் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றி வருகிறது.

ஐ.யூ.சி.என். நோக்கம்

“இயற்கையை மதிக்கவும் பாதுகாக்கவும் கூடிய நேர்மையான உலகம்” என்பதே இதன் நோக்கமாகும்.

V. உயர் சிந்தனை வினாக்கள்

1. வேர்கள் அதிக ஆழமாக வளர்ந்து நீர் உள்ள பூமியின் அடுக்குகள் வரை செல்கின்றன. இவ்வகையான தகவமைப்புகளை எவ்வகைத்தாவரங்கள் மேற்கொள்கின்றன? ஏன்?

வறண்ட நிலத்தாவரங்கள்

இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களை கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்களை சென்றடைகின்றன.

எ.கா. :- எருக்கலை

காரணம்

சுற்றுப்புத்திலிருந்து தேவையான அளவு நீரை உறுஞ்சிக் கொள்ளல்

2. நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் காணப்படுவது மண்புழுவின் தகவமைப்பாகக் கருதப்படுகின்றது. ஏன்?

மண்புழுக்கள் கண்டமாகப் பிரிக்கப்ட்ட நீளமான, உருளை போன்ற உடலமைப்புடன் காணப்படுகின்றன. இவ்வமைப்பு இவை மண்ணின் அடியிலுள்ள குறுகிய வளைகளுக்குள் எளிதாக ஊடுருவிச் செல்ல உதவுகின்றன.

3. எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது, வௌவால்களின் தகவமைப்பாக உள்ளது. இந்த வாக்கியம் நியாயமானதா?

வெளவால்கள் பார்வையற்ற விலங்குகள் ஆனாலும் இரவு நேரங்களில் பறந்து தங்களைச் சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பை பயன்படுத்துகின்றன. இவ்வமைப்புக்கு எதிரொலித்து கண்டறிதல் என்று பெயர் இந்த அலைகள், அவற்றின் இரையின் மீது பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் காதினை வந்தடைகின்றன. இந்த எதிரொலியானது இரையின் இடத்தினை கண்டறிய பயன்படுகிறது.

4. பண்ணைக்குட்டை என்ற அணுகுமுறையானது ஒரு நீர்ப் பாதுகாப்பு முறையாகும். எல்லா விவசாயிகளாலும் ஏன் இந்த முறையை அவர்களின் வயல்களில் கட்டமைத்து பயன்படுத்த முடியவில்லை?

தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் மற்றும் குட்டைகளுக்குப் பாய்ந்தோடும் நீரின் அளவை இவை குறைக்கின்றன. விவசாயிகளின் நிலங்களை அதிகளவு ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *