தமிழ் : பருவம் 2 இயல் 8 : நட்பே உயர்வு
8. நட்பே உயர்வு
புதிர்க்கதை
அடர்ந்த காட்டில் முயலும் மானும் நெடுநாள் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. இரண்டு விலங்குகளும் அன்பாய்ப் பழகி வந்தன.மான் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் எப்படியாவது வேட்டையாடி விடவேண்டும் என்ற எண்ணம் அங்குள்ள நரிக்குத் தோன்றியது. நரி ஒரு நாள் மானிடம் “நண்பனே! நீ உன் நண்பன் முயல்மீது அளவுக்கு மீறிய பாசம் வைத்துள்ளாய்! என்பதை நான் அறிவேன். ஆனால் முயலோ, உன்னைவிட நான்தான் அழகு என்று எல்லா விலங்குகளிடம் சொல்லிக்கொண்டு அலைகிறது.
முயலிடம் தொடர்ந்து நீ நட்பு வைத்துக்கொண்டால் உன்னை ஏதாவது ஆபத்தில் மாட்டிவிடும்” என்றது நரி. மானிற்கு நரியின் தந்திரம் புரியவில்லை . “அது எப்படி?” என்று கேட்டது. அதற்கு நரியானது, “அதோ தூரத்தில் தெரிகிற குகைக்கு முயல் உன்னை அழைத்துச் சென்று அங்கு வாழும் சிங்கத்திற்கு இரையாக்கிவிடும்” என்று பொய் கூறியது. மானும் நரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் அதனை நம்பி நடுகாட்டிற்குள் சென்றது. தனது நண்பனை வெகுநேரம் ஆகியும் காணவில்லையே என்று முயல் துடிதுடித்தது. காட்டிற்குள் அலைந்து திரிந்து தேட ஆரம்பித்தது. கடைசியில் நரி தந்திரமாக மானை வேட்டையாட அழைத்துச் சென்றதைப் பார்த்துவிட்டது. “நரியாரே! என் நண்பனை எங்கு அழைத்து செல்கிறாய்?” என்று கேட்டது. “இன்றிலிருந்து மான் உன் நண்பன் அல்ல. மான் என் நண்பன்” என்று நரி பதில் கூறியது “மானைவிட்டுவிடு!” என்று கதறியது முயல். அப்படியானால் என் மூன்று புதிர்களுக்கு விடைகூறு? பிறகு விட்டுவிடுகிறேன் என்றது நரி. சரி! புதிர்களைச் சொல் என்றது முயல்.
நரி புதிர்களைச் சொல்லத் தொடங்கியது
புதிர் 1: கீழே வரும் ஆனால் மேலே போகாது அது என்ன?
புதிர் 2: கைகள் இருக்கும், ஆனால் கைதட்டமுடியாது அது என்ன?
புதிர் 3: தொடக்கத்தில் உயரம் எரிந்து முடிந்தவுடன் குட்டை அது என்ன?
முயல்நரியிடம் இவ்வளவுதானே! இதோவிடை சொல்கிறேன் என்றது. முதல் புதிருக்கு ‘மழை’ என்பதே விடையாகும். இரண்டாவதற்கு ‘கடிகாரம்’ என்பதே விடையாகும். மூன்றாவதற்கு ‘மெழுகுவத்தி’ என்பதே விடையாகும் என்றது. முயல் விடை கூறியதைப் பார்த்துத் திகைத்து போனது நரி. நீ கூறியபடி புதிருக்கு விடை சொல்லிவிட்டேன் என் நண்பனை என்னிடம் அனுப்பி விடு! என்று கேட்டது முயல். நரியும் வேறுவழியில்லாமல் மானை விடுவித்தது. மான் மகிழ்ச்சியுடன் முயலுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்தது.
நீதிக் கருத்து: : கூடா நட்பு கேடாய் முடியும்
மொழி விளையாட்டு
மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒரு குழுவிலிருந்து மாணவர்கள் இருவரை அழைத்து அதில் ஒருவரின் காதில் அவருக்கு மட்டும் கேட்கும்படியாக மெதுவாக ஒரு சொற்றொடரைக் கூறுக. இப்பொழுது அந்தமாணவர், சொல்லப்பட்ட சொற்றொடருக்கு ஏற்றாற்போல் எதிரே உள்ள மற்றொரு மாணவரிடம் நடித்துக்காட்ட வேண்டும். அதனை, அந்த மாணவன் கண்டுபிடிக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து விளையாடி மகிழச் செய்க.
கலையும் கைவண்ணமும்
விரல் பூக்கள் செய்வோமா
உங்களுக்குப் பிடித்த வண்ணத்தை ஆள்காட்டி விரலால் தொட்டு வையுங்கள். ஒரே ஒரு கோடு நடுவில் போடுங்கள். பூச்செடி தயார்.
மீண்டும் மீண்டும் சொல்லிப்பழகுவோம்
1. விண்ணுக்கும் மண்ணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்கும் டண்ணனகரம்
2. உளி கொண்டு சிலையொன்று வடித்தான். உலகின் தலைசிறந்த கலையென்று மலைத்தான்.
3. குட்டை மரமும் நெட்டைமரமும் மொட்டைத்தலையைத் தடவிக்கொண்டன.
பயிற்சி
வாங்க பேசலாம்
* உமக்குத் தெரிந்த புதிர் / விடுகதைகளை வகுப்பறையில் கலந்துரையாடுக.
1. ஒரு பொருளின் எல்லா பக்கமும் ஓட்டை. ஆனாலும் அது தண்ணீர் சேர்த்துவைக்கும் திறன் உடையது அது என்ன?
விடை : பஞ்சு
2. கிழக்குத் திசையில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் மின்சார ரயில் 100 கி.மீ வேகத்தில் செல்கிறது. அது வெளியிடும் புகை எந்தத் திசையில் செல்லும்?
விடை : மின்சார ரயிலில் புகை வராது.
3. ஆங்கில எழுத்துகளில் இரண்டு எழுத்துகள் எப்போதும் ஒன்றாகவே வரும். அவை யாவை?
விடை : QU
4. ஒரு டன் தங்கம், ஒரு டன் பஞ்சு இரண்டில் எது அதிக கனமானது?
விடை : இரண்டும் சமம்
5. பதினொன்றோடு இரண்டைச் சேர்த்தால் ஒன்றாகும் எப்படி?
விடை : 11 மணி + 2 மணி = 1 மணி
* அன்பை மறவா முயல் கதையை உமது சொந்த நடையில் கூறுக.
அடர்ந்த காட்டில் முயலும் மானும் நெடுநாள் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். மானை வேட்டையாட விரும்பிய நரி ஒரு சூழ்ச்சிசெய்தது. மானை அழைத்து நீ முயல் மீது அன்பு வைத்திருக்கிறாய், ஆனால் முயல் உன்னைவிட அழகு என்று எல்லோரிடமும் கூறி வருகிறது என்றது. முயல் உன்னை ஒரு நாள் பெரிய ஆபத்தில் மாட்டிவிடும் என்று மானிடம் நரி கூறியது. பின் மானைக் வேட்டையாட நினைத்து தந்திரமாக அழைத்துச் சென்றது. நெடுநேரம் மானை காணாத முயல் அதனைத் தேடிச் சென்றது. நரியின் சூழ்ச்சியை அறிந்த முயல் மானை மீட்க முயன்றது. நரியின் புதிர்களுக்கு சரியான விடையைக் கூறி மானை, முயல் மீட்டுச் சென்றது. இதுவே உண்மையான நட்பின் அடையாளம் ஆகும்.
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ‘இரை’ என்ற சொல்லின் பொருள் _______.
அ) உணவு
ஆ) இருப்பிடம்
இ) மலை
ஈ) இறைவன்
விடை : அ) உணவு
2. ‘மகிழ்ச்சியுடன்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
அ) மகிழ்ச்சி + யுடன்
ஆ) மகிழ்ச்சி + உடன்
இ) மகிழ் + உடன்
ஈ) மகிழ்ச் + சியுடன்
விடை : ஆ) மகிழ்ச்சி + உடன்
3. சொல்லி + கொண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________.
அ) சொல்லிக்கொண்டு
ஆ) சொல்கொண்டு
இ) சொல்லக்கொண்டு
ஈ) சொல்லிகொண்டு
விடை : அ) சொல்லிக்கொண்டு
4. ‘முதுமை’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________.
அ) தீமை
ஆ) சிறுமை
இ) பெருமை
ஈ) இளமை
விடை : ஈ) இளமை
5. ‘சூழ்ச்சி’ என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு _____________.
அ) மான்
ஆ) முயல்
இ) நரி
ஈ) சிங்கம்
விடை : இ) நரி
வினாக்களுக்கு விடையளி
1. முயல் எந்த விலங்குடன் நண்பனாகப் பழகியது?
முயல் மானுடன் நண்பனாகப் பழகியது.
2. மானை விட்டுவிடுவதற்காக நரி என்ன செய்தது?
மானை விட்டுவிடுவதற்காக நரி முயலுக்கு புதிர்கள் சொல்லியது.
3. மான் எதனால் மாட்டிக்கொண்டது?
மான் நரியின் சூழ்ச்சியை அறிந்துகொள்ளாததால் மாட்டிக் கொண்டது.
4. மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை ஏன் தவிர்த்தன?
நரி தந்திரத்தால் மற்ற விலங்குகளைத் துன்புறுத்துவதால் மற்ற விலங்குகள் நரியிடம் நட்புக் கொள்வதைத் தவிர்த்தன.
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.
முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தி எழுதுக
1. செல்லலாம் இரைதேடச் புல்வெளியில்
விடை : புல்வெளியில் இரை தேடச் செல்லலாம்.
2. அழைத்துச் நண்பனை செல்கிறாய் எங்கு
விடை : நண்பனை எங்கு அழைத்துச் செல்கிறாய்?
3. கட்டை முதுமையில் உயரம் இளமையில்
விடை : இளமையில் உயரம் முதுமையில் கட்டை
மொழி விளையாட்டு
மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒரு குழுவிலிருந்து மாணவர்கள் இருவரை அழைத்து அதில் ஒருவரின் காதில் அவருக்கு மட்டும் கேட்கும்படியாக மெதுவாக ஒரு சொற்றொடரைக் கூறுக. இப்பொழுது அந்தமாணவர், சொல்லப்பட்ட சொற்றொடருக்கு ஏற்றாற்போல் எதிரே உள்ள மற்றொரு மாணவரிடம் நடித்துக்காட்ட வேண்டும். அதனை, அந்த மாணவன் கண்டுபிடிக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து விளையாடி மகிழச் செய்க.
நெடிலைக் குறில் ஆக்குக.
1. கானல் – கனல்
2. வாடை – வடை
3. ஆடை – அடை
4. தோடு – தொடு
5. கோடு – கொடு
6. பால் – பல்
மீண்டும் மீண்டும் சொல்லிப்பழகுவோம்
1. விண்ணுக்கும் மண்ணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்கும் டண்ணனகரம்
2. உளி கொண்டு சிலையொன்று வடித்தான். உலகின் தலைசிறந்த கலையென்று மலைத்தான்.
3. குட்டை மரமும் நெட்டைமரமும் மொட்டைத்தலையைத் தடவிக்கொண்டன.
ஒரு சொல் பல பொருள் அறிக.
கலையும் கைவண்ணமும்
விரல் பூக்கள் செய்வோமா
உங்களுக்குப் பிடித்த வண்ணத்தை ஆள்காட்டி விரலால் தொட்டு வையுங்கள். ஒரே ஒரு கோடு நடுவில் போடுங்கள். பூச்செடி தயார்.
செயல் திட்டம்
எவையேனும் பத்து விடுகதைகளை எழுதி, அவற்றிற்குப் பொருத்தமான படங்களை வரைந்து வருக.
1. கீழே வரும் ஆனால் மேலே போகாது. அது என்ன?
மழை
2. அடிப்பாதை இருக்கும். கால் இருக்காது. அது என்ன?
நத்தை
3. இளமையில் உயரம். முதுமையில் கட்டை. அது என்ன?
மெழுகுவர்த்தி
4. உலகம் முழுவதும் சுற்றும். ஆனால் ஒரே இடத்திலேயே இருக்கும். அது என்ன?
முத்திரை
5. கைகள் இருக்கும். ஆனால் தட்ட முடியாது? அது என்ன?
கடிகாரம்
6. கண் உண்டு. ஆனால் பார்க்க முடியாது. அது என்ன?
ஊசி
7. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன?
வெண்டை
8. தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம். அது என்ன?
அன்னாசிப்பழம்
9. கை இல்லாமல் நீந்துவான். கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
படகு
10. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன?
பாய்
அகர முதலி
அடாத செயல் – தகாத செயல்
அதிகம் – மிகுதி
அமர்ந்த – உட்கார்ந்த
ஆணவம் – செருக்கு
ஆபரணங்கள் – அணிகலன்கள்
ஆலோசனை – கருத்து
ஆனந்தம் – மகிழ்ச்சி
இலாபம் – வருமானம்
என்பு – எலும்பு
எழில் – அழகு
ஏய்த்தல் – ஏமாற்றுதல்
களிப்பு – மகிழ்ச்சி
சத்தம் – ஒலி
சந்தேகம் – ஐயம்
சுகம் – நலம்
சுதந்திரம் – விடுதலை
செல்வந்தன் – பணக்காரன்
செல்வாக்கு – சொல்லுக்கு மதிப்பு
ஞாலம் – உலகம்
தண்டோரா – முரசறைந்து செய்தி தெரிவித்தல்
தந்திரம் – சூழ்ச்சி
தபால் – அஞ்சல்
நிபந்தனை – கட்டளை
நீராடலாம் – குளிக்கலாம்
நெறிப்படுத்துதல் – வழிகாட்டுதல்
பரவசம் – மகிழ்ச்சி
பிரமாதம் – பெருஞ்சிறப்பு
புத்திசாலி – அறிவாளி
வருடுதல் – தடவுதல்
விதவிதமான – வகை வகையான
வியாபாரி – வணிகர்
விவசாயி – உழவர்
விவாதம் – தருக்கம்