Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 5th Tamil Books Chapter 4 3

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 4 3

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம்

துணைப்பாடம் : நானும் பறக்கப் போகிறேன்

இயல் ஒன்று

துணைப்பாடம்

நானும் பறக்கப் போகிறேன்

என்னம்மா செய்கிறாய்?

அப்பா, நான் பறக்கப் போகிறேன்.

இப்படியெல்லாம் பறக்கமுடியாது, அமுதா

பறவைகள் பறக்கின்றன. நான் பறக்க முடியாதா அப்பா?

ஓ! அதுவா, சொல்கிறேன். வா! தோட்டத்திற்குப் போகலாம்.

பறவைகள் உடலமைப்பு எப்படி உள்ளது என்று பார்.

படகின் துடுப்பு போல இருக்கிறது அப்பா.

ம்..சரிதான் இதைத் தூக்கிப்பார்.

பார்க்கத்தான் பெரிதாக உள்ளதுபோல் தோன்றுகிறது. ஆனால், எடை குறைவாக இருக்கிறதே!

ஆமாம்… பறவையின் இறகுகளிலும் எலும்புகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளன..

ஓ! அப்படியென்றால், பறவையைவிட அதிக எடையுடன் நான் இருப்பதால்தான் என்னால் பறக்க முடியவில்லையா?

அப்படியில்லை, அங்கே பார், காற்றைக் கிழித்து மேலே பறக்க, பறவைகளுக்கு இறக்கைகள் உதவுகின்றன.

ஆமாம்..அப்பா.

பறவைகளின் பின்புற வால் துடுப்புபோல் செயல்பட்டுத் திசைமாறிப் பறக்க உதவுகிறது.

ஓ இத்தனை அமைப்புகள் இருப்பதால்தான் பறவைகளால் பறக்க முடிகிறதா?.

 “ஆம் மகளே.. மனிதன் பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான். அப்படி விமானத்தைக் கண்டுபிடித்தவர் யாரென்று உனக்குத் தெரியுமா?

எனக்குத் தெரியுமே! ரைட் சகோதரர்கள் அல்லவா!

சரியாகச் சொன்னாய்.’ பாராட்டுகள். அவர்களும் உன்னைப்போல் பறக்க ஆசைப்பட்டவர்கள்தாம்

அதற்காக அவர்கள் என்ன முயற்சி செய்தார்கள்?

சிறுவயதிலே இருவரும் பறவைகளைப் பார்ப்பது, பல வகைகளில் பட்டங்கள் செய்து பறக்கவிடுவது என ஆர்வமாக இருந்தனர்.

அருமை. இயற்கையைப் பார்த்து வியப்பது, விளையாடுவது இவற்றிலிருந்துகூட நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடியுமா ?

ஆம். ரைட் சகோதர்கள் தாங்கள் பறப்பதற்காகப் பலமுறை முயற்சி செய்தனர் அனைத்திலும் தோல்வியே. ஆனாலும், தோல்வியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டார்கள்.

ஓட்டப் பந்தயத்தில் தோற்றால்கூட சிலர் அழுகிறார்களே, அப்பா.

ஆம். நாம் எதிலும் தொடர்ந்து முயற்சி செய்தால், கட்டாயம் ஒருநாள் வெற்றி பெறலாம்.

அப்போ… ரைட் சகோதர்கள் இதில் எப்படி வெற்றி பெற்றார்கள்?

அவர்கள் செய்த முயற்சிகளில் உள்ள குறைகளைச் சரிசெய்து கொண்டே வந்தார்கள். ஒரு நாள் பறப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

அது எப்போது நடந்தது?.

1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று 12 நொடிகள் ரைட் சகோதரர்களில் ஒருவர். தாங்கள் சொந்தமாக உருவாக்கிய விமானத்தில் உயர்ந்த பகுதியிலிருந்து சிறிது தூரம் பறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

நானும்கூட அப்படி ஒருநாள் பறந்துகாட்டுவேன், மேலும் சாதனைகள் படைப்பேன் அப்பா.

நல்லது, முயற்சி செய்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

1. தன்னால் பறக்க முடியாததற்கு அமுதா கூறிய காரணம் என்ன?

விடை

பறவையைவிட அதிக எடையுடன் இருப்பதால்தான் தன்னால் பறக்க முடியவில்லை என்று அமுதா கூறினாள்.

2. பறப்பதற்கு ஏற்றவகையில் பறவையின் உடலமைப்பு எவ்வாறு உள்ளது?

விடை

பறவையின் இறகுகளிலும் எலும்புகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளன.

3. பறக்கும் விமானத்தைக் கண்டறிந்தவர்கள் யார்யார்?

விடை

ரைட் சகோதரர்கள்.

சிந்தனை வினா.

பறவைகளைப்போல் பறக்க முடிந்தால்நமக்கு எத்தகைய உடலமைப்பு இருக்கவேண்டும்?

விடை

பறவைகளைப் போல் பறக்க முடிந்தால் நமக்கு படகைப் போல் உடலமைப்பு இருக்க வேண்டும்.

கற்பவை கற்றபின்

● ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டனர்நூலகத்தில் தேடிப் படிக்க.

விடை

வானில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல அறிஞர்கள் தோல்வியுற்ற போது, ரைட் சகோதரர்கள் பல்வேறு சோதனைகளுக்குப் பின் வெற்றி பெற்றதற்கு மூன்று தொழில்நுட்பங்கள் உதவின. முதன்முதலாக, இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் ‘முன்னூந்தல்’ (Thrust), ‘மேலெழுச்சி'(Lift), ‘திசைதிருப்பி'(Rudder) எனப்படும் ‘முப்புற உந்தல் கட்டுப்பாடு’ என்ற நுணுக்கத்தை ரைட் சகோதரர்கள் கையாண்டனர்.ரைட் சகோதரர்கள் இரண்டாவது ஊர்திக்கு முன்னூந்தல் ஆற்றலைத் தருவதற்கு எண்ணெயிலியங்கும் எரிபொருள் இயந்திரத்தைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில்ரைட், வில்பர்ரைட் இருவரும் Wind Tunnel ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.

முயற்சிகளும் வெற்றியும் :

வாஷிங்டன் டி. சி. யில் உள்ள தேசிய வானாய்வு அருங்காட்சியகக் கூடத்தில் (National Air and Space Museum in Washington, D.C) வைக்கப்பட்டுள்ளது, 1903 இல் ரைட் சகோதரர்கள் பறந்த விமானம்.அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் (Kitty Hawk, North Carolina)1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் முதன் முதலாக எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறந்தார். அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள் பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள்.

வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஆர்வில் ரைட் 12 குதிரைத் திறன் ஆற்றல் கொண்ட, 600 பவுண்டு எடை கொண்டிருந்த, பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாக பூமிக்கு மேல் ஆகாயத்தில் மணிக்கு 30 மைல் வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தனர். 1901 ஆம் ஆண்டில், மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரர்களின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது.

● நீங்களே கண்டறிந்த எளிய கண்டுபிடிப்பை விளக்கப்படமாக வரைந்துகாட்டுக.

● எவரேனும் அறிவியலறிஞர் ஒருவரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நாடகமாக நடித்துக்காட்டுக.

● கற்பனையாக அறிவியல் புனைகதையொன்றை எழுதிவகுப்பில் படித்துக்காட்டுக.

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *