Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 4th Social Science Books Tamil Medium Rights and Duties of Children

Samacheer Kalvi 4th Social Science Books Tamil Medium Rights and Duties of Children

சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 3 : குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

அலகு 3

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

கற்றல் நோக்கங்கள்

மாணவர்கள் கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்

❖ ஒரு நாட்டின் குடிமகனைப் பற்றி வரையறுத்தல்

❖ குழந்தைகளின் உரிமைகளைப் பட்டியலிடுதல்

❖ உயிர்வாழ்வதற்கான உரிமையை விவரித்தல்

❖ வளர்ச்சிக்கான உரிமையை விளக்குதல்

❖ பாதுகாப்பு மற்றும் பங்கேற்பதற்கான உரிமை பற்றிய விவரங்களைக் கொடுத்தல்

அறிமுகம்

பள்ளியில் ரமேஷுக்கு இன்றைய நாள் ஓர் உற்சாகமான நாளாக அமைந்தது. வகுப்பில் பின்பற்ற வேண்டிய பல விதிமுறைகளை அவன் கற்றுக்கொண்டான். அவனது வகுப்பில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தன் தாயிடம் பகிர்ந்து கொண்டதைக் காண்போம்.

அம்மா, நாங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளின் பட்டியலை இன்று எங்களின் வகுப்பு ஆசிரியர் வழங்கியுள்ளார்.

 நன்று!

 பள்ளியில் வகுப்பு நேரத்தின் இடையில் எங்கள் இருக்கைகளை மாற்றக்கூடாது, அது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும். இதைப் போலவே, பல விதிமுறைகள் உள்ளன அம்மா!

 விதிமுறைகள் மிகவும் முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல், வகுப்பு ஒழுங்காக செயல்படத்தான் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 எனக்குப் புரிகிறது. எங்கள் ஆசிரியரும் அவ்வாறே கூறினார்.

 நாட்டின் அனைத்துக் குடிமக்களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பல உள்ளன என்பது உனக்குத் தெரியுமா?

 குடிமகன் என்பதற்கு என்ன பொருள், அம்மா?

 குடிமகன் என்பது ஒரு நாட்டின் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் ஆவார். ஒரு குடிமகன், நாடு தனக்கு வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிப்பவன் ஆவான்.

 சரி! இந்த விதிமுறைகளைக் குடிமக்களுக்காக அமைப்பது யார்?

இந்தியக் குடியுரிமையைப் பெற ஒரு வெளிநாட்டவர் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு வெளிநாட்டவர் இந்தியக் குடியுரிமையைப் பெற 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும்

❖ இந்த விதிமுறைகளை இந்திய அரசியலமைப்பு அமைக்கிறது.

❖ ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பு அரசியலமைப்பு என அழைக்கப்படுகிறது.

❖ ஒரு நாடு சீராக இணைந்து செயல்பட அரசியலமைப்பு சில விதிமுறைகளை வகுக்கிறது. 

உங்களுக்குத் தெரியுமா?

இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பு ஆகும். இவற்றின் அசல் ஆவணம் கையால் எழுதப்பட்டதாகும்.

  அதனால்தான்,இந்த விதிமுறைகளைப்பின்பற்றினால் நாங்கள் பொறுப்பு மிக்கவர்களாவோம் என்று எனது ஆசிரியர் கூறினார். அரசியலமைப்பு குடிமக்களைப் பொறுப்புமிக்கவர்களாக உருவாக்குகிறதா?

  ஆம். இது நம் நாட்டின் அனைத்து மக்களையும் பொறுப்புமிக்க குடிமக்களாக்க உதவுகிறது.

குழந்தைகளின் உரிமைகள்

உலகம் முழுவதும், வெவ்வேறான கொள்கைகள் மற்றும் உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு குழந்தையும் சமமாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய குழந்தைகளுக்காகச் சில உரிமைகள் உள்ளன. குழந்தைகள் வாழ்வதற்காகவும், ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்காகவும் இவ்வுரிமைகள் நடைமுறையில் உள்ளன. காவ்யாவும் அவளது தந்தையும் குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி பேசுவதைப் பார்ப்போம்.

 அப்பா! குழந்தைகளுக்கு ஏதேனும் உரிமைகள் உள்ளனவா?

ஆம் காவ்யா. உலகம் முழுவதும் பல நாடுகள் குழந்தைகளுக்காகச் சில அடிப்படை உரிமைகளை உருவாக்க ஒப்புக் கொண்டன. அவற்றில் நம் நாடும் ஒன்று.

 உண்மையாகவா? அப்பா, இதைப்பற்றி மேலும் விளக்கமாகக் கூற முடியுமா?

 நிச்சயமாக, குழந்தைகளுக்கான நான்கு முக்கிய உரிமைகள் உள்ளன. அவை,

1. உயிர்வாழ்வதற்கான உரிமை

2. வளர்ச்சிக்கான உரிமை

3. பாதுகாப்பு உரிமை

4. பங்கேற்பதற்கான உரிமை

உயிர்வாழ்வதற்கான உரிமை

 அப்பா, உயிர்வாழ்வதற்கான உரிமை பற்றி விளக்க முடியுமா?

 இது ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம், தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதாகும். மேலும் இது, அனைத்துக் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. 6 வயதிற்குட்பட்ட மற்றும் 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பல்வேறு உரிமைகள் உள்ளன. ஏனெனில், இரு பிரிவு வயதினரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான தேவைகள் வேறுபடுகின்றன.

 மிகவும் ஆர்வமாக உள்ளது. உயிர்வாழ்வதற்கான உரிமை பற்றி வேறு என்ன செய்தி உள்ளது?

  வாஷ் (WASH) திட்டமும் அதன் ஒரு பகுதியாகும். அதைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?

 வாஷ்? அந்தத் திட்டத்தில் என்ன செயல்பாடு நடைபெறுகிறது, அப்பா?

  வாஷ் (Wash) என்பது நீர் (Water), சுகாதாரம் (Sanitation) மற்றும் தூய்மையைக் (Hygiene) குறிக்கும். குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்குச் சுத்தமான நீர் கிடைக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். நீர் மூலம் பரவும் நோய்கள் பல உள்ளன. எனவே அந்நோய்களைத் தவிர்க்க, பாதுகாப்பான நீரைப் பெறுதல் என்பது மிக அவசியமாகும்.

 ஆம் அப்பா. உணவுக்கு முன்பும் பின்பும் கைகளைக் நன்றாகக் கழுவ வேண்டும் என்று என் ஆசிரியர்கூடக் கூறினார்.

 மிகவும் நல்லது. கைகளை சோப்பைக் கொண்டு கழுவுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்  வாஷ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 எதிர்வீட்டுக் குழந்தை முத்து, கடந்த வாரம் சில துளிகள் மருந்து உட்கொள்வதை நான் பார்த்தேன். இது உயிர்வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியா, அப்பா?

 ஆம் காவ்யா. அது இளம்பிள்ளை வாதத்திற்கான (Polio drops) மருந்து. சில நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, அவர்களுக்குப் பல வகையான தடுப்பூசிகள் (Vaccines) மற்றும் சொட்டு மருந்துகள் (Drops) வழங்கப்படுகின்றன.

  மிகவும் அருமை, அப்பா.

வளர்ச்சிக்கான உரிமை

ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி செல்லவும், தன் வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் உரிமை உண்டு. குழந்தைகளின் வளர்ச்சிக்கான உரிமை பற்றி ஆசிரியர் விஜயா அவர்கள் இன்று கற்பிக்கிறார்.

மித்ரா, பள்ளிக்கு வருவது உங்களுடைய உரிமை என்பது உனக்குத் தெரியுமா? அரசு பள்ளியில் நீங்கள் சேர்க்கை பெறுவதை யாராலும் தடுக்க இயலாது என்பதை நீ அறிவாயா?

 உண்மையாகவா? எனது வீட்டிற்கு அருகில், பள்ளிக்குச் செல்லாத சில குழந்தைகளை நான் பார்க்கிறேன்.

 ஆம், நீ பார்க்கலாம். ஆனால், 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக்குச் செல்வதற்கான உரிமை அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்குவது அரசின்(Government) கடமையாகும்.

 அப்படியா, நான் அவர்களின் பெற்றோர்களுக்கு இதைத் தெரிவித்து, அக்குழந்தைகளை நாளை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

  அது மிகவும் நல்லது, மித்ரா!

செயல்பாடு

சிந்தித்து எழுதுக.

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டால், நீ என்ன செய்வாய்?

1. ———————————————————

2. ————————————————————-

3. ——————————————————-

 படத்தில் என்ன காண்கிறீர்கள்?

 குழந்தைகள் பல்வேறு இடங்களில் பல்வேறுபட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

 இவர்களை குழந்தைத் தொழிலாளர்கள் (Child labour) என அழைக்கின்றோம். 14 வயதிற்குட்பட்ட  குழந்தைகளை வேலை செய்யக் கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது ஆகும்.

  உண்மையாகவா? குழந்தைத் தொழிலாளர்களாக வேலை குழந்தைகளைக் கண்டால், நாம் என்ன செய்ய வேண்டும்?

  சிறார் உதவி மைய எண் – Childline Number குழந்தைகளுக்கான உதவி எண் -1098(பத்து ஒன்பது எட்டு) ஐ அழைத்துத் தெரிவிக்க வேண்டும்.

 சரி. இந்த எண்ணை எந்த நேரத்திலும் நான் தொடர்பு கொள்ளலாமா? அதற்கு எவ்வளவு கட்டணம் ஆகும்?

   நீங்கள் எந்த நேரத்திலும் இந்த இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், அந்த அழைப்பிற்குக் கட்டணம் கிடையாது, நீங்கள் ஒரு குழந்தைத் தொழிலாளியைக் கண்டால், முதலில் அவன் அல்லது அவளுடன் பேசுங்கள். அவர்கள் அந்த வேலையைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் சிறார் உதவி மைய எண்ணுடன் தொடர்பு கொண்டு அத்தகவலைத் தெரிவிக்கலாம். அக்குழந்தைக்கு உதவுவார்கள்.

செயல்பாடு

குறிப்பு

அவர்கள்

உங்கள் வீட்டின் அருகில், பள்ளிக்குச் செல்லாத ஒரு குழந்தையை அடையாளம் காணவும். இக்கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யவும்.

1. குழந்தையின் பெயர்:. —————————

2. குழந்தையின் வயது: ——————————

3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம் / இல்லை 4. பள்ளிக்குச் செல்லாததற்கான காரணம்:. ———————-

5.அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்?! ——————————

இந்தக் கணக்கெடுப்பு பெற்றோர்களுக்கும் அக்குழந்தைக்குமானது. அந்த வகுப்பு குழந்தைகள் இருவர் கொண்ட குழுக்களாக, ஒரு குடும்பம் அல்லது குழந்தையைப் பேட்டி காணவும். ஒவ்வொரு நிலைபாட்டிற்கும் தீர்வுகள் குறித்து ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடலாம்.

பாதுகாப்பு உரிமை

அனைத்து சூழ்நிலைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற உரிமை குழந்தைகளுக்கு உள்ளது. இந்திய அரசு இதற்கான சட்டங்களை உருவாக்கியுள்ளது. இராமன் மற்றும் கவிதாவின் தாய் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைப் பற்றி, அக்குழந்தைகளிடம் கலந்துரையாடுவதைக் கேட்போம்

உங்கள் உடலில் எவரும் தொடக்கூடாத பகுதிகள் எவை என்பதைக் கூறுங்கள்?

 உதடுகள், மார்பு மற்றும் என் கால்களுக்கு இடையில்,

 ஆம்! உடலின் இப்பகுதிகளில் யாராவது உங்களைத் தொட்டால், நீங்கள் யாரிடம் கூறுவீர்கள்?

 உங்களைப் போலவே நம்பிக்கைக்குரிய, வயதில் மூத்த ஒரு கூறுவோம்.

 உடலின் இப்பகுதிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்துப் பகுதிகளிலும் அல்லது வேறு ஏதாவது பகுதியில் யாராவது உங்களைத் தொட்டால் நீங்கள் பயப்படுவீர்களா?

 இல்லை அம்மா. நான் பயப்பட மாட்டேன்.

 ஆம். மேலும், நான் என் குரலின் உச்சத்தில் கத்தி உதவிக்காகக் கூச்சலிடுவேன்.

 குழந்தைகளைத் தகாத முறையில் முறையில் தொடும் நபர்களை தண்டிக்கச் சட்டங்கள் உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியவை, ஆபத்திலிருந்து விலகி நம்பிக்கையுடன் இருத்தலே ஆகும்.

 எங்களைப் பாதுகாக்க வேறு விதிமுறைகள் ஏதாவது உள்ளனவா?

 ஆம். எந்த நபரும் குழந்தைகளைத் தாக்கவோ அல்லது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கவோ கூடாது என்ற மற்றொரு விதிமுறையும் உள்ளது.

 உண்மையாகவா?

  ஆம். குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வாழ, அச்சூழ்நிலையை உருவாக்க பெரியவர்களும் உதவ வேண்டும்.

பங்கேற்பதற்கான உரிமை

குழந்தைகள், அவர்களுக்குத் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க உரிமை உள்ளது. அவற்றைப் பற்றிக் கேள்விகள் கேட்டல், பகிர்தல் அவர்களைப் பாதிக்கக்கூடிய அவர்களே. முடிவெடுத்தல் ஆகியன அடங்கும். இவை குறித்து வகுப்பில் நடைபெறும் கலந்துரையாடலைக் கவனிப்போம்.

நம் பள்ளியைப் புதுப்பிக்க உள்ளோம். பள்ளியை மேம்படுத்த உங்கள் பரிந்துரைகள் அல்லது கருத்துக்கள் எங்களுக்குத் தேவை. அனைவரும் விவாதித்து ஒரு பட்டியலை உருவாக்க முடியுமா?

அப்படியே செய்கிறோம்.

 பள்ளியைப் புதுப்பித்தலுக்கான எங்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:-

1. நம் பள்ளியில் ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறைகள் இருக்க வேண்டும்.

2.ஒவ்வொரு நான்கு வகுப்பறைகளுக்கும் குடிநீர் வசதி வேண்டும்.

3.நாங்கள் அனைவரும் விளையாடுவதற்கு ஏதுவாக, விளையாட்டு அறையில் கேரம் போர்டுகள் (Carrom boards), சதுரங்கப் பலகைகள் (Chess boards), பந்துகள் மற்றும் பூப்பந்து இறகுகள் (Badminton racquets) அதிக அளவில் வேண்டும்.

 அற்புதமான யோசனைகள். இவற்றை நான் தலைமை ஆசிரியருக்கு அனுப்புகின்றேன்.

  நீங்கள் அனைவரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று, உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தது மிகவும் சிறப்பாக இருந்தது. இதுவும் உங்களுடைய உரிமையாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

குழந்தைகளுக்கு அவர்கள் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளிலும் கலந்துரையாடவும் அவற்றைச் செயல்படுத்தவும் உரிமை உண்டு.

சொற்களஞ்சியம்

1. புதுப்பித்தல் – சரிசெய்து மேம்படுத்துதல்

2. உயிர் வாழ்தல் – தொடர்ந்து வாழ்வதற்கான நிலை

3. தடுப்பூசி – சில நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும் மருந்து

4. பாதுகாப்பு – சில தீமைகளிலிருந்தும் காயங்களிலிருந்தும் காத்தல்

5. பொருத்தமற்றது – சரியானதன்று

நினைவு கூர்க

❖ நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உரிமைகளை அனுபவித்து, கடமைகளைச் செய்தல் வேண்டும்.

❖  குழந்தைகளுக்குச் சிறப்பு உரிமைகள் உள்ளன.

❖  குழந்தைகள் தம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக, ஆரோக்கியமான உணவைக் கொண்டிருப்பதற்கான உரிமை உண்டு.

❖  குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லவும், நல்ல கல்வியைப் பெறவும் உரிமை உண்டு.

❖  ஆபத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற உரிமை குழந்தைகளுக்கு உண்டு.

❖  குழந்தைகள் தொடர்பான செயல்களில் பங்கேற்க, அவர்களுக்கு உரிமை உண்டு.

மதிப்பீடு

I. சரியான விடையைத் செய்க.

1. இந்திய சட்டத்திற்கு எதிரானது.

அ. பள்ளியில் குழந்தைகள் படித்தல்.

ஆ.தொழிற்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.

இ. பள்ளி செயல்பாடுகளில் குழந்தைகள் பங்கேற்றல்.

ஈ. குழந்தைகள் தரமான உணவைப் பெறுதல்.

விடை: ஆ.தொழிற்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.

2. போலியோ சொட்டு மருந்து —————– களுக்கு வழங்கப்படுகின்றன.

அ. ஆண்

ஆ. பெண்

இ. குழந்தை

ஈ. மூத்த குடிமக்கள்

விடை: இ. குழந்தை  

3. ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பை —————————- என்பர்.

அ. கதைப் புத்தகம்

ஆ. விதிமுறைப் புத்தகம்

இ. அரசியலமைப்பு

ஈ. பாடநூல்

விடை: இ. அரசியலமைப்பு

4. பின்வருவனவற்றில் எது குழந்தைகளின் உரிமை இல்லை?

அ. ஓட்டுநர் உரிமம் பெறுதல்

ஆ. கல்வி பெறுதல்

இ. போதுமான உணவைப் பெறுதல்

ஈ.ஆரோக்கியமாக வாழ்தல்

விடை: அ. ஓட்டுநர் உரிமம் பெறுதல்

II. சரியா, தவறா என எழுதுக.

1. போலியோ சொட்டு மருந்தைப் பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை ஆகும். (விடை : சரி)

2. அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் உள்ளன. (விடை : சரி)

3. 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வேலை செய்ய வேண்டும். (விடை: தவறு)

4. குழந்தைகளைத் துன்புறுத்துவது தவறானது. (விடை : சரி)

5. குழந்தைகள் தவறான தொடுதலை அறிந்திருக்க வேண்டும். (விடை : சரி)

III. பின்வருவனவற்றைப் பொருத்துக

1. சிறார் உதவி மைய எண் – ஒரு நாட்டின் உறுப்பினர்

2. தடுப்பூசிகள் – சுகாதாரம்

3. வாஷ் (WASH) – சட்டவிரோதமானது

4. குடிமகன் – நோய்களிலிருந்து பாதுகாப்பு

5. குழந்தைத் தொழிலாளர் – 1098

விடை

1. சிறார் உதவி மைய எண் – 1098

2. தடுப்பூசிகள் – நோய்களிலிருந்து பாதுகாப்பு

3. வாஷ் (WASH) – சுகாதாரம்

4. குடிமகன் – ஒரு நாட்டின் உறுப்பினர்

5. குழந்தைத் தொழிலாளர் – சட்டவிரோதமானது

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. தொடக் கூடாத மூன்று பகுதிகள் யாவை?

உதடுகள், மார்பு மற்றும் என் கால்களுக்கு இடையில் தொடக் கூடாது.

2. குழந்தைகளாகிய உங்களுக்கு பல்வேறு உரிமைகள்

• உயிர் வாழ்வதற்கான உரிமை,

• வளர்ச்சிக்கான உரிமை,

• பாதுகாப்பு உரிமை,

• பங்கேற்பதற்கான உரிமை போன்றவை ஆகும்

3. உயிர்வாழ்வதற்கான உரிமை – குறிப்பு வரைக.

• ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல்.

• இது அனைத்துக் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

• வாஷ் (WASH) திட்டமும் ஒரு பகுதியாகும் (6 வயதுக்குட்பட்ட மற்றும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு).

4. பங்கேற்பதற்கான உங்கள் உரிமையை எப்போதாவது நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்களா? விவரிக்க.

• பங்கேற்பதற்கான உரிமையைப் பள்ளியில் பயன்படுத்தியுள்ளேன்.

• பள்ளியைப் புதுப்பித்தல் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கலந்துரையாடிய கூட்டத்தில் பங்கேற்றேன். அதன் பரிந்துரைகள் பின்வருவன.

• பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் குடிநீர் வசதி இருக்க வேண்டும்.

• நான்கு வகுப்பறைகளுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும்.

• விளையாடுவதற்கு ஏதுவாக விளையாட்டு அறையில் சதுரங்கப் பலகைகள், பந்துகள், பூப்பந்து இறகுகள் இருக்க வேண்டும்

5. உரிமைகள் முக்கியமானவை. ஏன்?

• சுதந்திரமாக வாழ்வதற்கும்,

• கல்வி கற்கவும்,

• நல்ல கருத்துக்களை வெளியிடவும்,

• எல்லா நிகழ்வுகளிலும் பங்குபெறவும்,

• பாதுகாப்புடன் வாழ்வதற்கும்,

• ஒரு நாட்டின் குடிமகனாக வாழவும்,

• விதிமுறைகளைப் பின்பற்றவும்,

மேற்கண்ட காரணங்களினால் உரிமைகள் முக்கியமானதாகும்.

செயல்திட்டம்

இந்த பாடத்தில் விவாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளில், தேவையை மையமாகக் கொண்ட ஏதேனும் ஓர் உரிமையை 5 நபர்கள் கொண்ட குழுக்களாக சேர்ந்து ஒரு சிறிய நாடகமாக நடித்துக் காட்டவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *