Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium World War II

Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium World War II

சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

  1. செம்டம்பர் 2, 1945
  2. அக்டோபர் 2, 1945
  3. ஆகஸ்டு 15, 1945
  4. அக்டோபர் 12, 1945

விடை ; செம்டம்பர் 2, 1945

2. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

  1. ரூஸ்வெல்ட்
  2. சேம்பெர்லின்
  3. உட்ரோ வில்சன்
  4. பால்டுவின்

விடை ; உட்ரோ வில்சன்

3. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

  1. க்வாடல்கெனால் போர்
  2. மிட்வே போர்
  3. லெனின்கிரேடு போர்
  4. எல் அலாமெய்ன்போர்

விடை ; மிட்வே போர்

4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

  1. கவாசாகி
  2. இன்னோசிமா
  3. ஹிரோஷிமா
  4. நாகசாகி

விடை ; ஹிரோஷிமா

5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?

  1. ரஷ்யர்கள்
  2. அரேபியர்கள்
  3. துருக்கியர்கள்
  4. யூதர்கள்

விடை ; யூதர்கள்

6. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

  1. சேம்பர்லின்
  2. வின்ஸ்டன் சர்ச்சில்
  3. லாயிட் ஜார்ஜ்
  4. ஸ்டேன்லி பால்டுவின்

விடை ; சேம்பர்லின்

7. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

  1. ஜுன் 26, 1942
  2. ஜுன் 26, 1945
  3. ஜனவரி 1, 1942
  4. ஜனவரி 1, 1945

விடை ; ஜுன் 26, 1945

8. பன்னாட்டு நீதின்றத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

  1. நியூயார்க்
  2. சிகாகோ
  3. லண்டன்
  4. தி ஹேக்

விடை ; தி ஹேக்

II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-

1. இராணுவ நீக்கம் செய்யப்பட்ட பகுதியை ஹிட்லர் தாக்கினார்.

விடை ; ரைன்லாந்து

2. இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் ______________ என அழைக்கப்பட்டது.

விடை ; ரோம்-ஜெர்லின்

3. ______________ கடன் குத்தகைத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

விடை ; ரூஸ்வெல்ட்

4. 1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ______________ ஆவார்.

விடை ; சேம்பர்லின்

5. _______________  என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி

விடை ; ரேடார்

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

கூற்று : குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

காரணம் : அவர் 1941இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.

  1. கூற்றும் காரணமும் சரி.
  2. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  3. காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை
  4. காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை.

விடை ; கூற்றும் காரணமும் சரி.

IV) பொருத்துக

1. பிளிட்ஸ்கிரிக்ரூஸ்வெல்ட்
2. ராயல் கப்பற்படைஸ்டாலின் கிரேடு
3. கடன் குத்தகைசாலமோன் தீவு
4. வோல்காபிரிட்டன்
5. க்வாடல்கெனால்மின்னல் வேகத்தாக்குதல்

விடை:- 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ

V. சுருக்கமாக விடையளிக்கவும்

1. முதல் உலகப்போருக்கு் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

  1. முசோலின் – இத்தாலி
  2. ஹிட்லர் – ஜெர்மனி
  3. பிராங்கோ – ஸ்பெயின்

2. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?

ஜெர்மனி பெருமளவு அவமானப்படுத்தப்பட்டதாக  நிலவிய கருத்தைப் பயன்படுத்தி, தனது வல்லமை மிக்க சொற்பொழிவாலும், திறமையாலும், உணர்ச்சி மிக்க் பேச்சுக்களாலும், ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்து செல்வதாகவும் கூறி அடால்ப் ஹிட்லர் மக்களை தன் பக்கம் ஈர்த்தார்.

3.  முத்து துறைமுக நிகழ்வை விவரி

  • 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி பெரும்தாக்குதலைத் தொடுத்தன.
  • அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடக்கிவிட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுக்கும்போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
  • இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும் போர்விமானங்களும் அழிக்கப்பட்டன. அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
  • இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது. சீனாவும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் இணைந்தன.

4. பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?

பெவரிட்ஜ் அறிக்கையை 1942-ம் ஆண்டில் இங்கிலாந்து வெளியிட்டது. அவ்வறிக்கையில் பொது நலனுக்குப் பெருந்தடைகளாக உள்ள வறுமை நோய் ஆகியவற்றை வெற்றி கொள்ள பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடல நலப் பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

5. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின பெயர்களை குறிப்பிடுக

உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு

6. பன்னாட்டு நிதியமைப்பின் நோக்கங்கள் யாவை?

  • உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது,
  • நிதி நிலையை உறுதியானதாக வைத்திருத்தல்
  • பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது
  • வேலை வாய்ப்பினைப் பெருக்குவது
  • நீடித்தப் பொருளாதார வளர்ச்சி
  • உலகம் முழுவதிலும் வறுமையை ஒழிப்பது என்பனவாகும்.

VI. விரிவாக விடையளிக்கவும்

1. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க

உலகம் இரு அணிகளாகப் பிரிதல்:-

இரண்டாவது உலகப்போர் உலகில் அடிப்படையானதும் முக்கியமானதுமான பலமாற்றங்களை ஏற்படுத்தியது. வல்லரசுகள் தலைமையிலான அணிகளைக் கொண்ட உலகம் இரு துருவங்களானது. ஒரு அணி கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட அமெரிக்காவால் தலைமையேற்கப்பட்டது. மற்றொரு அணிக்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது. கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகள் என ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அணு ஆயுதப் பரவல்:-

அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணுஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன. பல நாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.

பன்னாட்டு முகமைகள்:-

பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (International Monetary Fund) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

காலனி நீக்கச் செயல்பாடு:-

காலனி நீக்கச் செயல்பாட்டின் அடிப்படையில் காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர். அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.

2. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் 1945ஆம் ஆண்டு, ஜூன் 26ஆம் நாள் 51 நாடுகள் கையெழுத்திட்டன. தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ, ஐக்கிய நாடுகள் சபையில் சமமான வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுச்சபை

ஆண்டுக்கொருமுறை கூடும் இவ்வமைப்பில் நாடுகளின் நலன்சார்ந்த அம்சங்களும் முரண்பாடுகளுக்கான காரணங்களும் விவாதிக்கப்படுகின்றன

பாதுகாப்பு அவை

பாதுகாப்பு சபையானது பதினைந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர்.

நிர்வாக அமைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும். இதன் பொதுச் செயலாளர் பொதுச்சபையில், பாதுகாப்புச்சபையின் பரிந்துரையின்படி தேர்ந்தெடுககப்படுகிறார்.

பொருளாதார சமூக மன்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது அங்கமாகும். ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அனைத்துப் பொருளாதாரச் சமூகப் பணிகளை ஒருங்கிணைப்பது இவ்வமைப்பின் பணியாகும்.

ஐ.நாவின் துணை அமைப்புகள்

  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agricultural Organisation – FAO)
  • உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation -WHO)
  • ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UN Educational Scientific and Cultural Organisation – UNESCO)
  • ஐ.நா. குழந்தைகள் நிதி நிறுவனம் (United Nations Children’s Fund-UNICEF).
  • ஐ.நா.வளர்ச்சி திட்டம் (United Nations Development Plan -UNDP)

ஐ.நா.வின் செயல்பாடுகள்

உலகம் எதிர்கொண்ட, மாறிவரும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு ஐக்கிய நாடுகள் சபை தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது.

1960களில் காலனியாதிக்க நீக்கம் முக்கியப் பிரச்சனையாகும். மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகாலமாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன.

மிகச்சிறப்பாகக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது ஐ.நாவின் அமைதிப்படை. உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அப்படை பணி செய்துள்ளது.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

அதன் முக்கியப் பகுதியாக உள்ள இந்திய இராணுவம் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *