Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 1

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 1

தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை

உரைநடை: கேட்கிறதா என்குரல்!

I. பலவுள் தெரிக

1. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

  1. செய்தி 1 மட்டும் சரி
  2. செய்தி 1, 2 ஆகியன சரி
  3. செய்தி 3 மட்டும் சரி
  4. செய்தி 1, 3 ஆகியன சரி

விடை : செய்தி 1, 3 ஆகியன சரி

2. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க

1. கொண்டல்அ. மேற்கு
2. கோடைஆ. தெற்கு
3. வாடைஇ. கிழக்கு
4. தென்றல்ஈ. வடக்கு

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

II. குறு வினா

1. ‘நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’ – இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.

உயிர்களின் சுவாசம் காற்று!காற்றின் சுவாசம் மரம்!
தூய்மையை நேசிப்போம்!தூய காற்றைச் சுவாசிப்போம்!

III. சிறு வினா

1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்…..முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ‘நீர்’ தன்னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

நானே! நீர்உலகில் முக்கால் பாகம் நான்நான் இல்லை  என்றால் உலகம் இல்லைஆதவனின் அணைப்பில் கருவுற்று
மேகமாய் வளர்ந்து
மழையாய் பிறப்பேன் நான்விண்ணிலிருந்து நான் விழுந்தால்என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்மலையில் விழுந்து
நதியில் ஓடி
கடலில் சங்கமிக்கும்
சரித்திர நாயகன் நான்

2. சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.

மின் விசிறிக் காற்று : நண்பா! வா எங்கெல்லாம் சுற்றித் திரிந்து வருகிறாய்?சோலைக்காற்று : நீ ஓரிடத்தில் இருந்து நிலையகா வீசினாலும் உன்னை இயக்க ஒருவர் தேவை. அது மட்டுமல்லாமல் நீ கொடுக்கும் வெப்பக்காற்றை மனிதர்கள் வேறு வழியின்றி பயன்படுத்துகின்றனர். மின்சாரம் தடை பட்டால் மனிதர்கள் உன்னை இயக்க முடியாதுமின் விசிறிக் காற்று : மனிதர்கள் உன்னை விரும்புகிறார்களா?சோலைக்காற்று : ஆம் நான் மக்களுக்கு குளிர்ந்த காற்றைக் கொடுக்கிறேன். என்னிலிருந்து மின்சாரம் தயாரிக்கினறனர், காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்திலும், தமிழகம் முதல் இடத்திலும் உள்ளது. புதுபிக்கக் கூடிய வளமான என்னை பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படுகிறது.மின் விசிறிக் காற்று : இத்தனை சிறப்புகள் கொண்ட உன்னை வைத்து புது மொழியை உலகிற்கு கூறப்போகிறேன்.சோலைக்காற்று : அப்படியா! அப்புது மொழி யாது?மின் விசிறிக் காற்று : “காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள்”

IV. நெடு வினா

மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

– கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

காற்றைப் பாராட்டல்:-மலர்ந்த மலராத பாதி மலரைம், விடிந்து விடியாத காலைப் பொழுதையும் விரும்பாதார் எவருமில்லை. அனைவரும் காற்றாகிய உன்னையும் நீ இளந்தென்றலாக வரும் போது விரும்புவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். காற்றானது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் இளந்தென்றலாக வருகிறது. காற்றைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய தமிழுக்கு மதுரையிலே சங்கம் வைத்து அழகிய தமிழ் வளர்த்ததாகவும் கருத்துக் கொள்ளலாம்.கவி நயம்:-கவிஞர் கண்ணதாசனின் பாடலில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோடும் வகையிலும் கற்பனை காட்சியளிக்கும் வகையிலும், அணி அழகுற வகையிலும், சந்த தாளமிட்டு சொந்தம் கொண்டாடும் தன் கவிநயத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.சான்று:-மோனைவளரும் – வண்ணமேஎதுகைநதியில் – பொதிகைமுரண்மலர்ந்து x மலராதவிடிந்தும் x விடியாதஇயைபுவண்ணமே – அன்னமேஅணிபாதி மலர் போல வளரும் விழி வண்ணமே (உவமை அணி வந்துள்ளது)

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. உயிரின வாழ்வின் அடிப்படை _______________

விடை : இயற்கை

2. கிழக்கிலிருந்து வீசும்போது காற்று _______________ எனப்படுகிறது.

விடை : கொண்டல்

3. மேற்கிலிருந்து வீசும்போது காற்று _______________ எனப்படுகிறது.

விடை :  கோடை

4. வடக்கிலிருந்து வீசும்போது காற்று _______________ எனப்படுகிறது.

விடை : வாடைக்காற்று

5. தெற்கிலிருந்து வீசும்போது காற்று _______________ எனப்படுகிறது.

விடை : தென்றல் காற்று

6. காற்றின் ஆற்றலை _______________ என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார்.

விடை : வளி மிகின் வலி இல்லை

7. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய நூல் _______________

விடை : பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது

8. காற்றினை வெண்ணிக்குயத்தியார் __________ எனக் குறிப்பிட்டுள்ளார்

விடை : வளி

9. இந்தியாவிற்குத் தேவையான _______ விழுக்காடு மழையளவினைத் தென்மேற்குப் பருவக்காற்று தருகிறது

விடை : 70

II. குறு வினா

1. உயிரினங்களின் முதன்மைத் தேவை யாவை?

  • மூச்சுக்காற்று
  • தாகத்திற்கு நீர்
  • உறைவதற்கு நிலம்
  • ஒளிக்கு கதிரவன்

– ஆகியன உயிரினங்களின் முதன்மைத் தேவை ஆகும்.

2. காற்றின் உருவங்கள் யாவை?

  • மெல்லத் தொட்டுச் சென்றால் தென்றல்
  • தூக்கிச் சென்றால் புயல்

3. காற்றின் இயக்கம் எதை தீர்மானிக்கிறது?

காற்றின் இயக்கம் மனிதர்களின் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிக்கிறது.

3. பருவக்காற்றின் வகைகள் யாவை?

தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று என இரு வகைப்படும்.

4. காற்று மாசடைவதால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் யாவை?

கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல், புற்றுநோய், இளைப்பு நேயா், மூளை வளர்ச்சிக் குறைவு

5. அமில மழை பெய்யக் காரணம் யாது?

காற்றில் கலக்கும் கந்தக-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு இரண்டும் மழை பொழியும் போது மழை நீரில் கலப்பதே அமில மழை பெய்யக்காரணம் ஆகும்.

6. ஔவையார் தம் குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில் காற்றினை எவ்வாறு சிறுப்பித்துள்ளார்?

ஔவையார் தம் குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில்,

வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம்உண் டாம்

என்று என்னைச் சிறப்பித்துள்ளார்.

7. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நயம்பட உரைக்க காரணம் யாது?

தென்றலாகிய நான், பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், இளங்கோவடிகள் என்னை,

“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்”

என நயம்பட உரைக்கிறார்.

“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நயம்பட உரைக்க காரணம் யாது?

8. காற்றினை பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்ற சிற்றிலக்கியத்தில் பெண் ஒருத்தி தூது செல்ல எவ்வாறு அழைக்கிறாள்?

“நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்
சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”

எனத் தூது செல்ல என்னை அன்போடு அழைக்கிறாள்.

9. கடல் கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால் தான் நிகழ்ந்தன என்பதை புறநானூறு எடுத்துரைப்பதை கூறுக.

“நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!”

– புறம். 66

10. காற்றின் ஆற்றலை ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார் எவ்வாறு சிறப்பித்துள்ளார்?

வளி மிகின் வலி இல்லை (புறம். 51)

என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார்.

11. காற்றின் வேகத்தைப் மதுரை இளநாகனார் குறிப்பிட்டுள்ளதை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?

மதுரை இளநாகனார் (புறம். 55) கடுங்காற்று , மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று என் வேகத்தைப் குறிப்பிட்டுள்ளார்.

12. காற்று மாசுபடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.

காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.

III. சிறு வினா

1. ஹிப்பாலஸ் பருவக்காற்று குறிப்பு வரைக

ஹிப்பாலஸ் பருவக்காற்று கி.பி. ( பொ.ஆ. ) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேர விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள். ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

2. காற்றின் பல்வேறு பெயரினை கூறுக

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
வளிதென்றல்
புயல்சூறாவளி
தென்றல் காற்றுபூங்காற்று
கடல் காற்றுபனிக்காற்று
வாடைக்காற்றுமேல்காற்று
கீழ்காற்றுமென்காற்று
இளந்தென்றல்புழுதிக்காற்று
ஆடிக்காற்றுகடுங்காற்று
புயல்காற்றுபேய்க்காற்று
சுழல்காற்றுசூறாவளிக்காற்று

IV. நெடு வினா

காற்று நான்கு திசைகளில் வீசும் போது தமிழர்கள் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்போது நhன் கொண்டல் எனப்படுகிறேன். கொண்டலாக நான் குளிர்ச்சி தருகிறேன்; இன்பத்தைத் தருகிறேன்; மழையைத் தருகிறேன்; கடல் பகுதிக்கு மேலுள்ள மழை மேகங்களைச் சுமந்து வருவதால் மழைக்காற்று எனப்படுகிறேன்.மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும்போது நான் கோடை எனப்படுகிறேன்; மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன்; வறண்ட நி லப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக் காற்றாகிறேன்.வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்போது நான் வாடைக்காற்று எனப்படுகிறேன். நான் பனிப் பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.தெற்கிலிருந்து வீசும் போது நான் தென்றல் காற்று எனப்படுகிறேன்; மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொள்கிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *