சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மாநில அரசு
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. மாநில ஆளுநரை நியமிப்பவர்
- பிரதமர்
- முதலமைச்சர்
- குடியரசுத் தலைவர்
- தலைமை நீதிபதி
விடை : குடியரசுத் தலைவர்
2. மாநில சபாநாயகர் ஒரு __________________________
- மாநிலத் தலைவர்
- அரசின் தலைவர்
- குடியரசுத் தலைவரின் முகவர்
- மேற்கண்ட எதுவுமில்லை
விடை : மேற்கண்ட எதுவுமில்லை
3. கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல
- சட்டமன்றம்
- நிர்வாகம்
- நீதித்துறை
- தூதரகம்
விடை : தூதரகம்
4. ஆங்கிலோ – இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
- குடியரசுத்தலைவர்
- ஆளுநர்
- முதலமைச்சர்
- சட்டமன்ற சபாநாயகர்
விடை : ஆளுநர்
5. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?
- முதலமைச்சர்
- அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
- மாநில தலைமை வழக்குரைஞர்
- உயர் நீதிமன்ற நீதிபதிகள்
விடை : உயர் நீதிமன்ற நீதிபதிகள்
6. அமைச்சரவையின் தலைவர்
- முதலமைச்சர்
- ஆளுநர்
- சபாநாயகர்
- பிரதம அமைச்சர்
விடை : முதலமைச்சர்
7. மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
- 25 வயது
- 21 வயது
- 30 வயது
- 35 வயது
விடை : 30 வயது
8. கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?
- ஆந்திரப் பிரதேசம்
- தெலுங்கானா
- தமிழ்நாடு
- உத்திரப் பிரதேசம்
விடை : தமிழ்நாடு
9. இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
- கல்கத்தா, பம்பாய், சென்னை
- டெல்லி மற்றும் கல்கத்தா
- டெல்லி, கல்கத்தா, சென்னை
- கல்கத்தா, சென்னை, டெல்லி
விடை : கல்கத்தா, பம்பாய், சென்னை
10. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
- தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
- கேரளா மற்றும் தெலுங்கானா
- பஞ்சாப் மற்றும் ஹரியானா
- மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
விடை : பஞ்சாப் மற்றும் ஹரியானா
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ________________ இடம் கொடுக்கிறார்
விடை : குடியரசுத்தலைவர்
2. சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ______________ தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
விடை : மக்களால்
3. __________________ மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்
விடை : ஆளுநர்
4. அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ___________________ ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
விடை : குடியரசுதலைவர்
III. பொருத்துக
1. ஆளுநர் | அரசாங்கத்தின் தலைவர் |
2. முதலமைச்சர் | மாநில அரசின் தலைவர் |
3. அமைச்சரவை | தீர்ப்பாயங்கள் |
4. மேலவை உறுப்பினர் | சட்டமன்றத்திற்க்குப் பொறுப்பானவர்கள் |
5. ஆயுத படையினர் | மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது. |
விடை:- 1- ஆ, 2-அ, 3-ஈ, 4-உ, 5-இ
IV. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
கூற்று (A) : மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு
காரணம் (R) : குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில சில மசோதாக்கள் மன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.
- A தவறு ஆனால் R சரி
- A சரி ஆனால் R தவறு
- A மற்றும் R சரி கமலும் R, Aவுக்கான சரியான விளக்கமாகும்
- A மற்றும் R சரி கமலும் R, A வுக்கான சரியான விளக்கமல்ல
விடை : A சரி ஆனால் R தவறு
V. சுருக்கமான விடையளி
1. மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது?
- மாநில நிர்வாகத்தின் அரசிலமைப்புத் தலைவர் ஆளுநர்.
- மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது
- மாநில சட்டமன்றமோ அல்லது உயர்நீதி மன்றேமா ஆளுநரை பணி நீக்கம் செய்ய முடியாது
- இந்திய அரசியலமைப்பு, மாநில நிர்வாகத்தின் அனைத்து அதிகாரங்களையும் ஆளுநருக்கு வழங்கிறது.
- ஆளுநர் சட்ட மன்றத்தைக் கூட்டவும், சட்ட மன்றத்தைக் கலைக்கவும் உரிமை பெற்றுள்ளார்
- மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பம் இட்டால் மட்டுமே சட்டமாகும்.
- மாநில அரசைக் கலைக்க இவர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம்.
- குடியரசுத்தலைவரின் ஆட்சியின் போது மாநிலத்தை ஆளுநர் நிர்வாகம் செய்தார்.
2. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
- அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
- நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
- மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
3. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிமன்றத்தின் அதிகாரங்கள் யாவை?
- சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.
- அதே வேளையில் மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன.
- முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.
- மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் `2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.
4. உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிநது கொண்டதென்ன?
- உயர் நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.
- நாட்டின் இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.
VI. விரிவான விடையளி
1. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
அமைச்சரவை தொடர்பானவை
- முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
- அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
- தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
- அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
- அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
- மாநில அரசு வழக்குரைஞர்
- மாநில தேர்தல் ஆணையர்
- அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
- மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
- மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
சட்டமன்றம் தொடர்பானவை
- சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
- சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
- சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
- எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
2. ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்கம் விவரி.
- ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார். ஆனால், அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை.
- ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்டமன்றத்தைக்கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.
- தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத் தொடரிலும் மற்றும் ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத்திலும் உரையாற்றுகின்றார்.
- நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
- சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
- ஆங்கிலோ–இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.
- கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து மாநில சட்டமேலவையின் 6இல் 1 பங்கு இடங்களுக்கு அவர்களை நியமனம் செய்கிறார்.
- மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும். ஆனால், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் பொழுது ஆளுநர் கையொப்பமிடலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மீண்டும் மறு பரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம்.
- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம். ஆனால் அந்த அவசரச்சட்டம், 6 மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
- அவசரச்சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப் பெறலாம்.
- மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை, அரசின் தணிக்கைக்குழு அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.
3. அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
- மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.
- சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து அனைத்து முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
- நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
- முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
- மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
- மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
- ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
- அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
- ஆண்டு வரவு-செலவு திட்டம் (Budget) அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.