தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்
வாழ்வியல்: திருக்குறள்
குறளும் அணியும்
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
அணி : சொல் பின்வருநிலை அணி
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாக ச் செய்வா ன் வினை. *
அணி : உவமை அணி
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
அணி : சொற்பொருள்பின்வருநிலை அணி
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய் தொழுக லான்.
அணி : வஞ்சப் புகழ்ச்சி அணி
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
அணி : உவமை அணி
I. குறு வினா
1. கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள் கூறுக.
தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர்.
2. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.
சீர் | அசை | வாய்ப்பாடு |
தஞ் / சம் | நேர் நேர் | தேமா |
எளி / யர் | நிரை நேர் | புளிமா |
பகைக் / கு | நிரை நேர் (நிரைபு) | பிறப்பு |
3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
இகழ்நது ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.
4. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்
- கூரான ஆயுதம் – உழைத்ததால் கிடைத்த ஊதியம்.
- காரணம் – இதுவே அவனுடைய பகைவனை வெலல்லும் கூரான ஆயுதம்.
II. சிறு வினா
1. வள்ளுவம், சிறந்த அமைச்சருககுக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பாெருந்துவதைக் குறள் வழி விளக்குக.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
தொழில் செய்வதற்கு தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயல்களை செய்தல் வேண்டும்
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சசு
மனவலிலமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களை கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைய வேண்டும்.
சூழ்ச்சிகள்:-
மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை
இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது.
நடைமுறைகளை அறிதல்:-
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்
ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
2. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நாேக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
பகைவரின் வலிமை:-
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்புரியும் எதிலான் துப்பு
சுற்றாத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும் இருந்தால் அவரால் பகைவரின் வலிமையை எதிர் கொள்ள முடியாது.
பகைக்கு ஆட்படல்:-
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்கம் எளியன் பகைக்கு
மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பாெருந்தும் பண்பு இல்லாதவராய், பிறர்க்குகு காெடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.
கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
1. உலகில் சிறந்த பொருள் யாது?
ஒரு பொருளாளக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகின் சிறந்த பொருள் வேறு இல்லை.
2. எந்தப் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்?
மற்றவர்களிடம் இரக்ககும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.
3. அமைச்சருக்குரிய ஐந்து சிறப்புகள் யாவை?
மன வலிமை, குடிகளைக் காத்தல், விடா முயற்சி, ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்
4. யாரால் பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது?
சுற்றத்தாரிடம் அன்பு இன்மை, பொருந்திய துணை இன்மை, வலிமையின்னை
5. எவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது?
இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது.