சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 1 : ஆற்றங்கரை அரசுகள்
அலகு 1
ஆற்றங்கரை அரசுகள்
கற்றல் நோக்கங்கள்
❖ சங்ககாலத் தமிழ் அரசுகளைப் பற்றி அறிதல்
❖ சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் பற்றி அறிதல்
❖ சங்ககால நிர்வாக, பொருளாதார மற்றும் சமூக நிலைகளைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல்
❖ குறுநில மன்னர்களைப் பற்றி அறிதல்
“வளையாத செங்கோலுக்குச் சேர மன்னன்!
தஞ்சையின் அரிசி வளத்திற்குச் சோழ மன்னன்!
முத்தமிழ் முத்துக்குப் பாண்டிய மன்னன்!
குகைக் கோயில் ரதங்களுக்குப் பல்லவ மன்னன்!
நீங்களோ! தமிழ் மண்ணின் தங்கங்கள் மற்றும் சிங்கங்கள்!”
முன்னுரை
பண்டைய காலத்தில் மக்கள் ஆற்றங்கரை ஓரங்களில் குடியேறித் தங்களது வாழ்க்கையைத் தொடங்கினர்.
அவர்கள், வேளாண்மைப் பயிர்களை உற்பத்தி செய்தனர். மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை மேய்த்தனர். இதன் விளைவாக ஆற்றங்கரை ஓரங்களில் சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் போன்ற இதர அரசுகள் தோன்றின.
அரசர்கள் ஆற்றங்கரைகள்
சேரர்கள் – பொய்கை
சோழர்கள் – காவிரி
பாண்டியர்கள் – வைகை
பல்லவர்கள் – பாலாறு
சேரர்கள்
மூவேந்தர்களில் சேரர்களே முதன்மையானவர்கள் இவர்கள் பொய்கை ஆற்றங்கரையை மையமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்களின் தலைநகரம் வஞ்சியாகும்.
சேரநாடு தற்போதைய ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி போன்ற மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. கேரளாவும் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
பெரும்பாலான சேர நாட்டுப் பகுதிகள், உயரமான மலைகளால் சூழப்பட்டிருந்தன. சேரர்களில் மிகவும் புகழ் பெற்ற அரசர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் அவருடைய மகன் சேரன் செங்குட்டுவனும் ஆவர்.
நெடுஞ்சேரலாதன் இமயம்வரை படையெடுத்துச் சென்று, வில் அம்பு பொறித்த கொடியினை இமயத்தில் பறக்கவிட்டார். அதனால் அவர் ‘இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்’ என்ற பெயர் பெற்றார்.
தன் தந்தையைப் போலவே சேரன் செங்குட்டுவனும் இமயம்வரை படையெடுத்துச் சென்று கனக விஜயரைத் தோற்கடித்தார். இவ்வெற்றியினைப் போற்றும் விதத்தில் இமயத்திலிருந்து கல் கொண்டு வந்து, கண்ணகிக்குச் சிலை வடித்து கோயில் கட்டினார். இக்கோயிலைக் கட்டுவதற்குத் தேவையான கற்கள் சிறைப் பிடிக்கப்பட்ட வீரர்களின் தலைகளில் வைத்துக் கொண்டு வரப்பட்டன.
இச்சிறப்பினை, செங்குட்டுவனின் சகோதரன் இளங்கோவடிகள் எழுதிய காப்பியமான சிலப்பதிகாரம் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம். சங்ககால சேர அரசர்களைப் பற்றி அறிந்து கொள்ள பதிற்றுப்பத்து பெரும் உதவியாக விளங்குகிறது.
சேரர்கள் :
1 ஆறு – பொய்கை
2 தலைநகரம் – வஞ்சி
3. துறைமுகம் -தொண்டி, முசிறி
4. கொடி – வில் அம்பு
விடையளிக்க முயற்சி செய்
❖ முற்கால சேரர்களில் புகழ் பெற்ற அரசர்கள் யாவர்?
❖ இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட காப்பியத்தின் பெயர் என்ன?
சோழர்கள்
உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு காவிரி ஆற்றங்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோழர்கள் ஆட்சி செய்தனர். பட்டினப்பாலையின் ஆசிரியரான கடியலூர் உருத்திரங்கண்ணனார், “சோழநாடு சோறுடைத்து” என்று குறிப்பிட்டதன் மூலம் சோழநாடு அரிசிக்குப் புகழ் பெற்றதாகத் திகழ்ந்தது என்பதனை அறிய முடிகிறது.
திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கடலூர் ஆகிய இன்றைய மாவட்டங்களை உள்ளடக்கியதாகச் சோழப் பேரரசு விளங்கியது. காவிரியின் ஆற்றங்கரையில் இருந்ததால், சோழப் பேரரசு ஓர் வளமிக்கப் பகுதியாக இருந்தது. அரசர்கள் தங்களது மேலான நீதி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சி செய்தனர். சோழர்களின் புகழ்மிக்க அரசராகத் திகழ்ந்தவர் ‘கரிகால் பெருவளத்தான்’ என அழைக்கப்பட்ட கரிகாற்சோழன் ஆவார்.
மிக இளம் வயதிலேயே அரியணை ஏறிய கரிகாலன், மிகத் திறமையாக ஆட்சி செய்தார். அவர் இளம் வயதினராக இருக்கும் பொழுது, அவரது எதிரிகளால் சிறை வைக்கப்பட்டார். மேலும் அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அறை, எதிரிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இத் தீவிபத்தினால் தமது காலில், ஏற்பட்ட தீப்புண்ணின் விளைவாகப் பின்னாளில் ‘கரிகாலன்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.
மேலும் தமது இளம் வயதிலேயே ஒருமுதியவர் போல் மாறுவேடமிட்டு, ஒரு வழக்கினைத் தீர்த்து வைத்த பெருமையும் கரிகாலனையே சாரும்.
வெண்ணி மற்றும் வாகைப்பரந்தலை என்னும் போர்க்களத்தில், சேரர் மற்றும் பாண்டியர்களைக் கரிகாலன் தோற்கடித்தார். மேலும் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று, அங்கு சிறைப் பிடிக்கப்பட்ட போர்க்கைதிகளைக் கொண்டு காவிரியின் மீது கல்லணையைக் கட்டினார். 2000 ஆண்டுகள் ஆகியும் கல்லணை இன்றும் கரிகாலனின் புகழ்பாடும் வண்ணம் மிகக் கம்பீரமாகக் காவிரி ஆற்றங்கரையில்காட்சியளிக்கின்றது.
சோழர்கள்:
1.ஆறு – காவிரி
2. தலைநகரம் – உறையூர்
3.துறைமுகம் – காவிரிப் பூம்பட்டினம்
4.கொடி – புலிக்கொடி
தெரிந்து கொள்ளலாமா?
❖ கல்லணை கி.மு.(பொ.ஆ.மு) 2-ஆம் நூற்றாண்டில் கரிகாற்சோழனால் கட்டப்பட்டது. உலகில் இன்றளவும் அழியாமல் பயன்பாட்டில் இருக்கக்கூடிய மிகப் பழைமையான அணை இதுவேயாகும். இவ்வணை கற்கள் மற்றும் சுண்ணாம்புக் கலவைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
விடையளிக்க முயற்சி செய்!
❖ பண்டைய சோழ அரசர்களுள் புகழ் பெற்ற அரசர் யார்?
❖ சோழர்களின் தலைநகரம் மற்றும் துறைமுகங்களின் பெயர்களைக் கூறுக.
பாண்டியர்கள்
பாண்டியர்கள், வைகை ஆற்றங்கரையில் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். பண்டைய பாண்டியப் பேரரசானது மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
சங்ககாலத்தில், மிகவும் புகழ்பெற்ற நகரமாக மதுரைத் திகழ்ந்தது. பாண்டிய நாடு முத்துக்குப் புகழ் பெற்றதாக இருந்தது. மூன்று தமிழ்ச் சங்கங்கள் பாண்டியப் பேரரசில் கூட்டப்பட்டன. 3-ஆவது தமிழ்ச் சங்கம் தற்போதைய மதுரையில் கூட்டப்பட்டது முத்தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சாரும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் மற்றும் சிலப்பதிகார பாண்டிய நெடுஞ்செழியன் ஆகியோர் பாண்டியர்களில் புகழ்மிக்க அரசர்களாவர்.
பாண்டிய நெடுஞ்செழியன் தமது இளமைக் காலத்தில் சேரர்கள், சோழர்கள் மற்றும் குறுநில மன்னர்களின் கூட்டுப்படையைத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்தார். இவ்வெற்றியின் விளைவாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்’ என்று பெயர் பெற்றார்.
சிலப்பதிகாரம்:
பாண்டிய நெடுஞ்செழியன் தமது ஆட்சி காலத்தின்போது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். கோவலனின் மனைவி கண்ணகி தன்னுடைய கணவன் குற்றமற்றவர்
என் கோவலன், குற்றமற்றவர் என்பதை அறிந்த பாண்டிய நெடுஞ்செழியன் காம் கவறாகக்கீர் வழங்கியதை எண்ணி வருத்தப்பட்டார். “யானோ அரசன்,யானே கள்வன் கெடுகவென் ஆயுள் தமது உயிரைவிட்டார். அவருடன் கூறிக் கீழே விழுந்த அவரது மனைவு கோப்பெருந்தேவியும் தனது உயிரைத் தியாகம் செய்தார பாண்டியர்களின் நிர்வாக முறையைப் பற்றி மாங்குடி மருதனார் தமது மதுரைக் காஞ்சி’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பாண்டியர்கள்:
1.ஆறு – வைகை
2. தலைநகரம் – மதுரை
3. துறைமுகம் – கொற்கை
4. கொடி – மீன்
விடையளிக்க முயற்சி செய்!
❖ சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னன் யார்?
❖ மதுரைக் காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் யார்?
❖ பாண்டியர்களின் கொடியில் குறிக்கப்பட்டுள்ள சின்னம் எது?
தெரிந்து கொள்ளலாமா?
பண்டைய மதுரை மாநகரில் ‘நாளங்காடி’ என்ற பகல்நேரக் கடைகளும், ‘அல்லங்காடி’ என்ற இரவு நேரக் கடைகளும் இருந்தன.
பல்லவர்கள்
பண்டைய பல்லவ மரபினர் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, பாலாற்றுப் பகுதியில் ஆட்சி செய்தனர். இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதி தமிழகத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது.
முற்காலப் பல்லவ மரபை நிறுவியவர் சிவஸ்கந்தவர்ம பல்லவன் ஆவார். இவர் தொண்டை மண்டலத்தை ஒருங்கிணைத்து ஆட்சி செய்தார். அக்காலத்துச் சிறந்த பல்லவ மன்னர்கள் சிவஸ்கந்தவர்மன் மற்றும் விஷ்ணுகோபன் ஆவர்.
பிற்காலப் பல்லவ மரபு சிம்மவிஷ்ணுவின் ஆட்சியிலிருந்து துவங்குகிறது. மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் பிற்காலப் பல்லவர்களில் சிறந்த அரசர்களாவர். குடைவரைக் கோயில்களையும் ஒற்றைக் கல் ரதங்களையும் அமைத்தது பல்லவர்களின் மிகப்பெரும் சாதனைகள் ஆகும்.
பல்லவர்கள்:
1 ஆறு – பாலாறு
2. தலைநகரம் – காஞ்சிபுரம்
3. துறைமுகம் – மகாபலிபுரம்
4. கொடி – நந்தி
உங்களுக்குத் தெரியுமா?
மகேந்திரவர்மனின் மகனான நரசிம்மவர்மன் பல்லவர்களுள் சிறப்பு பெற்றவர் ஆவார். அவர் சிறந்த மல்யுத்த வீரராய் திகழ்ந்ததால் ‘மாமல்லன்’ என்ற பட்டம் பெற்றார். இவரது வீரத்தை போற்றும் விதமாக வரலாற்றுச் சிறப்பு பெற்ற துறைமுக நகரமான மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கட்டப்பட்டது.
விடையளிக்க முயற்சி செய் !
❖பல்லவர்களின் தலைநகரம் எது?
❖ தமிழ்நாட்டில் தொண்டை மண்டலம்’ எந்த திசையில் அமைந்துள்ளது?
குறுநில மன்னர்கள்
மூவேந்தர்களை தவிர்த்து, மிகச்சிறிய நிலப்பரப்பினை ஆட்சி செய்தவர்கள் குறுநில மன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் பேகன், பாரி, நெடுமுடிக் காரி, ஆய், அதியமான், நள்ளி, வல்வில் ஓரி ஆகியோர் மிகவும் முக்கியமானவர்
இம்மன்னர்கள் தங்களுடைய கொடைத் திறனால் மிகவும் புகழ்பெற்றவர்களாக அறியப்பட்டனர். பொதுவாக இவர்கள் ‘கடையேழு வள்ளல்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
விடையளிக்க முயற்சி செய்!
❖ ஒளவையாருக்கு நெல்லிக்கனியை வழங்கியவர் யார்?
❖ மயிலுக்குத் தமது போர்வையை தந்தவர் யார்?
சங்ககால நிர்வாக நிலை
கோ, கோன், வேந்தன், கொற்றவன், இறை என்னும் சிறப்புப் பெயர்களால் அரசர் அழைக்கப்பட்டார். ஒவ்வொரு அரசும் தனக்கென கொடி, சின்னம், செங்கோல், வாள், பறை மற்றும் வெண்கொற்றக்குடை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
அரசர்கள் திறமையான போர்வீரர்களாக இருந்தது மட்டுமல்லாமல், சிறந்த படைப்பாளிகளாகவும் இருந்தனர். அரசுரிமை, மரபுரிமையைப் பின்பற்றியே இருந்தது. அரசனின் மூத்தமகன் பட்டத்திற்கு வருவது இயல்பான ஒன்றாக இருந்தது. அரசர்கள் தங்களது மக்கள் மீது மிகவும் பொறுப்புடையவர்களாக இருந்தனர்.
விருந்தோம்பல்
சங்க காலத்தில் விருந்தோம்பல் என்னும் பண்பு மிக முக்கிய இடத்தை வகித்தது விருந்தினரை வீட்டிற்கு வெளியில் காத்திருக்க விட்டு, குடும்ப உறுப்பினர்கள் உண்ணும் உணவு அமிர்தமாக இருப்பினும் அது ஒரு பாவச் செயலாகக் கருதப்பட்டது.
விருந்தினரின் வருகையை அறிவிக்கும் காகத்தைப் புகழ்ந்து பாடிய புலவர், காக்கைப் பாடினியார் என்ற பெயரைப் பெற்றார். விருந்தோம்பல் என்பது பண்டைய தமிழர்களின் முக்கிய கடமையாக இருந்தது என்று புறநானூறு கூறுகிறது.
பொருளாதார நிலை
பொருளாதார வளர்ச்சியினால் சங்க காலத்தில் பல்வேறு கலை மற்றும் கைத்தொழில்கள் வளமுற்றிருந்தன. இதனால் மக்கள் இக்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
நெல் மற்றும் கரும்பு ஆகியவை முக்கிய பயிர்களாகும். அதே சமயத்தில் வரகு, தினை, சாமை ஆகியவையும் பயிரிடப்பட்டன.
“வரப்புயர நீர் உயரும்,
நீர் உயர நெல் உயரும்,
நெல் உயர குடி உயரும்,
குடி உயர கோல் உயரும்,
கோல் உயர கோன் உயர்வான்”
– ஒளவையார்
மேற்கண்ட பாடல் வரிகள் மூலம், அரசர்களின் செல்வச் செழிப்பு என்பது வேளாண்மை வளர்ச்சி மூலமே ஏற்பட்டது என்பதை ஔவையார் குறிப்பிடுகிறார்.
தெரிந்து கொள்ளலாமா?
ஒளவையார் வரப்புயர’ என்று வாழ்த்துவதன் மூலம் சங்ககாலத்தில் வேளாண்மைக்கு கொள்ளலாம்.
பெண்களின் நிலை
கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை நாம் அறிந்து பெண்கள், சமுதாயத்தில் மதிப்பினைப் பெற்றிருந்தனர். ஒருவனுக்கு ஒருத்தி” என்ற ஒருதார மணம் பரவலாகக் காணப்பட்டது. பெண்கள் ஆண்களுக்கு இணையான வீரத்தினைப் பெற்றிருந்தனர். “முதல் நாள் போர்க்களத்தில் ஒரு பெண் தந்தையையும் இரண்டாவது மாலில் கன் ஒளு வனையும் இந்து விட்டரள் /இக்குகைய மிகப்பரி இழப்புகள் இருந்த போதிலும், அவளுடைய ஆர்வத்தோடு போர்க்களத்திற்கு அனுப்புகிறாள்” என்ற செய்தியைப் புறநானூறு வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் சங்க காலத்தில் பெண்கள், புலியைத் தங்களுடைய முறத்தால் அடித்து விரட்டிய செய்தியையும் புறநானூறு வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
திருவிழாக்கள்
சங்க காலத் தமிழர்கள் பல்வேறு திருவிழாக்களை கொண்டாடினர். கார்த்திகை, திருவாதிரை மற்றும் அறுவடைத்திருவிழா போன்றவைமுக்கியமானவையாகும்
மிகவும் புகழ்பெற்ற ‘இந்திரவிழா’ புகார் நகரத்தில் கொண்டாடப்பட்ட செய்தியைப் ‘பட்டினப்பாலை’ என் நூலில் ‘உருத்திரங்கண்ணனார்’ கூறியுள்ளார்.
விடையளிக்க முயற்சி செய்!’
தற்பொழுது தமிழர்களால் கொண்டாடப்படும் விழாக்களைப் பட்டியலிடுக.
மதிப்பீடு
அ. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. சேர, சோழ, பாண்டியர்கள் ————– என அழைக்கப்பட்டனர்.
அ) நாயன்மார்கள்
ஆ) மூவேந்தர்கள்
இ) குறுநில மன்னர்கள்
விடை: ஆ) மூவேந்தர்கள்
2. சேரர்களில் புகழ் அற்ற ரசராகக் கருதப்படு
அ) கரிகாலன்
ஆ) வல்வில் ஓரி
இ) சேரன் செங்குட்டுவன்
விடை: இ) சேரன் செங்குட்டுவன்
3. சோழர்களின் துறைமுகம் ————
அ) காவிரிபூம்பட்டினம்
ஆ) சென்னை
இ தொண்டி
விடை: அ) காவிரிபூம்பட்டினம்
4. பாண்டியர்களின் கொடியில் இடம்பெற்றுள்ள சின்னம் ————- ஆகும்.
அ) மயில்
ஆ) மீன்
இ) புலி
விடை: ஆ) மீன்
5. முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் ————– ஆவார்.
அ) பாரி
ஆ) பேகன்
இ) அதியமான்
விடை: அ) பாரி
ஆ. பொருத்துக.
1. சேரர்கள்- வைகை
2. சோழர்கள் – பாலாறு
3. பாண்டியர்கள் – பொய்கை
4. பல்லவர்கள் – காவிரி
விடை:
1. சேரர்கள் – பொய்கை
2. சோழர்கள் – காவிரி
3. பாண்டியர்கள் – வைகை
4. பல்லவர்கள் – பாலாறு
இ. குறுகிய விடையளி.
1. சேரர்களில் புகழ் பெற்ற அரசர்கள் யாவர்?
• இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்
• சேரன் செங்குட்டுவன்
2. ‘கடையேழு வள்ளல்கள்’ என்போர் யாவர்?
• பேகன்
• அதியமான்
• பாரி
• நெடுமுடிக்காரி
• வல்வில் ஓரி
• ஆய்
• நல்லி
3. கரிகாலனின் சாதனைகளைக் குறிப்பிடுக.
• வெண்ணி மற்றும் வாகைப் பறந்தலைப் போரில் சேரர் மற்றும் பாண்டியர்களை தோற்கடித்தார்.
• காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டியுள்ளார்.
4. பல்லவர்களின் தலைநகரத்தையும் கடற்கரை நகரத்தையும் குறிப்பிடுக.
• பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம்.
• அவர்களின் கடற்கரை நகரம் மகாபலிபுரம்.
ஈ. யாருடைய கூற்று?
1. “யானோ அரசன், யானே கள்வன்”.
பாண்டியன் நெடுஞ்செழியன்.