அறிவியல் : பருவம் 3 அலகு 1 : நமது சுற்றுச்சூழல்
அலகு 1
நமது சுற்றுச்சூழல்
கற்றல் நோக்கங்கள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
❖ உயிர்க் காரணிகளை உயிரற்ற காரணிகளுடன் வேறுபடுத்தி அறிதல்
❖ உயிர்க் காரணிகளுக்கும் உயிரற்ற காரணிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்துகொள்ளுதல்
❖ சுற்றுச்சுழல் சமநிலையைப் புரிந்துகொள்ளுதல்
❖ மரம் நடுதலின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுதல்
I. சுற்றுச்சூழல் – அறிமுகம்
(யாழினி தன் தந்தை மற்றும் நண்பர்களுடன் பள்ளிக்குச் செல்கிறாள்)
யாழினி : அப்பா, அங்கே பாருங்கள்! பச்சைக்கிளிகள். அவை எங்கே போகின்றன?
அப்பா : அவை குளத்தை நோக்கிச் செல்கின்றன. குளக்கரையில் உள்ள மரத்தில் அவை தங்குகின்றன.
பாத்திமா : மாமா! எங்களை அங்கே அழைத்துச் செல்கிறீர்களா?
ஸ்டீபன் : ஆமாம், மாமா. நாம் அங்கே சென்று அவற்றைப் பார்க்கலாமா?
அப்பா : ‘ஓ’ போகலாமே!
(அனைவரும் குளத்தை நோக்கி நடக்கின்றனர்)
உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் 5
யாழினி : நாம் அமைதியாகச் செல்ல வேண்டும். ஏனென்றால், அங்கே பச்சைக் கிளிகள் மட்டுமின்றி எறும்பு, சிலந்தி, அணில், மைனா மற்றும் குரங்கு போன்றவையும் இருக்கும்.
பாத்திமா : ‘ஓ! அங்கே பாருங்கள்! குளத்தில் மீன், தவளை, ஆமை எல்லாம் உள்ளன.
அப்பா : ஆமாம். பார்த்தீர்களா! இவை எல்லாம் ஒரே இடத்தில் ஒன்றாக ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன.
ஸ்டீபன் : அதோ குளத்திற்கு அந்தப் பக்கம் ஆடு, பசு மேய்ந்து கொண்டிருப்பதைப் பாருங்கள்.
அப்பா : குழந்தைகளே! நேரமாகிறது நாம் பள்ளிக்குப் போகலாமா?
குழந்தைகள் : சரிங்க மாமா! இந்த அழகான இடத்திற்கு எங்களை அழைத்து வந்து காண்பித்ததற்கு மிக்க நன்றி!
முயல்வோம்
1. முன் பக்கத்தில் உள்ள படத்தில் நீங்கள் காணும் விலங்குகளின் பெயர்களை எழுதுக.
____________ ______________ ____________
_____________ ______________ ____________
______________ _______________ _____________
2. பின்வருவனவற்றை இயற்கையான பொருள்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் என வகைப்படுத்துக.
(அணைக்கட்டு, ஆறு, தென்னை மரம், கட்டடம், மல்லிகைப்பூ, குன்று, மேகம், அலைபேசி, வெள்ளிப் பாத்திரம், கோவில், ரொட்டி, காற்று, சூரியன், கப்பல், நீர், பென்சில், புத்தகம், பொம்மை, கால்பந்து, சூரியகாந்திப்பூ, முதலை, வானூர்தி)
இசையிடுவோம்
பின்வரும் விலங்குகள் போல ஒலி எழுப்பி மகிழ்வோமா!
(காகம், குயில், யானை, கிளி, கழுதை, பசு, ஆடு, நாய்)
இணைப்போம்
மூலப்பொருள்களை அவற்றிலிருந்து கிடைக்கும் வளங்கள் (பொருள்கள்) மற்றும் அவற்றின் பயன்களுடன் இணைக்க.
II. சுற்றுச்சூழல் காரணிகள்
நம்மைச் சுற்றி உள்ள அனைத்தும் சுற்றுச்சூழலில் அடங்கும். அவை உயிர்க் காரணி, உயிரற்ற காரணி என இருவகைப்படும். சுற்றுச்சூழலில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிர்க் காரணிகளும், நீர்நிலைகள், சூரிய ஒளி, காற்று மற்றும் மண் போன்ற உயிரற்ற காரணிகளும் காணப்படுகின்றன.
நமது சுற்றுச்சூழலில் உள்ள உயிர்க் காரணிகளும், உயிரற்ற காரணிகளும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. இச்சுற்றுச்சூழல் இயற்கை நமக்கு வழங்கிய மிகச்சிறந்த பரிசாகும்.
மேலும் அறிவோம்
சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பவர் சுற்றுச்சூழல் மீது அக்கறையும் அதனை பாதுகாப்பதில் ஈடுபாடும் உள்ளவர். நாமும் ஒரு தன்னார்வலராகத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பில் ஈடுபடலாம்.
நமது சுற்றுச்சூழல், முக்கிய இரு காரணிகளால் ஆனது.
அ. உயிர்க் காரணிகள்
ஆ. உயிரற்ற காரணிகள்
உயிர்க் காரணிகள்
நமது சுற்றுச்சூழலில் உள்ள உயிருள்ளவை அனைத்தும் உயிர்க் காரணிகள் எனப்படும்.
எ.கா. சிங்கம், வாழைமரம், புறா, மனிதன்.
உயிரற்ற காரணிகள்
நமது சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற பொருள்கள் அனைத்தும் உயிரற்ற காரணிகள் எனப்படும்.
எ.கா. காற்று, மண், நீர், சூரிய ஒளி, வெப்பநிலை.
உயிர்க் காரணிகளுக்கும், உயிரற்ற காரணிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்
உயிர்க் காரணிகள் (உயிருள்ளவை)
இவை சுவாசிக்கவும் வளரவும் செய்யும்
இவை உயிர் வாழ உணவு தேவை
இவற்றிற்கு உணர்ச்சி உண்டு
இளம் உயிரிகளை உருவாக்கும்
உயிரற்ற காரணிகள் (உயிரற்றவை)
இவை சுவாசிக்கவும், வளரவும் செய்யா.
உணவு தேவைப்படாது
இவற்றிற்கு உணர்ச்சி இல்லை
இளம் உயிரிகளை உருவாக்காது
உங்களுக்குத் தெரியுமா?
விலங்குகளைப் போல தாவரங்களால் நகர முடியாது. ஆனால் துளிர்க்கும் தாவரப்பகுதிகள் சூரியனை நோக்கி வளரும். எனவே, தாவரங்களும் உயிருள்ள காரணிகளாகும்.
மேலும் அறிவோம்
அமீபா என்பது ஒரு செல் உயிரி. அமீபாவிற்குத் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை உண்டு. இது 1755 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
முயல்வோம்
1. பின்வரும் காரணிகளை வகைப்படுத்துக.
(துளசி, பூஞ்சை , மாமரம், முதலை, கழுகு, பூனை, நாய், வெள்ளரித் தாவரம், மனிதன், முயல், பாக்டீரியா)
உற்பத்தியாளர்கள் : மாமரம், வெள்ளரித் தாவரம், துளசி.
நுகர்வோர்கள் : மனிதன், முயல், பூனை, நாய், கழுகு.
சிதைப்பவை : பாக்டீரியா, பூஞ்சை
2. சிந்தித்து விடையளி.
அ. ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைகிறது. அது உயிருள்ளதா? அல்லது
உயிரற்றதா? உயிரற்றது.
ஆ. உயிருள்ள மரத்திலிருந்து மரக்கட்டைகளைப் பெறுகிறோம். அம்மரக்கட்டைகளிலிருந்து நாற்காலி செய்கிறோம். அந்த நாற்காலி உயிருள்ளதா? அல்லது உயிரற்றதா? உயிரற்றது.
விடையளிப்போம்
படம் பார்த்து விடையளி.
எந்த உயிரற்ற காரணி மிதக்கிறது?
அ. இரும்புத்துண்டு
ஆ. கல்
இ. காற்று நிரம்பிய பந்து
ஈ. நாணயம்
விடை : இ. காற்று நிரம்பிய பந்து
முயல்வோம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் உயிருள்ளவற்றின் பண்புகளை விளக்குகின்றன. பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி, அப்பண்புகளை அடையாளம் கண்டறிந்து எழுதுக.
பண்புகள் : இடம் பெயர்தல், சுவாசித்தல், உணர்ச்சி, உணவு தேவை, வளர்ச்சி, இனப்பெருக்கம்
விளையாடுவோம்
மாணவர்களை இரு குழுவாகப்பிரித்துப் பள்ளியைச் சுற்றிக் காணப்படும் உயிர்க் காரணிகளை ஒரு குழுவையும் உயிரற்ற காரணிகளை மற்றொரு குழுவையும் எழுதச் செய்க.
III. உயிர்க் காரணிகளுக்கும் உயிரற்ற காரணிகளுக்கும் இடையேயான தொடர்பு
அனைத்து உயிர்க் காரணிகளும் தாம் வாழ்வதற்கு உயிரற்ற காரணிகளைச் சார்ந்துள்ளன. உயிர்க் காரணிகளும், உயிரற்ற காரணிகளும் உணவின் மூலம் ஆற்றலைப் பரிமாறிக் கொள்வதால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. உயிர்க் காரணிகளில் மிகவும் முக்கியமானவை தாவரங்கள் ஆகும். ஏனெனில், உயிரற்ற காரணிகளான காற்று, மண், நீர், சூரிய ஒளி போன்றவற்றைப் பயன்படுத்தி தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன.
உயிர்க் காரணி, உயிரற்ற காரணிகளுக்கு இடையேயான தொடர்புக்கு சில எடுத்துக்காட்டுகள்.
மேலே உள்ள வரைபடங்களின் மூலம் தாவரங்கள் உயிர்வாழ நீர், மண், காற்று, சூரிய ஒளி போன்றவை தேவை என்பதை அறிகிறோம்.
பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான உயிரற்ற காரணிகளை எழுதுக.
1. பறவைகள் : நீர் , காற்று , சூரிய ஒளி, மண்.
2. பூச்சிகள் : நீர், காற்று , சூரிய ஒளி, மண். .
3. மனிதன் : நீர், காற்று , சூரிய ஒளி, மண்..
மேலும் அறிவோம்
சூழலியல் (Ecology)
உயிர்க் காரணிகளுக்கும் அவற்றின் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பு பற்றி கற்கும் அறிவியலின் ஒரு பிரிவே சூழலியல் ஆகும்.
விவாதிப்போம்
1. பூங்காவில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. குரங்குகளும் பறவைகளும் அந்த ஆலமரத்தை வாழிடமாகக் கொண்டுள்ளன. அம்மரத்தின் கீழே மனிதர்களும் ஓய்வெடுப்பதுண்டு. அம்மரமும், குரங்குகளும், பறவைகளும், மனிதர்களும் எவ்வாறு ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர் என உனது நண்பர்களுடன் கலந்துரையாடுக.
2. ‘தாவரம் முக்கியமான ஓர் உயிர்க் காரணி’ ஏன்?
______________________________________________________.
3. உயிர்க் காரணிகளும், உயிரற்ற காரணிகளும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன என்பதைக் குழுவில் கலந்துரையாடி கருத்துக்களைப் பதிவு செய்க
முயல்வோம்
1. பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான உயிரற்ற காரணிகளை எழுதுக.
((காற்று, நீர், சூரிய ஒளி, மண், நிலம், கோதுமை, பழங்கள், புல், கோழி)
அ. விலங்குகள் : காற்று, நீர், சூரிய ஒளி.
ஆ. தாவரங்கள் : காற்று, நீர், சூரிய ஒளி, மண்.
இ மனிதன் : காற்று, நீர், சூரிய ஒளி, நிலம், பழங்கள், கோதுமை.
2 பின்வருவனவற்றிற்கு உதாரணம் தருக.
அ. காற்றில் பறக்கும் விலங்கு : வௌவால்
ஆ. நீரில் வாழும் விலங்கு : திமிங்கலம்
இ. நிலத்தில் நகரும் விலங்கு : ஆமை
ஈ. தாவரத்தை மட்டும் உண்ணும் விலங்கு : ஆடு
IV. சுற்றுச்சூழல் சமநிலை
தாவரங்கள், மான்கள், சிங்கங்கள் மட்டும் வாழும் சுற்றுச்சூழலைக் கற்பனை செய்யவும்.
• அனைத்துச் சிங்கங்களும் அகற்றப்பட்டால் மான்களின் நிலை என்னவாகும்?
• மான்களை உண்பதற்குச் சிங்கங்கள் இல்லாவிட்டால், தாவரங்கள் என்ன ஆகும்?
• அனைத்துத் தாவரங்களும் உண்ணப்பட்டு விட்டால், பின்னர் மான்களின் நிலை என்னவாகும்?
ஒரு சுற்றுச்சூழல் மண்டலத்தில் உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளுக்கு இடையே ஆற்றலானது உணவுச்சங்கிலி மூலம் கடத்தப்படுவது முக்கியமான ஒன்றாகும். சுற்றுச்சூழல் சமநிலை என்பது நுண்ணுயிர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் என அனைத்தும் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை மண்டலமாகும். உயிர்க் காரணி மற்றும் உயிரற்ற காரணிகளுக்கு இடையேயான சீரான உணவு மற்றும் ஆற்றல் சுழற்சியைக் கொண்ட சூழ்நிலை மண்டலமே சுற்றுச்சூழல் சமநிலை எனப்படும்.
சுற்றுச்சூழலின் உயிர்க் காரணிகள் பின்வருமாறு: உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் சிதைப்பவை.
1. உற்பத்தியாளர்கள்
தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளக்கூடிய உயிரினங்களே ‘உற்பத்தியாளர்கள்’ எனப்படும். பசுந்தாவரங்களே உற்பத்தியாளர்கள் ஆகும். தாவரங்கள், தமக்குத் தேவையான உணவை ஒளிச்சேர்க்கை மூலம் தாமே உற்பத்தி செய்கின்றன. எனவே, பசுந்தாவரங்கள் முதன்மை உற்பத்தியாளர்கள் எனப்படுகின்றன. மனிதர்களும் விலங்குகளும் உணவிற்குத் தாவரங்களையே சார்ந்து உள்ளனர்.
மேலும் அறிவோம்
தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க முடியாமல் பிற உயிரினங்களைச் சார்ந்து வாழும் சில தாவரங்கள் உள்ளன. அவை ஒட்டுண்ணித் தாவரங்கள் எனப்படும். எ.கா. கஸ்குட்டா.
2. நுகர்வோர்கள்
உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் உணவை உண்டு வாழும் உயிரினங்கள் ‘நுகர்வோர்கள்’ எனப்படும். பெரும்பாலும் அனைத்து உயிரினங்களும் உணவிற்காக உற்பத்தியாளர்களை (பசுந்தாவரங்களை) நேரடியாகவோ, மறைமுகமாகவோ சார்ந்துள்ளன. இவை, அவற்றின் உணவு முறையைப் பொருத்து மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன 1. தாவர உண்ணிகள் 2. ஊன் உண்ணிகள் 3. அனைத்துண்ணிகள்.
3. சிதைப்பவை
இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து (மட்கச் செய்து) உணவைப் பெறுபவை சிதைப்பவை எனப்படும். இவையே மண்ணிற்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
எ.கா. பாக்டீரியா, பூஞ்சை.
முயல்வோம்
பின்வரும் உயிர்க் காரணிகளை வகைப்படுத்துக.
துளசி, பூஞ்சை , மாமரம், முதலை, கழுகு, பூனை, நாய், வெள்ளரித் தாவரம்,
மனிதன், முயல், பாக்டீரியா.
உற்பத்தியாளர்கள் : மாமரம், வெள்ளரித் தாவரம், துளசி.
நுகர்வோர்கள் : மனிதன், முயல், பூனை, நாய், கழுகு.
சிதைப்பவை : பாக்டீரியா, பூஞ்சை.
விவாதிப்போம்
1. கலந்துரையாடி எழுதுக.
தாவரங்களும் மனிதர்களும் உயிருள்ளவையே. பின்பு மனிதன் ஏன் தாவரங்களைச் சார்ந்துள்ளான்?
• மனிதன் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவை உண்ணுகிறான்.
• மனிதனால் தாமே இயற்கையாக உணவுத் தயாரிக்க இயலாது.
2. மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் உயிருள்ள பொருள்கள் சிலவற்றின் படங்களைக் கொடுத்து, உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தக் கூறவும்.
3. மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் அல்லது பூங்காவிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்கள் காணும் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் பற்றிக் குறிப்பெடுக்கச் செய்து அவற்றைப் பற்றிக் கலந்துரையாடச் செய்க.
முயல்வோம்
அட்டவணையில் மறைந்துள்ள இயற்கை வளங்களை வட்டமிடுக.
இணைப்போம்
உணவின் அடிப்படையில் விலங்குகளைப் பொருத்துக.
V. மரக்கன்று நடுதல்
மெல்லிய தண்டுடன் கூடிய சிறு தாவரமே மரக்கன்று எனப்படும். மரங்கள் இல்லாமல், பூமியில் உயிர்கள் வாழ முடியாது. மரக்கன்றுகளை நடுதலும் அவற்றைப் பராமரித்தலுமே நல்ல சுற்றுச்சூழலை உருவாக்கும்.
தாவரங்களின் பயன்கள்
❖ சுவாசிக்க உயிர்வளியைத் (ஆக்சிஜன்) தரும்
❖ உயிரினங்களுக்கு நிழைலயும், உணைவயும் தரும்
❖ சுற்றுப்புறத்தில் உள்ள தீமை விளைவிக்கும் வாயுக்கைளயும் புகையயையும் உறிஞ்சிக் கொள்ளும்.
❖ மழைப் பொழிவைத் தரும்
❖ வீட்டு உபேயாகப் பொருள்கைளச் செய்ய மரக்கட்டைகைளத் தரும்.
❖ நன்கு வாழ்வதற்குரிய சூழைலத் தரும்.
உங்களுக்குத் தெரியுமா?
வன மகோத்சவம்
“காடுகளின் விழா” என்ற வன மகோத்சவம் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இது மரம் நடுவதன் அவசியத்தை உணர்த்தும் விழா ஆகும். 1950 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் வாரம் கொண்டாடப்படுகிறது.
நமது பிறந்தநாள், வீட்டு விழாக்கள், தேசிய விழாக்கள் போன்றவற்றின்போது, நாம் மரக்கன்றுகளைப் பரிசாக அளிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். நாமும் நம் பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம்.
மேலும் அறிவோம்
நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சில முக்கிய இயக்கங்களும் சட்டங்களும்
சிப்கோ இயக்கம் – 1970
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் – 1986
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் – 2010
அப்பிகோ இயக்கம் – 1983
முயல்வோம்
அ. தாவரங்களின் பயன்களுள் எவையேனும் இரண்டினை எழுதுக.
1. தாவரங்கள் நமக்கு ஆக்ஸிஜனைத் தருகின்றன.
2. தாவரங்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து மனிதர்கள் வாழ வழிவகுக்கின்றன.
ஆ. ‘நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பேரணி நடத்துதல்
இ உனது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தல்.
ஈ. விதைப்பந்து தயாரித்துப் பகிர்தல்
சிறிது களிமண், இலை மட்கு, நீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். மூன்றையும் கலந்து சிறிய பந்து போல செய்து அதனுள் கிடைத்த விதைகளை வைக்கவும். பின் இவற்றைக் காயவைத்துப் பத்திரப்படுத்திப் பள்ளியின் முக்கிய விழாக்களில் இவ்விதைப் பந்துகளை அனைவருக்கும் வழங்கலாம்.
உ. மரங்களின் பாதுகாப்பு பற்றிச் சில வாசகங்கள் எழுதி, உங்கள் பள்ளி வளாகம் மற்றும் ஊரில் உள்ள மரங்களில் ஒட்டி வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துக.
எ.கா. வாசகங்கள்: பூமியை நாம் பாதுகாத்தால் அது நம்மைக் காக்கும்.
புவி எனதோ, உனதோ அன்று; அது நமது!
1. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்
2. மரம் வளர்ப்போம், மழைபெறுவோம்.
நம் எதிர்காலத்தின் தன்மை இயற்கையின் எதிர்காலத்தைச் சார்ந்தது.
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நமது சுற்றுச்சூழல் ______________ ஆல் சூழப்பட்டது.
அ. உயிர்க் காரணி
ஆ. உயிரற்ற காரணி
இ. உயிர் மற்றும் உயிரற்ற காரணி
விடை : இ. உயிர் மற்றும் உயிரற்ற காரணி
2. பின்வருவனவற்றுள் உயிர்க் காரணி எது?
அ. நீர்
ஆ. ஆடு
இ. காற்று
விடை : ஆ. ஆடு
3. மனிதர்கள் தங்கள் உணவிற்காக ______________ச் சார்ந்துள்ளனர்.
அ. தாவரங்கள்
ஆ. மண்
இ. மரக்கட்டை
விடை : அ. தாவரங்கள்
4. முதன்மை உற்பத்தியாளர்கள் எவை ?
அ. உலர்ந்த இலைகள்
ஆ.பசுந்தாவரங்கள்
இ. பச்சையமில்லாத் தாவரங்கள்
விடை : ஆ.பசுந்தாவரங்கள்
5. சிதைப்பவைக்கு எடுத்துக்காட்டு எது?
‘ அ. மாமரம்
ஆ. பாக்டீரியா
இ. மான்
விடை : ஆ. பாக்டீரியா
6. பூமியில் பசுந்தாவரங்கள் இல்லையெனில், பின்வரும் எந்தெந்த உயிர்க் காரணிகள் அழிந்துவிடும்?
அ) அ மற்றும் இ
ஆ) ஆ மற்றும் ஈ
இ) அ மற்றும் ஈ
ஈ) அ, ஆ, இ மற்றும் ஈ
விடை : ஈ) அ, ஆ, இ மற்றும் ஈ
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. _________ (பசு / மண்) ஒரு நுகர்வோர்.
விடை : பசு
2. இளந்தாவரங்கள் _________ (மரம் / மரக்கன்று) எனப்படும்.
விடை : மரக்கன்று
3. மரம் நடுதலால் நமக்கு _________ (ஆக்ஸிஜன் / நிலம்) கிைடக்கும்.
விடை : ஆக்ஸிஜன்
4. உலகச் சுற்றுச்சூழல் தினம் _________ (ஜூன் 15 / ஜூன் 5) அன்று கொண்டாடப்படுகிறது.
விடை : ஜூன் 5
5. _________ (சிதைப்பவை / உற்பத்தியாளர்கள்) என்பது இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து உணைவப் பெறுகின்றன.
விடை : சிதைப்பவை
III. பொருத்துக
1. கல் – நுகர்வோர்
2. பாக்டீரியா – உயிரற்ற காரணி
3. தாவரம் – சிதைப்பவை
4. எருமை – உற்பத்தியாளர்
விடை :
1. கல் – உயிரற்ற காரணி
2. பாக்டீரியா – சிதைப்பவை
3. தாவரம் – உற்பத்தியாளர்
4. எருமை – நுகர்வோர்
IV. சரியா? தவறா? எனக் கூறுக.
1. உயிர்க் காரணிகளுக்கு உயிரற்ற காரணிகள் அவசியமாகிறது. (சரி)
2. நதி உயிர்க் காரணிக்கு எடுத்துக்காட்டு ஆகும். (தவறு)
3. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் வாரம் ‘வன மேகாத்சவம்’ கொண்டாடப்படுகிறது. (சரி)
4. தாவரங்கள் என்பவை நுகர்வோர்கள். (தவறு)
5. தாவரங்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவும் இருப்பிடமும் தருகின்றன. (சரி)
V. விடையளி.
1. விஜய் ’P’ மற்றும் ’R’ என்ற இரண்டு காரணிகைள (ஒன்று உயிருள்ளது, மற்றொன்று உயிரற்றது) தனித்தனி கூண்டுகளில் வைத்து உணவும் நீரும் கொடுத்து அவற்றின் மாற்றத்தைக் கவனித்து வந்தான்.
அ) இரண்டில் உயிருள்ள பொருள் எது? உனது விடைக்கான காரணத்தை எழுதுக.
P உயிருள்ள பொருள் ஆகும். ஏனென்றால் P-யின் எடை முதல் வாரத்தை விட நான்காவது வாரம் அதிகமா உள்ளது
ஆ) ஆறாம் வாரத்தில் உயிருள்ள பொருளின் எடை என்னவாக இருக்கும்?
12- கிகி இருக்கும்
2. உயிர்க் காரணி, உயிரற்ற காரணிக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
உயிர்க் காரணி : தாவரங்கள், மனிதன்
உயிரற்ற காரணி : நீர், சூரியன்
3. உயிருள்ளைவ மற்றும் உயிரற்றைவக்கு இடையேயான ஏதேனும் மூன்று வேறுபாடுகைள எழுதுக.
உயிர்க் காரணிகள் (உயிருள்ளவை)
இவை சுவாசிக்கவும் வளரவும் செய்யும்
இவை உயிர் வாழ உணவு தேவை
இவற்றிற்கு உணர்ச்சி உண்டு
இளம் உயிரிகளை உருவாக்கும்
உயிரற்ற காரணிகள் (உயிரற்றவை)
இவை சுவாசிக்கவும், வளரவும் செய்யா.
உணவு தேவைப்படாது
இவற்றிற்கு உணர்ச்சி இல்லை
இளம் உயிரிகளை உருவாக்காது
4. பூச்சிகளுக்குத் தேவையான உயிரற்ற காரணிகைளப் பட்டியலிடுக.
காற்று, மண்
5. சுற்றுச்சூழல் சமநிைலக்குத் தேவையான உயிர்க் காரணிகள் யாவை ?
உற்பத்தியாளர்கள், நுகர்வோர், சிதைப்பவர்
6. ‘தாவரங்களை முதன்மை உற்பத்தியாளர்கள் எனக் கூறுகிேறாம்’. ஏன்?
தாவரங்கள், தமக்குத் தேவையான உணைவ ஒளிச்சேர்க்கை மூலம் தாமே உற்பத்தி செய்கின்றன. எனேவ, பசுந்தாவரங்கள் முதன்மை ம உற்பத்தியாளர்கள் எனப்படுகின்றன.
7. தாவரத்தின் எவையேனும் நான்கு பயன்களை எழுதுக.
❖ சுவாசிக்க உயிர்வளியைத் (ஆக்சிஜன்) தரும்
❖ உயிரினங்களுக்கு நிழைலயும், உணைவயும் தரும்
❖ சுற்றுப்புறத்தில் உள்ள தீமை விளைவிக்கும் வாயுக்கைளயும் புகையயையும் உறிஞ்சிக் கொள்ளும்.
❖ மழைப் பொழிவைத் தரும்
VI. செயல்திட்டம்.
உயிர்க் காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகளின் படங்கைளச் சேகரித்துப் படத்தொகுப்பு தயார் செய்க.
பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான உயிரற்ற காரணிகளை எழுதுக.
1. பறவைகள் : நீர் , காற்று , சூரிய ஒளி, மண்.
2. பூச்சிகள் : நீர், காற்று , சூரிய ஒளி, மண்.
3. மனிதன் : நீர், காற்று , சூரிய ஒளி, மண்.
இணைப்போம்
மூலப்பொருள்களை அவற்றிலிருந்து கிடைக்கும் வளங்கள் (பொருள்கள்) மற்றும் அவற்றின் பயன்களுடன் இணைக்க.
விவாதிப்போம்
1. பூங்காவில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. குரங்குகளும் பறவைகளும் அந்த ஆலமரத்தை வாழிடமாகக் கொண்டுள்ளன. அம்மரத்தின் கீழே மனிதர்களும் ஓய்வெடுப்பதுண்டு. அம்மரமும், குரங்குகளும், பறவைகளும், மனிதர்களும் எவ்வாறு ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர் என உனது நண்பர்களுடன் கலந்துரையாடுக.
2. ‘தாவரம் முக்கியமான ஓர் உயிர்க் காரணி’ ஏன்?
• தாவரம் தாமே பச்சையம் மூலம் உணவுத் தயாரிக்கிறது.
• பிற உயிர் வாழ காய்கனிகள் தருகின்றன.
3. உயிர்க் காரணிகளும், உயிரற்ற காரணிகளும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன என்பதைக் குழுவில் கலந்துரையாடி கருத்துக்களைப் பதிவு செய்க.
முயல்வோம்
1. பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான உயிரற்ற காரணிகளை எழுதுக.
(காற்று, நீர், சூரிய ஒளி, மண், நிலம், கோதுமை, பழங்கள், புல், கோழி)
அ. விலங்குகள் : காற்று, நீர், சூரிய ஒளி.
ஆ. தாவரங்கள் : காற்று, நீர், சூரிய ஒளி, மண்.
இ. மனிதன் : காற்று, நீர், சூரிய ஒளி, நிலம், பழங்கள், கோதுமை.
2. பின்வருவனவற்றிற்கு உதாரணம் தருக.
அ. காற்றில் பறக்கும் விலங்கு : வௌவால்
ஆ. நீரில் வாழும் விலங்கு : திமிங்கலம்
இ. நிலத்தில் நகரும் விலங்கு : ஆமை
ஈ. தாவரத்தை மட்டும் உண்ணும் விலங்கு : ஆடு
முயல்வோம்
பின்வரும் உயிர்க் காரணிகளை வகைப்படுத்துக.
(துளசி, பூஞ்சை , மாமரம், முதலை, கழுகு, பூனை, நாய், வெள்ளரித் தாவரம், மனிதன், முயல், பாக்டீரியா)
உற்பத்தியாளர்கள் : மாமரம், வெள்ளரித் தாவரம், துளசி.
நுகர்வோர்கள் : மனிதன், முயல், பூனை, நாய், கழுகு.
சிதைப்பவை : பாக்டீரியா, பூஞ்சை
2. சிந்தித்து விடையளி.
அ. ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைகிறது. அது உயிருள்ளதா? அல்லது
உயிரற்றதா? உயிரற்றது.
ஆ. உயிருள்ள மரத்திலிருந்து மரக்கட்டைகளைப் பெறுகிறோம். அம்மரக்கட்டைகளிலிருந்து நாற்காலி செய்கிறோம். அந்த நாற்காலி உயிருள்ளதா? அல்லது உயிரற்றதா? உயிரற்றது.
விவாதிப்போம்
1. கலந்துரையாடி எழுதுக.
தாவரங்களும் மனிதர்களும் உயிருள்ளவையே பின்பு மனிதன் ஏன் தாவரங்களைச் சார்ந்துள்ளான்?
• மனிதன் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவை உண்ணுகிறான்.
• மனிதனால் தாமே இயற்கையாக உணவுத் தயாரிக்க இயலாது.
2. மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் உயிருள்ள பொருள்கள் சிலவற்றின் படங்களைக் கொடுத்து, உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தக் கூறவும்.
மாணவர் செயல்பாடு.
3. மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் (அல்லது) பூங்காவிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்கள் காணும் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் பற்றிக் குறிப்பெடுக்கச் செய்து அவற்றைப் பற்றிக் கலந்துரையாடச் செய்க.
மாணவர் செயல்பாடு.
முயல்வோம்
அட்டவணையில் மறைந்துள்ள இயற்கை வளங்களை வட்டமிடுக.
இணைப்போம்
உணவின் அடிப்படையில் விலங்குகளைப் பொருத்துக.
பசு – தாவர உண்ணி
கரடி – அனைத்துண்ணி
புலி – ஊன் உண்ணி
சிங்கம் – ஊன் உண்ணி
யானை – தாவர உண்ணி
காகம் – அனைத்துண்ணி
முயல்வோம்
அ. தாவரங்களின் பயன்களுள் எவையேனும் இரண்டினை எழுதுக.
1. தாவரங்கள் நமக்கு ஆக்ஸிஜனைத் தருகின்றன.
2. தாவரங்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து மனிதர்கள் வாழ வழிவகுக்கின்றன.
ஆ. “நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பேரணி நடத்துதல்.
இ. உனது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தல்.
ஈ. விதைப்பந்து தயாரித்துப் பகிர்தல்
சிறிது களிமண், இலை மட்கு, நீர் ஆகிவற்றை எடுத்துக்கொள்ளவும். மூன்றையும் கலந்து சிறிய பந்து போல செய்து அதனுள் கிடைத்த விதைகளை வைக்கவும். பின் இவற்றைக் காயவைத்துப் பத்திரப்படுத்திப் பள்ளியின் முக்கிய விழாக்களில் இவ்விதைப் பந்துகளை அனைவருக்கும் வழங்கலாம்.
உ. மரங்களின் பாதுகாப்பு பற்றிச் சில வாசகங்கள் எழுதி, உங்கள் பள்ளி வளாகம் மற்றும் ஊரில் உள்ள மரங்களில் ஒட்டி வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துக.
எ.கா: வாசகங்கள்:
பூமியை நாம் பாதுகாத்தால் அது நம்மைக் காக்கும்.
புவி எனதோ, உனதோ அன்று; அது நமது!
1. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்
2. மரம் வளர்ப்போம், மழைபெறுவோம்.