Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 1

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 1

தமிழ் : இயல் 5 : மணற்கேணி

உரைநடை: மொழிபெயர்ப்புக் கல்வி

I. பலவுள் தெரிக.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

  1. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  2. காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  3. பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  4. சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

விடை : சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

II. குறு வினா

தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.

தாய்மொழித் தமிழும் உலகப் பொது மொழி ஆங்கிலமும் தவி, நான் கற்க விரும்பும் மொழி இந்தி

இந்தி கற்க விரும்புக் காரணம் :

  • இந்தி நமது நாட்டின் தேசிய மொழி.
  • இந்தி இந்திய பாராளுமன்ற மொழி.
  • பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி.
  • அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக இருக்கும் மொழி.
  • வட நாட்டு மக்களின் பண்பாட்டை புரிந்து கொள்ளும் உதவும் மொழி இந்தி.

III. சிறு வினா

1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

என்னுடன் படித்த மாணவன் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்கிறான்.

நான் அவனைக் கண்டு இளம் வயது படிப்பதற்கு உரியது, பணி செய்வதற்கு அல்ல.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா!

நாம் இன்று வேலைக்குச் செல்வதால் இன்றைய தேவைதான் பூர்த்தியாகும். நாளைய தேவை பூர்த்தியாகுமா?

கண்ணுடையார் என்பர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையார் கல்லா தவர்.  – என்கிறார் வள்ளுவர்

அப்துல்கலாம் அவர்கள் வறுமையில் வாடினாலும் காலை, மாலை வேலைக்குச் செல்வார் இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்குச் சென்றதால் தான் உலகம் போற்றும் உத்தமர் ஆனார். இவர் போல நீயும் உழை; இடைப்பட்ட நேரத்தில் என்னோட பள்ளிக்கு வா. படித்தும் பணிக்கு போகலாம்.

அரசும், தொண்டு நிறுவனமும் உடை முதல் உணவு வரை இலவசமாகத் தருகிறது.

நாம் கல்வியால் இணைவோம்!

நம் தேசத்தை கல்வியால் உயர்த்துவோம்!!

2. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசு வதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிேகட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிேகட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார். இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக

  1. ஐ.நா. அவையில் உறுப்பினர்கள் தம் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
  2. மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
  3. பார்வையாளர்கள் அவையில் பேசுவோர் உரையை எப்படி புரிந்து கொள்கின்றனர்?
  4. மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பர்?
  5. ஐ.நா. அவையில் பேசுவோரின் பேச்சு எவ்வளவு நேரத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது?
  6. ஐ.நா. அவையில் செய்யப்பட்டுள்ள வசதி யாது?
  7. காதணி கேட்பியை எதற்குப் பயன்படுத்துவர்?
  8. விளக்குவது (Inter Preting) என்றால் என்ன?

IV. நெடு வினா

தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை.

மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

குறிப்புச் சட்டம்

முன்னுரை

வரையறை

தமிழ் இலக்கிய வளம்

கல்வி மொழி

பிற மொழி இலக்கியம்

அறிவியல் கருத்துகள்

பல்துறை கருத்துக்கள்

முடிவுரை

முன்னுரை:-

உலகம் தகவல் தொழில் நுட்பத்தினால் சுருங்கி விட்ட குழலில் கூட மொழிபெயர்ப்புத் துறை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகு மொழிபெயர்ப்பு கலை மக்களின் வாழ்வில் எத்தகு போக்கினைச் செய்கிறது என்பது பற்றிக் காண்போம்.

வரையறை:-

மொழி பெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை எவ்வித பொருள் மாற்றமும் இல்லாமல் வேறு மொழியில் பெயர்ப்பு செய்வது மொழிபெயர்ப்பு எனப்படும்.

தமிழ் இலக்கிய வளம்:-

தமிழ் இலக்கிய வளம் பெற வேண்டும் என்றால் பிற மொழியல் சிறந்து விளங்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்து தமிழில் மொழிபெயர்ப்புப் பணி நடைபெற்ற வருகிறது. அதனடிப்படையில் கம்பரின் இராமவதாரம், வில்லிபுத்தூராரின் வில்லிபாரதம் போன்ற காவியங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டவையே.

கல்வி மொழி:-

மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவை நாம் பெற்றுமப் பல்வேறு துறையில் சிறந்து விளங்க முடியும்.

பிற மொழி இலக்கியம்:-

ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தப் பிறகு நோபல் பரிசு கிடைத்துள்ளது.

அறிவியல் கருத்துகள்:-

மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதனைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பல்துறை கருத்துக்கள்:-

கல்வி, அறிவியல், இலக்கியம் மட்டுமல்லாமல் பிற துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளன. வானொலி, திரைப்படம், இதழியியல், விளம்பரம் போன்ற துறைகளில் மொழிபெயர்ப்பு பணி சிறந்து விளங்குகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் வேற்று மொழிக்கு மாற்றப்படுவதால் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.

முடிவுரை:-

எந்த மொழியின் படைப்பாக இருந்தாலும் எதை மொழி பெயர்க்க வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதனை அறிந்து இலக்கண விதிமுறையுடன் செய்வதால் நிலைபெற்று விளங்கும்.

கூடுதல் வினாக்கள்

I. குறு வினா

1. மணவை முஸ்தபா மொழிபெயர்ப்பு பற்றி கூறுவன யாவை?

ஒரு மொழியல் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என மணவை முஸ்தபா கூறுகிறார்

2. மொழிபெயர்ப்பு எதற்கு இன்றியமையாததாகும்?

ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு இன்றியமையாததாகும்.

3. மு.கு.ஜகந்நாத ராஜா மொழி பெயர்ப்பு எதற்கு காரணமாகுகிறது என்கிறார்?

உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழி பெயர்ப்பு ஒரு காரணமாகிறது என்கிறார் மு.கு.ஜகந்நாத ராஜா.

4. மொழிபெயர்க்கப்படாததால் உரிய ஏற்பு கிடைக்காத நூல் எது?

மகாகவி பாரதியின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் உலகளவில் உயரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்.

5. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?

ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுகிறார்கள்.

6. இப்போது நேரடியாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?

பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா, முதலான நாடுகளின் நூல்கள் நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டு கிடைக்க தொடங்கியிருப்பது நல்ல பயனைத் தரும்

6. வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்ட நூல்கள் யாவை?

பெருங்கததை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவையே.

7. மொழிபெயர்ப்பு முயற்சிகள் எவற்றின் மூலம் செய்யப்பட்டன?

மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம் (NBT), தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.

8. பாரதியின் மொழிபெயர்ப்புகள் சிலவற்றை  எழுதுக

  • Exhibition – காட்சி, பொருட்காட்சி
  • East Indian Railways – இருப்புப் பாதை
  • Revolution – புரட்சி
  • Strike – தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்

9. ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு எவற்றை மதிப்பிடுவார்கள்?

ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.

10. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து எத்தனை நூல்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன.

ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன.

11. தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்பில் இடம் பெறும் பிற மொழிகளை எழுதுக

  • முதலிடம் ஆங்கிலம்
  • இரண்டாமிடம் மலையாளம்
  • அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்யமொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம் பெறுகின்றன.

12. தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டுமென்பதற்கா குலோத்துங்கன் குறிப்பிடும் அடிகளை குறிப்பிடுக.

“காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்
கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி
பேசி மகிழ் நிலை வேண்டும்”

– குலோத்துங்கன்

என்று குறிப்பிடுகிறார்.

13. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
     செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” – இவ்வடிகளை எழுதியவர் யார்?

பாரதியார்

I. சிறு வினா

10. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ மொழிபெயர்ப்பினை விளக்குக

ராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார்.

1949ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இன்று வரையில் ‘வால்கா விலிருந்து கங்கை வரை ’ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

இதுவரையில் பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

  • 1942 – ராகுல் சாங்கிருத்யாயன் மொழி பெயர்ப்பு
  • 1949 – கணமுத்தையா மொழி பெயர்ப்பு
  • 2016 – டாக்டர் என்.ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு
  • 2016 – முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு
  • 2018 – யூமா வாசுகி மொழி பெயர்ப்பு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *