சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நல்ல குடிமகன்
அலகு 3
நல்ல குடிமகன்
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக
❖ மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி அறிந்துகொள்வர்.
❖ நற்பண்புகள் பற்றித் தெரிந்துகொள்வர்.
❖ நற்பண்புகளை வளப்படுத்தக்கூடிய காரணிகள் பற்றி தெரிந்துகொள்வர்.
மனிதன் ஒரு சமூக விலங்கு
மனிதர்களுக்கு புலன்கள் உள்ளன. மனிதர்கள் தங்கள் புலன்களைப் பயன்படுத்தி சிந்தித்து செயல்படுகின்றனர். சுதந்திரமாக பிறக்கின்றனர். ஆனால் சமூகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தனித்து வாழ முடியாது. அவர்களுக்கு சமூக, உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை. சமுதாயத்தில் வாழ்வதற்கு அவர்கள் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் சில பண்புகளையும், உரிமைகளையும் பிறப்பிலேயே பெற்றிருக் கின்றனர் இந்த பண்புகள் கல்வி நிலையங்களில் மேலும் மெருகூட்டப்படுகின்றன. ஒரு நபரை மதிப்புமிக்க மனிதனாக மாற்றுவததே கல்வியின் ஆகும்.
நற்பண்புகள்
சமுதாயத்தை இயங்க வைக்கும் ஒரு நபரின் குணங்கள் தான் நற்பண்புகள். இந்த நல்ல குணங்களை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குடிமை என்ற சொல் ஒரு நாட்டின் மக்கள் அல்லது குடிமக்கள் பற்றியதாகும். மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒற்றுமையாக வாழ்வது ஒரு குறிப்பிடத்தக்க நற்பண்பாகும். பிறருக்கு உதவுதல் ஒரு முக்கியமான நற்பண்பாகும்.
மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது, அனைவரும் ஒன்று இன்றைய குழந்தைகள் நாட்டின் நாளைய குடிமக்கள் குழந்தைகளிடையே ஒழுக்க நெறி மற்றும் நற்பண்புகள் வளர வேண்டும். அதனால் அவர்கள் மதிப்புமிக்க குடிமக்களாக மாறுகின்றனர்.
நாம் அறிந்து கொள்வோம்.
உலகம் அறநெறி உள்ளதால் உயிர்த்துள்ளது. சுயநலம் என்பது ஒழுக்கநெறி அல்ல, சுயநலமின்மை என்பதே ஒழுக்கநெறி.
-சுவாமி விவேகானந்தர்
செயல்பாடு நாம் எழுதுவோம்
1. உன் தாய்மொழி என்ன? ———————–
2 ————————– என்பது சிறந்த கொள்கை.
3. வட இந்தியாவின் முக்கிய உணவு என்பது —————————
4 ———————– தென்னிந்தியாவின் முக்கிய உணவு.
5. உனக்கு எத்தனை மொழிகள் தெரியும்? —————————-
தனிப்பட்ட நெறிமுறைகள்
தனிப்பட்ட நெறிமுறை என்பது ஒவ்வொரு தனிநபருக்குமான அடிப்படை மதிப்பு ஆகும். சில தனிப்பட்ட நெறிமுறைகளாவன: அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை.
செயல்பாடு நாம் எழுதுவோம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. அனைத்து உயிர்களிடத்தும் ——————- காட்டவேண்டும்.
2 ————————- யோடு ஏழைகளுக்கு உதவுங்கள்.
3 ——————— ஒரு சிறந்த
4. மிகச் சிறந்த உறவாகக் கருதப்படுவது —————————-
5. விருந்தினர்களை உபசரிப்பது ————————- ஆகும்.
6. துன்புறுபவர்களுக்கு நாம் —————— காட்டவேண்டும்.
7. எப்பொழுதும் ——————– பேசவேண்டும்.
8. பொது இடங்களில் ——————– யுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சிந்தனை செய்
1. ———————- பெற மரங்கள் வளர்க்க வேண்டும்.
2. ————————— வாழ்ந்தால் கோடி நன்மை.
பண்பாட்டு நெறிமுறைகள்
நற்பண்பு, பண்படுத்தப்பட்ட நன்னடத்தை ஒரு சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும். மொழி, மதம் எதுவாக இருந்தாலும் மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ்கின்றனர். இது பண்பாட்டு நெறிமுறைகளை வளர்க்க உதவும். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளாக இணைந்து வாழ வேண்டும்.
சமூக நெறிமுறைகள்
பொது இடங்களில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? கீழ்க்காணும் நற்பண்புகளைப் பொது இடங்களில் பின்பற்ற வேண்டும்.
• மக்களுடன் நல்லுறவை எப்பொழுதும் பேணுதல்
• பெரியோர்களை மதித்தல்
• சகிப்புத் தன்மையுடன் இருத்தல்
• நட்பை பேணி வளர்த்தல்
நாம் அறிந்து கொள்வோம்.
• காயமடைந்த புறாவின் உயிரைக் காக்க பசித்த பருந்திற்கு, தன் தொடை சதையை சிபி சக்கரவர்த்தி வழங்கினார் (Offer).
• கன்றை இழந்த பசுவிற்கு நீதி வழங்க, மனுநீதிச் சோழன் தன் மகனை தேர் சக்கரங்களை ஏற்றிக் கொன்றார்.
• வள்ளல் பாரி தனது தங்கத் தேரை முல்லைக் கொடிக்கு வழங்கினார்.
• வள்ளல் பேகன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மயிலுக்கு போர்வையை அளித்தார்.
நடத்தை சார்ந்த நெறிமுறைகள்
நடத்தை சார்ந்த நெறிமுறைகளாவன: நேரம் தவறாமை, ஈடுபாடு, அனைவரையும் சமமாக நடத்துதல், சரியான நேரத்தில் வேலைகளைச் செய்தல், ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல், தவறாமல் கடமைகளைச் செய்தல்.
ஒரு குடிமகன் என்பவர் ஒரு குறிப்பிட்ட நாட்டின் உறுப்பினராக இருந்து, பல்வேறு உரிமைகளை அனுபவித்து, தனது கடமைகளை நிறைவேற்றுகிறார். ஒரு இறையாண்மை பெற்ற அரசு தனது குடிமக்களுக்கு வாழும் உரிமை, கல்வி பெறும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, வேலை செய்யும் உரிமை, தேசத்தில் எங்கும் குடியிருக்கும் உரிமை ஆகியவற்றை வழங்குகிறது.
அரசியலமைப்பு நெறிமுறைகள்:
• பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
• தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்தல்.
• விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுகல்
• இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்.
• சுற்றுச்சூழலைப் பராமரித்தல்.
• தேசியச் சின்னங்களை மதித்தல்.
• தியாகிகளுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் மதிப்பளித்தல் .
• நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காத்தல்.
• நாட்டுப்பற்றை வளர்த்துக் கொள்ளுதல்.
நாம் அறிந்து கொள்வோம்.
• விதிகளை மீறக்கூடாது.
• எங்கும் துப்புதல் மற்றும் குப்பைகளை கொட்டுதல் கூடாது.
• நிலத்தையும், நீரையும் மாசுபடுத்தக்கூடாது.
• பழையப் பொருள்களைத் தெருக்களில் எரிக்கக்கூடாது.
• சாலைகளில் வெள்ளைப் பூசணிக்காயினை உடைக்கக் கூடாது.
நல்ல நடத்தை, நல்லொழுக்கம் ஆகியவை குடிமை மதிப்பீடுகளே அன்றி வேறில்லை.
குடியுரிமை என்பது சிறந்த முறையில் குடிமக்களாக வாழ்வதற்கான உரிமை. இது அரசு நடவடிக்கைகளில் குடிமக்களின் பங்கேற்பையும் உள்ளடக்கியதாகும்.
நற்பண்புகளை வளப்படுத்தக்கூடிய காரணிகள்:
• கல்வியறிவு
• விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை உருவாக்குதல்
• வெற்றி பெறும் வரை முயற்சி செய்தல்
• தன்னைத்தானே மதிப்பீடு செய்தல்
• ஏற்றுக் கொள்ளுதல்
• தன்னம்பிக்கை (Self confidence)
சுகாதாரத்தைப் பேணிக்காப்பது ஒருமுக்கிய அம்சமாகும். ஒவ்வொருமாணவருக்கும் சுகாதாரமாக இருக்க கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் மேலும் கீழே உள்ள வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
• அதிகாலையில் விழித்தெழல்
• பற்களை துலக்குதல்
• தினமும் குளித்தல்
• சுத்தமான ஆடைகளை அணிதல்
• காலணிகள் அணிதல்
• முடியை ஒழுங்கு செய்து, நகங்களை வெட்டுதல்
• உணவுக்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவுதல்.
கலைச்சொற்கள்
வழங்குதல் : Offer
பாதுகாத்தல் : Preserve
தன்னம்பிக்கை : Self confidence
மீள்பார்வை
• நற்பண்புகள் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் மேம்படுகின்றன.
• நேர்மையே சிறந்த கொள்கை.
• நற்பண்புகள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. தனிப்பட்ட நெறிமுறைகள்
2. பண்பாட்டு நெறிமுறைகள்
3. சமூக நெறிமுறைகள்
4. ஒழுக்க நெறிமுறைகள்
வினா விடை
மதிப்பீடு
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1 மனிதன் ஒரு சமூக விலங்கு
2 குடிமை என்ற சொல் ஒரு நாட்டின். குடிமக்கள் பற்றியதாகும்.
3 ஒரு நபரை மதிப்புமிக்க மனிதராக மாற்றுவதே கல்வியின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
4 மனிதராக மதிப்புமிக்க என்பது ஒவ்வொரு தனிநபருக்குமான அடிப்படை மதிப்பு ஆகும்.
5 தன் பணியில் கடமை தவறாமல் இருக்க வேண்டும்.
II. பொருத்துக
1 தனிப்பட்ட நெறிமுறை – ஒற்றுமை
2 பண்பாட்டு நெறிமுறை – பாதிக்கும் காரணி
3 நடத்தை சார்ந்த நெறிமுறை – சகிப்புத்தன்மை
4 சமூக நெறிமுறை – நேரந்தவறாமை
5. வேலையின்மை – நேர்மை
III. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1 குடிமகன் என்ற சொல்லை வரையது.
• ஒரு குடிமகன் என்பவன், ஒரு குறிப்பிட்ட நாட்டில் உறுப்பினராக இருந்து, பல்வேறு உரிமைகளை அனுபவித்து தமது கடமைகளை நிறைவேற்றுபவராவார்.
• தேசத்தில் வாழ, வாக்களிக்க, வேலை செய்ய உரிமை உண்டு.
2. ஐந்து தனிப்பட்ட ஒழுக்க நெறிகளைக் குறிப்பிடுக.
• தனிப்பட்ட நெறிமுறைகள்.
• பண்பாட்டு நெறிமுறைகள்.
• சமுக நெறிமுறைகள்.
• நற்பண்பு (விழுமம்) நெறிமுறைகள்.
• அரசியலமைப்பு நெறிமுறைகள்.
3. பண்பாட்டு நெறிமுறை பற்றி சிறுகுறிப்பு வரைக,
4. சமூக நெறிமுறைகள் என்றால் என்ன?
• மக்களுடன் நல்லுறவை எப்போதும் பெறுவது.
• பெரியோர்களை மதிப்பது.
• இயற்கையை மதித்து நடப்பது.
• சகிப்புத் தன்மையுடன் இருப்பது.
• நட்பை பேணி வளர்ப்பது.
5. நடத்தை சார்ந்த நெறிமுறைகள் என்றால் என்ன?
நற்பண்பு நெறிமுறைகள் என்பன :
• எழுத்தறிவு
• விழிப்புணர்வு மற்றும் நலன்களை உருவாக்குதல்
• வெற்றிபெறும்வரை கடினமாக முயற்சி செய்தல்
• தன் தனித் தன்மையை அறிதல்
• ஏற்றுக்கொள்ளுதல்
• தன்னம்பிக்கை போன்றவைகளாகும்.
IV. விரிவான விடையளிக்க.
1. அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றி எழுதுக
அரசியலமைப்பு நெறிமுறைகள் :
• பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
• தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்தல்.
• விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல்.
• இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்.
• சுற்றுச் சூழலைப் பராமரித்தல்.
• தேசிய சின்னங்களை கௌரவித்தல்.
•தியாகிகளுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் மதிப்பளித்தல்.
• நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காத்தல்.
• நாட்டுப்பற்றை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவைகளாகும்.
2. நற்பண்புகளை வளப்படுத்தக்கூடிய ஐந்து காரணிகளை எழுதுக
• அன்பு, பொருந்தன்மை, கருணை முதலியன.
• கலாச்சார நெறிமுறைகள், சமூகப் பண்பாடு மற்றும் பல்வேறு கலாச்சார அம்சங்கள்.
• நன்னடத்தையைக் கடைபிடிப்பது.
• சமத்துவத்தைப் பாதுகாத்தல்.
• நேர்மையைக் கடைபிடித்தல்.