Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 4

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 4

தமிழ் : பருவம் 3 இயல் 4 : மழை நீர்

4. மழை நீர்

மழைநீர் வெள்ளம் ஓடியே

மண்ணில் வீணாய்ச் செல்லுதே 

உழைப்பின் வியர்வை போலவே 

உயர்வாய் எண்ண வேண்டுமே!

பொன்னும் பொருளும் போலவே 

பொழியும் நீரும் செல்வமே 

விண்ணின் கொடை என்பதில் 

வியப்பு ஒன்றும் இல்லையே!

குளங்கள் ஏரி நிரம்புமே 

குருவி கொக்கும் வாழுமே 

வானின் அமுதம் சேமித்தே 

வாழ்வைச் செம்மை செய்வமே!

நாடும் வீடும் செழிக்கவே 

நல்ல தண்ணீர் வேண்டுமே 

ஓடும் நீரைத் தேக்கியே

உலகின் பசியைத் தீர்ப்பமே!

உழவும் தொழிலும் ஓங்கவே 

உற்ற துணை மழைதானே 

வளமும் நலமும் நிறைந்திட 

வணங்கி மழையைப் 

போற்றுவோம்!

மனிதர் பறவை விலங்குகள்

மகிழ்ந்து வாழத்தேவையே 

இனிய மழை வரும்போது 

இல்லம் முழுதும் சேமிப்போம்!

பயிற்சி

வாங்க பேசலாம்

1. பாடலை ஓசை நயத்துடன் பாடி மகிழ்க

2. மழை பற்றி ஏற்கெனவே நீ அறிந்த பாடலைப் பாடி மகிழ்க. 

துளி துளி மழை துளி – அது 

விழும் போது என் முகம் மலர்ந்ததே! 

மழை மழை அடை மழை 

மனமெல்லாம் உனக்குக் குடை 

மானாட மயிலாட என் 

மார்போடு மழையே நீயும் கவிபாடிட

சாரலாய் வந்து, நீயும் நனைக்கிறாய் 

தென்றலாய்ச் சில்லிட்டு சிலிர்க்கிறாய் 

இடியோடும், மின்னலோடும் தாலாட்டி 

என் இதயத்திற்கு இன்பம் பொழிகிறாய் 

வா மழையே! இயற்கைத் தந்த வரமே! 

உன்னை நான் காண்பேன் தினமுமே!

இசையமுது

மழையே மழையே வா வா  –  நல்ல 

வானப் புனலே வா வா  –  இவ்

வையத் தமுதே வா வா 

தகரப் பந்தல் தணதண வென்ன

தாழும் கூரை சளசள வென்ன 

நகரப் பெண்கள் செப்புக் குடங்கள்

நன்றெங் கும்கண கணகண வென்ன     (மழையே மழையே)

ஏரிகுளங்கள் வழியும்படி, நாடு

எங்கும் இன்பம் பொழியும்படி, பொடி 

வாரித்தூவும் பூவும் காயும்

மரமும் தழையும் நனைந்திடும்படி     (மழையே மழையே)

– பாரதிதாசன்

3. மழை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உம் சொந்த நடையில் பேசுக.

“விண்ணின் மழைநீர் மண்ணின் உயிர்நீர்” என்பர். மழை பெய்யும் போது இயற்கையான மரம் செடிகொடிகள் மட்டுமல்ல பறவை, விலங்குகள்   மற்றும் மனிதர்கள் கூட மகிழ்கின்றனர்.

எனக்கும் மழையை அதிகம் பிடிக்கும், அதில் நனையவும் பிடிக்கும்.  மழைநீரில் காகிதக் கப்பல் செய்து விளையாடவும் பிடிக்கும்.

மழைபெய்யும் போது மண்ணிலிருந்து எழும் புழுதியின் மணம் எனக்கு அதிகம் பிடிக்கும். இதமான குளிர்ந்த காற்றுடன் மழைபெய்தால், அது மனதிற்கும் மகிழ்வைத் தரக்கூடியதாக இருக்கும். எனவே, எப்பொழுதெல்லாம் மழை பெய்கிறதோ, அப்பொழுதெல்லாம் என் மனதில் மகிழ்ச்சி என்னும் நீரூற்றுப் பாய்ந்தோடும்.

ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக.

செல்லுதே                     

சேமித்தே

ஓடியே

இல்லையே

தேவையே 

போலவே     

செழிக்கவே  

ஓங்கவே  

வேண்டுமே

தீர்ப்பமே

செய்வமே

முதலெழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக.

பொன்னும், பொழியும்                     

விண்ணின், வியப்பு                            

குளங்கள், குருவி

மழைநீர், மண்ணில்

வானின், வாழ்வைச்

உழைப்பின், உயர்வாய்        

உழவும், உற்ற

இரண்டாவது எழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக.

மனிதர், இனிவரும்

மழைநீர், உழைப்பின் 

நாடும், வீடும்

அகரமுதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக.

பொழியும்  –  பெய்தல்,  நிறைந்துவழி 

செம்மை  –  சிவப்பு,  நேர்மை,  பெருமை 

ஓங்குதல்  –  வளர்தல்,  பெருமையடைதல் 

இல்லம்  –  வீடு,  தேற்றாமரம்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தேக்குதல் – என்ற சொல்லின் எதிர்ச்சொல் ___________.

அ) நீக்குதல்                

ஆ) தெளிதல் 

இ) சேமித்தல்               

ஈ) பாதுகாத்தல் 

விடை : அ) நீக்குதல் 

2. வானின் அமுதம் – இச்சொல் குறிப்பது ____________.

அ) அமிழ்தம்               

ஆ) அமிர்தம் 

இ) சோறு                   

ஈ) மழைநீர்

விடை : ஈ) மழைநீர்

3. மழையாகுமே – இச்சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது

அ) மழை + யாகுமே                    

ஆ) மழையாய் + யாகுமே

இ) மழை + ஆகுமே         

ஈ) மழையாய் + ஆகுமே 

விடை : இ) மழை + ஆகுமே 

4. நினைத்தல் – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் 

அ) கூறுதல்                                  

ஆ) எண்ணுதல் 

இ) மறத்தல்                                  

ஈ) நனைத்தல்

விடை : இ) மறத்தல்

‘பொன்னும் பொருளும்’ இதுபோன்ற சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக.

 உழவும் தொழிலும்

 நாடும் வீடும்

 வளமும் நலமும் 

 பொழியும் நீரும்

இணைந்து செய்வோம்.

பொருத்துவோமா? 

1.  நாடும் வீடும்  – வேண்டும் 

2.  வளமும் நலமும்  –  சேர்ப்போம் 

3.  இல்லத்தில் நீரை  –  மழையாகுமே

4.  உற்ற துணை  –  செழிக்கவே

5.  உயிராய் எண்ண  –  நிறைத்திட

விடை :

1.  நாடும் வீடும்  –  செழிக்கவே

2.  வளமும் நலமும்  –  நிறைத்திட

3.  இல்லத்தில் நீரை  –  சேர்ப்போம்

4.  உற்ற துணை  –  மழையாகுமே

5.  உயிராய் எண்ண  –  வேண்டும்   

சிந்திக்கலாமா?

மழை பொழியும் போது மழைநீரைப் பாத்திரங்களில் பிடித்து வைக்கச் சொல்வார் மான்விழியின் அம்மா. ஆனால், மான்விழியோ ஓடும் நீரில் கப்பல் செய்து விளையாடியபடியே இருப்பாள். மழைநீரைச் சேமிக்கச் சொல்லி, மான்விழியின் அம்மா ஏன் கூறுகிறார்?

கலையும் கைவண்ணமும் 

தேவையான பொருள்கள் 

மண் குவளை அல்லது மின்னட்டை 

வண்ணக்குழம்பு – பல நிறம் 

தண்ணீர் வாளி

முக்கால் பாகம் நீர் நிரம்பிய வாளியில் வண்ணக் குழம்புகளைத் தேவையான அளவு சேர்க்க வேண்டும். (விரும்பிய வண்ணங்கள் ஒவ்வொரு மூடி) அந்த வண்ணக் குழம்பை, ஒரு குச்சியால் கலக்கவேண்டும். அதில், குவளை அல்லது மின்னட்டையை மூழ்கச் செய்து எடுக்கவேண்டும். இப்போது, அழகான வண்ணங்களுடன் கூடிய குவளை அல்லது மின்னட்டையைக் கண்டு மகிழலாம்.

சொல்லக் கேட்டு எழுதுக

1) மழைநீர்

2) வெள்ளம்

3) குளங்கள்

4) தண்ணீர்

5) கொடை

6) வியர்வை

7) ஓங்குதல்

8) போற்றுவோம்

இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படித்துப் பார்ப்போம். விடுபட்ட இடத்தை நிரப்பி மகிழ்வோம்.

செயல் திட்டம்.

மழைநீர் சேமிப்புத் தொட்டியுடன் கூடிய படத்தை வரைந்து வண்ணம் தீட்டுக.  

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *