Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 5th Tamil Books Chapter 9 4

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 9 4

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை

இலக்கணம் : மரபுத்தொடர்கள்

கற்கண்டு

மரபுத்தொடர்கள்

முருகன் : அடடே, கபிலா, நீயா? என்னப்பா, இப்பத்தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாளாக எங்கே இருந்தாய்?

கபிலன் : அட, அதை ஏங்க கேட்கிறீங்க? உங்க பேச்சையெல்லாம் கேட்காம, கிடைத்த நல்ல வேலைய விட்டுவிட்டு வெளியூருக்குப் போனேன். அந்த வேலையத் தலைல வைத்துக் கொண்டாடினேன். ஆனால், கானல் நீரை உண்மையென்று நம்பிவிட்டேன். நான் செய்த இமாலயத் தவறு இதுதான். எப்பத்தான் கரையேறுவேனோ தெரியல நம்ம ஊர்லய வேலை கிடைக்குமான்னு இப்ப பஞ்சாகப் பறந்துகிட்டிருக்கேன்.

முருகன் : என்னாச்சு? ஏன் இப்படிப் பேசுகிறாய்?

கபிலன் : வேறென்ன? அவசரக்குடுக்கையா இருந்ததாலே ஆகாயத்தாமரையை உண்மைன்னு நினைச்சேன். இப்ப வருத்தப்படுகிறேன். நல்ல ஊதியம் கிடைக்கும்னு பார்த்தா ஒரே பித்தலாட்டமா இருக்கு.

முருகன் : சரி, சரி, வருத்தப்படாதே. நீ எங்கேயும் போகவேண்டா. நானே உனக்கு வேலை வாங்கித் தருகிறேன்.

உரையாடலைப் படித்தீர்களா? கபிலன் என்ன பேசினான் என்று புரிந்து கொண்டீர்களா? அவன் தன் பேச்சில் மரபுத்தொடர்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அவை,உங்களுக்குப்புரியவில்லையெனில், அவற்றின் பொருளைமுதலில் காண்போம். பின்னர், மீண்டும் அவன் பேசியதைப் படித்துப் பார்ப்போம்.

மரபுத்தொடர் : உணர்த்தும் பொருள்

தலையில் வைத்துக் கொண்டாடுதல் – பெரிதும் மதித்தல்

கானல் நீர் – கிடைக்காத ஒன்று

இமாலயத்தவறு – பெரிய தவறு

கரையேறுதல் – துன்பத்திலிருந்து மீளுதல்

பஞ்சாகப் பறத்தல் – அலைந்து திரிதல்

அவசரக்குடுக்கை – ஆராயாமல் செயல்படுதல்

ஆகாயத்தாமரை – இல்லாத ஒன்று

பித்தலாட்டம் – ஏமாற்று வேலை

இப்போது, மீண்டும் படித்துப் பார்த்தீர்களா? அவன் கூறியதன் பொருள் புரிந்துவிட்டதல்லவா! இவ்வாறு, நம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்தும் சொற்கள் பலவற்றை முன்பே நாம் அறிந்துள்ளோம். இணைமொழிகள் போன்று கருத்தாழமும் நடையழகும் கொண்டவை மரபுத்தொடர்கள். இவை மரபாகத் தொன்றுதொட்டு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருவதால், மரபுத்தொடர்கள் என்கிறோம்.

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. கீழ்க்காணும் தொடர்களில் ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நாங்கள் …………………… உழவுத்தொழில் செய்து வருகிறோம். (வாழையடி வாழையாக/விடிவெள்ளியாக)

விடை : வாழையடி வாழையாக

2. அவனுக்கு நடைமுறை அறிவு எதுவும் கிடையாது. அவன் ஒரு. (அவரசக்குடுக்கை /புத்தகப்பூச்சி) –

விடை : புத்தகப்பூச்சி

3. பாரதிதாசன் கவிதை உலகில் …………………ப் பறந்தார். (பற்றுக்கோடாக/கொடி கட்டி)

விடை : கொடி கட்டி

ஆ. பொருத்துக.

1. கயிறு திரித்தல் – பொய் அழுகை

2. ஓலை கிழிந்தது – விடாப்பிடி

3. முதலைக் கண்ணீர் – இல்லாததைச் சொல்லல்

4. குரங்குப்பிடி – மறைந்து போதல்

5. நீர் மேல் எழுத்து – வேலை போய்விட்டது

விடை

1. கயிறு திரித்தல் – இல்லாததைச் சொல்லல்

2. ஓலை கிழிந்தது – வேலை போய்விட்டது

3. முதலைக் கண்ணீர் – பொய் அழுகை

4. குரங்குப்பிடி – விடாப்பிடி

5. நீர் மேல் எழுத்து – மறைந்து போதல்

இ. ‘காலை வாரிவிடுகிறது’ – இம்மரபுத்தொடர், கீழ்க்காணும் எந்தத்தொடருக்குப் பொருத்தமாக அமையும்?

1. காலம் பொன் போன்றது. இருந்தாலும் நம்மைக் ………….

2. காலை எழுந்தவுடன் தூக்கம், நம்மைத் ……………

3. மறதி நம்மை அடிக்கடி …………

4. இளமைக்காலம் நம்மை அடிக்கடி.

விடை

3. மறதி நம்மை அடிக்கடி காலை வாரிவிடுகிறது

ஈ. மலையேறி விட்டது – இம்மரபுத்தொடர் குறிக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க..

1. மாயச் செயல்

2. கதை விடுதல்

3. மாற்றம் பெறுதல்

4. பயனில்லாது இருத்தல்

விடை

3. மாற்றம் பெறுதல்

உ. வினாக்களுக்கு விடையளிக்க,

1. மரபுத்தொடர் என்றால் என்னஓர் எடுத்துக்காட்டு தருக.

விடை

● இணைமொழிகள் போன்று கருத்தாழமும் நடையழகும் கொண்ட தொடர்கள் மரபாக தொன்று தொட்டு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருவது மரபுத்தொடர் எனப்படும்.

● எ.கா. கானல் நீர்

2. பின்வரும் மரபுத்தொடர்களைக்கொண்டு தொடரமைத்து எழுதுக.

அ) தோலிருக்கச் சுளை விழுங்கி ஆ) மதில் மேல் பூனை

விடை

அ) தோலிருக்கச் சுளை விழுங்கி

தோலிருக்கச் சுளை விழுங்கியது போல் அத்தனை உப்புக்களையும் கபளீகரம் செய்திருக்கிறது இந்த பேயாறு.

ஆ) மதில் மேல் பூனை

கண்ணன் மதில் மேல் பூனை போல் படிப்பில் ஒரு நிலையில்லாமல் இருந்தான்.

மொழியை ஆழ்வோம்

அ. கேட்டல்

● அன்புடைமை அதிகாரத்திலுள்ள குறட்பாக்களின் பொருளைக் கேட்டறிக.

● மனிதநேயத்தை உணர்த்தும் கதைகளைக் கேட்டு அறிக.

ஆ. பேசுதல்

 உனது வாழ்வின் உயர்வுக்கு எந்தெந்தப் பண்புகள் உதவியாக இருக்கும்கலந்துரையாடுக.

விடை

மாணவன்-1 : வணக்கம்! நான் வாழ்வில் உயர்வதற்கு என்னென்ன பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று என் அப்பாவிடம் கேட்டேன்.

மாணவன்-2 : அப்படியா? என்னவென்று கூறேன். அனைவரும் அறிந்து கொள்ளலாம். மாணவன்-1 : முதல் பண்பு ஒழுக்கத்துடன் இருத்தல் வேண்டும்.

மாணவன்-2 : ஒழுக்கம் என்றால் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்?

மாணவன்-1 : பள்ளி மாணவர்களாகிய நமக்குத் தேவையான ஒழுக்கம்.

1. பள்ளிக்கு நேரத்துடன் செல்லல்.

2. ஒழுங்கான சீருடையுடன் பள்ளிக்குச் செல்லல்.

3. வாரம் ஒருமுறை நகம் வெட்டுதல்.

4. மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டுதல்.

5. அன்றாட வீட்டுப் பாடங்களை எழுதுதல்.

மாணவன்-2 : இவையெல்லாம் நாம் கடைப்பிடிப்பதுதான்.

மாணவன்-1 : சரியாகச் சொன்னாய். இவற்றுடன் பெற்றோரை மதித்தல், பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடத்தல், அனைவரிடமும் அன்புடன் பழகுதல் ஆகியவையும் நற்பண்புகளாகும்.

மாணவன்-2 : அன்புடன் பழகுதல் மற்றும் அதனுடன் பணிவுடன் திகழ்தல் போன்றவையும் நற்பண்புகள்தான்.

மாணவன்-1 : ஆம்! மற்றவர்களைப் புண்படுத்தும்படிப் பேசக்கூடாது. பிறருடைய எண்ணங்களுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்தல். இந்தப் பணிவு, அன்புடன் பழகுதல், விட்டுக்கொடுத்துப் பழகும் குணம் இவையெல்லாம் பெற்றோரிடம் பாசமுடன் வளரும் குழந்தைகளிடன் இயல்பாகவே அமையும். இப்பண்புகளின் தொகுப்பே ஒழுக்கம் ஆகும்.

மாணவன்-2 : அப்படியா? இனிமேல் நாம் அனைவரும் இந்த நற்பண்புகளைப்

பின்பற்றி வாழ்வோம் என உறுதியேற்போம்.

 அன்னை தெரேசாவின் தொண்டுகளைப் பற்றி 5 மணித்துளி பேசுக.

விடை

அவையோர்க்கு வணக்கம்!

‘அன்னை ‘ என்று இந்திய மக்களால் பெருமையுடன் குறிப்பிடப்படுபவர் தெரேசா. இவர் அயல்நாட்டைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் இந்திய மண்ணையே தனது தாய் மண்ணாக எண்ணி வாழ்ந்து சிறந்தவர்தான் அன்னை தெரேசா.

இவர் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் யுகோஸ்லாவியா நாட்டில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் ஆக்னஸ் என்பதாகும்.

அன்னை தெரேசா கிறித்துவ மதத்தைப் பரப்பும் எண்ணத்துடன்தான் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். கல்கத்தாவில் ஒரு ஆசிரியையாக தன் பணியினைத் தொடங்கினார். கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாக மனம் கலங்கச் செய்தது. பஞ்சம் ஒரு புறம் இந்து – முஸ்லிம் வன்முறை மற்றொரு புறம். இதனால் தெரேசா மிகவும் மனம் வருந்தினார்.

1948 ஆம் ஆண்டு தனது சேவையை ஆரம்பித்தார். நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக் கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார்.

ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அதனைத்தொடர்ந்து பிறர் அன்பின்பணியாளர் சபையைத் தொடங்கினார். உண்ண உணவற்றவர்கள், வீடற்றவர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களைக் கவனித்தல் போன்ற பணிகளைச் செய்வதனைக் குறிக்கோளாய்க் கொண்டார்.

1952 இல் கொல்கத்தா நகரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிருப்போருக்கு முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு இந்துக் கோயிலை ஏழைகளுக்கான நல்வாழ்வு மையமாக மாற்றினார். இவ்வில்லத்திற்குக் கொண்டு வரப்படுபவர்களுக்கு அவரவர் சமயத்திற்கேற்ப நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார்.

இவருக்கு இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் அவருடைய சேவைகளுக்காகப் பொருளுதவி செய்து மகிழ்ந்தன.

அன்பிற்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அன்னை தெரேசாவின் வாழ்க்கையை நினைவில் வைப்போம். நம்மால் இயன்றதொண்டினைச்செய்வோம். வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இ. படித்தல்

 அண்ணல் காந்தியடிகள்அன்னை தெரேசா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படித்து அறிக.

 நீங்கள் செய்தித்தாளில் படித்த மனிதநேயச் செயலொன்றை வகுப்பில் கூறுக.,

ஈ. எழுதுதல்

1. சொல்லக் கேட்டு எழுதுக.

1. பெண்ணின் பெருமையைப் பாடியவர் பாரதிதாசன்.

2. பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது.

3. கவிஞர் வாணிதாசன் புதுச்சேரியைச் சேர்ந்தவர்.

4. வானம் வசப்படும் என்ற நூலை எழுதியவர், பிரபஞ்சன்,

2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. பொறுமை – நிலத்தைப் போல் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

2. நூல்கள் – நூலகத்தில் பல துறை நூல்கள் பெருகி இருக்கும்.

3. தமிழ்மொழி – நம் தமிழ்மொழி மிகவும் தொன்மையானது.

4. அன்பு – எல்லோரிடமும் அன்புடன் பழகுதல் வேண்டும்.

5. கவிஞர் – இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் பாரதியார் பெரும்புகழ் பெற்றவர்.

3. பொருத்துக

பாரதியார் – என் தமிழ் இயக்கம்

பாரதிதாசன் – கொடி முல்லை

வாணிதாசன் – குயில் பாட்டு

திருமுருகன் – வானம் வசப்படும்

பிரபஞ்சன் – தமிழியக்கம்

விடை

1. பாரதியார் – குயில் பாட்டு

2. பாரதிதாசன் – தமிழியக்கம்

3. வாணிதாசன் – கொடி முல்லை

4. திருமுருகன் – என் தமிழ் இயக்கம்

5. பிரபஞ்சன் – வானம் வசப்படும்

4. அண்ணல் காந்தியடிகளின் உள்ளம் கவர்ந்த குஜராத்தியபாடலின் தமிழாக்கம்

தீமை செய்தவர்க்கும் நன்மை செய்எல்லாரும் ஒன்று என்பதைக் கூறும் மனிதநேயப் பாடலைப் படித்து உணர்க,

உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்

விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய்!

அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்!

செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்!

உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்!

செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்

சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்

ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி!

வையத்தார் எல்லாரும் ஒன்றெனவே மாண்புடையோர்

ஐயப்பாடின்றி அறிந்திருக்கும் காரணத்தால்

இன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண

நன்னயம் செய்துவிடுவர் இந்த நானிலத்தே!

5. பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுக.

அழகன்பிரெண்ட்ஸோடு கிரவுண்டுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் ஜாலியாகக் கிரிக்கெட் விளையாடினான். அதனால்அவன் மிகவும் டையர்டாக இருந்தான்,

விடை

அழகன், நண்பர்களுடன் திடலுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் மகிழ்ச்சியாகக் மட்டைப்பந்து விளையாடினான். அதனால், அவன் மிகவும் சோர்வாக இருந்தான்.

6. பாடலை நிறைவு செய்க.

1) அம்மா இங்கே வந்தாங்க!

அன்பாய் இருக்கச் சொன்னாங்க!

நானும் அதைக் கேட்பேன்

அதன் படியே நடப்பேன்

2) அப்பா  இங்கே வந்தாங்க!

அடக்கமாய் இருக்கச் சொன்னாங்க!

நானும் அதைக் கேட்பேன்

அதன்படியே நடப்பேன்

3) மாமா இங்கே வந்தாங்க

மரியாதையாய் இருக்கச் சொன்னாங்க!

நானும் அதைக் கேட்பேன்

அதன் படியே நடப்பேன்.

4) பாட்டி இங்கே வந்தாங்க

பண்புடன் இருக்கச் சொன்னாங்க!

நானும் அதைக் கேட்பேன்

அதன்படியே நடப்பேன்.

7. பின்வரும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

இடம்: அண்ணா விளையாட்டு மைதானம், சென்னை.

காலம்: மாணவர் காலை 9 மணிமுதல் 11 மணிவரை

மாணவியர்: காலை 11 மணிமுதல் 12 மணிவரை

வினாக்கள்

1. நீங்கள் மேலே படித்தது என்ன?

அ) பாடல்

ஆ) கதை

இ) விளம்பரம்

[விடை : இ) விளம்பரம்]

2. பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டு எது?

அ) மட்டைப்பந்து

ஆ) கபடி

இ) சதுரங்கம்

[விடை : ஆ) கபடி]

3. மாணவர்களுக்கு எத்தனை மணி நேரம் பயிற்சி வழங்கப்படுகிறது?

அ) 1 மணி

ஆ) 2 மணி

இ) 3 மணி

[விடை : இ) 3 மணி]

4. மைதானம் – இந்தச்சொல்லுக்குரிய பொருள் எது?

அ) பூங்கா

ஆ) அரங்கம்

இ) திடல்

[விடை : ஆ) அரங்கம்]

5. விளம்பரத்திலிருந்து நீங்கள் புரிந்து கொண்டது என்ன?

அ) கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது. ஆ) கபடி விளையாட்டில் மாணவர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர். இ) கபடி விளையாட்டு நடைபெறுமிடம் பெரியார் விளையாட்டு மைதானம்.

விடை : அ) கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.

மொழியோடு விளையாடு

1. குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

1. இவர் எட்டயபுரத்துக் கவிஞர்

விடை : பாரதியார்

2. இது வெண்ணிறப் பறவை

விடை : புறா

3. தூக்கத்தில் வருவது

விடை : கனவு

கீழிருந்து மேல்

1. புத்தகத்தைக் குறிக்கும் சொல்

விடை : நூல்

வலமிருந்து இடம்

1. பாராட்டி வழங்கப்படுவது

விடை : விருது

2. மக்கள் பேசுவதற்கு உதவுவது

விடை : மொழி

3. சுதந்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல்

விடை : விடுதலை

குறுக்கும் நெடுக்குமாக

1. முத்தமிழுள் ஒன்று

விடை :  நாடகம்

2. குறிப்புகள் கொண்டு விடை எழுதுக

1. தலைகீழாய் என் வீடு தூக்கணாங்குருவி

2. என் பார்வை கூர்நோக்கு கழுகு

3. நானும் ஒரு தையல்காரி சிட்டுக்குருவி

4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன் கொக்கு

5. எனக்கு வீடு கட்டத் தெரியாது. குயில்

3. சொல்லிருந்து புதிய சொல்

1. பாரதியார் – பா, ரதி, யார், பார், பாதி

2. மணிக்கொடி – மணி, கொடி, மடி

3. பாவேந்தர் – பா, வேந்தர், வேர், பார்

4. நாடகம் – நா, நாம், நாகம், கடம்

5. விடுதலை – விடு, தலை, விலை, தடு

4. சொற்களைக் கொண்டு புதிய தொடர் உருவாக்குக.

(எ.கா.) உண்மை நாம் எப்பொழுதும் உண்மையே பேசவேண்டும்

1. பெருமை – நாம்பிறர் பெருமைப்படும் செயல்களைச் செய்ய வேண்டும்.

2. பாடல் – திருவிழாக்கள் என்றாலே மக்கள் ஆடல் பாடல் என்று மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

3. நாடகம் – தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்த்து நேரத்தை வீணாக்கக்கூடாது.

4. தோட்டம் – கந்தன் அவன் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்துள்ளான்.

5. பரிசு – கோகிலா பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றாள்.

5. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடரமைக்க.

1. பெருமை பாரதிதாசன் தமிழுக்குச் சேர்த்துள்ளார்.

பாரதிதாசன் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

2. பறவை அழகான புறா

விடை

புறா அழகான பறவை.

3. தமிழ் உண்டாகிறது மேல் ஆர்வம்.

விடை

தமிழ் மேல் ஆர்வம் உண்டாகிறது.

4. போற்றும் உலகம் எழுத்தாளர் உயர்ந்த

விடை

உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர்.

அறிந்து கொள்வோம்

மனிதநேயம்

அன்பென்று கொட்டு முரசே – மக்கள்

மக்கள் அத்தனை பேரும் நிகராம்

இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு

யாவரும் ஒன்றென்று கொண்டால்

நிற்க அதற்குத் தக…

● உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவேன்

● நல்ல நல்ல நூல்களைத் தேடிப் படிப்பேன்

● மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்

செயல் திட்டம்

● தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய கவிஞர்களுள் ஐவரின் படத்தை ஒட்டி, ஒவ்வொருவரையும் பற்றி 5 வரிகள் எழுதி வருக.

விடை

1. மகாகவி பாரதியார் :

பெற்றோர் – சின்னசாமி அய்யர் – லட்சுமி அம்மாள்.

சிறுவயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றதால் ‘பாரதி’ என்ற பட்டத்தைப் பெற்றவர்.

தமது கவிதைகள் மூலம் தமிழ் மக்களுக்குத் தமிழ்ப்பற்றையும், தேசபக்தியையும் ஊட்டி வளர்த்தவர் பாரதியார்.

சென்னையில் ‘இந்தியா’ என்ற வார இதழைத் தொடங்கியவர்.

பாரதியார் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

நிவேதிதா தேவியைத் தமது ஞானகுருவாக ஏற்றுக் கொண்டவர். ‘தேசிய கவி’, ‘மகாகவி’ எனப் பாராட்டப்பட்டவர்.

2. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் :

பெற்றோர் – கனகசபை – மகாலட்சுமி.

தமிழைத் தனது உயிராய்க் கொண்டு வாழ்ந்து, தனது புரட்சிக் கவிதைளால் தமிழில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்.

பாரதியார் மீது கொண்ட பற்றினால் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டவர்.

இருண்ட வீடு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

புரட்சிக் கவிஞர், புதுமை கவிஞர், பாவேந்தர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.

3. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை :

பெற்றோர் – வெங்கட்ராமன் – அம்மணி அம்மாள்.

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.

இவர் ஓவியம் வரைவதில் வல்லவர். 1912ஆம் ஆண்டு 5 ஆம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி டெல்லியில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியம் இடம் பெற்றுத் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.

நாடகங்களுக்குப் பாட்டு எழுதிக் கொடுப்பார்.

காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். உப்புச் சத்தியாகிரகத்தின்போது வழிநடைப் பாடலாகக் ‘கத்தியின்றி ரத்தமின்றி’ பாடலைப் பாடிப் புகழ் பெற்றவர்.

‘என் கதை’ என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதியுள்ளார்.

மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், கம்பனும் வால்மீகியும், திருக்குறளும் பரிமேலழகரும் ஆகிய நூல்கள் இவரது படைப்புகளுள் சில.

4. ஈரோடு தமிழன்பன் :

பெற்றோர் – செ.இரா. நடராசன், வள்ளியம்மாள்.

சிறந்த கவிஞராகவும், தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதிலும் முத்திரை பதித்தவர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் பழகியவர்.

அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து, இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

“வசந்தத்தில் ஒரு வானவில்” என்ற படத்திற்குக் கதை எழுதினார். 1983ல் ரோம் நகரில் நடந்த சர்வதேசப் படவிழாவில் இப்படம் பரிசு பெற்றது. இவருடைய நூல்களில் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

5. உவமைக் கவிஞர் சுரதா ;

பெற்றோர் – திருவேங்கடம் – செண்பகம்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பரம்பரையில் வந்தவர் முதுபெரும் கவிஞர் சுரதா.

பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கமே சுரதா என்றானது.

‘காவியம்’ என்ற கவிதை வார இதழைத் தொடங்கி நடத்தியவர். கவிதைக்காகவே தொடங்கப்பட்ட முதல் வார இதழ் ஆகும்.

இவருடைய ‘தேன்மழை’ என்ற கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. கலைமாமணி பட்டம் பெற்றவர். 1987-ல் தமிழக அரசு ஏற்படுத்திய பாரதிதாசன் விருதை முதன்முதலாகப் பெற்றவர் இவரே. ‘மூத்த தமிழறிஞர்’ என்ற விருதை 2000 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்.

கற்பவை கற்றபின்

 மரபுத்தொடர்களின் பொருளை அறிந்துகொள்ள முயல்க.

விடை

மரபுத்தொடர்         பொருள்

1. ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது – பட்டறிவில்லாத படிப்பறிவு

2. முதலைக் கண்ணீர் – பொய்யழுகை

3. கானல் நீர் – இருப்பது போல் தோன்றும் ஆனால் இராது.

4. குட்டிச்சுவர் – பயனின்றி இருத்தல்

5. கொட்டியளத்தல் – மிகுதியாகப் பேசுதல்

6. வாழையடி வாழை – தலைமுறை தலைமுறையாக

7. ஆயிரங்காலத்துப் பயிர் – நீண்ட காலத்திற்கு உரியது

 அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பேச்சில் காணப்படும் மரபுத்தொடர்களைத் தொகுத்து வருக.

விடை

1. அள்ளிக்குவித்தல்

2. அண்டப்புலுகன்

6. ஈவிரக்கம்

7. உதவாக்கரை

3. அரக்கப்பறக்க

4. ஆகாயக்கோட்டை

5. அகலக்கால் வைத்தல்

8. ஆழம் பார்த்தல்

9. எதிர்நீச்சல்

10. கட்டுக்கோப்பு

 மரபுத்தொடர்களைப் பயன்படுத்தித் தொடர்கள் எழுதுக.

விடை

 அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பதற்கு என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது.

 திருமணம் நிகழ்வதைப் பெரியோர் ஆயிரங்காலத்துப் பயிராகக் கருதுவர்.

 அரசியல்வாதிகளின் வாக்குறுதி ஆகாயத்தாமரை போல் உள்ளது.

 கந்தன் எடுத்ததெற்கெல்லாம் முதலைக்கண்ணீர் வடிப்பான்.

 என் தங்கையின் செயல் எல்லாமே அவலை நினைத்து உரலை இடிப்பது போல இருக்கும்.

அகரமுதலி

1. அநியாயம் – நேர்மையின்மை

2. ஆணை – கட்டளை

3. இரவல் – கடன்

4. ஊழ்வினைப் பயன் – விதிப்பயன்

5. கஞ்சத்தனம் – பிறர்க்குக் கொடுக்க மனமில்லாத

6. கட்டுக்கடங்கா – அளவில்லாத

7. களிறு – ஆண் யானை

8. கும்பிடு – வணங்கிடு

9. குன்றாப் புகழ் – குறையாத புகழ்

10. கொடைப்பண்பு – வள்ளல் தன்மை

11. கைம்மாறு – பதிலுதவி

12. சன்மானம் – வெகுமதி

13. சிந்தை – எண்ணம்

14. தகனம் – எரியூட்டுதல்

15. தண்டித்தல் – ஒறுத்தல்

16. தண்டோரா – முரசறைந்து அறிவித்தல்

17. தரணி – உலகம்

18. துயர் – துன்பம்

19. நங்கை – பெண்

20. நல்குதல் – வழங்குதல்

21. நாணயம் – நேர்மை

22. நானிலம் – உலகம்

23. நீடுழி – நெடுநாள்

24. பரிவு – அன்பு

25. பற்று – விருப்பம்

26. பார் – உலகம்

27. பேழை – பெட்டி

28. மரியாதை – மதிப்பு

29. மாண்பு – பெருமை

30. மாரி – மழை

31. மேனி – உடல்

32. வன்மை – வலிமை

33. விண்ணமுதம் – மழைநீர்

34. விருது – பட்டம்

35. வையத்தார் – உலகத்தார்

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *