Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 4th Social Science Books Tamil Medium Transport

Samacheer Kalvi 4th Social Science Books Tamil Medium Transport

சமூக அறிவியல் : பருவம் 2 அலகு 3 : போக்குவரத்து

அலகு 3

போக்குவரத்து

கற்றல் நோக்கங்கள்

• போக்குவரத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளல்.

• பல்வேறு வகைப்பட்ட போக்குவரத்து வகைகளைப் பட்டியலிடுநல்

• ஒவ்வொரு போக்குவரத்து வகையையும் விவரித்தல்.

போக்குவரத்து

போக்குவரத்து என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பொருள்கள் முதலியன ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம்பெயர்தல் ஆகும்.

போக்குவரத்தின் வகைகள்

இந்தியாவில் பலவிதமான போக்குவரத்து வகைகள் உள்ளன.

சக்கரங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் மனிதர்கள் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்றனர். தொலைவிலுள்ள இடங்களுக்குச் செல்ல அவர்கள் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தினர். இன்றும்கூட பலர் தங்களுடைய பயணங்களுக்கு சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இது நிலத்தின் வழியாக நடக்கும் போக்குவரத்து ஆகும். இப்போக்குவரத்து பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:

அ) சாலைவழி (Roadways)

இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே போக்குவரத்திற்காக சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைவழிப் போக்குவரத்து நம் நாட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் இணைக்கின்றது.

தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) – இவை நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் ஆகும்.  (எ.கா.) தே. நெ. 44 (NH 44) – ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். தங்க நாற்கரச் சாலையானது, இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகியவற்றை இணைக்கின்றது. 

மாநில நெடுஞ்சாலைகள் (State Highways) இச்சாலைகள் ஒரு மாநிலத்திற்குள் உள்ள முக்கியமான நகரங்களை இணைக்கின்றன. (எ.கா.) மா.நெ. 4 (SH 4) என்பது ஆற்காட்டிலிருந்து விழுப்புரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையாகும்.

மாவட்டச் சாலைகள் (District Roads) – இவை இரண்டு வகைப்படும். முக்கிய மாவட்டச் சாலைகள் (M.D.R.) மற்றும் பிற மாவட்டச் சாலைகள் (O.D.R.) ஆகும். இந்தச் சாலைகள் மாவட்டத்திலுள்ள சந்தைகளையும் அலுவலகங்களையும் இணைக்கின்றன.

கிராமச் சாலைகள் – இந்தச் சாலைகள் கிராமங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கின்றன. மேலும், அவற்றிற்கு அருகில் உள்ள பிற முக்கிய சாலைகளையும் இணைக்கின்றன.

பேருந்து இந்திய மக்களின் மிக முக்கியமான சாலைப் போக்குவரத்து சாதனமாகும். பேருந்துகள் அந்தந்த மாநில அரசுகளால் நிருவகிக்கப்படுகின்றன. பல மாநில அரசுகள் குளிரூட்டப்பட்ட மற்றும் தூங்கும் வசதி கொண்ட பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் சென்னையிலுள்ள புறநகர் பேருந்து நிலையமாகும்.

விரைவான பேருந்து போக்குவரத்து அமைப்பு (Bus Rapid Transit System) என்பது உயர்தர வசதி கொண்ட பேருந்து போக்குவரத்து வகையாகும். இந்தியாவில் சில நகரங்களில் இத்தகைய போக்குவரத்து அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பேருந்துகளுக்கு மட்டும் பயன்படும் சாலைகளை அமைக்கவுள்ளது.

செயல்பாடு

நீவிர் தினந்தோறும் உபயோகிக்கும் ஏதேனும் இரண்டு நிலவழிப் போக்குவரத்து வகைகளின் படங்களை ஒட்டுக.

ஆ) இரயில் போக்குவரத்து

இந்தியாவின் பல மாநிலங்களை இணைக்கும் போக்குவரத்து வகையில் இரயில் போக்குவரத்து முக்கியமானதாகும். 1853 ஆம் ஆண்டில் மும்பை மற்றும் தானே இடையே முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மிகப் பழமையான இரயில் நிலையங்களுள் ஒன்று 1856 இல் இராயபுரத்தில் கட்டப்பட்டது. இரயில் வண்டிகளை இயக்க ஆரம்ப காலங்களில் நீராவி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய இரயில் போக்குவரத்தானது கடந்த 170 ஆண்டுகளில் நீராவி இயந்திரங்களிலிருந்து அதிவேக இரயில் வண்டிகள் வரை மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

புறநகர் இரயில்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களை இணைக்கின்றன. இந்தியாவின் முதல் நவீன விரைவு இரயில் போக்குவரத்து அமைப்பு கொல்கத்தா மெட்ரோ இரயில் அமைப்பாகும். சென்னை மெட்ரோ இரயில் அமைப்பு 2015-ல் தொடங்கப்பட்டது.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் இரயில் போக்குவரத்து உலகிலேயே நான்காவது மிகப்பெரிய 

மேற்கு வங்காளத்திலுள்ள டார்ஜிலிங் ஹிமாலயன் இரயில் ஓர் உலக பாரம்பரியம் மிக்க தளமாகும். ஃது இந்தியாவிலேயே நீராவி மூலம் இயக்கப்படும் ஒரே இரயில் போக்குவரத்து ஆகும்.

பல்வேறு விதமான இரயில் வண்டிகளின் (எ.கா. மெட்ரோ, நீராவி, அதிவேக) படங்களை ஒட்டி, அவற்றின் பெயர்களைக் குறிப்பிடவும்.

இ) நீர்வழிப் போக்குவரத்து

இந்தியா மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. எனவே துறைமுகங்கள் வர்த்தகத்திற்கானமுக்கிய மையங்களாக இருக்கின்றன.

இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. எண்ணூர், சென்னை மற்றும் தீனதயாள் போர்ட் டிரஸ்ட் (காண்ட்லா) குஜராத் அதில் பாவ்நகர் தீபார்பந்தர் டாட்ரா நகர் ஹவேலி தூத்துக்குடி போன்ற மூன்று முக்கிய துறைமுகங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். கப்பல் போக்குவரத்துக் கழகம் என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாகும். அவை நாட்டிலுள்ள அனைத்து கடல்போக்குவரத்து உள்கட்டமைப்புகளையும் நிருவகிக்கிறது.

நீர்வழிப் போக்குவரத்தானது

1. படகு

2. அதிவேகப் படகு

3. கப்பல் மூலம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் படகுகள் மீன்பிடிப்பதற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

செயல்பாடு

1. இந்தியாவிலேயே இரண்டுக்கும் மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டுள்ள மாநிலம் எது?

2. தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் பெயர்களைக் கூறுக.

3. கடல் போக்குவரத்து தொடர்பான உள்கட்டமைப்பைக் கையாளும் அரசு நிறுவனத்தின் பெயரைக் கூறுக.

ஈ) வான்வழிப் போக்குவரத்து

வான்வழிப் போக்குவரத்து என்பது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மிக விரைவாகப் பயணம் செய்ய உதவும் போக்குவரத்து வகையாகும். ஆசியாவின் முதல் விமான சேவை இந்தியாவின் அஞ்சல்  மற்றும் தந்தித் துறையால் 1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் அலகாபாத்திலிருந்து நைனிக்கு கங்கை விமானம் புறப்படுதல் ஆற்றைக் கடந்து அஞ்சல் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

விமானப் போக்குவரத்து உள்நாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களை இணைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஹெலிகாட்டர்கள் (Helicopters) குறுகிய தூரத்திற்குப் பயணம் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. ஹரித்துவார், பத்ரிநாத் கேதார்நாத் மற்றும் டார்ஜிலிங் போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் பயணம் மேற்கொள்ள ஹெலிகாட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் எவையேனும் மூன்று சர்வதேச விமான நிலையங்களின் படங்களைச் சேகரித்து, உனது குறிப்பேட்டில் ஒட்டி அவற்றின் பெயர்களை எழுதவும்,

இந்தியாவிலேயே மிக உயரமான ஹெலிபேட் (Helipad) சியாச்சின் (Siachan) பனிப்பாறையில் உள்ளது. இது கடல்மட்டத்தில் இருந்து 21,000 அடி உயரத்தில் உள்ளது.

போக்குவரத்தின் நன்மைகள்

1) வேளாண் மற்றும் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சி

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மூலப்பொருள்களைக் கொண்டு செல்வதன் மூலம் விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியில் போக்குவரத்து அமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

2) வர்த்தக வளர்ச்சி

ஒரு நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கின்றது.

3) சுற்றுலாவை மேம்படுத்துதல்.

இது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்ய உதவுகிறது. ஒரு நல்ல போக்குவரத்து அமைப்பு இல்லாமல், சுற்றுலாவை மேம்படுத்துவது சாத்தியமில்லை.

விடையளிக்க முயற்சி செய்

1. விமானப் போக்குவரத்தில் எந்த வாகனம் குறுகிய காரப் போக்குவரத்திற்கு உதவுகிறது?

2. தமிழ்நாட்டில் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?

சொற்களஞ்சியம்

1. வர்த்தகம் – பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்குதல் மற்றும் விற்றல்.

2. இறக்குமதி – பொருள்கள் மற்றும் சேவைகளை வெளிநாட்டிலிருந்து வாங்குதல்.

3. ஏற்றுமதி – பொருள்கள் மற்றும் சேவைகளை வெளிநாட்டிற்கு விற்பனை செய்தல்.

4. ஹெலிபேட் – ஹெலிகாட்டர்கள் தரையிறங்கும் தளம்..

நினைவு கூர்க

❖ போக்குவரத்து என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பொருள்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதாகும்.

❖ நான்கு வகை போக்குவரத்து வகைகளாவன: சாலைவழி, இரயில்வழி, நீர்வழி மற்றும் வான்வழிப் போக்குவரத்துகள்.

❖  சாலைவழிப் போக்குவரத்து வகையில் மிதிவண்டிகள், பேருந்துகள் மற்றும் மகிழுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் நான்கு வகையான சாலைகள் உள்ளன. அவை தேசிய நடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட மற்றும் கிராமச் சாலைகள்.

❖ மாநிலங்களை இணைப்பதில் இரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

❖ நீர்வழிப் போக்குவரத்து என்பது நீர்நிலைகள் மூலம் நடைபெறும் போக்குவரத்தாகும். இது படகுகள், வேகப்படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் நடைபெறும்.

❖ வான்வெளிப் போக்குவரத்து மிக விரைவாகப் பயணம் செய்ய ஏற்றதாகும். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் (Helicopters) போன்றவற்றை நாம் பயணம் பயன்படுத்துகிறோம்.

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. பின்வருவனவற்றுள் நிலவழிப் போக்குவரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு எது?

அ) மகிழுந்து

ஆ) கப்பல்

இ) ஹெலிகாப்டர்

ஈ) விமானம்

விடை: அ) மகிழுந்து

2. ——————— ஆம் ஆண்டு முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.

அ) 2019

ஆ) 1853

இ) 1947

ஈ) 1950

விடை: ஆ) 1853

3. தங்க நாற்கரச் சாலை, முக்கிய நகரங்களுள் ஒன்றான

அ) சென்னை

ஆ) கன்னியாகுமரி

இ) மதுரை

ஈ) திருச்சி

விடை: அ) சென்னை

4. ————– பழமையான போக்குவரத்து வகையாகும்.

அ) கப்பல்

ஆ) மிதிவண்டி

இ) நடைப்பயணம்

ஈ) மாட்டு வண்டி

விடை: அ) கப்பல்

5. போக்குவரத்து வகைகள் ————— ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

விடை: ஆ) 4

II. பொருத்துக

1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம் – பேருந்து

2. முக்கியமான மக்கள் போக்குவரத்து – சென்னை

3. கன்னியாகுமரியிலிருந்து ஐம்மு வரை செல்லும் இரயில் – திருச்சிராப்பள்ளி

4. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கப்பல் துறைமுகம் – 2015

5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – ஹிம்சாகர் விரைவு ரயில்

விடை :

1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம் – திருச்சிராப்பள்ளி

2. முக்கியமான மக்கள் போக்குவரத்து – பேருந்து

3. கன்னியாகுமரியிலிருந்து ஐம்மு வரை செல்லும் இரயில் – ஹிம்சாகர் விரைவு ரயில்

4. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கப்பல் துறைமுகம் – சென்னை

5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – 2015

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

1. மக்களுக்குப் போக்குவரத்து தேவையானது அல்ல. விடை : தவறு

2. துறைமுகங்கள் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. விடை : சரி

3. நாட்டின் பல பகுதிகளை சாலைவழிப் போக்குவரத்து இணைக்கவில்லை. விடை : தவறு

4. சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகச் சிறியதாகும். விடை : தவறு

5. தமிழ்நாட்டில் ஐந்து பெரிய துறைமுகங்கள் உள்ளன. விடை : தவறு

IV. குறுகிய விடையளி.

1. போக்குவரத்து- வரையறு.

மனிதர்கள், விலங்குகள் மற்றும் பொருட்கள் முதலியன ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்வது போக்குவரத்து ஆகும்.

2. பல்வேறு போக்குவரத்து வகைகளைப் பட்டியலிடுக.

.• சாலை வழி

• இரயில் வழி

• நீர் வழி

• வான் வழி

3. மரயில் போக்குவரக விளக்கநாட்டிலிருங்கி செல்லும் நீ முச்சியமான இரண்டு இரயில் இணைப்புகளின் பெயர்களைக் கூறுக.

4. இரயில் போக்குவரத்தை விவரி. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மிக முக்கியமான இரண்டு இரயில் இணைப்புகளின் பெயர்களைக் கூறுக.

• இந்தியாவின் பல மாநிலங்களை இணைக்கும் போக்குவரத்து முறையில் இரயில்  போக்குவரத்து மிக முக்கியமானதாகும்.

• 1853ல் மும்பை மற்றும் தானே இடையே முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.

• இரயில் போக்குவரத்து வளர்ச்சி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

தமிழக முக்கிய இரயில் இணைப்புகள் :

• சென்னை – மும்பை – சென்னை விரைவு வண்டி

• சென்னை – புதுதில்லி – தமிழ்நாடு விரைவு வண்டி 

5. வான்வழிப் போக்குவரத்து என்றால் என்ன? வான்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும்.

• வான்வழிப் போக்குவரத்து என்பது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மிக விரைவாகப் பயணம் செய்ய உதவும் போக்குவரத்து முறையாகும்.

• விமானங்கள் மற்றும் சிறுவிமானங்கள் (ஹெலிகாப்டர்கள்) போன்றவை வான்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

6. போக்குவரத்தின் எவையேனும் மூன்று நன்மைகளை எழுதுக.

• வேளாண் மற்றும் தொழில்துறையின் உற்பத்தியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

• நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்துகிறது. நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

• சுற்றுலாவை மேம்படுத்த உதவுகிறது.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

செயல்திட்டம்

செய்தித்தாள்களைப் பயன்படுத்தி பேருந்து, ரயில், கப்பல் அல்லது விமானம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு மாதிரியை உருவாக்கி வகுப்பில் காண்பி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *