சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்
1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
- T.M. நாயர்
- P. ரங்கையா
- G. சுப்பிரமணியம்
- G.A. நடேசன்
விடை ; P. ரங்கையா
2. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
- மெரினா
- மைலாப்பூர்
- புனித ஜார்ஜ் கோட்டை
- ஆயிரம் விளக்கு
விடை ; ஆயிரம் விளக்கு
3. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?
- அன்னிபெசன்ட்
- M. வீரராகவாச்சாரி
- B.P. வாடியா
- G.S. அருண்டேல்
விடை ; அன்னிபெசன்ட்
4. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
- S. சத்தியமூர்த்தி
- கஸ்தூரிரங்கர்
- P. சுப்பராயன்
- பெரியார் ஈ.வெ.ரா
விடை ; S. சத்தியமூர்த்தி
5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
- K. காமராஜ்
- C. ராஜாஜி
- K. சந்தானம்
- T. பிரகாசம்
விடை ; T. பிரகாசம்
6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
- ஈரோடு
- சென்னை
- சேலம்
- மதுரை
விடை ; சேலம்
II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-
1. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி _______________ ஆவார்
விடை ; T.முத்துசாமி
2. _____________________ எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்
விடை ; பாரத மாதா சங்கம்
3. சென்னையில் தொழிற்சங்கங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் __________________ ஆவார்.
விடை ; B.P.வாடியா
4. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ________________.
விடை ; ராஜாஜி
5. ________________ முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்
விடை ; யாகுப்ஹசன்
6. 1932 ஜனவரி 26இல் __________________ புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.
விடை ; பாஷ்யம்
III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:-
1.i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது
ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது
iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்படவேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது
iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.
- (i) மற்றும் (ii) ஆகியவை சரி
- (iii) மட்டும் சரி
- (iv) மட்டும் சரி
- அனைத்தும் சரி
விடை ; (i) மற்றும் (ii) ஆகியவை சரி
2. i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை
ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் ராஜாஜி பணியாற்றினார்.
iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை
iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.
- (i) மற்றும் (ii) ஆகியவை சரி
- (i) மற்றும் (iii) ஆகியவை சரி
- (ii) மட்டும் சரி
- (i), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை ; இ) (ii) மட்டும் சரி
IV) பொருத்துக:-
- சென்னைவாசிகள் சங்கம் – இந்தி எதிர்ப்புப் போராட்டம்
- ஈ.வெ.ரா – நீல் சிலையை அகற்றுதல்
- S.N. சோமையாஜுலு – உப்பு சத்தியாகிரகம்
- வேதாரண்யம் – சித்திரவதை ஆணையம்
- தாளமுத்து – வைக்கம் வீரர்
விடை 1-ஈ, 2-உ, 3-ஆ, 4-இ, 5-அ
V. சுருக்கமாக விடையளிக்கவும்
1. மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக.க்ஷ
- அரசியலைமப்பு வழிமுறையில் நம்பிக்கை கொண்டிருத்தல்.
- அவைக் கூட்டங்களில் நடத்துதல்
- பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடல்.
- தங்கள் கண்ணோட்டங்களை மொழி நடையில் வேண்டுகோள் மூலம் மனுக்கள் அளிதல்
- குறிப்பானை மூலம் அரசுக்கு சமர்பித்தல்
- ஆங்கிலேயர்களின் காலனியச் சுரண்டலை அம்பலப்படுத்துதல்
2. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
- திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார்.
- இவர் 1908இல் ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்குத் தலைமையேற்றார்.
- இந்நிகழ்வு நடைபெற்ற அதே சமயத்தில் பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்டார். பிபின் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடுவதற்காகப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்ததற்காக வ.உ.சியும் சிவாவும் கைது செய்யப்பட்டனர்.
- தலைவர்கள் இருவரும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்.
- தொடக்கத்தில் வ.உ.சிக்கு கொடுமையான வகையில் இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.
- மக்கள் செல்வாக்கு பெற்ற இவ்விரு தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதில் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது.
- காவல்நிலைய, நீதிமன்ற, நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.
- தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
3. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?
- தேசிய இயக்கம் தளர்வுற்று இருந்த நிலையில் 1916இல் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தொடங்கினார்.க்ஷ
- அவர் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார். இச்செயல் திட்டத்தில் G.S. அருண்டேல், B.P. வாடியா மற்றும் C.P. ராமசாமி ஆகியோர் அவருக்குத் துணை நின்றனர்.
- தன்னுடைய திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காக அன்னிபெசன்ட் நியூ இந்தியா (New India), காமன் வீல் (Commonweal) எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.
- அன்னி பெசன்ட் ‘விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது’ (‘How
India wrought for Freedom’), இந்தியா: ஒரு தேசம் (India: A Nation) எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார். - பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் இவ்வியக்கத்தில் சேர்ந்து தன்னாட்சி இயக்க வகுப்புகளினல் பயிற்சி பெற்றனர். அம்மாணவர்கள் சாரணனர் இயக்கக் குழுக்ககளாகவும், தொண்டர்களாவும் மாற்றப்பட்டனர்.
- அன்னிபெசன்ட்டும் அவருடன் பணியாற்றுவோரும் பொது மேடைகளில் பேசுவதும், எந்த ஒரு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டிருந்து.
- 1917இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அன்னிபெசன்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
VI. விரிவாக விடையளிக்கவும்
1. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.
- வங்கப்பிரிவினையின் விளைவாக சுதேசி இயக்கம் தோன்றியது
- அந்நிய பண்டங்களை புறக்கணித்தல் போன்ற தீவிரமான இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
- சுப்பிரமணிய பாரதியாரின் தேசப்பற்று மிக்க பாடல்கள், பெருமளவு இளைஞர்களை சேர்த்தது.
- வ.உ.சிதம்பரனார் சுதேசி நீராவிக் கப்படல்களை தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இயக்கினார்.
- திருெநல்வேலி கலகம் இளைஞர்களிடையே போராட்ட குணத்தை அதிகரித்தது.
- பாண்டிச்சேரியில் புகலிடமாக இருந்து விடுதலை உணர்வை மேற்கொண்டனர்
- ஆங்கிலேய அதிகாரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் எனபவரை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று மக்களிடையே தேசப்பற்றை தூண்டினார்.
- பிபின் சந்திரபால் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல சொற்பொழிவுகளை நடத்தி இளைஞர்களை கவர்ந்தார்.
- தென்னிந்தியா நலவுரிமைச் சங்கமும் காங்கிரசின் விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டது.
- ஒத்துழையாமை இயக்கத்தின் போது இராஜாஜியும், ஈ.வெ.ரா. பெரியாரும் துடிப்புடன் செயல்பட்டனர்.
- வரிகொடா இயக்கமும், அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பும் தமிழகம் முழுவதும் நடந்தேறின.
2. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.
- தங்கள் நலன்களைப் பாதுகாக்க பிராமணரல்லாதோர்கள் 1912இல் சென்னை திராவிடர் கழகம் என்னும் அமைப்பை தொடங்கினார்.
- இக்கழகத்தின் செயலாளராக C.நடேசனார் பணியாற்றினார். அவர் 1916இல் பிராமணர் அல்லாத மாணவர்க்கு திராவிடர் சங்க தங்கும் விடுதியை நிறுவினார்.
- இதில் டி.எம்.நாயர், பி.தியாகராஜன் ஆகிய நபர்கள் முக்கிய பங்காற்றினர்
- இதுவே பிராமணரல்லாதோர் நலன்களைப் பாதுகாக்க தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக மாறியது.
- ஆங்கிலத்தில் ஜஸ்டில், தமிழில் திராவிடன், தெலுங்கில ஆந்திர பிரகாசிகா என்ற மூன்று செய்தித்தாள்களில் விழிப்புணர்வு மேற்கொண்டார்.
- இதுவே பின்னர் நீதிக்கட்சியாக மாறி பிராமணர் அல்லாத பிற மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் எனப் போராடியது.
- இதன் விளைவாக 1919ஆம் ஆண்டுச் சட்டம் பிராமணல்லாதோர்க்கு தேதர்தலில் இட ஒதுக்கீடு வழங்கியது.
- 1920 நீதிக்கட்சி சென்னை மாகாண தேர்தல்களில் வெற்றி பெற்று பிற மக்களுக்கும்வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கியது.
3. சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.
- 1927 இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு சுதந்திரமே தனது இலக்கு என தீர்மானித்தது.
- காந்தியடிகளின் தண்டியாத்திரை தமிழகத்திலும் எதிரொலித்தது.
- ராஜாஜி அவர்கள் திருச்சியில் இருந்து கடற்கரை நகரமான வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சி கால்நடையாக பேராட்டத்தை தொடங்கினார்.
- ராஜாஜியுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் தேசபக்தி வீரப்பாடல்கள் அணிவகுப்பில் எதிரொலித்தது.
- பயணித்த பாதை எங்கு வரேவற்பு கிடைத்தது.
- ராஜாஜி தலைமையிலான 12 தொண்டர்கள் உப்பு சட்டத்தை மீறி உப்பு காய்ச்சி எதிர்ப்பை தெரிவித்தனர்.
- ராஜாஜி மற்றும் T.S.S ராஜன். திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம் போன்றோர் கைது செய்யப்பட்ட்னர்.
- இந்த சட்ட மறுப்பு இயக்கங்கள் சென்னை திருவல்லிக்கேணி, இராமேஸ்வரம், உவரி, வேப்பபலோடை, தூத்துக்குடி, தருவைகுளம் போன்ற இடங்களில் நடந்தேறியது.
- தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் அந்நிய துணிகள் விற்கும் கடைகளை தடை செய்தார்.
- திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் போராட்டம் நடந்தது. பேராட்டத்தில் திருப்பூர் காவலர்கள் தடியடியில் இறந்தார்.
- மொத்தத்தில் சட்ட மறுப்பு இயக்கம் மிகப்பெரிய இயக்கமாக நாட்டில் எழுச்சி பெற்றது.