தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை
இலக்கணம்: வினைமுற்று
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.
- மாடு
- வயல்
- புல்
- மேய்ந்தது
விடை : மேய்ந்தது
2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.
- படித்தான்
- நடக்கிறான்
- உண்பான்
- ஓடாது
விடை : படித்தான்
3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.
- செல்க
- ஓடு
- வாழ்க
- வாழிய
விடை : ஓடு
II. சிறுவினா
1. வினைமுற்று என்றால் என்ன?
ஒருவினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்
2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றை தெரிநிலை வினைமுற்று காட்டும்
3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
க, இய, இயர், அல் என்பன வியங்கோள் வினைமுற்று ஆகும்
4. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
ஏவல் வினைமுற்று | வியங்கோள் வினைமுற்று |
முன்னி்லயில் வரும். | இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும். |
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. | ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை. |
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். | வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும். |
விகுதி பெற்றும் பெறாமலும் வரும். | விகுதி பெற்றே வரும். |
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஒன்றன் செயலை குறிக்கும் சொல் __________________ எனப்படும்
விடை : வினைச்சொல்
2. செயலை __________________ என்று குறிப்பர்
விடை : வினை
3. பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்களை __________________ என்பர்
விடை : வினைமுற்று
4. ஐம்பால், முக்காலம், மூவிடம் ஆகிய அனைத்திலும் __________________ வரும்
விடை : வினைமுற்றுகள்
5. __________________ -ல் செய்பவர், செயல், காலம் ஆகியவற்றை காட்டும்
விடை : தெரிநிலை வினைமுற்று
II. சிறு வினா
1. வினைச்சொல் என்றால் என்ன?
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
2. வினைமுற்று எத்தனை வகைப்படும்.
தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.
3. குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.
4. திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
திணை இரு வகைப்படும்
- உயர்திணை
- அஃறிணை
5. ஐந்து பால்கள் எவை?
- ஆண் பால்
- பெண் பால்
- பலர் பால்
- ஒன்றன் பால்
- பலவின் பால்
6. மூவிடங்களை கூறு?
- தன்னிலை
- முன்னிலை
- படர்க்கை
7. தெரிநிலை வினைமுற்று என்றால் சான்று தருக?
ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
(எ.கா.) மாணவி கட்டுரை எழுதினாள்.
- செய்பவர் – மாணவி
- காலம் – இறந்தகாலம்
- கருவி – தாளும் எழுதுகோலும்
- செய்பொருள் – கட்டுரை
- நிலம் – பள்ளி
- செயல் – எழுதுதல்
8. ஏவல் வினைமுற்று என்றால் சான்று தருக?
தன் முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்
எ.கா. : எழுது – ஒருமை, எழுதுமின் – பன்மை
பன்மை ஏவல் வினைமுற்று எழுதுங்கள் என வருவது இக்கால வழக்கு.
9. வியங்கோள் வினைமுற்று விளக்குக?
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுறு்று ஆகும்.
- இருதிணை (உயர்திணை, அஃறிணை)
- ஐம்பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்),
- மூவிடங்களுக்கும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) பொதுவாய் வரும்.
- இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்
எ.கா. : வாழ்க, ஒழிக, வாழியர், வாரல்
மொழியை ஆள்வோம்
I. விடுபட்ட கட்டங்களை நிரப்புக
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௧0 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
௧ | ௧௨ | ௧௩ | ௧ ௪ | ௧௫ | ௧௬ | ௧ ௭ | ௧௮ | ௧௯ | ௧0 |
21 | 22 | 23௩ | 24 ௪ | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
௨௧ | ௨௨ | ௨௩ | ௨ ௪ | ௨௫ | ௨௬ | ௨ ௭ | ௨௮ | ௨௯ | ௨0 |
II. வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக
உலக ஈர நில நாள் பிப்ரவரி 2 | உ |
உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16 | க௬ |
உலக இயற்கை நாள் அக்டோபர் 3 | ௩ |
உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6 | ௬ |
உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் 5 | ௫ |
III. தொடர்களின் வகையைக் கண்டறிக.
1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
விடை : செய்தி தொடர்
2. கடமையைச் செய்.
விடை : விழைவுத் தொடர்
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!
விடை : உணர்ச்சித் தொடர்
4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?
விடை : வினாத்தொடர்
IV. தொடர்களை மாற்றுக.
1. நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)
விடை : நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
2. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
விடை : என்னே! காட்டின் அழகு!
3. ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)
விடை : பூனை காலில் அடிபட்டுவிட்டது
4. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
விடை : அதிகாலையில் துயில் எழு
5. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)
விடை : முகில்கள் திரண்டால் மழை பெய்யும்
6. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)
விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதோ?
மொழியோடு விளையாடு
I. வினைமுற்றுகளால் கட்டங்களை நிரப்பு
நட | உண் | உறங்கு | |
ஆண்பால் | நடக்கிறான் | உண்கிறான் | உறங்கினான் |
பெண்பால் | நடக்கிறாள் | உண்கிறாள் | உறங்கினாள் |
பலர்பால் | நடக்கிறார் | உண்டார் | உறங்கினார் |
ஒன்றன் பால் | நடந்தது | உண்டது | உறங்கியது |
பலவின் பால் | நடந்தன | உண்டன | உறங்கின |
தன்மை | நடந்தேன | உண்கிறேன் | உறங்கினேன் |
முன்னிலை | நடந்தீர் | உண்டீர் | உறங்குவீர் |
படர்க்கை | அவன் நடந்தான் | அவன் உண்பான் | அவன் உறங்கினாள் |
இறந்த காலம் | நடந்தான் | உண்டான் | உறங்கினான் |
நிகழ் காலம் | நடக்கிறான் | உண்கிறான் | உறங்குகிறான் |
எதிர் காலம் | நடப்பான் | உண்பான் | உறங்குவான் |
வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக
- நடக்கிறது – நட
- போனான் – போ
- சென்றனர் – செல்
- போனான் – போ
- உறங்கினாள் – உறங்கு
- வாழிய – வாழ்
- பேசினாள் – பேசு
- வருக – வா
- தருகின்றனர் – தா
- பயின்றாள் – பயில்
- கேட்டார் – கேள்
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
- பழங்குடியினர் – Tribes
- மலைமுகடு – Ridge
- சமவெளி – Plain
- வெட்டுக்கிளி – Locust
- பள்ளத்தாக்கு – Valley
- சிறுத்தை – Leopard
- புதர் – Thicket
- மொட்டு – Bud