Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 4

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 4

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்

துணைப்பாடம்: தலைக்குள் ஓர் உலகம்

மதிப்பீடு

மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.

முன்னுரை

உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை, புதிரானவை அவற்றை பற்றிக் காண்போம்.

இடப்பாகச் செயல்

மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலனவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்கான காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியனா பாதிப்பினால்தான் என்று கூறுவார்கள். இடது பாதிதான் பேச எழுத கணக்கிட தர்க்க ரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெலலாம் இடது பகுதி பாரத்துக் கொள்கிறது. நம் மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே.

வலப்பாகச் செயல்

இடது பாதி அண்ணன் என்றால் வலது பாதி தம்பி போன்றது. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது நடிப்பது போன்ற கலை தொடர்பானவை. எல்லாம் வலது பாதியில் தான். வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம். வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்களாக, பாடகர்களாக, நடனக் கலைஞர்களாக, இசைக்கருவிகளை கையாளுபவர்களாக, கலைத்திறன்கள் பெற்றவர்களாகத் திகழ்வர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்களாக, கணக்கு ஆசரியர்களாக, இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்களாக திகழ்வர்.

முடிவுரை

இடதும், வலதும் கலந்து இருப்பவர்களும் உண்டு. நன்முறையில் கல்வி கற்றால் உடலியக்கம் மற்றும் மன இயக்கத்திற்குக் காரணமான மூளை, நம் செயல்பாடுகளைத் தூண்டி நம்மை உயர்வடையச் செய்யும்.

கூடுதல் வினாக்கள்

1. இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எது?

இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் மனித மூளை ஆகும்

2. எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம்?

சுமார் தொண்ணூறு நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம்.

3. சுஜாதாவின் இயற்பெயர் என்ன?

சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும்.

4. மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர் யார்?

சுஜாதா மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர்.

5. சுஜாதாவின் படைப்புகளை எழுதுக.

என் இனிய எந்திரா, மீண்டம் ஜீனோ, ஸ்ரீரங்ககத்துத் தேவைகள், தூண்டில் கதைகள்

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *