Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 6

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 6

தமிழ் : பருவம் 3 இயல் 6 : நல்வழி

6. நல்வழி

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்அந் நாளும்அவ்வா(று)

ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு 

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் 

இல்லைஎன மாட்டார் இசைந்து

– ஔவையார்

பாடல் பொருள்

ஆற்றில் நீர் வற்றியதால், அதன் வறண்ட மணல்பகுதி, வெப்பத்தால் சூடேறி நடப்பவரின் பாதங்களைச் சுடும். அத்தகைய நிலையிலும் அந்த ஆற்று மணலைத் தோண்டுகின்றபோது, சுரக்கின்ற ஊற்றானது, உலக மக்களுக்கு உணவாய் அமையும். அதுபோல, உயர்ந்த குடிப்பிறப்பில் தோன்றியவர்கள், வறுமைநிலையில் வாடினாலும், தம்மிடம் வந்து பொருள் தருக எனக் கேட்பவர்க்கு இல்லை எனக் கூறாது, தம்மால் முடிந்தவரை கொடுத்து உதவுவார்கள்.

ஆசிரியர் குறிப்பு

நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல நெறிகளைக் கூறுவது, நல்வழி. இந்நூலை இயற்றியவர், ஔவையார். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு மொத்தம் 41 வெண்பாக்கள் அமைந்துள்ளன.

பயிற்சி

வாங்க பேசலாம்

உங்களிடம் ஒரு பழம்தான் இருக்கிறது. உங்கள் தம்பியும் தங்கையும் அந்த பழம் வேண்டுமென்று கேட்கிறார்கள். அவர்களுக்குப் பழத்தைப் பிரித்துக் கொடுப்பீர்களா? நீங்களே எடுத்துக் கொள்வீர்களா? உங்கள் கருத்தைக் கூறுக.

அந்த ஒரு பழத்தை இரண்டாகப் பிரித்து பாதியை என் தம்பிக்கும் மீதியை என் தங்கைக்கும் கொடுத்து அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்வேன்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “உலகூட்டும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

அ) உல + கூட்டும்                           

ஆ) உலகு + கூட்டும் 

இ) உலகு + ஊட்டும்

ஈ) உலகூட்டு + உம் 

விடை : இ) உலகு + ஊட்டும்

2. ‘அந்நாளும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________.

அ) அந் + நாளும்                                     

ஆ) அ + நாளும் 

இ) அந்நா + ளும்                                     

ஈ) அந்த + நாளும்

விடை : ஆ) அ + நாளும்

3. ‘இசைந்து’ இச்சொல்லின் பொருள் _______________.

அ) மறுத்து                     

ஆ) பாடி 

இ) ஒப்புக்கொண்டு                                   

ஈ) உதவி

விடை : இ) ஒப்புக்கொண்டு

இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக.

1.  ஆற்று  –  ஊற்று 

2.  நல்ல  –  இல்லை 

3.  அடிசுடும் – குடிப்பிறந்தார்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?

நல்வழி என்னும் நூலை எழுதியவர் ஔவையார். 

2. ஊற்று நீரைக் கொடுப்பது எது?

ஆற்று மணலைத் தோண்டுகிறபோது சுரக்கின்றது ஊற்று. 

3. நல்ல குடிப்பிறந்தாரின் இயல்பு எத்தகையது?

நல்ல குடிப்பிறப்பில் தோன்றியவர்கள், வறுமைநிலையில் வாடினாலும்,  தம்மிடம் வந்து பொருள் தருக எனக் கேட்பவர்க்கு இல்லை எனக் கூறாது,  தம்மால் முடிந்தவரை, கொடுத்து  உதவுவார்கள். 

பாடலை நிறைவு செய்க.

ஆற்று நீரில் துள்ளியே 

அழகாய் நீந்தும் மீன்களே! 

வாழும் வரை நீங்களே

வண்ண வண்ண மீன்களே! 

அன்னை கடலில் வாழும்

சின்ன சின்ன நண்பர்களே! 

சிரித்து மகிழ்ந்து வாழுங்கள் 

சிற்றினம் நிதம் காணுங்கள்

கலையும் கைவண்ணமும்

பொருத்துக

நல்ல – மனம்

ஆற்று – குணம்

மணல் – நீர்

உதவும் – வீடு

விடை :

நல்ல – குணம் 

ஆற்று – நீர்

மணல் – வீடு

உதவும் – மனம்

மொழியோடு விளையாடு

இரண்டாம் எழுத்தை மாற்றிப் புதிய சொல் உருவாக்கலாமா?

1. படம்  –  பம், பம், பம் 

2. நலம்  –  நம், நம் 

3. உதவு  –  உவு, உவு

4. பத்து  –  பந்து, பழுது

5. குயில்  –  குல், குடில், குல்

சிந்திக்கலாமா?

ஒருவர் செல்வம் படைத்தவராயிருந்தும் பிறர்க்கு உதவாமல் இருப்பதாக நீங்கள் அறிகிறீர்கள். உதவுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அவர்க்கு எப்படி  எடுத்துச்  சொல்லலாம்? 

இந்த உலகத்திற்கு வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை; போகும்போதும் எவற்றையும் நாம் எடுத்துச் செல்வதில்லை. எனவே, இருப்பதை இல்லாதோரோடு பகிர்ந்து வாழும்போது அது நமக்கு நன்மையையும், மகிழ்வையும்  நிறைவாகத்  தருகின்றது. 

அறிந்து கொள்வோம்

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனைத்து ஊறும் அறிவு” – திருக்குறள். 

விளக்கம்

மணற்பாங்கான இடத்தைத் தோண்டத்தோண்ட நீர் ஊறும்; அதுபோல படிக்கப் படிக்கத்தான் ஒருவருடைய அறிவு வளரும்.

எதிர்ச்சொல் எழுதுவோம்

பனிக்கட்டி குளிர்ச்சியாய் இருக்கும். 

நெருப்பு சூடாய் இருக்கும்.

பூனை மேசையின் மேல் இருந்தது. 

எலி, மேசையின் அடியில் இருந்தது.

தங்கை வெளியே சென்றாள். 

அண்ணன் உள்ளே வந்தான்.

சிறுவன் பேருந்தில் ஏறினான்

சிறுமி பேருந்திலிருந்து இறங்கினாள்.

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுப்போமா?

1. ஆற்றின் ஓரம் கரை. ஆடையில் இருப்பது கறை.  (கறை, கரை) 

2. காட்டில் வாழ்வது புலி. கடையில் விற்பது புளி.  (புலி, புளி) 

3. மனிதர் செய்வது அறம். மரத்தை அறுப்பது அரம்.  (அறம், அரம்) 

4. மீனைப் பிடிப்பது வலை. கையில் அணிவது வளை.  (வளை, வலை) 

5. பொழுதைக் குறிப்பது வேளை. பொறுப்பாய்ச் செய்வது வேலை.  (வேலை, வேளை) 

6. ஒழுக்கத்தைக் குறிப்பது திணை. உணவுப் பயிரைக் குறிப்பது தினை.     (திணை, தினை) 

7. உயர்ந்து நிற்பத மலை. உனக்குப் பிடிக்கும் மழை.  (மழை, மலை)

8. வீரத்தைக் குறிப்பது மறம். விறகைத் தருவது  மரம்.  (மரம், மறம்)

9. விடிந்த பின் வருவது காலை. வீரத்தால் அடங்குவது காளை. (காளை, காலை)

10. சான்றோர் வெறுப்பது கள். சாலையில் கிடப்பது கல்  (கல், கள்)

வேறுபட்ட வண்ணத்தில் உள்ள எழுத்துகளைச் சேர்த்தால் கிடைக்கும் ஆடை வகைகளை எழுதுக.

ள்ளம் அரும்பு பார்த்திபன் ஆர்த்தி 

விடை : பருத்தி 

ருந்து வட்டம் கசடு 

விடை : பட்டு 

ம்பு பம்பரம் அப்ம் தக்காளி       

விடை : கம்பளி

கலையும் கைவண்ணமும்

அறிந்து கொள்வோம்.

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனைத்து ஊறும் அறிவு” – திருக்குறள். 

விளக்கம்

மணற்பாங்கான இடத்தைத் தோண்டத்தோண்ட நீர் ஊறும்; அதுபோல படிக்கப் படிக்கத்தான் ஒருவருடைய அறிவு வளரும்.

“ஐயம்  இட்டு உண்” –  ஆத்திசூடி

விளக்கம்

பிறர் பசித்திருந்தால், அவர்களுக்கு உணவளித்த பின்பே நீ உண்பாயாக.

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *