Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 5

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 5

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

இலக்கணம்: தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____.

  1. வேற்றுமைத்தொகை
  2. உம்மைத்தொகை
  3. உவமைத்தொகை
  4. அன்மொழித்தொகை

விடை : வேற்றுமைத்தொகை

2. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை.

  1. வினை
  2. பண்பு
  3. அன்மொழி
  4. உம்மை

விடை : பண்பு

3. ‘கண்ணா வா!’- என்பது _____த் தொடர்.

  1. எழுவாய்
  2. விளி
  3. வினைமுற்று
  4. வேற்றுமை

விடை : விளி

II. பொருத்துக.

1. பெயரெச்சத் தொடர்அ. கார்குழலி படித்தாள்.
2. வினையெச்சத் தொடர்ஆ. புலவரே வருக.
3. வினைமுற்றுத் தொடர்இ. பாடி முடித்தான்.
4. எழுவாய்த் தொடர்ஈ. எழுதிய பாடல்.
5. விளித் தொடர்உ. வென்றான் சோழன்.

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

III. சிறுவினா

1. தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை

  • வேற்றுமைத் தொகை
  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • உவமைத்தொகை
  • உம்மைத்தொகை
  • அன்மொழித்தொகை

2. இரவுபகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.

‘இரவு பகல்’ இத்தொடர், ‘இரவும் பகலும்’ என விரிந்து பொருள் தருகின்றது.இதில் சொல்லின் இடையிலும், இறுதியிலும் ‘உம்’  என்னும் இடைச்சொல் நின்று பொருள் தருகிறது.இவ்வாறு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் ‘உம்’ இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத் தொகை என்பர்.

3. அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித் தொகை எனப்படும்.சான்று : பொற்கொடி வந்தாள்இத்தொடரில் “பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள்” என்னும் பொருள் தருகிறது. இதில் “ஆல்” என்னும் வேற்றுமை உருபும் “ஆகிய” என்னும் அதன் பயனும் மறைந்து வந்துள்ளது.“வந்தாள்” என்னும் சொல்லால் பெண் என்பதனையும் குறிப்பதால், இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆகும்.

கூடுதல் வினாக்கள்

1. வேற்றுமைத்தொகை என்றால் என்ன?

இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.

2. வினைத்தொகை என்பது என்ன?

காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர்.

எ.கா. ஆடுகொடி, வளர்தமிழ்

3. வினைத்தொகை பற்றிய நன்னூல் விதி யாது?

காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – ( நன்னூல் 364)

4. பண்புத்தொகை என்றால் என்ன?

பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

எ.கா. வெண்ணிலவு, கருங்குவளை

5. இருபெயரொட்டுப்  பண்புத்தொகை என்றால் என்ன?

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைநது வருவதை இருபெயரொட்டுப்  பண்புத்தொகை என்பர்.

எ.கா. பனைமரம்

6. உவமைத்தொகை என்றால் என்ன?

உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

எ.கா. மலர்விழி

7. உம்மைத்தொகை என்றால் என்ன?

சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பர்.

எ.கா.இரவுபகல், தாய்தந்தை

8. அன்மொழித்தொகை என்றால் என்ன?

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாதை வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்

எ.கா.பொற்றொடி வந்தாள்

9. எண்ணும்மை என்றால் என்ன?

ஒன்றுக்கு மேற்பட்ட சாெற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது
எண்ணும்மை எனப்படும்.

(எ.கா.) இரவும் பகலும், பசுவும் கன்றும்

10. தொகாநிலைத் தொடர் என்பது என்ன?

ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அதனைத் தொகாநிலைத் தொடர் என்பர்.

11. தொகாநிலைத் தொடர் வகைகள் யாவை?

  1. எழுவாய்த் தொடர்
  2. விளித்தொடர்
  3. வினைமுற்றுத் தொடர்
  4. பெயரெச்சத் தொடர்
  5. வினையெச்சத் தொடர்
  6. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
  7. இடைச்சொல் தொடர்
  8. உரிச்சொல் தொடர்
  9. அடுக்குத்தொடர்

என ஒன்பது வகைப்படும்.

12. உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை என்பது என்ன?

ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை எனப்படும்

சான்று : பணப்பை

மொழியை ஆள்வோம்!

I. பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.

( கொண்டு, இருந்து, உடைய, காட்டிலும், ஆக, நின்று, உடன், விட, பொருட்டு )

1. இடி ______________ மழை வந்தது.

விடை : உடன்

2. மலர்விழி தேர்வின் ______________ ஆயத்தமானாள்.

விடை : பொருட்டு

3. அருவி மலையில் ______________ வீழ்ந்தது.

விடை : இருந்து

4. தமிழைக் ______________ சுவையான மொழியுண்டோ!

விடை : காட்டிலும்

5. யாழ், தமிழர் ______________ இசைக்கருவிகளுள் ஒன்று

விடை : உடைய

II. அகர வரிசைப்படுத்துக.

படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், கசுரம், மகுடி

விடை : உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி

III. இணைச்சொற்களை வகைப்படுத்துக.

உற்றார்உறவினர், விருப்புவெறுப்பு, காலைமாலை, கன்னங்கரேல், ஆடல்பாடல், வாடிவதங்கி, பட்டிதொட்டி, உள்ளும்புறமும், மேடுபள்ளம், நட்டநடுவில்.

நேரிணை :-

  • உற்றார்உறவினர்
  • வாடிவதங்கி
  • நட்டநடுவில்
  • பட்டிதொட்டி

எதிரிணை :-

  • விருப்புவெறுப்பு
  • காலைமாலை
  • உள்ளும்புறமும்
  • மேடுபள்ளம்
  • ஆடல்பாடல்

செறியிணை :-

  • கன்னங்கரேல்

IV. இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

( மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )

1. சான்றோர் எனப்படுபவர் ______________ சிறந்தவர் ஆவர்.

விடை : கல்விகேள்வி

2. ஆற்று வெள்ளம் ______________ பாராமல் ஓடியது.

விடை : மேடுபள்ளம்

3. இசைக்கலைஞர்கள் ______________ வேண்டியவர்கள்.

விடை : போற்றிப்புகழப்பட

4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ______________ இல்லை

விடை : ஈடுஇணை

5. திருவிழாவில் யானை ______________ வந்தது.

விடை : ஆடிஅசைந்து

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்:-

1. முதற்கருவி எனப் பெயர் பெற்றது. 

  • மத்தளம்

2. யாழிலிருந்து உருவான பிற்காலக் கருவி _______________

  • வீணை

7. இயற்கைக் கருவி _______________

  • சங்கு

12. விலங்கின் உறுப்பைப் பெயராகக் கொண்ட கருவி _______________

  • கொம்பு

வலமிருந்து இடம்:-

4. வட்டமான மணி போன்ற கருவி _______________

  • சேகண்டி

8. ஐந்து வாய்களைக் கொண்ட கருவி _______________

  • குடமுழா

9. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் _______________

  • பாணர்

மேலிருந்து கீழ்:-

1. 19 நரம்புகளைக் கொண்ட _______________

  • மகரயாழ்

3. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை _______________ கருவி

  • கஞ்ச

5. சிறியவகை உடுக்கை. 

  • குடுகுடுப்பை

6. பறை ஒரு _______________ கருவி

  • தோல்

கீழிருந்து மேல்:-

8. மூங்கிலால் செய்யப்படும் காற்றுக்கருவி _______________

  • குழல்

10. வீணையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை _______________

  • ஏழு

11. திருமணத்தின் போது கொட்டும் முரசு.

  • குடமுழா

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  1. கைவினைப் பொருள்கள் – Crafts
  2. பின்னுதல் – Knitting
  3. புல்லாங்குழல் – Flute
  4. கொம்பு – Horn
  5. முரசு – Drum
  6. கைவினைஞர் – Artisan
  7. கூடைமுடைதல் – Basketry
  8. சடங்கு – Rite
Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *