Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Types of Chemical Reactions

Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Types of Chemical Reactions

அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது

  1. சிதைவுறுதல் வினை
  2. சேர்க்கை வினை
  3. ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
  4. இரட்டை இடப்பெயர்ச்சி வினை

விடை ; சேர்க்கை வினை

2. ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.

  1. வெப்பம்
  2. மின்னாற்றல்
  3. ஒளி
  4. எந்திர ஆற்றல்

விடை ; ஒளி

3. கார்பன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது.

C(S) + O2(g) → CO2(g)

இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படுகிறது.

i) சேர்க்கை வினைii) எரிதல் வினை
iii) சிதைவுறுதல் வினைiv) மீளா வினை
  1. (i) மற்றும் (ii)
  2. (i) மற்றும் (iv)
  3. (i), (ii) மற்றும் (iii)
  4. (i), (ii) மற்றும் (iv)

விடை ; (i), (ii) மற்றும் (iv)

4. Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s)↓ + 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது.

  1. நடுநிலையாக்கல் வினை
  2. எரிதல் வினை
  3. வீழ்படிவாதல் வினை
  4. ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

விடை ; வீழ்படிவாதல் வினை

5. வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?

i) இயக்கத்தன்மை உடையது.ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.
  1. (i), (ii) மற்றும் (iii)
  2. (i), (ii) மற்றும் (iv)
  3. (ii), (iii) மற்றும் (iv)
  4. (i), (iii) மற்றும் (iv)

விடை ; (i), (ii) மற்றும் (iii)

6. X(s) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது.

i) Znii) Agiii) Cuiv) Mg

சரியான இணையைத் தேர்ந்தெடு.

  1. (i) மற்றும் (ii)
  2. (ii) மற்றும் (iii)
  3. (iii) மற்றும் (iv)
  4. (i) மற்றும் (iv)

விடை ; (ii) மற்றும் (iii)

7. பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேரமம்” வகை அல்ல.

  1. C(s) +O2(g) → Co2(g)
  2. 2K(s) + Br2(l) → 2KBr(s)
  3. 2CO(g) + O2(g) → 2CO2(g)
  4. 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)

விடை ; அ) C(s) +O2(g) → Co2(g)

8. பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.

  1. A(s) + B(s) → C(s) + D(s)
  2. A(s) + B(aq) → C(aq) + D(l)
  3. A(aq) + B(aq) → C(s) + D(aq)
  4. A(aq) + B(s) → C(aq) + D(l)

விடை ; A(aq) + B(aq) → C(s) + D(aq)

9. ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH) ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன?

  1. 1 x 10-3 M
  2. 3 M
  3. 1 x 10-11 M
  4. 11 M

விடை ; 1 x 10-11 M

10. தூளாக்கப்பட்ட CaCO3; கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்

  1. அதிக புறப்பரப்பளவு
  2. அதிக அழுத்தம்
  3. அதிக செறிவினால்
  4. அதிக வெப்பநிலை

விடை ; அதிக புறப்பரப்பளவு

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ___________ என்று அழைக்கப்படுகிறது.

விடை ; நடுநிலையாக்கல் வினை

2. ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினை புரியும்போது __________ வாயு வெளியேறுகிறது.

விடை ; ஹைட்ரஜன்

3. பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை ______________ என்று அழைக்கப்படுகிறது.

விடை ; இயற்பியல் சமநிலை

4. ஒரு பழச்சாரின் pH மதிப்பு 5.6. இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும் போது இதன் pH மதிப்பு ____________ (அதிகமாகிறது / குறைகிறது)

விடை ; அதிகமாகிறது

5. 25°C வெப்பநிலையில் நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு ___________.

விடை ; 1.00 x 10-14 மோல்2டெசி.மீ-6

6. மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு ________.

விடை ; 7.4 (7.35 – 7.45)

7. மின்னாற்பகுப்பு என்பது _______________ வகை வினையாகும்.

விடை ; சிதைவு வினை

8. தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்களின் எண்ணிக்கை __________.

விடை ; ஒன்று

9. வேதி எரிமலை என்பது ____________ வகை வினைக்கு எடுத்துக்காட்டாகும்.

விடை ; வேதி சிதைவு வினை

10. ஹைடிரஜன் (H+) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி _________________ என்று அழைக்கப்படுகிறது.

விடை ; ஹைட்ரோனியம்  அயனி

III. பொருத்துக.

1. வினையின் வகைகளை அடையாளம் காண்

வினைவகை
NH4OH(aq) + CH3COOH(aq) → CH3COONH4(aq) + H2O(1)ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
Zn(S) + CuSO4(aq) → ZnSO4(aq) + Cu(S)எரிதல் வினை
                  வெப்பம்ZnCO3(S)       →     ZnO(S) + CO2(g)நடுநிலையாக்கல் வினை
C2H4(g) + 4O2(g) → 2CO2(g) + 2H2O(g) + வெப்பம் வெப்பச்சிதைவு வினை

விடை ; 1 – B, 2 – D, 3 – A, 4 – C

IV. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

1. சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்ய வல்லது. ( தவறு )

  • சோடியம் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்ய வல்லது.

2. SO3, CO2, NO2 போன்ற வாயுக்கள் கரைந்துள்ள மழைநீரின் pH மதிப்பு 7-யை விட குறைவாக இருக்கும். ( சரி )

3. ஒரு மீள் வினையின்சமநிலையில் வினைவினை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவு சமமாக இருக்கும். ( சரி )

4. ஒரு மீள்வினையின் ஏதேனும் ஒரு வினைவிளை பொருளை அவ்வப்பொழுது நீக்கும் பொழுது அவ்வினையின் விளைச்சல் அதிகரிக்கிறது. ( சரி )

5. pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் காரத்தன்மை கொண்டது. ( தவறு )

  • pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் அமிலத்தன்மை கொண்டது.

V. சுருக்கமாக விடையளி

1. பொட்டாசியம் குளோரைடு நீர்க்கரைசலை சில்வர் நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும் பொழுது வெண்மை நிற வீழ்படிவு உண்டாகிறது. இவ்வினையின் வேதிச் சமயன்பாட்டைத் தருக.

KCl(aq) + AgNO3(aq) → AgCl(S) ↓+ KNO3(aq)

AgCl வெள்ளை வீழ்படிவாக நீர் கரைசலான KNO3-ல் கிடைக்கிறது

2. வெப்பநிலை உயர்த்தும்பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?

வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையில் வேகம் அதிகரிக்கிறது.

3. சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு, வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு தருக.

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருள்கள் இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை சேர்க்கை அல்லது கூடுகை வினை ஆகும்.
  • இதனை “தொகுப்பு வினை” அல்லது “இயைபு வினை”
    என்றும் அழைக்கலாம்.

எடுத்துக்காட்டு:

ஹைட்ரஜன் வாயு குளோரினுடன் இணைந்து ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை தருகிறது.

H2(g) + Cl2(g) → 2HCl(g)

4. மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.

மீள் வினைமீளா வினை
தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும்.முன்னோக்கு வினை மட்டும் நடைபெறும் (பின்னோக்கு வினை நடைபெறாது)
முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும்ஒரே திசையில் மட்டுமே நடைபெறும் வினை முன்னோக்கு வினையாகும்.
வினையானது சமநிலையை அடையும்வினையானது சமநிலையை அடையாது

VI. விரிவாக விடையளி.

1. வெப்பச்சிதைவு வினைகள் என்பது யாவை?

வெப்பச் சிதைவு வினையில் வினைபடு பொருள் வெப்பத்தினால் சிதைவுறுகிறது.

எடுத்துக்காட்டு: மெர்குரி (II) ஆக்ஸைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்குரி மற்றும் ஆக்சிஜன் வாயுவாக மாறுகிறது.

வெப்பத்தை எடுத்துக் கொண்டு இவ்வினை நிகழ்வதால் இது வெப்பச் சிதைவு வினை எனப்படுகிறது.

இவ்வினை, சேர்மத்திலிருந்து தனிமம் சிதைவடைதல் என்ற வகையைச் சார்ந்தது. அதாவது மெர்குரிக் ஆக்ஸைடு, மெர்குரி மற்றும் ஆக்சிஜன் என்ற தனிமங்களாகச் சிதைவடைகிறது.

 2HgO(S)வெப்பம்→ 2Hg(l) + O2(g)

இது போன்று, கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் போது அது சிதைவுற்று கால்சியம் ஆக்சைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடாக மாறுகிறது. இவ்வினை சேர்மத்திலிருந்து சேர்மம் / சேர்மம் என்ற வகையைச் சார்ந்தது.

 CaCO3(S)வெப்பம்→ CaO(S) + CO2(g)

வெப்பச்சிதைவு வினைகளில் பிணைப்புகளை உடைப்பதற்கு வெப்பம் தரப்படுகிறது. இது போன்ற வெப்பத்தை உறிஞ்சும் வினைகளை “வெப்பகொள் வினைகள்” எனலாம

2. இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் வகைகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

இரண்டு சேர்மங்கள் வினைபுரியும் பொழுது அவற்றின் அயனிகள் பரிமாறிக் கொள்ள படுமானால் அவ்வினை இரட்டை இடப்பெயர்ச்சி எனப்படுகிறது.

இரு வகையான இடப்பெயர்ச்சி வினைகள் உள்ளன. அவையாவன:

  1. வீழ்படிவாக்கல் வினை
  2. நடுநிலையாக்கல் வினை

1. வீழ்படிவாக்கல் வினைகள்

இரு சேர்மங்களின் நீர்க்கரைசல்களை கலக்கும் பொழுது, அவை வினைபுரிந்து நீரில் கரையாத ஒரு விளைபொருளும், நீரில் கரையும் ஒரு விளைபொருளும் தோன்றினால் அவ்வினை வீழ்படிவாக்கல் வினை எனப்படும்.
பொட்டாசியம் அயோடைடு மற்றும் லெட் நைட்ரேட்டின் தெளிவான நீர்க்ககரைசல்களைக் கலக்கும் பொழுது ஒரு இரட்டை இடப்பெயர்ச்சி வினை நடக்கிறது.

Pb(NO3)2(aq) + 2KI(aq) → PbI2(S) + 2KNO3(aq)

ii. நடுநிலையாக்கல் வினைகள்

அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தந்து  அமிலத் தன்மையும், காரத்தன்மையும் நடுநிலையாக்கபடுவதால் நடுநிலையாக்கல் வினை எனப்படுகிறது.

சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடு என்ற நடுநிலையான நீரில் கரையும் உப்பு கிடைக்கிறது.

NaOH(aq) + HCl(aq) → NaCl(aq) + H(2)O(I)

3. ஒரு வினையின் வினை வேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

வினையின் வேகத்தை பாதிக்கக் கூடிய முக்கிய காரணிகள்

  • வினைபடு பொருள்களின் தன்மை
  • வெப்பநிலை
  • வினையூக்கி
  • அழுத்தம்
  • வினைபடு பொருளின் புறப்பரப்பளவு

i. வினைபடு பொருள்களின் தன்மை

சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வேகமாக வினைபுரிகிறது. ஆனால், அசிட்டிக் அமிலத்துடன்மெதுவாக வினை புரிகிறது. ஏனென்றால் ஹைட்ரோ குளோரிக் அமிலம், அசிடிக் அமிலத்தை விட வினைதிறன்
மிக்கது. எனவே வினைபடுபொருளின் இயல்பு வினைவேகத்தை பாதிக்கிறது.

2Na(s) + 2HCl(aq) → 2NaCl(aq) + H2(g) (வேகமாக)

2Na(S) + 2CH(3)COOH(aq) → 2CH3COONa(aq)) + H2(g) (மெதுவாக)

ii. வினைபடு பொருளின் செறிவு

வினைபடு பொருள்களின் செறிவு அதிகரிக்கும் போது வினைவேகம் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட கன அளவு கொண்ட கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவே செறிவு ஆகும். செறிவு அதிகமாக இருக்கும் போது குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே வினையின் வேகமும் அதிகரிக்கும். துத்தநாக துகள்கள், 1 M ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைவிட 2 M ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வேகமாக வினை புரிகின்றது.

iii. வெப்பநிலை

வெப்பநிலை உயரும்போது வினையின் வேகமும் அதிகரிக்கும். ஏனெனில் வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கிறது. அறை வெப்பநிலையில் கால்சியம் கார்பனேட் மெதுவாக வினைபுரியும் ஆனால் வெப்பப்படுத்தும்போது வினையின் வேகம் அதிகரிக்கும்.

iv. அழுத்தம்

வாயுநிலையிலுள்ள வினைபடு பொருள்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கும். ஏனெனில் அழுத்தத்தை அதிகரிக்கும்போது வினைப்படு பொருள்களின் துகள்கள் மிக அருகே வந்து அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றன.

v. வினையூக்கி

வினையூக்கி என்பது வினையில் நேரடியாக ஈடுபடாது, ஆனால் அவ்வினையின் வேகத்தை அதிகரிக்கும்.

பொட்டாசியம் குளோரேட்டை சூடுபடுத்தும் போது ஆக்சிஜன் மிகக் குறைவான வேகத்தில் வெளியேறுகிறது. ஆனால் மாங்கனீசு டை ஆக்ஸைடை வினைபடு பொருளுடன் சேர்த்த பிறகு ஆக்சிஜன் வெளியேறும் வேகம் அதிகரிக்கிறது.

vi. வினைபடு பொருள்களின் புறப்பரப்பளவு

வேதிவினையில் கட்டியான வினைபடு பொருள்களை விட, தூளாக்கப்பட்ட வினைபடு பொருள்கள் விரைவாக வினைபுரியும்

எ.கா

கட்டியான கால்சியம் கார்பனேட்டை விட துளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் மிக விரைவாக வினைபுரியும், ஏனெனில் தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட்டில் புறப்பரப்பளவு அதிகளவு இருப்பதால் வினை வேகமாக நிகழ்கிறது.

4. அன்றாட வாழ்வில் pH எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

விலங்குகள் pH சார்ந்த உணர்வு

நமது உடலானது 7.0 முதல் 7.8 வரை உள்ள pH எல்லை சார்ந்து வேலை செய்கிறது. உயிரினங்கள் ஒரு குறுகிய pH எல்லைக்குள் மட்டுமே உயிர் வாழ இயலும். நம் உடலில் உள்ள திரவங்கள் வெவ்வேறு pH மதிப்புகளைக் கொண்டவை. எடுத்துக்காட்டாக மனித ரத்தத்தின் pH மதிப்பு 7.35 லிருந்து 7.45 ஆகும். இந்த மதிப்பிலிருந்து குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, அது நோயை உண்டாக்கும்.

மனித செரிமான மண்டலத்தில் pH மதிப்பு

நமது இரைப்பை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கிறது என்பது ஒரு வியப்பூட்டும் செய்தியாகும். இந்த அமிலம் இரைப்பையை பாதிக்காமல் உணவைச்செரிக்க உதவுகிறது. சரியான
செரிமானம் இல்லாதபோது இரைப்பையானது கூடுதலான அமிலத்தைச் சுரந்து வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இரைப்பையில் உள்ள திரவத்தின் தோராயமான pH மதிப்பு 2.0 ஆகும்.

மண்ணின் pH

விவசாயத்திற்கு மண்ணின் pH மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சிட்ரிக் அமிலம் கொண்ட பழங்கள் சற்று காரத்தன்மை உள்ள மண்ணிலும், நெல் அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும், கரும்பு நடுநிலைத் தன்மை கொண்ட மண்ணிலும் வளரும்.

மழை நீரின் pH

மழை நீரின் pH மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும். இது, மழைநீர் நடுநிலைத் தன்மையானது மற்றும் தூய்மையானது என்பதைக் குறிக்கிறது. வளிமண்டலக் காற்று சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகிய வாயுக்களால் மாசுபடும் பொழுது அவை மழைநீரில் கரைந்து pH மதிப்பை 7ஐ விடக் குறையச் செய்கின்றன. இவ்வாறு மழைநீரின் pH 7ஐ விட குறையும் பொழுது அம்மழை அமிலமழை எனப்படுகிறது. இந்த அமிலமழை நீர் ஆறுகளில் சேரும் பொழுது அவற்றின் pH ஐ குறைக்கின்றன. இதனால் நீர்வாழ் உயிரிகளின் வாழ்வு பாதிக்கப்படுகிறது.

5. வேதிச் சமநிலை என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?

வேதிச்சமநிலை என்பது ஒரு மீள் வேதிவினையின் வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருளின் செறிவில் எந்த மாற்றமும் நிகழாத நிலை ஆகும்

முன்னோக்கு வினையின் வேகம் = பின்னோக்கு வினையின் வேகம்

சமநிலையின் பண்புகள்

  1. வேதிச் சமநிலையில் முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும் சமம்.
  2. நேரத்தை பொருத்து அழுத்தம், செறிவு, நிறம், அடர்த்தி, பாகுநிலை போன்றவை மாறாது.
  3. வேதிச் சமநிலை என்பது ஒரு இயங்குச் சமநிலை ஏனெனில் முன்னோக்கு வினையும், பின்னோக்கு வினையும் தொடர்ந்து நிலையாக நடந்து கொண்டிருக்கும்.
  4. இயற்பியல் சமநிலையில், அனைத்து நிலைமைகளும் மாறாத கனளவைப் பெறுகின்றன.

VII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

1. ‘A’ என்ற திண்மச் சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற வாயுவைத் தருகிறது. ‘C’ என்ற வாயுவை நீரில் செலுத்தும் பொது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C-யைக் கண்டறிக.

“C”யை நீரில் செலுத்தும் போது அமிலத்தன்மையாக மாறுகிறது. எனவே “C” என்பது அலோக ஆக்சைடாக இருக்க வேண்டும். அதாவது CO2. “A” என்ற சேர்மம் கால்சியம் கார்பனேட்டாக இருக்க வேண்டும். கால்சீயம் கார்பனேட் சிதைவுற்று கால்சியம் ஆக்ஸைடு மற்றம் காலசியம் கார்பன்-டை-ஆக்ஸைடை தருகிறது.

CaCO3(S) → CaO(S) + CO2(g)

A               B          C

  • A → CaCO3
  • B → CaO
  • C → CO2

2. காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.

பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் நிக்கல், காப்பரை விட அதிக வினைதிறன் கொண்டது. எனவே நிக்கல் காப்பரை இடப்பெயர்ச்சி செய்து நிக்கல் சல்பேட்டையும், காப்பரையும் தரும்.

VIII. கணக்கீடுகள்.

1. எலுமிச்சை சாறின் pH மதிப்பு 2 எனில், அதன் ஹைட்ரஜன் அயனியின் செறிவின் மதிப்பு என்ன?

ஹைட்ரஜன் அயனியின் செறிவு  H+= 10-PH M
எலுமிச்சை சாற்றில் ஹைட்ரஜன் அயனியின் செறிவு= 10-2 M = = 0.01 M

2. 1.0 x 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.

நீரில் HNO3 பிரியும் முறை

HNO3 → H(aq) + NO3(aq)

கரைசலில் ஒரு மோல் நைட்ரிக் அமிலம், ஒரு H+அயனியை தருகிறது. எனவே 1.0 x 10-4 மோல் நைட்ரிக் அமிலம் 1.0 x 10-4 மோல் அயனியை தருகிறது.

[H+]= 1.0 x 10-4 மோல் லிட்டர்-1
pH= – log10 [H+]
= – (-4) log10 x 10-4
pH= 4 x 1 = 4
1.0 x 10-4 மோலார் செறிவுள்ள HNOகரைசலின் pH மதிப்பு 4

3. 1.0 x 10-5 மோலார் செறிவுள்ள KOH கரைசலின் pH மதிப்பைக் காண்க.

நீரில் HNO3 பிரியும் முறை

KOH(aq) → K+(aq) + OH3(aq)

ஒரு மோல் KOH ஒரு OH– அயனியை தருகிறது. எனவே 1.0 x 10-5 மோல் செறிவுள்ள KOH 1.0 x 10-5  OH– அயனியை தரும்

[OH]= 1.0 x 10-5 மோல் லிட்டர்-1
pOH= – log10 [OH]
= – log10 1.0 x 10-5
= – (-5) log1010
pOH= 5 x 1 = 5
pH= 14 – pOH
pH= 14 – 5 = 9
1.0 x 10-5 மோலார் செறிவுள்ள KOH கரைசலின் pH மதிப்பு = 9

4. ஒரு கரைசலில் ஹைடிராக்சைடு அயனிச் செறிவு 1.0 x 10-11 மோல் எனில் அதன் pH மதிப்பு என்ன?

[OH]= 1.0 x 10-11 மோல்
pOH= – log10 [OH]
= – log10 1.0 x 10-11
= – (-11) log1010
pOH= 11 x 1 = 11
pH= 14 – pOH
pH= 14 – 11 = 3
ஒரு கரைசலில் ஹைடிராக்சைடு அயனிச் செறிவு 1.0 x 10-11 மோல் எனில் அதன் pH மதிப்பு = 3
Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *